Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முல்லாக்கள் பூசிக் கொண்ட சாயம் ஸூபிஸம்!அது முகத்தைச் சுட்டெரிக்கும் என்பதை காலம்தான்...

இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முல்லாக்கள் பூசிக் கொண்ட சாயம் ஸூபிஸம்!
அது முகத்தைச் சுட்டெரிக்கும் என்பதை காலம்தான் உணர்த்தும்!

தொடர் 01

தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ

“எல்லாம் அவனே” எனும் வழிகெட்டச் சிந்தனைக்கும் தூய சூபிஸ சிந்தனைகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். வரலாறு நெடுகிலும் இலங்கை வாழ் முஸ்லிம்களை வழிநடாத்தி வருகின்ற பல தரீக்காக்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முன்னணித் தரீக்காக்கள் உட்பட அனைத்துத் தரீக்காக்களின் ஷைகுமார்களும், கலீஃபாக்களும் இச்சிந்தனை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரண்பட்டது என்பதைக் கூறியும்; இச்சிந்தனையை வன்மையாகக் கண்டித்தும் வருவது குறிப்பிடத்தக்கதாகும். – அர்கம் நுராமித், பொதுச் செயலாளர் ACJU –

அன்பின் தரீகாவாதிகளே! ஸூபீகளே!

ஸூபிஸத்திற்கும், தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லாதவர்கள் தங்களின் இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக “ஸூபிஸம்” என்ற சாயத்தை தம் மீது பூசிக் கொண்டு அலைவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

திரை மறைவில் இவர்களுடன் ஒட்டி உறவாடும் போலி தரீகாவாதிகள் தவிர இலங்கையிலும் சரி, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த ஷெய்குமார்களும் சரி “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் ஸூபிஸம் அல்ல என்று கூறியதே கிடையாது. மாறாக அப்படியொரு தத்துவம் உண்டு என்ற அளவிலாவது கூறியே இருக்கின்றார்கள்.

தங்களின் கொள்கையில் உறுதியானவர்களாயிருந்தால் மொக்காட்டுக்குள் கை அசைக்காமல் ஒட்டு மொத்தமாக ஸூபிஸமே வழிகேடு என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து தூய ஸூபிஸ சிந்தனைகளுக்கும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று மெழுகு பூசுதல் அவர்களின் “அகீதா”வின் வங்குரோத்து நிலையையே காட்டுகிறது என்பதை புத்தியுள்ள எவனும் மறுக்கமாட்டான்.

பொது மக்கள் இவர்கள் நினைப்பது போல் இன்னும் அறியாமைக் காலத்திலேதான் வாழ்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டுள்ளார்கள் போலும். இந் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களில் அவர்கள் ஸூபீகளாயிருந்தாலும் சரி அல்லது ஸூபிஸத்திற்கு எதிரானவர்களாக இருந்தாலும் சரி “எல்லாம் அவனே” என்ற தத்துவம் ஸூபிஸத்தின் அத்திவாரம் என்பதை அறிந்தவர்களாகவே உள்ளனர். சூரியனை உள்ளங் கையால் மறைக்க முற்பட்டு முகத்தில் கரியை பூசிக் கொண்டார்கள் முல்லாக்கள்! அல்லாஹு அக்பர்!

இலங்கை மக்களால் “அறிஞர் சித்தி லெப்பை” என்று பெருமையாகப் பேசப்படும் அறிஞர் சித்தி லெப்பை தனது “அஸ்றாறுல் ஆலம்” எனும் நூலில் எல்லாம் அவனே என்பதை எவ்வாறு கூறியுள்ளார்கள் என்பதைப் பாருங்கள். இன்று எங்களின் மூதாதையர்களான ஸூபீகள்தான் “பத்வா” வழங்கினார்கள் என்று மார்தட்டும் முல்லாக்கள் ஒரு காலத்தில் அதே மூதாதையர்கள் ஆங்கிலம் கற்பது “ஹறாம்” என்று கூறிய போது அவர்களை எதிர்த்து ஆங்கிலம் கற்பது அவசியம் என்று போராடி வென்று முஸ்லிம் சமுகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் அறிஞர் சித்தி லெப்பை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த மூதாதையர்களிக் கண்ணுக்கு அவரின் இக்கருத்து தெரியாமற் போனதேனோ?

(ஆரிபீன்கள் இந்த இல்மை ஒரு ஒழுங்காயும், திட்டமுமாக்கிக் கொள்வதற்கு சிலர் ஏழு “மர்தபா”க்களாகவும், சிலர் நாற்பது மர்தபாக்களாகவும் பிரித்திருக்கின்றார்கள். இவ்விதம் பிரித்து நினைக்காது போனால் அவனைப் பற்றிய இல்முகள் தெளிவுபடாது. நான் உனக்கு ஏழு “மர்தபா”க்களாய் பிரித்திருக்கிற பிரிவைச் சொல்கிறேன். *இந்த “மர்தபா”க்களை அறிவது கொண்டு ஹக்கென்றும், கல்கென்றும் பிரிவாய்ப் பேசினாலும் உள்ளமையிலொன்றுள்ளது திட்டப்படும்.*

ஒரு “மனிதன்” என்கிற சொல்லில் சரீரமும், றூஹும் அடங்கிவிட்டன. பிரித்துச் சரீரமென்றும், றூஹென்றும் இரண்டாகப் பேசினால் இரண்டு மர்தபாக்கள் என்று சொல்லலாம். வேண்டுமானால் ஏழாகவும் பிரித்தும் பேசலாம். சரீரம், சூட்சுமம், பிராணம், காமம், மனம், புத்தி, ஆன்மா ஆகியவைகளே. இன்னும் தேவையானால் எழுபதாய்ப் பிரித்தும் பேசலாம். பிரித்துப் பேசுவதெல்லாம் அக்லைக் கொண்டு விளங்குவதற்கே! *உள்ளமைப் படிக்கு யாவும் ஒன்றுதான்.* இதை விளங்காது சிலர் மர்தபாக்களுடைய பெயர்களையும், ஒன்றுக் கொன்றிருக்கிற வித்தியாசங்களையும், விளங்கிக் கொண்டு இதுதான் மஃரிபாவுடைய இல்மென்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. *இந்த பிரிவுகளைக் கொண்டு விளங்கி பிரிவற்றதாயொன்றாக்குவதுதான் தௌஹீது.* பிரிவற்றதாய் ஒன்றுபடுத்துவதற்கு அக்லைக் கொண்டு கூடாது. ஹக்குக்கும், நமக்கும் இருக்கின்ற திரைகள் நீக்கப்பட வேண்டும். இதற்காக இல்முடனே பெரியோர்கள் காட்டியிருக்கிற அமல்களையும் செய்து வர வேண்டும். *இன்ஸான் காமிலில் அவனுக்கிரண்டு வர்ணிப்புக்களுண்டு. ஒன்று ஹக்கு, மற்றது கல்கு. இரண்டு பெயர்களுமுண்டு. ஒன்று றப்பு, மற்றது அப்து. இரண்டு முகங்களுமுண்டு. ஒன்று ளாஹிர், மற்றது பாதின். இவ்விதம் கல்கென்பதும், ஹக்கென்பதும் ஒன்றுதானென்று அறியும் இல்முக்கும்,* ஆலங்கள் வெளியான இல்முக்கும் மர்தபாக்களுடைய இல்மென்று சொல்லப்படும். இந்த இல்மைத் தொடங்குமுன் முதலாவது சில தவறான இஃதிகாதுகளையறிந்து அவைகள் வந்து நுழையாது பேணிக் கொள்ள வேண்டும்.)
(அஸ்றாறுல் ஆலம் பக்கம் 72முதல் 83 வரை ஆசிரியர் அறிஞர் சித்திலெப்பை)

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments