Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷாதுலீ நாயகம் அவர்களின் நேரடி முதலாவது கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களாவர்....

ஷாதுலீ நாயகம் அவர்களின் நேரடி முதலாவது கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களாவர். இவர்களின் நேரடி முதலாவது கலீபா இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ அவர்களாவர்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ அவர்களும், அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களும் தெளிவாகவும், விளக்கமாகவும், பகிரங்கமாகவும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருவரும் கூறிய ஸூபிஸ ஞானக் கருத்துக்களும், எல்லாம் அவனே என்ற தத்துவமும் கடந்த தொடர்களில் கூறப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அவற்றை வாசித்திருப்பாராயின் தனது அறிக்கையை வாபஸ் பெற்றிருப்பார். அல்லது செய்வதறியாது தடுமாறியிருப்பார்.

அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் நேரடி “கலீபா”வாக அவர்களின் மாணவர், ஹிகம் நூலாசிரியர் இப்னு அதாயில்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாதுலிய்யா தரீகாவின் இரண்டாவது கலீபாவாக விளங்கினார்கள்.

இவர்கள் மஃகூல், மன்கூல் இரு கலைகளிலும் தன்னிகரற்று விளங்கினார்கள். “அல்ஹிகம்” என்ற பெயரில் ஸூபிஸக் கலையில் ஆழமான அகமியங்களை உள்வாங்கி ஒரு நூல் எழுதினார்கள். இந்நூல் தொடர்பாகப் புகழ்ந்து கருத்துக் கூறிய பலர் كَادَ الْحِكَمُ أَنْ يَكُوْنَ قُرْآنًا “ஹிகம்” எனும் நூல் திருக்குர்ஆனுக்கு நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்கள்.

சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் இந்நூல் இலங்கை நாட்டிலிருந்த அறபுக் கல்லூரிகளிற் சில கல்லூரிகளில் மட்டும் பாடத்திலட்டத்தில் இருந்துள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் அது கற்றுக் கொடுக்கப்பட்டதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் கிடைக்கவில்லை.

1965ம் ஆண்டு நான் பாணந்துறை தீனிய்யா அறபுக் கல்லூரியில் மர்ஹூம் அதி சங்கைக்குரிய அப்துஸ் ஸமத் ஹழ்றத் “பலகீ” அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் குறித்த நூல் பாடத்திட்டத்தில் இருந்தாலும் கூட அது கற்றுக் கொடுக்கப்படவில்லை.

இற்றைக்கு சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந்நூல் இலங்கை நாட்டிலிருந்த சில அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நமது இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் சுமார் 75 வருடங்களுக்கு முன்னர் “தஸவ்வுப்” ஸூபிஸம் தொடர்பான நூல்களைக் கற்றுக் கொடுப்பதற்கு தகுதி பெற்ற உலமாஉகள் ஓரளவு இருந்தனர். அவர்கள் கூட அக்காலத்தில் இந்தியாவில் கல்வி கற்றவர்களாக இருந்ததால் அவர்களால் கற்றுக் கொடுக்க முடியுமாயிருந்தது.

அறிவு உயர்த்தப்படும் يُرْفَعُ الْعِلْمُ என்ற அண்ணல் நபீ அவர்களின் அருள்வாக்கின் படி “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் கொஞ்சம் கெஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. வஹ்ஹாபிஸம் தலை தூக்கும் வரை ஓரளவு கற்றுக் கொடுக்கப்பட்டும், சொல்லப்பட்டும் வந்தது. அது தலை தூக்கிய பின் “ஸூபிஸம்” “குப்ர்” என்றும், “ஷிர்க்” என்றும், “ழலாலத்” வழிகேடு என்றும் வஹ்ஹாபிகளால் பகிரங்கப் பிரச்சாரம் செய்யப்பட்டு அந்த ஒளி மங்கத் தொடங்கியது. மங்கிக் கொண்டே செல்கிறது.

ஸூபிஸம் மங்கிப் போவதற்கும், வஹ்ஹாபிஸம் தலை விரித்தாடுவதற்கும் பிரதான காரண கர்த்தாக்கள் ஸூபிஸம் தெரியாத உலமாஉகளும், வஹ்ஹாபிகளின் தயவில் வாழும் அரை குறை ஆலிம்களுமேயாவர்.

ஷாதுலிய்யா தரீகாவின் இரண்டாவது “கலீபா” தாஜுத்தீன் இப்னு அதாயில்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய “ஹிகம்” எனும் நூல் அவர்களின் காலத்தில் பிரசித்தி பெற்றதால் அறிஞர்களிற் பலர் அதைக் கற்றுக் கொடுப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் முனைந்தனர்.

وكان ابن عطاء الله السِّكندري مؤمنا بوحدة الوجود، ومن أقواله الدّالّة على وحدة الوجود كثيرة، منها ما يأتي،
1. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ الَّذِيْ أَظْهَرَ كُلَّ شَيْئٍ؟
2. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ الَّذِيْ ظَهَرَ بِكُلِّ شَيْئٍ؟
3. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ الَّذِيْ ظَهَرَ فِى كُلِّ شَيْئٍ؟
4. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ الَّذِيْ ظَهَرَ لِكُلِّ شَيْئٍ؟
5. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ الظَّاهِرُ قَبْلَ وُجُوْدِ كُلِّ شَيْئٍ؟
6. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ الَّذِيْ أَظْهَرُ مِنْ كُلِّ شَيْئٍ؟
7. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ الْوَاحِدُ الَّذِيْ لَيْسَ مَعَهُ شَيْئٌ؟
8. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَهُوَ أَقْرَبُ إِلَيْكَ مِنْ كُلِّ شَيْئٍ؟
9. كَيْفَ يَتَصَوَّرُ أَنْ يَحْجِبَهُ شَيْئٌ، وَلَوْ لَاهُ مَاكَانَ وُجُوْدُ كُلِّ شَيْئٍ؟
10. يَا عَجَبًا ! كَيْفَ يَظْهَرُ الْوُجُوْدُ فِى الْعَدَمِ؟ أَمْ كَيْفَ يَثْبُتُ الْحَادِثُ مَعَ مَنْ لَهُ وَصْفُ الْقِدَمِ؟
(الحكم العطائيّة ابن عطاء الله السكندري، ص 04)

 

மேற்கண்ட 10 கேள்விகளும் இப்னு அதாயில்லாஹ் ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “ஹிகம்” எனும் நூல் 4ம் பக்கத்தில் பதிவான கேள்விகளாகும்.

மேற்கண்ட 10 கேள்விகளையும் மொழியாக்கம் செய்து தருபவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும். மொழியாக்கம் செய்தனுப்ப விரும்புவோர் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். அதில் அடையாள அட்டை இலக்கமும், முகவரியும் தெளிவாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் “எல்லாம் அவனே” என்ற தத்துவம் பொய்யென்றும், அப்படியொரு தத்துவம் திருக்குர்ஆனில் கூறப்படவில்லை என்றும், நபீ மொழிகளில் கூறப்படவில்லை என்றும், தரீகாக்கள் கூறவில்லையென்றும், தரீகாக்களின் மஷாயிகுமார் கூறவில்லை என்றும் அறிக்கை விட்டிருந்தார்.

இவர் திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும், தரீகாக்களையும், மஷாயிகுமார்களின் கூற்றுக்களையும் ஆய்வு செய்த பின்னர் இவ்வாறு சொன்னாரா? அல்லது ஆய்வு செய்யுமுன் இவ்வாறு சொன்னாரா? என்பது எமக்குப் புரியவில்லை.

இவர் இவற்றையெல்லாம் ஆய்வு செய்த பிறகுதான் அவ்வாறு சொன்னார் என்று கூறுவாராயின் இவர் வடிகட்டிய அறிவிலி என்பதற்கு இவரின் கூற்று மட்டும் போதும்.

ஏனெனில் திருக்குர்ஆனின் ஆழத்தை எவராலும் மட்டிட்டுக் கூற முடியாதென்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியிருக்கும் நிலையில் இவர் எவ்வாறு திருக்குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்திருக்க முடியும்?
كَلَّا، ثُمَّ كَلَّا، إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا
இவரின் அறிக்கை பிழையென்றும், இவர் பொய் சொல்கிறார் என்றும் திருக்குர்ஆனின் ஓர் ஆதாரம் மூலமும், ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ, அதன் கலீபா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ, அவர்களின் கலீபா இப்னு அதாயில்லாஹ் சிக்கந்தரீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் ஆதாரங்கள் மூலமும் விளக்கம் எழுதியிருந்தேன். ஆயினும் அவர் இதுவரை எந்த ஒரு பதிலும் தரவில்லை. இவரும் தரவில்லை, இவரின் முன்னாலோ, பின்னாலோ இருப்பவர்களும் தரவில்லை.

இவர்கள் மரங்கொத்திப் பறவை போல் மாட்டிக் கொண்டார்கள். அல்லது ஆப்பிழுத்த குரங்குகளாகி விட்டார்கள். செய்வதறியாது திணறுகிறார்கள். ஒரு பொய்யை மூட ஒன்பது பொய்கள் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் செய்த நியாயமற்ற இழி செயலால் சமுகத்திலிருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் மத குருமார் என்று சீல் குத்தப்பட்ட இவர்கள் தமக்குக் குத்தப்பட்ட சீலை மறந்து செயல்படுகிறார்கள்.

“ஆலிம்” என்றால் அறிஞன் என்று பொருள். இவ்வாறு “சீல்” குத்தபப்ட்ட ஒருவர் “ஜாஹில்” அறிவிலியாயிருக்கமாட்டார். ஓர் அறிஞனை “ஜாஹில்” அறிவிலி என்பதும் தப்பு. ஓர் “ஜாஹில்” அறிவிலியை “ஆலிம்” அறிஞன் என்பதும் தப்பு.

“ஆலிம்” عالم என்ற அறபுச் சொல்லுக்கு அறிஞன் என்று பொருள். இச் சொல்லை தமிழில் எழுதும் போது “ஆலிம்” என்றே எழுத வேண்டும். இச் சொல்லின் முதல் எழுத்தாக “ஐன்” வந்துள்ளது. இந்த “ஐன்” என்ற எழுத்துக்குப் பதிலாக “அலிப்” என்ற எழுத்து வந்தாலும் “ஆலிம்” என்றுதான் தமிழில் எழுத வேண்டும். ஆயினும் இதற்கு வேதனைப்படுபவர் என்று பொருள் வரும்.

மன்னர் ஹாறூன் றஷீத் அவர்களின் மனைவி “காலிஸா” கறுப்பு நிறமுள்ளவளாக இருந்தாள். அவளின் கழுத்திலிருந்த தங்க மாலை அவளின் இயற்கை அழகையே கெடுத்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அங்கு சென்ற “ஹாஷ்ய மன்னன்” அபூ நவாஸ் அந்த மாளிகையிலிருந்து வெளியே வரும் போது வீட்டுக் கதவில் பின்வருமாறு எழுதிவிட்டு வெளியேறினார்.

لَقَدْ ضَاعَ شِعْرِيْ عَلَى بَابِكُمْ – كَمَا ضَاعَ عِقْدٌ عَلَى خالِصَةْ

கதவில் எழுதப்பட்ட கவிதையைக் கண்ட காவற் காரன் கோபப்பட்டவனாக மன்னனிடம் வந்து உங்கள் மனைவியை அபூ நவாஸ் இழித்துரைத்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார் என்று முறைப்பட்டார்.

கோபம் கொண்ட மன்னன் அபூ நவாஸை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். அவர் அழைத்து வரப்பட்டார். தான் எழுதிய கவிதைக்காக தண்டனை கிடைக்கப்போகிறது என்பதை உணர்ந்த அபூ நவாஸ் உள்ளே செல்லும் போதே கவிதை வரிகளில் உள்ள ஒரு சொல்லை மட்டும் சிறிய அளவிலான மாற்றம் செய்து கொண்டே உள்ளே சென்றார். மன்னர் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட போது மன்னரே! உங்கள் மனைவியை நான் இழிவு படுத்துவேனா? நான் புகழ்ந்துதானே எழுதியிருந்தேன் என்றார். மன்னர் தனது செயலாளரை அனுப்பி கவிதையைப் பார்த்து வருமாறு பணித்தார். அவர் அங்கு சென்று பார்த்துவிட்டு மன்னனிடம் வந்து உங்கள் மனைவியைப் புகழ்ந்துதான் எழுதப்பட்டுள்ளது. இகழ்ந்து எழுதப்படவில்லை என்று சொன்னார். அபூ நவாஸ் தப்பிவிட்டார். அன்பளிப்பும் பெற்றுக் கொண்டார்.

கேள்வி இதுதான். இகழைப் புகழாக்க அபூ நவாஸ் என்ன செய்தார்? விடையையும், முகவரியையும் விளக்கமாக எழுத வேண்டும். முடிவுத்திகதி 10.02.2022

முதற்பரிசு: 6 ஆயிரம்.
இரண்டாம் பரிசு: 4 ஆயிரம்.
மூன்றாம் பரிசு: 2 ஆயிரம்.

முகவரி:
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை.
BJM வீதி, காத்தான்குடி 06.

முற்றும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments