அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அவர்களை கௌரவிக்கும் வகையில் , மருந்துப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பேராசியர் சன்ன ஜெயசுமான அவர்களினால் வழங்கப்பட்ட காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான 2 மில்லியன் ரூபா பெறுமதியான ஒக்ஸிஜன் செரிவூட்டிகளை கையளிக்கும் நிகழ்வு 05.03.2022 அன்று காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபையின் பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் J.P அவர்களும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்களும், மற்றும் அதன் முகாமைச்சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ரூபா 2 மில்லியன் பெறுமதியான ஆறு ஒக்ஸிஜன் செரிவூட்டிகள் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் DR. MSM. ஜாபிர் அவர்களுடன் இணைந்து வைத்திசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்திசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.