தொடர்: 02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
கடந்த தொடரில் போலி முல்லாக்களாலும், பொறாமையுள்ள ஆலிம்களாலும் துன்புறுத்தப்பட்ட நபீமார், குறிப்பாக பெருமானார், மற்றும் அவர்களின் தோழர்கள் பற்றிய விபரம் எழுதினேன்.
இத் தொடரில் இஸ்லாமிய வரலாற்றில் துன்புறுத்தப்பட்ட இமாம்கள் பற்றி எழுதுகிறேன்.
وأمّا الأئمّة المجتهدون فلا يَخْفَى ما قاسَاهُ الإمامُ أبو حنيفةَ مع الخُلفاء، وما قاساه الإمام مالك، واستِخْفَاءُه خمسا وعشـرين سنةً لا يخرجُ لجمعة ولا جماعة، وكذلك ما قاسَاه الإمامُ الشّافعيُّ من أهل العراق ومن أهل مصـر، وكذلك لا يخفى ما قاساه الإمام أحمد بن حنبل من الضَّرْبِ والحَبْسِ،
“முஜ்தஹித்” ஆன நான்கு மத்ஹபுகளின் தலைவர்களான இமாம்கள் நால்வரும் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் “ஹனபீ மத்ஹப்” இன் தாபகர் இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள். அவர்களில் இன்னொருவர் மாலிக் மத்ஹபின் தாபகரும், “முவத்தா” எனும் ஹதீது கிரந்தத்தை எழுதியவருமான இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் அவர்கள். இந்த மகான் 25 ஆண்டுகள் எவருக்கும் தெரியாமலும், “ஜும்ஆ” தொழுகை, ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராமலும் மறைந்து வாழ்ந்துள்ளார்கள். அவர்களில் மற்றொருவர் “ஷாபிஈ” மத்ஹபின் தாபகரும், “அல்உம்மு” எனும் நூலாசிரியருமான இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள். இவர்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் இறாக், மிஸ்ர் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் பிறிதொருவர் “ஹன்பலீ” மத்ஹப் தாபகரான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் ஆவார்கள். இவர்கள் அடிக்கப்பட்டும், சிறையிலடைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் “முஜ்தஹித்”களான மத்ஹபுகளைத் தாபித்த தரமான இமாம்களாவர். இவர்களின் தோற்றமும், மறைவும்.
இமாம் அபூ ஹனீபா – (ஹிஜ்ரீ 80 -150)
இமாம் மாலிக் – (ஹிஜ்ரீ 91 -179)
இமாம் ஷாபிஈ – (ஹிஜ்ரீ 150 – 204)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் – (ஹிஜ்ரீ 164-241)
وما قاساه الإمام البخاري رحمه الله حين أخرجوه من بُخارى إلى خُرْتَنك، ونَفَوا أبا يزيد البِسطامي سَبْعَ مرّاتٍ من بِسطام بواسطة جماعة من علمائها، وشيَّعُوا ذا النّون المصـري من مصـر إلى بغداد مُقيّدا مغلُولا، وسافر معه أهلُ مصـر يشهدون عليه بالزَّنْدَقَةِ، ورَمَوا سَمنون المُحبّ أحدَ رِجالِ القشيري بِالْعَظَائِمِ وأَرْشَوا امرأةً مِن البغايا، فادَّعَتْ عليه أنّه يأتيها هو وأصحابُه واخْتَفَى لسبَبِ ذلك سنةً، وأخرجوا سهلَ بنَ عبد الله التُّسْتَرِي من بلده إلى البصـرة، ونَسَبُوه إلى قبائِحَ وكفَّرُوه مع إمامتِه وجلالتِه، ولم يزل بالبصـرة إلى أن مات بها، وَرَموا أبا سعيد الخَرّازْ بالعَظَائم، وأفتى العلماء بكفره بالألفاظ وجدُوها فى كُتبه،
போலி முல்லாக்கள் இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களை அவர்களின் “புகாரா” என்ற ஊரிலிருந்து “கர்தன்க்” எனுமிடத்திற்கு வெளியேற்றினார்கள். ஸூபிஸ ஞானிகள் மத்தியில் பிரசித்தி பெற்ற “அபூ யஸீத் பிஸ்தாமீ” றஹிமஹுல்லாஹ் அவர்களை போலி முல்லாக்களின் சூட்சியால் “பிஸ்தாம்” எனும் ஊரிலிருந்து ஏழு தரம் நாடு கடத்தினார்கள். ஞானிகள் வரலாற்றில் பிரசித்தி பெற்ற துன்னூன் அல் மிஸ்றீ எனும் ஸூபீ மகானை மிஸ்ர் நாட்டிலிருந்து பக்தாத் நகருக்கு விலங்கிடப்பட்ட நிலையில் வெளியேற்றினார்கள். மிஸ்ர் வாசிகள் அவரை “சிந்தீக்” என்று சொன்னார்கள். ஸூபீ மகான் இமாம் குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான ஸம்னூன் என்ற இறைஞானியை மிருகங்களின் காய்ந்த முட்களால் அடித்தும், எறிந்தும் துரத்தினார்கள். அதோடு ஒரு விபச்சாரப் பெண்ணுக்கு பணம் கொடுத்து அவரும், அவரின் சிஷ்யர்களும் தன்னிடம் வந்து போவதாகச் சொல்ல வைத்து அவரை வெளியேற்றினார்கள். இதனால் அவர்கள் ஒரு வருடம் எவருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்தார்கள். உலகப் பிரசித்தி பெற்ற இறைஞானி ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் துஸ்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களை அவர்களின் ஊரிலிருந்து “பஸறா” நகருக்கு வெளியேற்றினார்கள். அவர்கள் மா பெரும் இமாமாகவும், கண்ணியத்திற்குரியவர்களாயிருந்தும் கூட அவர்களுக்கு “காபிர்” என்று பட்டமும் கொடுத்து அவர்கள் கீழ்த்தரமான வேலைகள் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் தங்களின் மறைவு வரை பஸறா என்ற ஊரிலேயே வாழ்ந்தார்கள். இமாம் அபூ ஸயீத் அல் கர்றாஸ் எனும் ஸூபீ மகானை மிருகங்களின் முட்களால் அடித்து அவர் எழுதிய நூல் ஒன்றிலுள்ள சில வசனங்களுக்காக அவர் “காபிர்” என்றும் “பத்வா” வழங்கினார்கள்.
وشهِدُوا على الجنيد بالكُفر مرارا حين كان يتكلّم فى علم التوحيدعلى رُؤوسِ الأشهاد، فصار يُقرِّرُه فى قعر بيتِه إلى أن مات، وكان من أشدِّ المنكرين عليه وعلى رُويمٍ وعلى سَمنون وعلى ابن عطاءٍ ومشائِخ العراق ابنُ دانيال، كان يحُطُّ عليهم أشدَّ الحطِّ، وكان إذا سمِعَ أحدا يذكرهم تَغَيَّطَ وتغيَّرَ لونُه، وأخرجوا محمد بن الفضل البَلْخِيْ من بَلْخَ، لكون مذهبِه كان مذهبَ أهل الحديث، من إجرائات آيات الصِّفات وأخبارِها على ظاهرها بلا تأويلٍ، والإِيمان بها على علم الله فيها، ولمّا أرادوا إخراجَه قال لا أخرجُ إلّا إن جعلتُم فى عُنقي حبلا ومررتُمْ بي على أسواق البلد وقلتم هذا مُبْتَدِعٌ، نُريد أن نُخرجَه من بلدنا، ففعلوا ذلك وأخرجُوه، فالتفت إليهم وقال، يا أهلَ بَلْخَ نَزَعَ اللهُ من قلوبكم معرِفَتَه، قال الأشياخ فلم يخرج بعد دعوتِه عليهم تلك مِن بَلخَ صوفيٌّ أبدا مع أنّها كانت أكثر بلاد الله صوفيّة، وأخرجوا الإمام يوسف بن الحسين الرازي، وقام عليه زُهّادُ الرّيِّ وصُوفيُّها،
ஸூபீகளின் தலைவர் ஜுனைத் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் “தவ்ஹீத்” ஏகத்துவ ஞானம் பேசிய போது பல தரம் அவர்கள் “காபிர்” என்று “பத்வா” வழங்கப்பட்டார்கள். அதன் பின் ஜுனைத் அவர்கள் ஏகத்துவ ஞானம் பேசுவதாயின் தங்களின் வீட்டின் உட்பகுதியிலேயே பேசுவார்கள். மரணிக்கும் வரை இவ்வாறே செய்தும் வந்தார்கள்.
இமாம் ஜுனைத், இமாம் றுவைம், இமாம் ஸம்னூன், இமாம் இப்னு அதாயில்லாஹ் மற்றும் இறாக் நாட்டின் ஷெய்குமார் ஆகியோருக்கு கடுமையான எதிரியாக இருந்தவன் இப்னு தானியால் என்பவனேயாவான். இவன் குறித்த மகான்களுக்கு கடும் எதிரியாக வாழ்ந்தான். யாராவது மேற்குறித்த நாதாக்களை நினைத்து பேசினாற் கூட அவர்களை எதிர்ப்பவனாகவும், அவர்கள் மீது கோபம் கொள்பவனாகவும் இருந்தான்.
ஸூபிஸத்தின் எதிரிகளான முல்லாக்கள் முஹம்மத் இப்னு பழ்லில் பல்கீ எனும் ஸூபீ மகான் அவர்களை “பல்க்” என்ற ஊரில் வாழ விடாமல் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதற்கு காரணம் அவர்கள் வலிந்துரை கொண்டு பொருள் கொள்ள வேண்டிய திரு வசனங்களுக்கு அவ்வாறு பொருள் கொள்ளாமல் நேரடிப் பொருள் கொடுத்து விளக்கம் சொல்லி வந்தமையாகும். இந்த ஸூபீ மகானை “பல்க்” எனும் ஊரவர்கள் அங்கிருந்து வெளியேற்ற நினைத்த போது அவர்களிடம் பின்வருமாறு அவர்கள் சொன்னார்கள்.
என்னை இவ் ஊரிலிருந்து வெளியேற்றுவதாயின் நான் சொல்வது போல் நீங்கள் செய்தால் மட்டும்தான் என்னை வெளியேற்ற முடியும். அதாவது நீங்கள் ஒரு கயிற்றை எடுத்து எனது கழுத்தில் கட்டி இவ் ஊரின் கடைத் தெருவில் என்னை இழுத்துச் செல்லுங்கள். அவ்வேளை இவர் “பித்அத்” காரன். ஆகையால் இவரை ஊரிலிருந்து வெளியேற்றப் போகிறோம் என்றும் சொல்லுங்கள் என்று அவர்கள் சொல்ல அவ்வாறே அவ் ஊர்வாசிகளில் அவர்களின் எதிரிகள் செய்தார்கள். அவர்கள் சொன்னது போல் அவர்களை கயிற்றால் கட்டி இழுத்துச் செல்கையில் இழுத்துச் சென்றவர்களை அவர்கள் பார்த்து “பல்க்” வாசிகளே! அல்லாஹ் உங்களின் உள்ளங்களிலிருந்து “மஃரிபா” ஞானத்தை எடுத்துவிடுவானாக! என்று கூறினார்கள். சாபமிட்டார்கள்.
பின்னர் தோன்றிய ஸூபீ மகான்களும், இறைஞானிகளும் அந்த நிகழ்வின் பின் – அந்த மகான் சபித்த பிறகு அந்த நாட்டில் – “பல்க்” நாட்டில் ஒரு ஞானி கூட தோன்றவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.
தொடரும்…