Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்قصيدة النّادرات العينيّة

قصيدة النّادرات العينيّة

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)


وَمَا الْخَلْقُ فِى التِّمْثَالِ إِلَّا كَثَلْجَةٍ – وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعٌ
فَمَا الثَّلْجُ فِى تَحْقِيْقِنَا غَيْرَ مَائِهِ – وَغَيْرَانِ فِى حُكْمٍ دَعَتْهُ الشَّرَائِعُ
وَلَكِنْ بِذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ – وُيُوْضَعُ اِسْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعٌ
تَجَمَّعَتِ الْأَضْدَادُ فِى وَاحِدِ الْبَهَا – وَفِيْهِ تَلَاشَتْ فَهُوَ عَنْهُنَّ سَاطِعٌ
(النادرات العينيّة، ص 75)

பாடல் வரிகளின் சுருக்கமான பொருள்:

“கல்க்” – படைப்புக்கு உதாரணம் சொல்வதாயின் ஐஸ் கட்டியை உதாரணமாகக் கூறலாம். ஐஸ் கட்டியின் தோற்றத்தில் வெளியானது தண்ணீரேயன்றி வேறொன்றல்ல. ஸூபீ மகான்கள் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்வார்களேயன்றி, தண்ணீர் வேறு, ஐஸ்கட்டி வேறென்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். ஸூபிஸ ஞான மகான்களின் பார்வையில் இரண்டும் ஒன்றுதான்.

எனினும் “ஷரீஆ”வின் வெளிப்பார்வையில் இரண்டும் ஒன்றல்ல. நீர் வேறுதான், ஐஸ் கட்டி வேறுதான்.

ஆயினும் ஐஸ் கட்டி கரைந்தால் நீர் என்ற பெயர் வந்துவிடும். இதேபோல் நீருக்குரிய தன்மையும் வந்து விடும். ஐஸ் கட்டி என்ற பெயரும் இல்லாமற் போய் அதன் தன்மையும் இல்லாமற் போய்விடும்.

நீரானது உறைந்து கட்டியாயிருந்த நேரம் அது ஐஸ் கட்டி என்று சொல்லப்பட்டது. அத் தோற்றம் இல்லாமற் போனதும் பெயரும் இல்லாமற் போய் தன்மையும் இல்லாமற் போய்விடுகிறது.

நீர் ஐஸ் கட்டியாக இருந்த போதும் அது நீர்தான். அது கரைந்த பின்னும் அது நீர்தான். ஒரே வஸ்த்து அதன் தோற்றத்தைப் பொறுத்து இரு பெயர்களால் அழைக்கப்படுகிறது. எதிர்ச் சொற்கள் ஒரே பொருளில் ஒரே நேரத்தில் ஒன்று செர்ந்துள்ளது வியப்பான விடயமே! பாடலின் சுருக்கமான மொழியாக்கம் நிறைவு பெற்றது.
ஆதாரம்,: அந்நாதிறாதுல் ஐனிய்யா, பக்கம்75, ஆசிரியர்: ஜீலீ


மேற்கண்ட பாடல்கள் அல்லாஹ்வுக்கும், படைப்புக்கும் உதாரணமாக கூறப்பட்டவையாகும்.

இதன் விளக்கம் என்னவெனில், பாடலாசிரியர் நீரை இறைவனுக்கும், ஐஸ்கட்டியை படைப்புக்கும் உதாரணமாக கூறியுள்ளார். இதன் மூலம் ஐஸ்கட்டி நீருக்கு வோறான, தனியான, சுயமான “வுஜூத்” உள்ளதல்ல என்ற கருத்தையும், ஐஸ் கட்டிக்கும், நீருக்கும் பிரிக்க முடியாத தொடர்புண்டு என்பதையும், ஐஸ் கட்டியின் “ஸூறத்” உருவத்தில் வந்தது நீர்தான் என்பதையும், சுருங்கச் சொன்னால் படைப்பு அல்லாஹ் தான் என்று நிறுவுவதற்காகவுமே மேற்கண்டவாறு கூறினார்கள்.

இவ்வாறு சொன்னவர் யார்? முஸ்லிமா? முர்தத்தா? அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” என்ன?

அல் ஜீலீ அவர்கள் மேலும் கூறுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

يعتقد الجيلي أنّ الله تعالى هو المُنفرِد بالوجود، وإثباتُ هذا هو غاية التوحيد، وفى هذا يقول ‘ كلمةُ الشهادة مَبْنِيّة على سلبٍ، وهي ‘ لا ‘ وإيجابٍ، وهي ‘ إلّا ‘ ، معناه لا وجود لشيئ إلّا الله (الإنسان الكامل للجيلي ، 2 ஃ 134 )

அல் ஜீலீ பின்வருமாறு சொல்கிறார்கள். “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவில் முதலில் “லா” வந்துள்ளது. இது இல்லை என்ற பொருளுக்குரியதாகும். இறுதியில் “இல்லல்லாஹ்” என்ற வசனம் வந்துள்ளது. “லா” இல்லை என்ற பொருளைக் காட்டுவது போல் “இல்லா” என்ற சொல் இருக்கிறது என்ற பொருளைக் காட்டும். இவ்வாறு வசனம் அமைந்தால் “அல்லாஹ் தவிர வேறெதற்கும் “வுஜூத்” உள்ளமை இல்லை” என்ற பொருள் வந்து விடும்.
ஆதாரம்: இன்ஸான் காமில்,
பாகம் 02, பக்கம்: 134, ஆசிரியர்: ஜீலீ

“இல்முல் மஆனீ” கலையில் திருக்கலிமாவில் வந்துள்ள “லா” என்பது سَلْبٌ –“ஸல்ப்” என்றும், “இல்லா” என்பது إِيْجَابٌ – “ஈஜாப்” என்றும் சொல்லப்படும். இது அக் கலையின் கலைச் சொற்களாகும்.

أمّا الكون أو الخلق أو العالم فهو وَهْمٌ من الأوهام، أو خَيَالٌ من الخيالات، الّتي تَطْرَأ على عقول المحجوبين، والخلقُ عند الجيلي ليس له وجود حقيقيّ ، بل وجودُه مجازيّ إعتباريّ، وحقيقته عنده أنّه هو الله، ولكنّه تجلّى بصُور المخلوقات،
يقول الجيلي:
فأوصافه والاسم والأثـر الّـذي – هو الكون عينُ الذات والله جامع
فمَا ثَمَّ من شيئ سوى الله فى الورى – وما ثَمَّ مسموعٌ وما ثمّ سامع
(قصيدة النّادرات العينيّة للجيلي، ص 88)
படைப்பு என்பது அல்லது சிருட்டி என்பது அல்லது உலகம் என்பது பேதமைகளில் ஒரு பேதமையேயாகும். அல்லது திரையிடப்பட்ட புத்திகளில் ஏற்படுகின்ற “கயால்”களில் ஒன்றாகும்.

“கயால்” என்றால் அது பார்வைக்கு ஒரு பொருளாகத் தோற்றும். ஆனால் அப்பொருளாக எதார்த்தத்தில் இருக்காது. கானல் நீர் போன்று. படைப்புக்கு எதார்த்தத்தில் “வுஜூத்” உள்ளமை இல்லை. எனினும் அதற்கு “மஜாஸ் இஃதிபார்” அடிப்படையில் “வுஜூத்” உண்டு. இதை சுருக்கமாகவும், நாமறிந்த வசனத்தில் சொல்வதாயின் “டூப்ளிகட்” அதாவது இரண்டாம் நம்பர் “வுஜூத்” உண்டு எனலாம். இதைப் போலி உள்ளமை என்றும் சொல்லலாம். இதன் சுருக்கம் என்னவெனில் படைப்புக்கு உள்ளமை இல்லை என்பதேயாகும். ஜீலீயின் கொள்கை படைப்பு அல்லாஹ் என்பதுதான். ஆயினுமவன் படைப்பின் உருவத்தில் “தஜல்லீ” வெளியாகியுள்ளான்.
ஆதாரம்: அந்நாதிறாதுல் ஐனிய்யா
பக்கம்: 88, ஆசிரியர்: அப்துல் கரீம் அல்ஜீலீ


يقول الجيلي:
هو مُوجدُ الأشياءِ وهو وُجودُها – وعينُ ذوات الكل وهو الجوامع
حقائقُ ذاتٍ فى مراتبِ حقِّه – تُسَمَّى باسم الخلق والحق واسع
قصيدة النادرات العينية للجيلي، ص 91،92

அவனே அனைத்து வஸ்த்துக்களையும் உண்டாக்குபவனாவான். அவனே அவற்றின் “வுஜூத்” உள்ளமையுமாவான். அவன் அனைத்து வஸ்த்துக்கள் தானானவையாகவும் உள்ளான். அவனுடைய படித்தரங்களில் “தாத்”தின் எதார்த்தங்கள் படைப்பின் பெயர் கொண்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
(அந்நாதிறாதுல் ஐனிய்யா, அல் ஜீலீ, பக்கம் 91,92)

ஜீலீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அனைத்துப் படைப்புக்களையும் அவனே படைக்கிறான். அவனே அவ் அனைத்தின் “வுஜூத்” உள்ளமையாகவும் உள்ளான். அவனின் “தாத்”துதான் அதன் மர்தாபாக்களில் – படித்தரங்களில் படைப்பு என்ற பெயரைப் பெறுகின்றது என்பதாக,
ولئلّا يظنّ أحدٌ أنّ الجيلي يعتقد أنّ المخلوق له وجود حقيقيّ أو ذاتٌ مستقلّة يتجلّى الله فيها، بَيَّنَ الجيليُّ (فما تجلّى إلّا على نفسه، لكنّا نُسمّي تلك اللّطيفة الإلهيّة ‘عبدا ‘ باعتبار أنّها عوض عن العبد، وإلّا فلا عبدَ ولا ربّ، إذ بانتفاء المربُوبِ انْتَفى اسمُ الربّ ، فما ثمَّ إلّا الله وحده، الواحد الأحد ) (الإنسان الكامل للجيلي ، ص 97 )

மேற்கண்ட இமாம் ஜீலீ அவர்களின் கருத்தை எவரும் தவறாக (அவர் படைப்புக்கு எதார்த்தமான உள்ளமை உண்டு என்றும், அல்லது படைப்புக்குச் சுயமான உள்ளமை உண்டு என்றும்) விளங்கி அந்த படைப்பின் உள்ளமையிலேயே அல்லாஹ் “தஜல்லீ” வெளியாகிறான் என்று விளங்கிக் கொள்ளாமலிருப்பதற்காகவே பின்வருமாறு ஜீலீ அவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.

விளக்கம்:
இது ஜீலீயின் விளக்கம்.
அல்லாஹ் “தஜல்லீ” வெளியாகுமிடம் – அதாவது அவனின் “மள்ஹர்” என்பது அவனின் உள்ளமையல்லாத வேறொன்றில் வெளியாகிறதென்றும், அதற்கு சுமயான உள்ளமை உண்டு என்றும் எவரும் நினைக்கலாமென்பதற்காக – விளங்கிக் கொள்ளாமலிருப்பதற்காக فَمَا تَجَلَّى إِلَّا عَلَى نَفْسِه அவன் வேறொன்றின் மீதும் வெளியாகாமல் தன்னிலேயே வெளியானான் என்றும், அந்த நுட்பமான வெளிப்பாடுதான் “அப்து” அடியான் என்று நாம் பெயர் வைத்துக் கொண்டது என்றும் விளக்கமாகக் கூறியுள்ளார்கள். இது “அப்த்” என்பதற்கு பதிலாக வந்துள்ளதென்ற கருத்தின்படி சொல்லப்பட்டதாகும். இன்றேல் “அப்து” என்பதுமில்லை, “றப்பு” என்பதுமில்லை. “மர்பூப்” என்றால் வளர்க்கப்பட்டது. அதுவே “அப்த்” என்று சொல்லப்படுகிறது. “அப்து” இல்லையென்றால் “றப்பு” என்பதும் இல்லை. அங்கே இருப்பது அல்லாஹ்வின் உள்ளமை மட்டுமேயாகும். (ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில், ஆசிரியர்: ஜீலீ, பக்கம் 97) …

RELATED ARTICLES

Most Popular

Recent Comments