Sunday, October 6, 2024
Homeநிகழ்வுகள்18வது “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டமளிப்பு விழா - 2022 நிகழ்வின் தொகுப்பு

18வது “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டமளிப்பு விழா – 2022 நிகழ்வின் தொகுப்பு

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடன் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் இலங்கைத் திருநாட்டில் தன்னிகரற்று விளங்கும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியில் “ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்” எனும் நாற்பெரும் கலைகளையும் போதித்து “அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்”, “அல் அஷ்அரிய்யா” வழியில் செவ்வனே பயணிக்கும் உலமாஉகளுக்கு “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டம் வழங்கும் 18வது “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டமளிப்பு விழா 18.03.2022 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.00 மணி தொடக்கம் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மாணவன் MIM. அப்துல்லாஹ் அவர்களினால் கிறாஅத் ஓதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மௌலவீ AL. முஸாதிக் அஸ்ஹரீ B.A. அவர்களினால் பட்டமளிப்பு உரை நிகழ்த்தப்பட்டது. உரை நிறைவின் பின்னர் “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டமளிப்பும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்று, பட்டம் பெறும் உலமாஉகள் சார்பில் மௌலவீ MUM. உவைம் றப்பானீ அவர்களினால் கன்னியுரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி மாணவர்களினால் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்முறை பட்டம் பெற்று வெளியேறும் உலமாஉகளில் 2020 ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மௌலவீ ML. லத்பான் றோஸின் றப்பானீ அவர்களை கௌரவித்து அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் சார்பில் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பின்னர் மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.) அவர்கள் இம்முறை பட்டம் பெற்று வெளியேறும் றப்பானீ உலமாஉகளை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ‘WAHDAT AL-WUJUD IS THE THEOLOGICAL TENET OF ISLAMIC SUFISM’ நூல் வெளியீடு இடம்பெற்று, நூல் வெளியீட்டு உரையினை மௌலவீ NM. பஸ்மில் றப்பானீ அவர்கள் நிகழ்த்தினார்கள். இறுதியாக கவிஞர் MACM. றபாய்தீன் அவர்களால் சிறப்பு கவிதை வாசிக்கப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் அதிபர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷம்சுல் உலமா, ஈழத்தின் சொற்கொண்டல், ஆரிப்பில்லாஹ், ஞானபிதா, அல்ஹாஜ், மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அன்னவர்களும், சங்கைக்குரிய உலமாஉகளும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இம்முறை “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டம் பெறும் உலமாஉகள்

முகம்மது றபீக் முகம்மது துஜாஸ்
இல 27, ALSL. மாவத்தை, புதிய காத்தான்குடி-06

அப்துஸ் ஸத்தார் முகம்மது சத்ரி அஹமட்
இல 469, புதிய பாலமுனை வீதி, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு.

அப்துல் ஹகீம் அஹ்மத் ஸிதாரீ
இல 137/2, தீன் வீதி, காத்தான்குடி 06

மாஜிதீன் அஹமட் ஹானீ
இல 10/11, நெசவு நிலைய வீதி, புதிய காத்தான்குடி-06

முஹம்மது ஜுனைதீன் முகம்மது ஹிலால்
இல 5/14, அப்றார் பள்ளி வீதி, புதிய காத்தான்குடி-06

முஹம்மது உவைஸ் முஹம்மது உவைம்
இல 139, தீன் வீதி, காத்தான்குடி-06

முஹம்மது லதீப் லத்பான் றோஸின்
இல 298/2 ALSL. மாவத்தை, புதிய காத்தான்குடி-06

RELATED ARTICLES

Most Popular

Recent Comments