Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பரிசுத்த மெய்ப் பொருளுக்கு இரு நிலைகள் உள்ளன. அவை தன்ஸீஹ் - தஷ்பீஹ் என்பன.

பரிசுத்த மெய்ப் பொருளுக்கு இரு நிலைகள் உள்ளன. அவை தன்ஸீஹ் – தஷ்பீஹ் என்பன.

للذَّاتِ المقدّسَةِ المنزّهة حالتان،حالةُ تنزيهٍ وحالةُ تشبيهٍ، التشبيه الإلهي عبارة عن صورة الجمال، لأنّ الجمالَ الإلهيَّ له معانٍ، وهي الأسماء والأوصاف الإلهيّة، وله صُورٌ، وهي تجلّياتُ تلك المعاني فيما يقع عليه مِن المَحسُوسِ أو المعقول، فالمحسُوسُ كما فى قوله رأيتُ ربّي فى صورة شابٍّ أمرَدَ، والمعقولُ كقوله أنا عند ظنِّ عبدي بي فَلْيَظُنَّ بِيْ مَا شَاءَ، وهذه الصورة هي المُرادةُ بالتّشبيه، ولا شكّ أنّ الله تعالى فى ظُهوره فى صورة جمالِه باقٍ على ما استحقَّ من تنزِيهِه، فكما أعطيت الجناب الإلهيّ حقَّه من التنزيه فكذلك أعطِهِ مِن التشبيه الإلهيّ حقَّه، (الإنسان الكامل، ج أوّل، ص 36)

பரிசுத்த மெய்ப் பொருளுக்கு இரு நிலைகள் உள்ளன. அவை தன்ஸீஹ் – தஷ்பீஹ் என்பன.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அறபு வரிகளின் சுருக்கிய மொழியாக்கம்:

அல்லாஹ்வின் “தஷ்பீஹ்” நிலை அழகுத் தோற்றத்தின் மறு வசனமாகும். தெய்வீக அழகுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவைதான் அவனின் திரு நாமங்களும், தன்மைகளுமாகும். இன்னும் அதற்கு உருவங்களும் உண்டு. அவ் உருவங்கள் ஐந்து புலன்களால் அல்லது அறிவால் உணரப்படுகின்ற, அறியப்படுகின்ற அவனின் திரு நாமங்களினதும், தன்மைகளினதும் உருவங்களாகும். தோற்றங்களாகும்.

ஐம்புலன்களில் ஒன்றான பார்வைப் புலனால் அறியப்படுவதற்கு நான் எனது இறைவனை முகத்தில் முடி முளைக்காத வாலிபனின் தோற்றத்தில் கண்டேன் என்ற நபீ மொழியை உதாரணமாகக் கொள்ளலாம். “அக்ல்” என்ற புத்தியால் – அறியப்படுவதற்கு “நான் எனதடியான் என்னை நினைக்குமிடத்தில் இருக்கிறேன். என்னைப்பற்றி அவன் நாடியவாறு நினைக்கட்டும்” என்ற நபீ மொழியை ஆதாரமாகக் கொள்ளலாம்.

இவ் உருவமே “தஷ்பீஹ்” என்றதின் கருத்தாகும். அல்லாஹ் எந்த உருவத்தில் வெளியானாலும், தோற்றினாலும் அதற்கு முன்னர் அவன் இருந்த “தன்ஸீஹ்” நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. “தன்ஸீஹ்” அவ்வாறே இருக்கும். அது அழிந்து போவதோ, மாறூபட்டுப் போவதோ இல்லை.

ஆகவே, மனிதா! நீ “தன்ஸீஹ்” நிலைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும், “தஷ்பீஹ்” நிலைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் வாழ்ந்து கொள்!

சுருக்கிய மொழியாக்கம் முற்றுப் பெற்றது.
ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில்
பாகம்: 01, பக்கம் 36, ஆசிரியர் அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல் ஜீலீ

சுருக்கம்:

அல்லாஹ்வின் “தாத்” உள்ளமைக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று “தன்ஸீஹ்” என்றும், மற்றது “தஷ்பீஹ்” என்றும் சொல்லப்படும்.

இவ்விரு நிலைகளில் முந்தினது அரூப நிலையென்றும், பிந்தினது ரூப நிலையென்றும் ஸூபீகள் சொல்வர். அவர்களில் இன்னும் சிலர் முந்தினது பரிசுத்த நிலையென்றும், பிந்தினது அதற்கு மாறான நிலையென்றும் கொள்வர். அவர்களில் இன்னும் சிலர் முந்தினது ஒப்புவமையற்ற நிலை என்றும், மற்றது ஒப்புவமையுள்ள நிலையென்றும் கொள்வர். இன்னும் சிலர் அல்லாஹ் படைப்பாகுமுன்னிருந்த நிலையை “தன்ஸீஹ்” என்றும், படைப்பாக வெளியான பின்னுள்ள நிலையை “தஷ்பீஹ்” நிலை என்றும் சொல்வர்.

இரு நிலைகளும் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட நிலைகளேயாகும். இரு நிலைகளும் ஸூபீகளும், இறைஞானிகளும் பேசி வருகின்ற நிலைகளுமேயாகும்.

“முதகல்லிமீன்” என்போர் நீரின் வெளியே நீந்துபவர்களாவர். ஸூபீ மகான்கள் நீருள் நீந்துபவர்களாவர். முந்தினவர்கள் “தன்ஸீஹ்” நிலை தொடர்பாக பேசுவார்கள். “தஷ்பீஹ்” நிலை தொடர்பாகப் பேசமாட்டார்கள். ஸூபீ மகான்கள் இரு நிலைகள் தொடர்பாகவும் பேசுவார்கள்.

“முதகல்லிமீன்”கள் நூருள்ளலாம், “உம்முல் பறாஹீன்”, “துஹ்பதுல் முரீத்”, “அகாயிதுன் நஸபீ” முதலான நூல்களை தமது கொள்கைக்கு ஆதாரமாக எடுப்பார்கள். “முஹக்கிகீன்”களான ஸூபீ மகான்கள் அல்புதூஹாதுல் மக்கிய்யா, புஸூஸுல் ஹிகம், அல் இன்ஸானுல் காமில், ஹிகம் போன்ற நூல்களையும் “முகாஷபீன்” “கஷ்பு” எனும் இறையறிவு பெற்றவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் தமது கொள்கைக்கு ஆதாரங்களாக எடுப்பார்கள்.

தஸவ்வுப் – ஸூபிஸம் கற்காத உலமாஉகள் “தன்ஸீஹ்” என்ற நிலையோடு மட்டுமே நின்று கொள்வார்கள். “தஷ்பீஹ்” “குப்ர்” என்பர். இது அவர்களின் பிறப்புவாசி போலாகிவிட்டது.

அல்லாஹ் தன்ஸீஹ், தஷ்பீஹ் இரண்டையும் ஒரே வசனத்தில் கூறியிருப்பது இதை மறுப்பவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பு உண்டு. அல்லது தெரிந்திருந்தாலும் கூட பிறருக்கு விளக்கி வைக்கும் திறமை இல்லாதிருக்கலாம். அல்லது இதைக் கருவாகக் கொண்டு எழும் கேள்விகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுக்க சக்தியற்றவர்களாயிருந்திருக்கலாம்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவன் போல் – அல்லாஹ் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவனும், அவனே பார்ப்பவனுமாவான்.
(திருமறை – 42-11)

அவன் போல் எதுவுமில்லை என்பது “தன்ஸீஹ்” நிலையை காட்டுகிறது. அவனே கேட்பவனும், அவனே பார்ப்பவனுமாவான் என்பது “தஷ்பீஹ்” நிலையை காட்டுகிறது.

ஏனெனில் “வஹுவஸ்ஸமீஉல் பஸீர்” என்ற திரு வசனம் “ஹஸ்ர்” حَصْرٌ மட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் என்ற பொருளைத் தருகின்ற வசனமாகும்.

இவ்வசனத்திற்கு கேட்பவனும் அவன், பார்ப்பவனும் அவன் என்று பொருள் கூறாமல் இதே கருத்தை பலப்படுத்தியும், மட்டுப்படுத்தியும் சொல்வதாயின் “கேட்பவனும் அவனே, பார்ப்பவனும் அவனே” என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்ல வேண்டுமென்று இவ்வசன அமைப்புத்தான் கூறுகிறதேயன்றி இது “தஃவீல்” – வலிந்துரையோ, கற்பனையோ அல்ல.

இவ்வசனம் தருகின்ற பொருளின் படி கேட்பவனாயும் பார்ப்பவனாயும் அல்லாஹ் மட்டுமே இருக்க வேண்டும். வேறெவரும் கேட்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது என்றே முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முடிவு செய்ய முடியாது. ஏனெனில் இன்று மனிதன் கேட்பதையும், பார்ப்பதையும் நாம் அறிகிறோம். நேரிலும் பார்க்கிறோம். இந்நிலையில் மனிதன் கேட்பதுமில்லை, பார்ப்பதுமில்லை என்றும், அல்லாஹ் மட்டும்தான் கேட்கிறான் என்றும், பார்க்கிறான் என்றும் ஒருவன் வாதாடினால் அவனை மனிதர்கள் அங்கோடைக்கு அனுப்ப வேண்டுமென்றுதான் சொல்வார்கள். அங்கோடை என்பது இலங்கையிலுள்ள ஓர் ஊரின் பெயர். இங்குதான் பைத்திய காரர்களுக்கான மிகப் பெரிய மருத்துவமனை உண்டு.

“வஹுவஸ் ஸமீஉல் பஸீர்” என்ற திரு வசனத்தில் கேட்டல், பார்த்தல் இரண்டும் அல்லாஹ்வில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளன. இவ் ஆழமான கருத்தின்படி வேறெவருக்கும் கேள்வியும், பார்வையும் இருக்க முடியாது.

குறித்த திரு வசனம் وَهُوَ سَمِيْعٌ بَصِيْرٌ என்று “அல்” இல்லாமல் வந்திருந்தால் கட்டுப் பாட்டுக்குரிய கருத்து வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவன் கேட்பவனும், பார்ப்பவனுமாவான் என்று தான் பொருள் வந்திருக்கும்.

அல்லாஹ் தனது “தஷ்பீஹ்” நிலையை எவ்வாறு விளக்கி வைத்துள்ளான் என்பதை அறியும் போது அவனை இரு கரங்களால் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்ய வேணும் போல் உள்ளது. இது எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட கதை போன்றதாகும். ஆயினும் அவன் மீது எனக்குள்ள காதல் இவ்வாறு சொல்ல வைக்கிறது.

எனது இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இன்னொரு “பத்வா” வழங்குவதற்கும் உலமா சபை நினைக்கலாம். வழங்கட்டும். ஒன்றல்ல. ஓராயிரம் வழங்கட்டும். அல்ஹம்து லில்லாஹ்! எவ்வழியிலேனும் இறை ஞானம் பரவட்டும், வளரட்டும். அறியாமை அகலட்டும். பறக்கட்டும்.

“பத்வா” வழங்கப்பட்டதினால்தான் இன்று இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலர் கொள்கையில் ஸூபீகளாகி ஒளிர்கின்றார்கள். நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள் ரிஸ்வி முப்தி ஹழ்றத் அவர்களும், பத்வாக்குழுவுமேயாவர்.
الإنسان حريصٌ على ما مُنِع، مدّ الله أعمارهم لنشـر وحدة الوجود وحفظ أجسادَهم من شرور أعدائهم، وفهّمهم ما لم يفهموا، وعلّمهم ما لم يعلموا، وأخرج من قلوبهم حبّ الجاه وحبّ المال وحبّ الرئاسة وحبّ الشّهرة، إنّ الشُّهرة آفةٌ وكلٌّ يتمنّاها، وإنّ الخُمولَ نعمةٌ وكلٌّ يأباها،
மேற்கண்ட لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ தன்ஸீஹ், தஷ்பீஹ் இரண்டும் ஒரு வசனத்தில் சூசகமாக கூறப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல. لبس كمثله شيء என்பது “தன்ஸீஹ்”. وهو السميع البصير என்பது “தஷ்பீஹ்”

இத்திரு வசனத்தில் இன்னுமோர் அதிசய உண்மை புதையுண்டு கிடப்பது ஒரு சிலருக்கு மட்டுமே புரியும். அதை நான் இங்கு சுட்டிக் காட்டுகிறேன். தெளிவாகக் கூற விரும்பவில்லை. எதிரிகள் விளக்கமில்லாமலோ, பொறாமையாலோ “பித்னா” குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

அது என்னவெனில் இத்திரு வசனத்தில் كَمِثْلِهِ என்ற சொல்லில் ஒரு “காப்” வந்துள்ளது. இந்த “காபு”க்கும், அதைத் தொடர்ந்து வந்துள்ள “மித்ல்” என்ற சொல்லுக்கும் ஒரே பொருள்தான். இவ்வசனம் இவ்வாறு அமையாமல் “காப்” இன்றி வந்திருந்தாலும் பொருளில் மாற்றமில்லை. அதாவது لَيْسَ مِثْلَهُ شَيْءٌ அவனைப் போல் எதுவுமில்லை என்றே பொருள் வரும். “காப்” ஏன் வந்தது?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments