தொடர் 02
“அல்லாஹ்” எனும் திரு நாமம் பற்றிய விளக்கம்.
وسمعت الشّيخ عبد العزيز الدبّاغَ رضي الله عنه يقول فى أسماء الله الحسنى إنّ معانيها حصلت للأنبياء عليهم الصّلاة والسّلام مِن مشاهداتٍ، فمَن شَاهدَ معنًى وضَعَ له اسما، فالمعاني ظهرتْ لهم على قدرِ مُشاهدتِهم فى الله عزّ وجلّ، والأسماء خَرجتْ منهم بِحَسَبِ ذلك،
قال رضي الله عنه فَجَمِيْعُ الأسماء حصلتْ بوضْعِ الأنبياء عليهم الصّلاة والسّلام، وسيّدُنا إدريس عليه السلام أوَّلُ مَن وضعَ شيأ منها، ولكنّهم وضعُوا بلغتِهم، ومزيّةُ القرآن أنّه جمعَهَا كلّها وأتى بها مع ذلك بلغةِ العرب، لا بألسِنَةِ الأنبياء المتقدّمين،
அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் அத்தப்பாகு(غ) றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். “அஸ்மாஉல் ஹுஸ்னா” அழகிய திரு நாமங்கள் என்பன அல்லாஹ்வுக்கு நபீமார்களால் வைக்கப்பட்ட பெயர்களேயாகும். 99 திரு நாமங்களும் இவ்வாறுதான் வைக்கப்பட்டுள்ளன.
நபீமார்களுக்கு அல்லாஹ் ஒரு சக்தியை வழங்கியுள்ளான். அவர்கள் அல்லாஹ்வை தங்களின் தியானம், மற்றும் வணக்க வழிபாடுகளின் போது அந்த சக்தி மூலம் காட்சியாகக் காண்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு தோற்றுவான்.
அவர்கள் தமக்கு கிடைக்கின்ற காட்சிக்கு ஏற்றவாறு அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் உதிப்பாக்குகின்ற பெயர்களை அவனுக்கு அவர்கள் சூட்டுவார்கள். அவர்களில் ஒருவருக்கு கிடைக்கின்ற காட்சி போன்றே மற்றவர்களுக்கு கிடைக்கும் என்பது கருத்தல்ல. காட்சி வழங்குவது ஒரு “வுஜூத்” உள்ளமையாயிருந்தாலும் அதன் காட்சிகள் – “தஜல்லியாத்” பல தரப்பட்டதாயிருக்கும்.
அவர்கள் தமக்கு கிடைத்த காட்சிகளுக்கு ஏற்ற, பொருத்தமான பெயர்களையே அவனுக்கு சூட்டுவார்கள்.
நபீ இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் தங்களுக்கு கிடைத்த காட்சிகளுக்கு ஏற்ற, பொருத்தமான பின்வரும் பெயர்களை அவனுக்கு வைத்தவர்களாவர்.
عَلِيْمٌ – அலீமுன், قَوِيٌّ – கவிய்யுன், عَظِيْمٌ – அளீமுன், مَنَّانٌ – மன்னானுன் என்பன அவர்கள் வைத்த பெயர்களேயாகும்.
முறையே இவற்றுக்கான பொருள் யாவையும் அறிந்தவன் அல்லது யாவைக் கொண்டும் அறியப்பட்டவன், அபார சக்தியுள்ளவன், வலுப்பமானவன், பேருபகாரம் செய்பவன் என்பதாகும்.
இவ்வாறுதான் ஏனைய நபீமார்களுமாவர். அவர்கள் தமக்கு கிடைத்த இறை “ஷுஹூத்” காட்சிக்கு ஏற்ற பெயர்களை தமது தாய் மொழிகளில் வைத்தார்கள். எனினும் திருக்குர்ஆனில் அல்லாஹ் அப்பெயர்களை மேற்கண்டவாறு அறபு மொழியில் கூறியுள்ளான். நபீமார்களின் மொழிகளில் இருந்து அறபு மொழியாக்கம் செய்தவன் அல்லாஹ்தான். அவனின் மொழியாக்கம் எக்குறையுமின்றி நிறைவுள்ளதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
قال الشّيخ رضي الله عنه لَوْ وَضَعَ سيّدُ الوجود صلّى الله عليه وسلّم للمَعاني الّتي حصلتْ له من مُشاهدَتِه التي لا تُطاقُ أسماءً لَذَاب كلُّ من سَمِعَها، ولكنّه سبحانه وتعالى لطيف بعباده،
அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் அத்தப்பாகு (غ) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“ஸெய்யிதுல் வுஜூத்” உள்ளமையில் தலைவரும், உள்ளவற்றின் தலைவருமான அண்ணலெம்பிரான் அஹ்மத் எங்கள் கோமான், முதல் வெளிப்பாடு “அல்மள்ஹறுல் அதம்மு” اَلْمَظْهَرُ الْأَتَمُّ சம்பூரணோதயம், ஸர்தாரே காயினாத் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் காட்சிக்கு ஏற்ற, பொருத்தமான பெயர்கள் வைத்திருந்தால் அப்பெயர்களை செவியேற்கும் சகல படைப்புகளும் கரைந்துருகிப் போய் விடும். அல்லாஹ் இரக்கமுள்ளவன்.
அவர்கள் “றஹ்மதுன் லில் ஆலமீன்” அனைத்து மத, அனைத்து நிற, அனைத்து மொழி மக்களுக்கும் அருளாக அனுப்பப்பட்டவர்களாதலால்தான் தங்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் காட்சிக்கு ஏற்ற, பொருத்தமான பெயர்களில் ஒரு பெயர் கூட அவர்கள் சொல்லவில்லை.
قال الشّيخ رضي الله عنه، وإياك أن تظن أن هذا الكلام فيه مخالفةٌ للعقيدة، وهي أنّ الأسماء الحُسنى قديمة، فإنّ المراد بقِدَمِها قِدَمُ معانيها لا ألفاظُها الحادثة،
மேலும் அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் அத்தப்பாகு(غ) றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
சகோதரா! அல்லாஹ்வின் திரு நாமங்கள் அவனுக்கு நபீமார்கள் தமது மொழிகளில் வைத்தார்கள். அல்லாஹ் அவற்றை திருக்குர்ஆனில் அறபு மொழியில் மொழியாக்கம் செய்து கூறியுள்ளான் என்று நான் சொல்வது “அகீதா” கொள்கைக்கு முரணானதென்று நீ நினைத்துவிடாதே! ஏனெனில் அல்லாஹ்வின் திரு நாமங்கள் பூர்வீகமானவையாக இருக்கும் நிலையில் அவை எவ்வாறு புதியனவாக ஆகும் என்று நீ விளங்கிவிடாதே! ஏனெனில் அல்லாஹ்வின் திரு நாமங்கள் பூர்வீகமானவையே தவிர புதிதானவை அல்ல என்பது உண்மைதான். எனினும் அத்திரு நாமங்களின் கருத்துகள்தான் பூர்வீகமானவையே தவிர சொற்கள் பூர்வீகமானவை அல்ல. அவை புதிதானவைகள்தான். இவ்வாறு நீ விளங்கிக் கொண்டால் எனது பேச்சு “அகீதா” கொள்கைக்கு முரணானவையல்ல என்பதை ஏற்றுக் கொள்வாய்.
قَدِيْمٌ
– “கதீமுன்” பூர்வீகமானது என்பதற்கு எதிர்மறை حَادِثٌ புதிதானது என்பதாகும்.
الله
– என்ற திரு நாமத்தில் உள்ள விஷேடம் என்னவெனில் இத்திரு நாமம் நான்கு எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும். அவை அலிப், லாம், லாம், ஹே என்பனவாம். இந் நான்கு எழுத்துக்களில் எந்த எழுத்தை நீக்கினாலும் எஞ்சியுள்ள எழுத்துக்கள் அவனையே குறிக்கும். இத்தகைய ஒரு விஷேடம் வேறு எந்தவொரு சொல்லுக்குமில்லை.
الله
என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களுக்களான பத்ஹ், கஸ்ர், ழம்மு என்ற குறியீடுகளை நீ கருத்திற் கொள்ளாமல் எழுத்துக்களை மட்டும் கருத்திற் கொண்டு பார். அல்லாஹ் என்ற சொல்லின் முதல் எழுத்தான “அலிப்” என்பதை நீக்கினால் لِلَّهِ என்று வரும். இவ்வாறு வந்தாலும் இது அல்லாஹ்வை குறிக்குமேயன்றி வேறொன்றைக் குறிக்காது. الله என்ற சொல்லில் உள்ள இரண்டாவது எழுத்தான முதலாவது “லாம்” என்ற எழுத்தை நீக்கினால் لَهُ என்று வரும். இவ்வாறு வந்தாலும் இது அல்லாஹ்வையே குறிக்கும். இதேபோல் இரண்டாவது “லாம்” என்ற எழுத்தை நீக்கினால் எஞ்சியுள்ள “ஹூ” என்ற எழுத்து அவனையே குறிக்கும். இப்படி ஒரு விஷேடம் அறபு மொழியில் வேறு எந்தவொரு சொல்லுக்குமில்லை.
“அல்லாஹ்” என்ற சொல்லில் உள்ள இன்னொரு விஷேடம் என்னவெனில் இச் சொல்லை இது தருகின்ற முழுத் தத்துவமும் தொனிக்கும் பாணியில் வேறு எந்த ஒரு மொழியிலும் மொழியாக்கம் செய்ய முடியாது. பொதுவாக இறைவன், கடவுள் என்று மட்டும்தான் சொல்ல வேண்டும்.
இச் சொல்லில் உள்ள இன்னொரு விஷேடம் என்னவெனில் இது مَوْصُوْفْ – வர்ணிக்கப்பட்டதாக வசனத்தில் வருமேயன்றி صِفَةٌ வர்ணிக்கக் கூடியதாக எந்த ஒரு வசனத்திலும் வராது. الله العظيم، الله الكريم என்பது போன்று.
இன்னும் இந்நாமத்தின் அதி விஷேடம் என்னவெனில் இது அவனுடைய “தாத்” – வுஜூத் உள்ளமைக்கு மட்டுமுள்ள பெயரேயன்றி உலகில் இதுகால வரை வேறெவருக்கும் பெயராக வைக்கப்படாதிருப்பதேயாகும்.
இது தொடர்பாக ஞான மகான்களின் தலைவர்
الشيخ الأكبر والمسك الأذفر والكبريت الأحمر والنور الأبهر والألمعيُّ الأشهر محي الدين ابن عربي قُدِّس سرُّه
அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
وقد عصمَ الله تعالى الإسمَ ‘ الله ‘ أن يُطلقَ على أحدٍ، وما عصَمَ إطلاقَ لفظ ‘ إله ‘، قال تعالى أفرأيتَ مَنِ اتَّخَذَ إلهَه هواه، ولله تعالى فى ذلك سرٌّ يعلمه العلماءُ بالله تعالى، لا يُسطَرُ فى كتاب، لأنّ الكتاب يقع فى يد أهله وغير أهلِه، (اليواقيت، ج1، ص 27)
அல்லாஹ் என்ற பெயரை எவருக்கும் சூட்டாமல் அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான். ஆயினும் “இலாஹ்” என்ற சொல்லை அவ்வாறு பாதுகாக்கவில்லை. இதில் அல்லாஹ்வின் இரகசியம் ஒன்று உண்டு. இதை இறைஞானிகள் அறிவர். இந்த இரகசியம் எந்த ஒரு நூலிலும் எழுதப்படமாட்டாது. ஏனெனில் நூல் என்பது தகுதியானவர் கையிலும் கிடைக்கலாம். தகுதியில்லாதவர் கையிலும் கிடைக்கலாம்.
இக்கட்டுரையிலும், இதற்கு முந்தின தொடரிலும் அல்லாஹ் எனும் திரு நாமம் பற்றி நான் எழுதிய விளக்கம் அல்குத்பு அப்துல் அஸீஸ் அத்தப்பாகு(غ) றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய விளக்கமாகும்.
விபரம் தேவையானோர் அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களின் الإبريز எனும் நூல் 257ம் பக்கத்தை பார்க்கவும்.
குறிப்பு: எனது ஆக்கங்களை வாசிக்கும் சகோதர, சகோதரிகள் எனக்காகவும், எனது மகன் செய்னீ சுஃதான் அவர்களுக்காகவும் “துஆ” செய்யுமாறு அன்பாய்க் கேடடுக் கொள்கிறேன்.
Pages: 1 2