தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “மத்ஹப்” இல் முதலாம் “றக்அத்”தில் ஏழு “தக்பீர்”களும், இரண்டாம் “றக்அத்”தில் ஐந்து “தக்பீர்”களும் சொல்ல வேண்டும்.
இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்களின் “மத்ஹப்” இல் முதலாம் “றக்அத்”தில் மூன்று “தக்பீர்”களும், இரண்டாம் “றக்அத்”தில் அதேபோல் மூன்று “தக்பீர்”களும் சொல்ல வேண்டும்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்களின் ஹன்பலீ “மத்ஹப்” இல் முதலாம் “றக்அத்”தில் ஆறு “தக்பீர்”களும், இரண்டாம் “றக்அத்”தில் ஐந்து “தக்பீர்”களும் சொல்ல வேண்டும்.
இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் அவர்களின் மாலிக் “மத்ஹப்” இல் முதலாம் “றக்அத்”தில் ஆறு “தக்பீர்”களும், இரண்டாம் “றக்அத்”தில் ஐந்து “தக்பீர்”களும் சொல்ல வேண்டும்.
எனவே, பெருநாள் தொழுகையில் “தக்பீர்” சொல்லும் எண்ணிக்கையில் ஹன்பலீ, மாலிக் இரு மத்ஹபுகளும் ஒரே மாதிரியானவையாகும். ஏனைய இரு “மத்ஹப்”களிலுமே எண்ணிக்கையில் வித்தியாசமுண்டு.