Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 03

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

أقسام الصيام – நோன்பின் வகைகள்.

اتَّفَقَ المالكيّةُ والشافعيّةُ والحَنابِلَةُ على أنّ الصّيام ينقسم إلى أربعة أقسامٍ،

இமாம் மாலிக் அவர்களின் “மாலிக் மத்ஹப்” வழியிலும், இமாம் ஷாபிஈ அவர்களின் “ஷாபிஈ மத்ஹப்” வழியிலும், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் “ஹன்பலீ மத்ஹப்” வழியிலும் நோன்பின் வகைகள் நான்காகும்.

أحدُها صيامٌ مفروضٌ، وهو صيامُ شهرِ رمضانَ، أداءًا وقضاءًا، وصيامُ الكفّاراتِ، والصّيام المنذورُ،
ثانيها الصّيامُ المسنُونُ،
ثالثها الصيامُ المحرّمُ،
رابعها الصّيام المكروهُ

وسيأتي بيانُ كلّ قسمٍ من هذه الأقسام عند الثلاثة، أمّا الحنفيّة فقالوا إنّ أقسام الصيام كثيرة،

ஒன்று: “பர்ழ்” கடமையான நோன்பு.
இரண்டு: “ஸுன்னத்”ஆன நோன்பு.
மூன்று: “ஹறாம்” விலக்கப்பட்ட நோன்பு.
நான்கு: “மக்றூஹ்” விரும்பத்தகாத நோன்பு.

“பர்ழ்” கடமையான நோன்புகள்:

இது மூன்று வகை. ஒன்று – புனித றமழான் மாத நோன்பு. இரண்டு – குற்றத்திற்கான தண்டனை நோன்பு. மூன்று – நேர்ச்சை நோன்பு.

மேற்கண்ட மூன்று வகை நோன்புகளும் கடமையானவையாகும். கட்டாயம் நோற்க வேண்டும். தவறினால் “களா” பிறகாவது நோற்கத்தான் வேண்டும். இன்றேல் பாவம். தண்டனையுண்டு.

நான்கு இமாம்களில் நோன்பை மேற்கண்டவாறு நான்கு வகைகளாகப் பிரித்தவர்கள் இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ஆகியோராவர். றஹிமஹுமுல்லாஹ்.

இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் மட்டும் நோன்பின் வகைகள் அதிகமென்று கூறியுள்ளார்கள். அவர்கள் கூறிய விபரத்தை இறுதியில் கூறுவேன்.

இப்போது ஏனைய மூன்று இமாம்களும் கூறிய நான்கு வகை நோன்புகள் பற்றி ஆய்வு செய்வோம்.

“பர்ழ்” கடமையான நோன்புகள்.

கடமையான நோன்புகள் மூன்று வகை.

ஒன்று – புனித றமழான் மாத நோன்பு. இது “அதா”வாயினும், “களா”வாயினும் கடமைதான்.

இரண்டு – குற்றத் தண்டனைக்கான நோன்பு.

மூன்று – நேர்ச்சை நோன்பு.

முதலில் புனித “றமழான்” நோன்பு பற்றி ஆய்வு செய்வோம்.

صيامُ شهر رمضان، دليلُه: هو فرضُ عينٍ على كُلِّ مكلَّفٍ قادرٍ على الصوم، وقد فُرِضَ فى عشرٍ من شهر شعبان بعد الهجرة بسنةٍ ونصفٍ، ودليلُ فَرِيْضِيَّتِهِ الكتابُ والسنّةُ والإجماعُ،

أمّا الكتاب فقد قال الله تعالى ‘ يا أيّها الّذين آمنوا كُتب عليكم الصّيام كما كتب على الّذين من قبلكم لعلّكم تتقون، (البقرة 183) إلى قوله شهر رمضان الّذي أنزل فيه القرآن، (البقرة 185) وقولُه تعالى فمن شهِدَ منكم الشّهرَ فَلْيَصُمْهُ، (البقرة 185)

وأمّا السنّةُ فمِنها قولُه صلّى الله عليه وسلّم، بُني الإسلام على خمسٍ، شَهادةِ أَنْ لا إله إلّا الله، وأنّ محمدا رسولُ الله، وإقامِ الصّلاةِ، وإيتاء الزّكاةِ، والحجِّ، وصومِ رمضانَ، رواه البخاري ومسلمٌ عن ابن عُمر، وأمّا الإجماعُ فَقَدْ اِتَّفَقَ الأُمَّةُ على فرضيَّتِهِ، ولم يُخَالِفْ أحدٌ من المسلمين، فهي معلومةٌ من الدِّين بالضّرورة، ومُنكرُها كافرٌ، كَمُنْكِرِ فَرْضِيَّةِ الصَّلَاةِ، والزكاة، والحجِّ،

புனித றமழான் நோன்பும், அதன் ஆதாரமும்.

நோன்பு நோற்க சக்தியுள்ள “முகல்லப்” வயது வந்த, புத்தியுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் நோன்பு கடமையாகும். “பர்ழ் ஐன்” கட்டாயக் கடமையாகும். நோன்பு ஹிஜ்ரீ ஒன்றரை வருடத்தின் பின் ஷஃபான் மாதம் பத்தாம் நாள் கடமையாக்கப்பட்டது.

நோன்பு கடமை என்பதற்கு ஆதாரம் “திருக்குர்ஆன்”, “ஹதீது”, “இஜ்மாஉ” என்பனவாகும்.

திருக்குர்ஆனின் ஆதாரம் பின்வருமாறு.

(விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் உள்ள சுத்தி பெற்று பய பக்தியுடையவர்களாகலாம்) – அத்தியாயம்: பகறா, வசனம் – 183.

(எண்ணப்பட்ட சில நாட்களில் நோன்பு நோற்பது கடமையாகும். ஆனால் அந்நாட்களில் உங்களில் எவர் நோயாளியாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தாரோ அவருக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுண்டு. விடுபட்ட நோன்புகளை மற்ற நாட்களில் எண்ணி நோற்று விடவும். இன்னும் அதற்கு சக்தி பெற்றிருப்போர் மீது ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். ஆகவே, எவரேனும் தாமாக அதிகமாக கொடுத்தால் அது அவருக்கே நன்மையாகும். மேலும் நீங்கள் அறிந்திருப்போராயின் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்) – அத்தியாயம் – பகறா, வசனம் – 184.

(றமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியிலிருந்து தெளிவுகளாகவும், சத்திய அசத்தியத்தைப் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தைப் பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்றுவிடவும். எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் ஏற்கனவே விடுபட்ட நோன்புகளை எண்ணி நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறான். மேலும் அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை. மேலும் நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும், அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே இச் சலுகைகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்) – அத்தியாயம்: பகறா, வசனம் – 185.

ஹதீதின் ஆதாரம்:

இஸ்லாம் மார்க்கம் ஐந்து அம்சங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை “லா இலாஹ இல்லல்லாஹ்” – அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை, முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் சாட்சி சொல்லுதல், தொழுகையை நிலை நாட்டுதல், “சகாத்” கொடுத்தல், “ஹஜ்” செய்தல், றமழான் மாதம் நோன்பு நோற்றல் ஆகியன.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்
அறிவிப்பு: இப்னு உமர்.

இஜ்மாஉ:

முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் கூட பாக்கியின்றி அனைவரும் நோன்பு உண்டு என்று ஏற்றுக் கொண்டமை. நோன்பு கடமை இல்லை என்று அதை மறுப்பவன் தொழுகை கடமையில்லை என்றும், சகாத், ஹஜ் கடமை இல்லையென்றும் மறுப்பவன் போல் “காபிர்” ஆவான்.

மேற்கண்ட திருக்குர்ஆன் ஆதாரங்கள் மூலமும், குறிப்பிட்ட நபீ மொழி ஆதாரம் மூலமும், இஜ்மாஉ – முஸ்லிம் சமூகத்தின் ஏகோபித்த முடிவின் ஆதாரம் மூலமும் நோன்பு இஸ்லாமிய ஐந்து அம்சங்களில் ஒன்றென்பது நிருபணமாகிறது.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments