Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பொது மக்களுக்கு காட்சிப் படுத்தப்படுகின்ற “தர்ஹா” நிகழ்வுகள்!

பொது மக்களுக்கு காட்சிப் படுத்தப்படுகின்ற “தர்ஹா” நிகழ்வுகள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அவ்லியாஉகளின் அடக்கத்தலங்கள் “தர்ஹா”, மசார், ழரீஹ், தர்பார், “அல் அதபாதுல் முகத்தஸா” முதலான பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
 
“தர்ஹா” என்ற சொல்லை எழுதும் போது دَرْكَاهْ என்றுதான் எழுத வேண்டும். இச் சொல் அதிகமாக இந்தியாவில் உள்ள வலீமாரின் அடக்கத்தலங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது. எனினும் வலீமார், நபீமார் ஆகியோர் அனைவரின் அடக்கத்தலங்களுக்கும் பாவிக்கலாம். எம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் புனித அடக்கவிடம் மேற்கண்ட பெயர்களால் அழைக்கப்படுவது மிகவும் குறைவு. புனித மிகு அவர்களின் அடக்கவிடம் “றவ்ழா” என்றே அழைக்கப்படுகிறது. இதுவே அதற்குப் பொருத்தமான சொல்லுமாகும். இதன் பொருள் சுவர்க்கத்தின் பூஞ்சோலை என்பதாகும்.
இது தொடர்பாக மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹ் நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள், பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

وَذَلِكَ قَبْرٌ فَاقَ عَرْشًا بِسِرِّهِ – بِهِ كُلُّ عَانٍ يَرْتَجِيْ فَكَّ أَسْرِهِ
لِأَنَّ ثَرَاهُ فِى جَلَالَةِ أَمْرِهِ – حَوَى مَنْ حَوَى جُوْدَ الْوُجُوْدِ بِأَسْرِهِ
وَمِنْ عَحَبٍ ضَمَّ الْوُجُوْدَ ضَرِيْحٌ
பொருள்: அது ஒரு “கப்ர்” மண்ணறை ஆகும். அது தனது இரகசியத்தினால் அர்ஷை விட மிகைத்துவிட்டது. மேலாகிவிட்டது. அது கொண்டு ஒவ்வொரு கைதியும் தான் விடுவிக்கப்பட வேண்டுமென்று ஆதரவு வைக்கிறான். ஏனெனில் அதன் மண் அது மகத்துவமாயிருப்பதுடன் “வுஜூத்” உள்ளமையின் கொடையை உள்வாங்கியிருக்கிறது. அதிசயம் என்னவெனில் அந்த உள்ளமையை “கப்று” மண்ணறை சூழ்ந்திருப்பதேயாகும். (கஸீததுல் வித்ரிய்யா)
ஸதகதுல்லாஹ் அப்பா அவர்களின் இப்பாடல் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை உள்வாங்கியிருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல. அல்லாஹ்வின் அருளால் நான் இப்பாடலுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கின் பல பக்கங்கள் எழுத நேரிடும். சுருக்கிக் கொண்டேன். அப்பா அவர்களின் பாடலின் இறுதி அடியும், அதற்கு முந்தின அடியும் சாதாரண உலமாஉகளின் தலைகளை சுழல வைக்கும் என்று நினைக்கிறேன். இன்னோர் என்னை அல்லது என் போன்ற ஒருவரை தன்மானம் பாராமல் சந்தித்தார்களானால் சந்தேகம் பறந்து விடும். சந்நிதானம் திறந்து விடும்.
இலங்கையிலுள்ள அவ்லியாஉகளின் “தர்ஹா” அடக்கத்தலங்களை பொது மக்களுக்கு அறிமுகம் செய்யும் பணியில் மௌலவீமார்களிற் சிலரும், கண்டி பேராதெனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் முபீசால் அபூ பக்ர் அவர்களும் இறங்கிச் செயல்பட்டு வருவது பாராட்டுதற்குரியதாகும். அல்லாஹ் அவர்களுக்கு ஈருலக நற்பாக்கியத்தையும் நல்குவானாக! ஸூபிஸ தத்துவமான “தஸவ்வுப்” எனும் தேனையும், பாலையும் புகட்டிவிடுவானாக!
அவ்லியாஉகளின் “தர்ஹா” வதிவிடங்களை அறிமுகம் செய்து வைக்கும் இவர்கள் அவர்களின் “கறாமத்” அற்புதங்களையும், அவர்கள் மார்க்கத்திற்காகச் செய்த சேவைகளையும், எதிரிகளால் அனுபவித்த இன்னல்களையும், இடர்களையும் மக்களுக்குச் சொல்லிக் காட்ட வேண்டும். கட்டுரைகள் எழுதி பொது மக்கள் பயன் பெறும் வகையில் பத்தரிகைகளில் பிரசுரிக்க வேண்டும். விஷேடமாக அவ்லியாஉகளும், ஸூபீ மகான்களும் அல்லாஹ் பற்றிய கொள்கை விடயத்தில் எத்தகைய நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதையும் பொது மக்களுக்கு விளக்கி வைக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள “தர்ஹா”க்களில் அடக்கம் பெற்றுள்ள மகான்களிற் பலர் திரு மக்கா, திரு மதீனா, பக்தாத் ஷரீப், எமன், ஈரான், குறாஸான், இந்தியா (கேரளா, தமிழ் நாடு), துருக்கி, கூபா முதலான நாடுகளில் இருந்தும், ஊர்களில் இருந்தும் வந்தவர்களாவர்.
நமது இலங்கை நாட்டின் சில ஊர்களில் நபீ தோழர்களான “பத்ர் ஸஹாபாக்கள்” அடக்கம் பெற்றுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
நான் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள அவ்லியாஉகளின் சியாறங்களுக்கும், மற்றும் மேலே குறித்த நாடுகளில் உள்ள தர்ஹாக்களுக்கும் சென்றிருக்கிறேன்.
இது மட்டுமல்ல குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சந்நிதானத்தில் சுமார் ஒரு மாதம் நானும், அல்ஹாஜ் முஹம்மத் ஹுஸைன் அவர்களும், அல்ஹாஜ் முஹம்மத் நசார் அவர்களும் தங்கியிருந்துள்ளோம். அங்கு தங்கியிருந்த காலப் பகுதியில் ஏற்பட்ட “வீசா” தொடர்பான சிக்கல் தீர்வதற்காக அவர்களைக் கொண்டு “வஸீலா” தேடி என்னால் முடிந்த வகையில் ஒரு கஸீதாவும் எழுதி அதை அவர்களின் முன்னால் பல தரம் பாடியும் உள்ளேன். எவருக்காவது ஒரு கஷ்டம் அல்லது சோதனை ஏற்படும் போது அவரும் இதைப் பயன்படுத்தி பலன் பெற வேண்டுமென்பதற்காக இங்கு எழுதுகிறேன்.
يَا سَيِّدِيْ سَنَدِيْ يَا خَيْرَ مُعْتَمَدِيْ – كُنْ لِيْ شَفِيْعًا إِلَى الرَّحْمَنِ مِنْ زَلَلِيْ
عَطِّفْ قُلُوْبَ الْوَرَى وَاصْرِفْ إِلَى قَدَمِيْ – شَيْخَ الْمَشَائِخِ يَا مُحْيِ الدِّيْنْ فَرْدَانِيْ
يَا حُجَّةَ اللهِ لِلْعُرَفَاءِ سَامِحْنِيْ – يَا تُحْفَةَ اللهِ لِلسُّعَدَاءِ سَاعِدْنِيْ
وَقَدْ أَتَيْتُ بِأَحْمَالٍ فَلَاحِظْنِيْ – شَيْخَ الْمَشَائِخِ يَا مُحْيِ الدِّيْنْ فَرْدَانِيْ
حَمَلْتُ أَحْمَالَ حَاجَاتِيْ لِرَوْضَتِكُمْ – وَضَعْتُهَا خَاشِعًا مِنْ بَيْنِ عَتَبَتِكُمْ
ذَرَفْتُ دَمْعِيْ عَلَى خَدِّيْ لِنُصْرَتِكُمْ – شَيْخَ الْمَشَائِخِ يَا مُحْيِ الدِّيْنْ فَرْدَانِيْ
تَبْنِيْ لَنَا مَسْجِدَ الْبَدْرِيِّ بِالسُّرْعَةْ – حَتَّى يَخِرَّ بِهِ الْحُسَّادُ فِى الْهَلَكَةْ
فَلَا تُقِرَّ عُيُوْنَ الْكَفَرَةِ الْفَجَرَةْ – شَيْخَ الْمَشَائِخِ يَا مُحْيِ الدِّيْنْ فَرْدَانِيْ
أَنْتَ الْوَلِيُّ وَكُلُّ النَّاسِ يَعْلَمُهُ – أَنْتَ الْكَرِيْمُ وَكُلُّ النَّاسِ يَقْبَلُهُ
أَنْتَ الْجَوَادُ وَكُلُّ النَّاسِ يَقْصِدُهُ – شَيْخَ الْمَشَائِخِ يَا مُحْيِ الدِّيْنْ فَرْدَانِيْ
يَا فَاتِحًا لِلْقُلُوْبِ الْمُغْلَقَاتِ فَكُنْ – لِيْ فَاتِحًا لِلْعُلُوْمِ الرَّاسِخَاتِ فَصُنْ
جَمِيْعَ شَرٍّ وَكَيْدٍ وَالشَّدَائِدَ صُنْ – شَيْخَ الْمَشَائِخِ يَا مُحْيِ الدِّيْنْ فَرْدَانِيْ
مَنْ لِيْ إِذَا مَسَّنِيْ شَيْنٌ يُنَقِّصُنِيْ – فَقْرٌ شَدِيْدٌ عَلَى فَقْرٍ يُرَوِّعُنِيْ
هَمٌّ وَغَمٌّ وَإِرْهَابٌ يُخَوِّفُنِيْ – شَيْخَ الْمَشَائِخِ يَا مُحْيِ الدِّيْنْ فَرْدَانِيْ
يَا سَيِّدِيْ سَنَدِيْ يَا خَيْرَ مُعْتَمَدِيْ – كُنْ لِيْ وَكُنْ لِأَخِي التَّوْحِيْدِ يَا مَدَدِيْ
وَاكْسِرْ نُحُوْرَ الْعِدَى فَوْرًا أَيَا عُدَدِيْ – عَطِيَّةَ اللهِ يَا مَحْبُوْبَ سُبْحَانِيْ
عَجِّلْ مَآرِبَ مَنْ قَدْ جَاءَ مِنْ سَيَلَانْ – عَبْدِ الرَّؤُوْفِ كَثِيْرِ الذَّنْبِ وَالْعِصْيَانْ
حَصِّلْ مَقَاصِدَهُ وَاجْعَلْهُ ذَا الْعِرْفَانْ – عَطِيَّةَ اللهِ يَا مَحْبُوْبَ سُبْحَانِيْ
وَلَا تُؤَخِّرْ شُؤُوْنَ السَّفَرِ يَا ذُخْرِيْ – وَلَا تُعَاقِبْنِيْ بِالذَّنْبِ يَا فَخْرِيْ
وَلَا تُؤَاخِذْنِيْ بِالْخُلْفِ يَا شَرَفِيْ – عَطِيَّةَ اللهِ يَا مَحْبُوْبَ سُبْحَانِيْ
أَتَيْتُ رَوْضَتَكَ الْعُلْيَا بِحَاجَاتِيْ – فَلَا تَرُدَّنَّهَا مِنْ سُوْءِ حَالَاتِيْ
وَلَا تُؤَخِّرْ لُبَانَاتِيْ بِزَلَّاتِيْ – عَطِيَّةَ اللهِ يَا مَحْبُوْبَ سُبْحَانِيْ
يَا آخِذًا بِيَدِ الْأَحْبَابِ خُذْ بِيَدِيْ – يَا سَامِحًا لِلْمُرِيْدِ اسْمَحْ أَيَا كَبِدِيْ
يَا فَاتِحًا لِلْقُلُوْبِ افْتَحْ أَيَا أَبَتِيْ – عَطِيَّةَ اللهِ يَا مَحْبُوْبَ سُبْحَانِيْ
اِجْعَلْ بَنَاتِيْ وَأَبْنَائِيْ أُولِى الشِّيَمِ – أَنْعِمْ عَلَيْهِمْ أَيَا ذَا الْجُوْدِ وَالنِّعَمِ
أَنْزِلْ إِلَيْهِمْ سَحَابَ الْفَضْلِ وَالْحِكَمِ – عَطِيَّةَ اللهِ يَا مَحْبُوْبَ سُبْحَانِيْ
طَوِّلْ حَيَاتِيْ بِأَعْمَالٍ تُقَرِّبُنِيْ – إِلَيْكَ قُرْبًا حَقِيْقِيًّا وَأَدْرِكْنِيْ
وَطَوِّلَنَّ حَيَاةَ الْأَهْلِ وَارْزُقْنِيْ – عَطِيَّةَ اللهِ يَا مَحْبُوْبَ سُبْحَانِيْ
மௌலவீமார் சிலரின் வழிகாட்டலினாலும், பேராசிரியர் அவர்களின் வழிகாட்டலினாலும் உந்தப்பட்டு நாதாக்களின் “தர்ஹா” சென்று அவர்களைத் தரிசிப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மை போன்றது வழிகாட்டியவர்களுக்கும் கிடைக்கும்.
பின்வரும் திருக்குர்ஆன் வசனமும், நபீ மொழியும் இது தொடர்பாக வலியுறுத்துகின்றன.
திருவசனம்:
أَلْهَاكُمُ التَّكَاثُرُ، حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
நீங்கள் அடக்கத்தலங்கைளச் சந்திக்கும் வரை உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் “அத்தகாதுர்” திருப்பி விட்டது. (திருக்குர்ஆன் 102-1,2)
இத்திரு வசனத்தைக் கருவாகக் கொண்டு இரண்டு விடயங்கள் ஆராயப்பட வேண்டும். ஒன்று.உங்களை “அத்தகாதுர்” திருப்பி விட்டதென்பது. மற்றது “நீங்கள் மண்ணறைகளை சந்திக்கும் வரை” என்பது.
“அத்தகாதுர்” என்றால் என்ன? இது ஓர் அறபுச் சொல். இச் சொல்லின் வழிவாறை – வந்த வரலாறை ஆய்வு செய்தால் இச் சொல்லுக்கும், அதிகம் என்ற பொருளைத் தருகின்ற كَثْرَةٌ என்ற சொல்லுக்கும் தொடர்பு இருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.
“அல்ஹாகும்” என்ற அறபுச் சொல்லுக்கு உங்களின் கவனத்தை திருப்பி விட்டது என்று பொருள். “அத்தகாதுர்” என்றால் அதிகம் என்று பொருள். இவ்விரண்டையும் சேர்த்து அதிகம் உங்களின் கவனத்தை திருப்பி விட்டது என்று பொருள்.
அதிக பணவாசை, அதிக பொருளாசை, அதிக பெண்ணாசை, அதிக மண்ணாசை அதிக பதவியாசை என்பன அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டன என்று பொருள் விரியும்.
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ
என்ற வசனத்திற்கு நீங்கள் அடக்கத்தலங்களை – மண்ணறைகளை சந்திக்கும் வரை “அதிகம்” உங்களின் கவனத்தை அல்லாஹ்வை விட்டும் திருப்பி விட்டன என்று பொருள் வரும்.
“நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை” என்ற வசனத்தில் “மகாபிர்” என்று ஒரு சொல் வந்துள்ளது. இச் சொல் مَقْبَرَةٌ என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். அடக்கவிடங்கள் என்பன மையவாடிகளை குறிக்கும். அவ்விடத்தில் ஒரு “மையித்” அடக்கப்பட்டிருந்தாலும், பல “மையித்”கள் அடக்கப்பட்டிருந்தாலும் சட்டம் ஒன்றுதான். இச் சொல்லில் “தர்ஹா” வலீமார் அடக்கம் பெற்றுள்ள இடமும் அடங்கிவிடும்.
நீங்கள் மையவாடிகளை சந்திக்கும் வரை என்றால் நீங்கள் மரணித்து உங்களை மையவாடியில் அடக்கம் செய்யும் வரை என்று சிலர் விளக்கம் சொல்கிறார்கள்.
இன்னும் சிலர், உயிருள்ளவன் மையவாடி சென்று அங்கு அடக்கம் பெற்றுள்ளவர்களுக்கு “ஸலாம்” சொல்லி அவர்களை சந்திக்கும் வரை – “சியாறத்” செய்யும் வரை என்று விளக்கம் சொல்கிறார்கள்.
இவ்விரு சாராரின் விளக்கங்களிலும் நான் ஆய்வு செய்து பெற்ற விளக்கம் இரண்டாவது சாராரின் விளக்கமேயாகும்.
இதன்படி மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, பொருளாசை, பதவியாசை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவன் அடக்கத்தலங்களுக்குச் சென்று மரணித்தோரை – அடக்கம் பெற்றுள்ளவர்களை சந்திப்பதன் மூலம் அவன் தனது மேற்கண்ட ஆசைகளைத் துறந்து நல்வழி பெறுவதற்கு வாய்ப்பு – சந்தர்ப்பம் உண்டு.
மரணித்தவர்களின் அடக்கவிடங்களை உயிரோடு உள்ளவர்கள் சந்திப்பதன் மூலம் அவர்கள் நல்வழி பெற வாய்ப்புண்டு என்பதற்கு ஹதீதுகள் – நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் எழுதினால் போதும் என்று நினைக்கிறேன்.
عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، فَزُورُوهَا؛ فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا، وَتُذَكِّرُ الْآخِرَةَ»
அடக்கவிடங்களை தரிசிக்க வேண்டாம் என்று உங்களை நான் முன்னர் தடுத்திருந்தேன். எனினும் நீங்கள் இப்போது அவற்றை தரிசிக்கலாம். ஏனெனில் அவ்வாறு தரிசிப்பது உங்களுக்கு இவ்வுலகில் துறவறத்தை ஏற்படுத்தி மறுவுலக வாழ்வை நினைவூட்டும் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (ஆதாரம்: ஸுனன் இப்னு மாஜஹ்)
இந்த நபீ மொழி மூலம் இவ் உலக ஆசையில் மூழ்கிக் கிடக்கும் ஒருவன் மரணித்தவர்களின் அடக்கவிடத்தை – தர்ஹாக்களை சந்திப்பதன் மூலம் அவ் ஆசைகளை துறப்பதற்கு வாய்ப்பு உண்டு என்று நபீகள் நாயகம் அவர்களே சொல்லியிருப்பதால் நாம் நூறு வீதம் இதை நம்பிச் செயல்பட வேண்டியது நமது கடமையாகும். இவ் அடிப்படையில் உயிருள்ளவர்கள் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று அவர்களைத் தரிசிப்பது “ஸுன்னத்” நபீ வழியும், நல்ல நடைமுறையுமாகும்.
மரணித்தவர்களை தரிசிப்பது தொடர்பாக நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சந்திப்பவர்களுக்கு எவ்வாறு “றஹ்மத்” அருள் செய்துள்ளார்கள் என்பது நபீ மொழியிலுள்ள வசனம் உணர்த்துவது ஆழமாக அலசுபவர்களுக்கு மறையாது.
“சியாறதுல் குபூர்” கப்றுகளை – அடக்கத்தலங்களை தரிசித்தல் என்றுதான் ஹதீதுகள் வந்துள்ளனவேயன்றி زِيَارَةُ أَهْلِ الْقُبُوْرِ கப்ரில் உள்ளவர்களை தரிசித்தல் என்று வரவில்லை.
“சியாறதுல் குபூர்” பற்றிப் பேசுபவர்களோ, தர்ஹாக்களைக் காட்சிப் படுத்துபவர்களோ இது தொடர்பாக பொருத்தமான விளக்கம் எதுவும் சொன்னதாக நான் அறியவில்லை. எனினும் நான் அறிந்த விளக்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் “உம்மத்” சமூகத்தவர்களுக்கு “றஹ்மத்” அருள் செய்வதற்காகவே زيارة أهل القبور கப்று உடையவர்களை தரிசித்தல் என்று கூறாமல் زيارة القبور கப்றுகளை தரிசித்தல் என்று கூறினார்கள்.
ஏனெனில் கப்றில் உள்ளவர்களை தரிசிப்பது அங்கு செல்பவர்கள் அனைவராலும் முடிந்த காரியமில்லை. சிலருக்கு அப்பாக்கியம் கிடைக்கலாம். சிலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம். பெருமானார் அவர்கள் கப்றில் உள்ளவர்களை திரிசித்தல் என்று சொல்லியிருந்தால் அப்பாக்கியம் கிடைக்காமற் போனவர்கள் வருந்துவார்கள் என்பதற்காகவே அவ்வாறு சொல்லாமல் கப்றுகளை தரிசித்தல் என்று அருளினார்கள். இது அனைத்து மக்களாலும் சாத்தியமான ஒன்றுதான். நல்லவன், கெட்டவன், பாக்கியமுள்ளவன், பாக்கியம் இல்லாதவன் அனைவராலும் “கப்ர்” ஐத் தரிசிக்க முடியும்.
கப்றில் உள்ளவர்கள் வலீமாராயினும், சாதாரண மனிதர்களாயினும் அவர்களைத் தரிசிப்பது அனைவருக்கும் சாத்தியமாகாது. நல்ல மனிதர்கள், வலீமார் போன்றவர்களுக்கே இது சாத்தியம்.
ரிபாஇய்யா தரீகாவின் தாபகர் ஸெய்யிதுனா சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாஈ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் திரு மதீனா நகர் சென்று பல்லாயிரம் மக்கள் புடை சூழ பெருமானாரின் “றவ்ழா” அடக்கவிடத்தை சூழ்ந்து நின்ற நேரம் பின்வரும் பாடலை பாடினார்கள்.
فِيْ حَالَةِ الْبُعْدِ رُوْحِيْ كُنْتُ أُرْسِلُهَا – تُقَبِّلُ الْأَرْضَ عَنِّيْ وَهِيَ نَائِبَةٌ
وَهَذِهِ دَوْلَةُ الْأَشْبَاحِ قَدْ حَضَرَتْ – فَامْدُدْ يَمِيْنَكَ (يَدَيْكَ) كَيْ تَحْظَى بِهَا شَفَتِيْ
“யா ஸெய்யிதீ யா றஸூலல்லாஹ்! நான் தொலைவில் இருந்த போது உங்களின் கப்றை – மண்ணை முத்தமிடுவதற்காக எனது “றூஹ்” உயிரையே அனுப்பிக் கொண்டிருந்தேன். அது எனக்குப் பதிலாக உங்களிடம் வந்து கொண்டிருந்தது.
ஆயினும் யா ஹபீபல்லாஹ்! தற்போது எனது உடலோடு வந்து உங்கள் முன் நிற்கிறேன். ஆகையால் உங்களின் திருக்கரங்கள் இரண்டையும் அல்லது வலக் கரத்தை நீட்டித் தாருங்கள். அதை என் உதடு முத்தி நற் பாக்கியம் பெறட்டும்” என்று பாடி முடிக்க அண்ணலெம் பெருமானின் திருக்கரம் வெளியே வந்தது. அங்கு நின்றிருந்தவர்களில் பலர் இந்நிகழ்வை நேரில் கண்டு மகிழ்ந்தார்கள்.
ரிபாஈ நாயகம் போன்ற மகான்களால் மண்ணறையில் உள்ளவர்களை தரிசிக்க முடியுமேயன்றி மற்றவர்களால் முடியாது. அல்லாஹ் நாடியவர்கள் தவிர.
ஆயினும் زيارة القبور கப்றுகள் – மண்ணறைகளை மட்டும் தரிசிப்பது அனைத்து மக்களாலும் சாத்தியமானதேயாகும். இதனால்தான் மக்களுக்கு அருட்கொடையாக உதித்த அண்ணலெம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் زيارة القبور கப்றுகளை தரிசித்தல் என்ற வசனத்தை பயன்படுத்தினார்கள்.
கப்றில் உள்ளவர்களை அல்லது கப்றுகளைத் தரிசிப்பதால் தரிசிப்பவர்களுக்கு பொதுவாக நன்மை கிடைப்பதுடன், இன்னும் பல விஷேட நன்மைகளும் கிடைக்கின்றன. அவற்றிற் சிலதை அடுத்த தொடரில் பதிவு செய்வேன். இன்ஷா அல்லாஹ்!
வலீமாரின் “தர்ஹா” வதிவிடங்களை பொது மக்களுக்கு படம் பிடித்துக் காட்டுவதாலும், அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதாலும் பொது மக்களில் அல்லாஹ் நற் பாக்கியத்தை நாடாதவர்கள் தவிர ஏனையோர் பயன் பெற்று வருவதால் இவ்விடயம் தொடர்பாக உழைக்கும் மௌலவீமார்களுக்கும், முபீசால் அபூ பக்ர் அவர்களுக்கும் அல்லாஹ் ஆன்மிக உயர்வை வழங்குவானாக!
இன்னோர் இன்னும் ஒரு படியேனும் உயரச் சென்று வலீமார்களின் “அகீதா” பற்றியும், ஸூபீ மகான்கள் கூறும் ஸூபிஸம் பற்றியும் மக்களுக்கு விளக்கி வைக்க வேண்டும் என்றும் அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
 
தொடரும்…
RELATED ARTICLES

Most Popular

Recent Comments