குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் கலீபாவாகிய இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாக 8வது வருட அருள்மிகு நினைவு தின மஜ்லிஸ் 29.06.2022 (புதன்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும்,கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் அன்னார்கள் பேரிலான மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஆத்மீக பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதநிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.