தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்று அல்லது “எல்லாமவனே” எனும் கொள்கையை தவறாகப் புரிந்து கொண்டவர்களில் எவராயினும் அவர் உண்மை எதுவென்றும், எதார்த்தம் எதுவென்றும் தெரிந்து தெளிந்து கொள்வதற்கு இரு வழிகள் மட்டுமே உள்ளன. அவ்விரு வழிகளில் ஒன்றின் மூலம் மட்டுமே அவர் வெற்றி பெற வழியுண்டு. இன்றேல் அவர் அறியாமையிலிருந்தே மரணிக்க நேரிடும்.
ஒன்று – தவறாகப் புரிந்து கொண்டவர்கள் மௌலவீமார்களாயின் அவர்களில் நல்ல திறமையுள்ள, தரமான, கலப்பற்ற புனித எண்ணமுள்ள பலர் ஒன்று கூடி, உண்மையைக் கண்டறியும் ஒரே நோக்கத்தோடு மட்டும் நான் பல இமாம்களின் நூல்களில் இருந்து தொகுத்த الفرقد الفريد في شرح كلمة التوحيد என்ற சிறிய அளவிலான அறபு நூலை ஒவ்வோர் எழுத்தாக ஆய்வு செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதற்கு அவர்கள் விரும்பவில்லையானால் இந்நூலை நான் தொகுப்பதற்கு ஆதார நூற்களாக எடுத்த நூற்களை ஆய்வு செய்ய வேண்டும்.
அந்நூல்களில் ஒன்று لوامع البيّنات في شرح أسماء الله تعالى والصفات எனும் அறபு நூலாகும். இது “தப்ஸீர் அல்கபீர்” எனும் திருக்குர்ஆன் விளக்க நூலை எழுதிய ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் அர் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்டதாகும்.
இன்னொரு நூல் كلمة الحقّ எனும் அறபு நூலாகும். இந்நூல் “அஷ் ஷெய்குல் முவஹ்ஹிதுஸ் ஸாதிக் ஹாதித் தகலைன் அஷ்ஷாஹ் அப்துர் றஹ்மான் லக்னவீ றஹிமஹுல்லாஹ்” அவர்களால் எழுதப்பட்டதாகும்.
இன்னொரு நூல்,
العارف بالله، الشيخ الكامل، القطب الواصل، محمد عبد القادر العالم الصوفي الحيدرآبادي رحمه الله
அவர்களால் எழுதப்பட்ட الحقيقة “அல்ஹகீகா” என்ற நூலாகும்.
மேற்கண்ட நூல்களை மட்டும் ஒருவர் முழுமையாக ஆய்வு செய்தாராயின் அவர் 95 வீதம் “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்ன கொள்கை என்பதையும், “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இஸ்லாமிய தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையான எல்லாம் அவனே என்ற தத்துவத்தை 95 வீதம் விளங்கி கொள்கை விடயத்தில் நிம்மதி பெறுவார் என்று நான் நம்புகிறேன்.
ஆகையால் உலமாஉகளில் “வஹ்ததுல் வுஜூத்” புரியாதவர்கள் மேலே நான் எழுதியது போல் ஒன்று கூடி செயல்படுவார்களேயானால் தாமும் பயன் பெற்று, மற்றவர்களும் பயன் பெற வழி செய்த பாக்கியத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்களின் ஈருலக வாழ்வும் “நூறுன் அலா நூர்” ஒளிக்கு மேல் ஒளியான வாழ்வாக ஆகிவிடும்.
நான் கூறிய இவ்வழி முலம் தெளிவு காண அவர்கள் விரும்பவில்லையானால் அவர்களுக்கு இன்னொரு வழியையும் சொல்லிக் கொடுக்கிறேன்.
மௌலவீமார்களில் தரமான சிலர் என்னிடம் வந்து தொடராக ஐந்து நாட்கள் என்னுடன் தங்கியிருக்க வேண்டும். அவர்கள் தங்குவதற்கான வசதிகளும், சாப்பாடு ஒழுங்குகளும் நான் செய்து கொடுப்பேன். அல்ஹம்து லில்லாஹ்! அவர்கள் வருவார்களாயின், உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரே “ஹிம்மத்”துடன் காற்பாதம் பதிப்பார்களாயின்
وعلّمناه من لدنّا علما
நபீ கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் தானே நேரடிக் குருவாயிருந்து கற்றுக் கொடுத்தது போல் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து விடுவான். அவர்கள் பேரின்ப வெள்ளத்தில் நீந்தி விளையாட அவர்களைத் தள்ளியும் விட்டு விடுவான். அவர்கள் سعادة الدارين ஈருலக நற்பாக்கியங்களும் பெற்றவர்களாகி விடுவார்கள்.
அவர்கள் என்னிடம் வர விரும்பினால் “அல் கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நான் வெளியிடவுள்ள நூல் வெளிவந்த பிறகு என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை தவறாகப் புரிந்து கொண்ட உலமாஉகள் நான் சொன்னது போல் செயற்பட்டுத் தெளிவு கண்டபின் தம்மால் வழிகேட்டில் விழுந்த பொது மக்களுக்கும் வழி காட்ட வேண்டும்.
இவ்விரு வழிகளில் ஒரு வழி மூலமேனும் தெளிவு காண முயற்சிக்காமல் “தாம் கொண்டதே கொள்கை” என்ற இறுமாப்புள்ளோர் சித்தி பெற முடியாது. அவர்களின் மறவுலக வாழ்வு நரகம்தான்.
பொது மக்களோ பல ரகம். அவர்களிற் சிலர் “அகீதா” என்றாலே என்னவென்று தெரியாதவர்கள். அவர்களுக்கு தீனும் தெரியாது. துன்யாவும் தெரியாது.
பொது மக்களில் இன்னும் சிலர் சாய்ந்நால் சாயிற பக்கம் சாயும் செம்மறியாடுகள் போன்றவர்கள். மார்க்கத்தை தேர்தல் போல் நினைப்பார்கள். எவரின் பக்கம் ஆதரவு அதிகமாக உள்ளதோ அந்தப் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்.
பொது மக்களாயிருந்தாலும் அவர்களிற் சிலர் உள்ளனர். ஸுப்ஹானல்லாஹ்! அவர்கள் ஏழைகளாயிருப்பார்கள். கைத் தொழில்கள் செய்வார்கள். ஆயினும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை விளங்கியவர்கள். துணிந்தவர்கள். உறுதியானவர்கள். கொள்கைக்காக வாழ்பவர்கள். எது வந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். மனைவியையும், மனையையும் கொள்கைக்காக விடுபவர்கள், விற்பவர்கள்.
இத்தகையோர் இருமுகம் காட்டி வாழும் நயவஞ்சகர்களை விட ஆயிரமாயிரம் மடங்கு சிறந்தவர்கள். இவர்கள் “தவ்ஹீத்” வரலாறில் தனித்துவமானவர்கள். தங்கப் பதக்கம் வழங்கப்பட வேண்டியவர்கள். இன்னோர் மறுமையில் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்ல தவ்ஹீத் சமூகம் இவர்களுக்காக இரு கரம் ஏந்துகிறது.
இன்று இலங்கை நாட்டில் தமது பத்வாவைச் சரிகண்ட உலமாஉகள் மட்டுமே 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாக ரிஸ்வீ முப்தீ ஹஸ்றத் அவர்கள் சொல்கிறார்கள். அதாவது பத்தாயிரம் பேரும் தமது “பத்வா”வுக்கு ஆதரவானவர்கள் என்று சொல்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் “பத்வா”வை வாசிப்பதற்குக் கூட தெரியாதவர்கள் என்ற விபரத்தை முப்தீ அவர்கள் சொல்வார்களா? அவர்களில் எத்தனை பேர் “பத்வா”வை வாசித்து விளக்கம் சொல்லத் தகுதியானவர்கள் என்று ரிஸ்வீ முப்தீ அவர்கள் பட்டியல் போட்டுக் காட்டுவார்களா? அறிவுப் பலமின்றி ஆட்கள் பலம் மட்டும் இருந்து என்ன பயன்?
ரிஸ்வீ முப்தீ அவர்கள் குறிப்பிடும் 10 ஆயிரம் பேரில் எத்தனை பேர் என்னிடம் இரகசியமாக வந்து போகிறார்கள் என்பதை அறிந்தார்களாயின் இருதயமே இயங்காமல் நின்றுவிடுமென்று நான் நினைக்கிறேன்.
உலமாஉகளில் எவரும் “பத்வா”வை எதிர்க்கவில்லை என்பதால் அவர்கள் அனைவரும் அதைச் சரி காண்கிறார்கள் என்று கொள்ளலாமா? அவர்களில் எத்தனையோ பேர் உங்களின் “பத்வா” பிழை என்று சொன்னால் நீங்கள் அவர்களுக்கு அநீதி செய்துவிடுவீர்கள் என்று அஞ்சுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? வெளியூர் பள்ளிவாயல்களில் கடமை செய்த மௌலவீமார்களிற் சிலர் றஊப் மௌலவீக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்காக அவர்களை பள்ளிவாயல் கடமைகளில் இருந்து விலக்குவதற்கு “பத்வா” வழங்கிய உலமாஉகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? காத்தான்குடியிலுள்ள சம்மேளனம் றஊப் மௌலவீயைச் சந்திக்கச் சென்ற உலமாஉகளிற் சிலரையும், பொது மக்களிற் சிலரையும் அழைத்து அவர்களை விசாரித்து எச்சரித்தது உலமாஉகளுக்குத் தெரியாதா? இவ்வாறு நடக்கவில்லையா? உலமாஉகளே உங்களின் மனச் சாட்சியில் கை வைத்து நீங்கள் செய்வது நியாயமா? அல்லாஹ்வுக்குப் பொருத்தமான செயலா என்று கேட்டுப் பாருங்கள்.
உங்களிடம் யாராவது வந்து “றஊப் மௌலவீ உங்களை அழைக்கிறாரே, கற்றுத் தருகிறேன் வாருங்கள் என்று சொல்கிறாரே, நீங்கள் ஏன் போகாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “அவருக்கு “முர்தத்” என்று ‘பத்வா” வழங்கிவிட்டோம்” என்று சொல்கிறீர்களாம்.
இவ்வாறு சொல்லும் நீங்கள் எங்களை விட்டும் முழுமையாக ஒதுங்கிவிட வேண்டும். மேலும் எம்மில் கை வைக்கலாகாது. ஒதுங்கினால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப எங்கள் விவகாரத்தில் கை வைத்தல் கூடாது. ரோஷமில்லாத நீங்கள் மேலும் மேலும் எங்களைச் சீண்டுவது நீங்களே உங்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையை தேடிக் கொள்கிறீர்கள். அல்லாஹ் உங்களைத் தண்டிப்பான். பொறுத்திருங்கள். அவன் நீதியைக் கண்டு கொள்வீர்கள். நாம் பேசி வருகின்ற இஸ்லாமிய “தஸவ்வுப்” ஸூபிஸம் கூறும் சரியான ஞானத்தை தவறாகப் புரிந்து கொண்ட, “ஹுலூல் – இத்திஹாத்” எனும் தவறான – வழிகேடான கொள்கை என்று புரிந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, நாங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” எனும் தவறான கொள்கை பேசி வருவதாக மக்கள் மத்தியில் கண்ணில்லாத “பத்வா” ஒன்றை வெளியாக்கி என்னையும், நான் கூறும் ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் மதம் மாறியவர்கள் என்று இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணாக கூறி வருகின்றார்கள்.
அன்புப் பொது மக்களே!
நான் கூறும் இறைஞானத்தை விளங்காத காரணத்தால் – விளங்கிக் கொள்ளக் கூடிய சக்தி இல்லாத காரணத்தால் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு உலகில் வாழும் ஸூபிஸ முஸ்லிம்களை “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கிய அறிவிலிகளின் தீர்ப்பை கண்ணை இறுக மூடிக் கொண்டு பின்பற்றி வாழும் சகோதரர்கள் நிதானமாகச் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் பேசிவரும் இறைஞானக் கொள்கையை ஆரம்ப கால கட்டத்திலேயே எதிர்த்து நடவடிக்கை எடுத்த எங்களின் எதிர்ப்பு மலைகளில் ஒரு மலை மண்ணுக்குள் மறைந்து விட்டது. அது “ஸூபீ” கொள்கை தெரியாத “ஸூபீ” மலைதான். போக வேண்டிய மலைகளில் ஒன்று போய்விட்டது.
அதுபோல் இன்னுமொரு மலை இருந்தது. அதுவும் சாய்ந்து விட்டது. இந்த மலை “தரீகா” என்ற பெயரால் ஜொலித்துக் கொண்டிருந்த மண் மலையே தவிர கல் மலையல்ல. “தரீகாவின் கலீபா” எனும் லேபலை ஒட்டிக் கொண்டு புகழ் மோகத்தில் மூழ்கிக் கிடந்த மலைதான் அந்த மலை. அதுவும் சாய்ந்து சரிந்து தவிடு பொடியாகிவிட்டது.
மகான்கள் இவர்களை “கலீபா”க்களாக்கியது “தரீகா”வை வளர்ப்பதற்காகவேயாகும். அவர்கள் வளர்த்தார்கள்தான். “தரீகா”வையல்ல. தம்மையே வளர்த்துக் கொண்டார்கள்.
நான் பேசி வருகின்ற இந்த ஞானம்தான் – அதாவது “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம்தான் “தரீகா”க்களின் உயிராகும். இந்த ஞானத்தை வளர்ப்பதற்காகவே மகான்கள் “தரீகா”க்களை தாபித்தார்கள். அவர்கள் அமைத்த ஒவ்வொரு “திக்ர்” உம் ஆன்மிகத்தை தட்டியெழுப்பும் மா மருந்தாகவே அமைந்திருந்தது. அந்த “திக்ர்” அல்லாஹ் என்ற திக்ராக இருந்தாலும், “இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” ஆக இருந்தாலும், “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” ஆக இருந்தாலும், “லா மவ்ஜூத இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” ஆக இருந்தாலும் சரியே! இவை எல்லாமே “திக்ர்”கள் தான்.
இந்த “திக்ர்”கள் தரீகாக்களை தாபித்த மகான்கள் ஏற்படுத்திய “திக்ர்”களேயாகும்.
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற அடிப்படையில் படைப்புக்களின் பெயர்கள் எல்லாமே அவனின் பெயர்களேயாகும். இவ்வாறு நான் சொல்வதால் கடல் கடல் என்றும், உடல் உடல் என்றும் “திக்ர்” செய்யலாம் என்ற கருத்தல்ல. செய்யலாம். ஆயினும் கடலையும், உடலையும் “ஹக்”காக இறைவனாகக் கண்டவன் மட்டும் செய்யலாம்.
இவ்வாறு எழுதிய எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அதையும் இங்கு எழுதுகிறேன்.
கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் புதிதாக ஒரு பள்ளிவாயல் கட்டி திறப்பு விழாச் செய்தார்கள். அந்நிகழ்வின் போது அதி சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் மௌலானா வாப்பா நாயகம் கண்டியில் இருந்தார்கள். அவர்களும் அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ஜும்ஆவுடைய நாளாயிருந்தது. திறப்பு விழா நிகழ்வில் பேசுவதற்கென்று அக்கால கட்டத்தில் இலங்கை நாட்டில் பிரசித்தி பெற்ற பேச்சாளராக மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் விளங்கினார்கள். அவர்களும் அந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். நான் அழைப்பின்றி எதிர்பாராமல் மௌலானா வாப்பா அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். இந்த நிகழ்வு 1979ம் ஆண்டுக்கு முன் – “பத்வா” கொடுக்கப்படுமுன் நடந்த நிகழ்வாகும்.
ஜும்ஆ தொழுகைக்காக வந்திருந்த மௌலானா வாப்பா நாயகம் அவர்கள் என்னை அழைத்து “ஜும்ஆ” தொழுகையின் பின் 30 நிமிடங்கள் பேசுங்கள், மஸ்ஊத் ஆலிம் திறப்பு விழா நிகழ்வில் பேசுவார் என்று என்னிடம் சொன்னார்கள். நான் எனது உரையில்…
தொடரும்…