இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 26வது வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து ”அல் கஸாயிதுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதிர் றஷீதிய்யஹ்” மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையி்ன் பின் சங்கைக்குரிய மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அன்னவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டதுடன், பாடகர் MHM. ஹம்ஸா அவர்களினால் தங்கள் வாப்பா அவர்களைப் புகழ்ந்து இரங்கல் கீதமும், கவிஞர் றபாய்தீன் அவர்களினால் கவிதையும் வாசிக்கப்பட்டு நிறைவாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.