Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்யார் இந்த இறை ஞானி?

யார் இந்த இறை ஞானி?

தொடர் – 1

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

من هذا العارف بالله؟
هو أبو عبد الله محمدُ بن عمر بن الحسن بن الحسين بن عليٍّ الرّازي، الطَّبْرِسْتَانيّ المولِدِ، القُرشيّ التيميّ البكريّ النسبِ، الشافعيّ الأشعريّ الملقّب بفخر الدين الرازي وابن خطيب الرّيّ، وسلطان المتكلّمين، وشيخ المعقول والمنقول، هو إمامٌ مُفسّر فقيه أصوليٌّ،

இவ் இறைஞானியின் இயற் பெயர் அபூ அப்தில்லாஹ் முஹம்மத், தந்தை பெயர் உமர். அவரின் தந்தையின் பெயர் ஹஸன். அவரின் தந்தையின் பெயர் ஹுஸைன், அவரின் தந்தை அலீ ஆவார்.

இந்த இறைஞானி ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். ஈரானின் மாவட்டங்களில் ஒன்றான “மாசந்தான்” எனும் பட்டணத்தில் பிறந்தவர். குறைஷி வமிசத்தைச் சேர்ந்தவர். ஷாபிஈ மத்ஹபையும், “அஷ்அரிய்யா” கொள்கையும் உள்ளவர். இவர் ஷெய்குல் இஸ்லாம், அல்இமாமுல் கபீர், ஸைபுல்லாஹில் மஸ்லூல், பக்றுத்தீன் றாஸீ, இப்னு கதீபிர் றை, ஸுல்தானுல் முதகல்லிமீன், ஷெய்குல் மஃகூலி வல் மன்கூல் எனும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டார்.

“இப்னு கதீபிர் றை” என்றால் “றை” என்ற ஊரில் பிரசித்தி பெற்ற பேச்சாளர் என்பது பொருள். “ஸுல்தானுல் முதகல்லிமீன்” என்றால் இறையியல் தொடர்பான அரசர் என்பது பொருள். “ஷெய்குல் மஃகூலி வல் மன்கூல்” என்றால் சுருதிப் பிரமாணங்களினதும், யுக்திப் பிரமாணங்களினதும் குரு என்பது பொருள்.

“தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரைக் கலையிலும், “பிக்ஹ்” சட்டக்கலையிலும், “உஸூல்” அடிப்படைக் கலையிலும் பிரசித்தி பெற்ற இமாம் ஆவார்.

وُلد فى الرّيِّ، وأقبل النّاسُ على كتبِه يدرسونها، وكان يحسن اللّغة الفارسيّة، وكان قائما على نُصرة الأشاعرة، وكان إذا رَكِبَ يَمشي حوله ثلاثمأة تلميذٍ من الفقهاء، له تصانيفُ كثيرة،

இவர் “றை” என்ற ஊரில் பிறந்தார். மக்கள் இவர் எழுதிய நூல்களை கற்றுக் கொண்டிருந்தார்கள். இவர் பாரசீக மொழி திரண்படக் கற்றிருந்தார். இவர் அஷ்அரிய்யா கொள்கைவாதிகளுக்கு உதவி செய்பவராகவும் இருந்தார். இவர் வாகனத்தில் ஏறினால் இவரை சட்டக்கலை மாணவர்களில் 300 பேர் தொடர்ந்து செல்வார்கள். இவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் பின்வரும் நூல்கள் அடங்கும்.

1. التفسير الكبير،
2. أساس التقدير،
3. الإشارة فى علم الكلام،
4. لوامع البيّنات،
5. معالم أصول الدين،
6. المطالب العالية من العلم الإلهيّ،
7. محصل أفكار المتقدّمين والمتأخّرين،
8. اعتقادات فِرق المسلمين والمشركين،
9. كتاب الأربعين فى أصول الدين،

இவரின் தந்தை ஒரு ஸூபீ மகானாயிருந்ததால் அதிக அறிவுகளை தந்தையிடமே கற்றுக் கொண்டார்.

இவர் ஈரான் – தபரிஸ்தானின் “றை” எனும் ஊரில் ஹிஜ்ரீ 544ல் பிறந்து ஹிஜ்ரீ 606ல் “வபாத்” மறைந்தார். வயது 62. இவர் சுமார் 838 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புப் பொது மக்களே!

மேற்கண்ட விபரங்களுக்குரிய இமாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி நான் ஏன் எழுதினேன் என்றால் இவர் உலகில் தோன்றிய இறையியல் மேதைகளும், ஸூபீ மகான்களும், மற்றும் நானும், என்னுடனுள்ள உலமாஉகளும் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவுக்கு – திரு வசனத்திற்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று பொருள் கொள்வது பிழை என்றும், இத்திரு வசனத்தின் சரியான பொருள் “அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை” அல்லது “அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு வஸ்த்துவுமில்லை” என்று பொருள் கொள்வதே சரி என்றும் கூறி வருகின்றோம். இவ்வாறு கூறிய பல அறிஞர்களில் இவர்களும் ஒருவர் என்ற உண்மையை திரையிடப்பட்ட உலமாஉகளும், பொதுவாகப் பொது மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும்.

இது மட்டுமன்றி இற்றைக்கு சுமார் 838 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மா மேதை, இன்று காத்தான்குடியில் அப்துர் றஊப் ஆகிய நான் கூறுவது போல் அன்றே கூறியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள் என்பதற்காகவும், என்னைத் தவறாக எடை போடாமல் இருக்க இது உதவுமென்பதற்காகவுமேயாகும்.

இமாம் பக்றுத்தீல் றாஸீ அவர்கள் திருக்கலிமாவான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திற்கு இக்காலத்தவர்கள் வலிந்துரை கொண்டு “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று சொல்வது பிழை என்றும், வலிந்துரையின்றி “அல்லாஹ் தவிர எந்த ஒரு நாயனும் இல்லை” என்று பொருள் கொள்வதே சரி என்றும் கூறுகிறார்கள்.

ومتى كان الأمرُ كذلك لمْ يكن بنا حاجةٌ إلى ذلك الإضمار، أي التأويل البتّة، فصحّ أنّ قولَنا لا إله إلّا الله يُفيد المقصودَ بظاهره مِن غيرِ حاجةٍ البتّة إلى الإضمار، (لوامع البيّنات، ص 94)

ஆகையால் திரு வசனத்திற்கு வலிந்துரை கொள்ள வேண்டிய எந்த ஒரு தேவையும் எமக்கு அறவே இல்லை. எனவே, திரு வசனம் எந்த ஒரு வலிந்துரையுமின்றி தனது கருத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது.
ஆதாரம்: லவாமிஉல் பையினாத், பக்கம்: 94,
ஆசிரியர்: பக்றுத்தீன் றாஸீ

இந்த மகான் அவர்கள் தங்களின் “லவாமிஉல் பையினாத்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

فنقول للقوم الّذين يُؤوّلون كلمةَ الحقّ ‘ لا إله إلّا الله ‘ وأيُّ حاملٍ يحمِلُكم على التزام هذا الإضمارِ، أي التأويل، بل نقول إجراءُ الكلام على ظاهره أَوْلَى، أي تركُ التأويل والأخذ بالظاهر أَوْلَى،

لأنّا لو الْتَزَمْنَا هذا الإضمار كان معناها ‘لا إله فى الوجود إلا الله ‘، فكان هذا نَفيًا لوُجودِ الإلهِ الثاني، وإذا أجرينا الكلام على ظاهره كان نفيا لماهيّة الثاني، ومعلومٌ أنّ نفيَ الماهيّةِ والحقيقة أوْلَى وأقْوَى فى التّوحيد من نَفيِ الوجود، فثبتَ أنّ إجراءَ هذا الكلام على ظاهره أولى،
لوامع البينات، ص 93، للإمام فخر الدين الرازي،

திருக்கலிமாவின் வசனம் எந்த ஒரு வலிந்துரையுமின்றி தனது கருத்தை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருப்பதால் இதற்கு வலிந்துரை கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏன் வலிந்துரை கொள்ள வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு சொல்பவர்களிடம் கேட்கிறேன்.

ஆகையால் இதற்கு வலிந்துரை கூறாமல் இதன் நேரடிப் பொருள் கூறுவோம்.

இத்திரு வசனத்திற்கு لَا إِلَهَ فِى الْوُجُوْدِ إِلَّا اللهُ – அல்லாஹ் தவிர “வுஜூதில்” தெய்வமில்லை என்று வலிந்துரை கொண்டால் இருக்கின்ற இரண்டாவது தெய்வமும் இல்லையென்றுதான் கருத்து விளங்கப்படுமேயன்றி பொதுவாக தெய்வமில்லை என்ற கருத்து விளங்கப்படாது.

نَفْيُ الْإِلَهِ الثَّانِيْ – இரண்டாவது தெய்வம் இல்லையென்று சொல்வதை விட نَفْيُ مَاهِيَّةِ الْإِلَهِ الثَّانِيْ இரண்டாம் “இலாஹ்” என்று சொல்வதற்கே இடமில்லை என்பது “தவ்ஹீத்” விடயத்தில் பலமானதாயிருப்பதால் குறித்த திரு வசனத்திற்கு வலிந்துரை கொள்ளாமல் அதன் வெளிரங்க பொருளைக் கொள்வதே சிறந்தது.

ஆதாரம்: லவாமிஉல் பையினாத், பக்கம்: 91, ஆசிரியர்: பக்றுத்தீன் றாஸீ

விளக்கம்:
لا إله إلا الله என்ற திரு வசனத்தில் நான்கு சொற்கள் உள்ளன. அவை முறையே لا – லா, إله – இலாஹ, إلّا – இல்லா, الله – அல்லாஹ் என்பனவாகும். இச் சொற்களுக்கு முறையே இல்லை, தெய்வம் (நாயன்), தவிர, அல்லாஹ் என்று பொருள் வரும். இவற்றை ஒன்று சேர்த்தால் “அல்லாஹ் தவிர தெய்வம் இல்லை” என்று பொருள் வரும். இதுவே இவ்வசனத்திற்கான வலிந்துரையில்லாத பொருள்.

இதற்கு மாறாக لَا إِلَهَ مَوْجُوْدٌ إِلَّا اللهُ என்றோ, لَا إِلَهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ என்றோ வலிந்துரை கொண்டு முந்தின வசனத்திற்கு “அல்லாஹ் தவிர இருப்பதில் எந்த நாயனும் இல்லை” என்றும், இரண்டாம் வசனத்திற்கு “அல்லாஹ் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை” என்றும் சொல்வது பிழையான வலிந்துரைப் பொருள்களாகும். இரண்டு வகையில் எந்த வகையில் வலிந்துரை கொண்டாலும் பொதுவாக வலிந்துரை கொள்வது பிழைதான்.

“வணக்கத்திற்குரிய” என்ற பொருளைத் தருகின்ற வசனம் مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ – “முஸ்தஹிக்குன் லில் இபாததி” என்ற வசனமாகும். இவ்வசனம் இரு சொற்களாலானது. ஒன்று مُسْتَحِقٌّ என்ற சொல். மற்றது لِلْعِبَادَةِ என்ற சொல். இவ்விரு சொற்களாலான مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ என்ற வசனம் திருக்கலிமாவில் இல்லாதிருக்கும் போது “வணக்கத்திற்குரிய” என்ற பொருள் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? வரவேண்டியதற்கான அவசியம் என்ன? வலிந்துரை கொள்வோர் இதற்கு சரியான காரணமும், விளக்கமும் சொல்ல வேண்டும்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் திருக்கலிமா மட்டும் என்று கொள்ள முடியாது. இது திருக்குர்ஆன் வசனம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் அத்தியாயம்: முஹம்மத், வசனம் 19, அஸ்ஸாப்பாத், வசனம்: 35.

திருக்குர்ஆன் வசனத்திற்கு ஆதாரமின்றி வலிந்துரை கூற எவருக்கும் அனுமதியில்லை.

مَنْ أَوَّلَ الْقُرْآنَ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ (قاله مصباحي)

தொடரும்… (2ம் பக்கம் பார்க்க)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments