Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வின் திரு நாமங்கள் நாலாயிரம்! அல்லாஹ்வுக்கு 4000 திரு நாமங்கள்!

அல்லாஹ்வின் திரு நாமங்கள் நாலாயிரம்! அல்லாஹ்வுக்கு 4000 திரு நாமங்கள்!

தொடர் – 1
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
وقد وردت الروايات الكثيرة بهذا المعنى، ويُقال ‘ إنّ لله أربعة آلاف اسمٍ، ألفٌ لا يعلمه إلّا الله، وألفٌ لا يعلمه إلّا اللهُ والملائكةُ، وألف لا يعلمه إلّا الله والملائكة والأنبياءُ، وأمّا الألفُ الرّابع فإنّ المؤمنين يعلمونه، فثلاثمأةٍ منه فى التوراة، وثلاثمأةٍ فى الإنجيل، وثلاثمأةٍ فى الزّبور، ومأةٌ فى القرآن، تسعةٌ وتسعون منها ظاهرةٌ، وواحدٌ مكتُومٌ، من أحصاها دخل الجنّة،
(لوامع البينات، ص 71، للإمام فخر الدين الرازي)
 

அல்லாஹ்வுக்கு 4000 திரு நாமங்கள் இருப்பது தொடர்பாக பல “ரிவாயாத்” அறிவிப்புக்கள் உள்ளன.
 
அவற்றில் ஒன்று. (அல்லாஹ்வுக்கு 4000 திரு நாமங்கள் உள்ளன. 1000 திரு நாமங்களை அவன் மட்டுமே அறிவான். இன்னும் 1000 திரு நாமங்களை அவனும், “மலாயிக்” அமரர்களும் அறிவார்கள். இன்னும் 1000 திரு நாமங்களை அவனும், அமரர்களும், நபீமார்களும் அறிவார்கள். இன்னும் 1000 திரு நாமங்களை விசுவாசிகள் – “முஃமின்”கள் அறிவார்கள்)
 
இவ் ஆயிரம் திரு நாமங்களில் 300 திரு நாமங்கள் “தவ்றாத்” வேதத்திலும், இன்னும் 300 திரு நாமங்கள் “இன்ஜீல்” வேதத்திலும், இன்னும் 300 திரு நாமங்கள் “ஸபூர்” வேதத்திலும், எஞ்சிய 100 திரு நாமங்கள் “அல்குர்ஆன்” திரு மறையிலும் உள்ளன. இந்த நூறு திரு நாமங்களில் 99 திரு நாமங்கள் வெளிரங்கமானவை. ஒன்று மட்டும் மறைக்கப்பட்டது. இவற்றை அறிந்து மனனம் செய்தவன் சுவர்க்கம் சென்று விட்டான்.
ஆதாரம்: லவாமிஉல் பையினாத், பக்கம் 71,
ஆசிரியர்: இமாம் பக்றுத்தீன் றாஸீ
 
அல்லாஹ் எனும் திரு நாமத்தையும் சேர்த்து மொத்தம் நூறு திரு நாமங்களாகும். أَحْصَاهَا இவற்றை மனனம் செய்தவன் சுவர்க்கம் சென்று விட்டான் என்ற நபீ மொழியின் கருத்து என்னவெனில் அவற்றின் ஒவ்வொன்றின் பொருளையும், அதன் விபரங்களையும் அறிந்து மனனம் செய்தவன் சுவர்க்கம் சென்று விட்டான் என்பதாகும். அவற்றின் பொருள் தெரியாமலும், விபரங்கள் தெரியாமலும் மனனம் மட்டும் செய்தவன் சுவர்க்கம் செல்லமாட்டான் என்பதே இதன் கருத்து.
 
பொருள் தெரியாமலும், விபரங்கள் தெரியாமலும் மனனம் செய்தவன் சுவர்க்கம் செல்வான் என்பது கருத்தல்ல. இதற்கு மாறாக பொருள் தெரியாமலும், விபரங்கள் தெரியாமலும் மனனம் செய்தவன் சுவர்க்கம் செல்வான் என்று ஒருவன் சொன்னால் அவனிடம் أَحْصَى என்ற சொல்லுக்கு விளக்கம் கூறி அவனை சரியான வழிக்கு அழைக்க வேண்டும்.
 
ஒரேயொரு திரு நாமம் மட்டும் மறைக்கப்பட்டதேன்?
 
மறைக்கப்பட்ட ஒரு திரு நாமம்தான் “இஸ்முல் அஃளம்” வலுப்பமிகு திரு நாமம் எனப்படும். اَلْإِسْمُ الْأَعْظَمُ என்றால் அது கொண்டு “துஆ” கேட்டால் “துஆ” ஏற்றுக் கொள்ளப்படும் என்று இறைஞானிகள் கூறியுள்ளார்கள். இத்தகைய திரு நாமத்தைப் பகிரங்கப்படுத்தாமல் அல்லாஹ் மறைத்துள்ளதற்கு காரணம் உண்டு. அதை இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
 
وإنّما جُعل الاسمُ الأعظمُ مكتُومًا ليصيرَ ذلك سببا لمُواظبةِ الخلق على ذكر جميع الأسماء رجَاءَ أنّه رُبّما مرَّ على لسانِه ذلك الاسم أيضا، ولهذا السّببِ أخفى اللهُ الصّلاةَ الوُسطى فى الصلوات وليلةَ القدر فى اللّيالي،
 
“இஸ்முல் அஃளம்” வலுப்பமிகு திரு நாமம் மறைக்கப்பட்டதற்குப் பின்வரும் விடயத்தைக் காரணமாகக் கூறலாம். அந்தத் திரு நாமம் எதுவென்று குறிப்பாகச் சொல்லப்பட்டிருந்தால் அதை மட்டும் மனிதர்கள் ஓதிக் கொண்டிருப்பார்களேயன்றி ஏனைய திரு நாமங்கள் ஓதுவதை விட்டுவிடுவார்கள். இது மட்டுமன்றி அவன் எல்லாத் திரு நாமங்களையும் ஓதிக் கொண்டிருந்தால் அவற்றில் ஒன்றாக குறித்த திரு நாமமும் இருக்குமானால் அவ்வாறு ஓதுவதன் மூலம் அவன் பாக்கியவானாக ஆகிவிட வாய்ப்பு உண்டு என்ற காரணமுமாகும்.
 
இத்தகைய காரணங்களுக்காகவே நடுத் தொழுகையை அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதுமாகும். நடுத் தொழுகை எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது “அஸ்ர்” தொழுகை என்பது அதிகமானவர்களின் கருத்தாகும். இவ்வாறுதான் “லைலதுல் கத்ர்” இரவுமாகும்.
 
நடுத் தொழுகை மறைக்கப்பட்டதற்கான காரணம் ஏதோ ஓரு தொழுகை குறித்து இதுதான் நடுத் தொழுகை என்று பகிரங்கமாகச் சொல்லப்பட்டிருந்தால் மனிதர்களில் அதிகமானோர் அத் தொழுகையை மட்டும் மிகவும் பேணுதலுடன் தொழுவார்களேயன்றி ஏனைய தொழுகைகள் விடயத்தில் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என்பதற்காகவாகும்.
 
இவ்வாறுதான் “லைலதுல் கத்ர்” இரவுமாகும். அது இன்ன இரவுதான் என்று திட்டமாக கூறப்பட்டிருந்தால் அந்த இரவை மட்டும் உயிர்ப்பிப்பார்களேயன்றி ஏனைய இரவுகளை அதுபோன்று உயிர்ப்பிக்கமாட்டார்கள்.
 
இறைஞானி அபுல் காஸிம் அல்குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அர்ரிஸாலா” எனும் நூலில் நபீ தோழர் அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததாக ஒரு செய்தி எழுதியுள்ளார்கள். இதோ அச் செய்தி.
 
كان رجلٌ على عهد رسول الله صلّى الله عليه وسلّم يتّجر من بلاد الشّام إلى المدينة ومن المدينة إلى بلاد الشّام، ولا يصحبُ القَوافِلَ توكُّلًا منه على الله، قال فبينما هو يجيئُ من الشّام يقصِدُ المدينةَ إذْ عرضَ له لِصٌّ على فرس فصاح بالتّاجر فقال قِفْ، فوقف له التّاجرُ وقال شأنَكَ وَمَا لِيْ وَخَلِّ سبيلي، فقال اللِّصُّ المالُ مالي، وإنّما أريد نفسك، فقال التّاجرُ ما تعملُ بنفسـي، خُذِ المالَ وخلِّ سبيلي، فقال اللّصُّ كمقالتِه الأولى، فقال التاجرُ أنظِرْنِي حتّى أتوضّأَ وأصلِّيَ وأدعُوَ ربّي، فقال اللّصُّ افعل ما تريد، فقام التاجر وتوضَّأَ وصلّى أربع ركعاتٍ، ثمّ رَفَعَ يديه إلى السماء وكان مِن دعائه أن قال (يَا وَدُوْدُ يَا وَدُوْدُ يَا ذَا الْعَرْشِ الْمَجِيْدْ يَا مُبْدِئُ يَا مُعيْدُ يَا فَعَّالٌ لِمَا يُرِيْدُ، أَسْأَلُكَ بِنُوْرِ وَجْهِكَ الَّذِيْ مَلَأَ أَقْطَارَ أَرْكَانِ عَرْشِكَ وَأَسْأَلُكَ بِقُدْرَتِكَ الَّتِيْ قَدَرْتَ بِهَا عَلَى خَلْقِكَ وَبِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْئٍ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، يَا مُغِيْثْ أَغِثْنِيْ يَا مُغِيْثْ أَغِثْنِيْ، يَا مُغِيْثْ أَغِثْنِيْ)
فلمّا فرغ من دعائه إذا بفارسٍ على فرسٍ أشْهَبَ عليه ثيابٌ خُضرٌ وبيده حربةٌ من نور، فلمّا نظر اللِّصُّ إليه ترك التاجرَ وأخذ الحِربةَ ومرَّ نحو الفارسِ، فلمّا دنا منه شدّ الفارسُ على اللّصِّ فَطَعَنَهُ طَعْنَةً أسقطَهُ عن فرسِه، ثمّ جاء إلى التاجرِ فقال له قُم فاقتله، فقال له التاجرُ من أنتَ؟ فما قتلتُ أحدًا ولا تطيبُ نفسـي بقتلِه، قال فرجعَ الفارسُ فقَتَلَه، ثمّ جاء إلى التاجر وقال اعلم أنّي ملَكٌ فى السّماء الثالثة، حين دعوتَ الأولى سمعنا لِأَبوابِ السَّماءِ قَعْقَعَةً فقلنا أمرٌ حدثَ، ثمّ دعوت الثانيةَ ففُتحت أبوابُ السماءِ ولها شَرَرٌ كثيرٌ كَشَرَرِ النَّارِ، ثمّ دعوتَ الثالثةَ فهبطَ جبريلُ عليه السّلام علينا وهو ينادي مَنْ لِهَذَا المَكْرُوْبِ؟ فدعوتُ ربِّيْ أن يُوَلِّيَنِيْ قتلَهُ،
واعلم يا عبد الله! أنّه من دَعَا بدُعائِك هذا فى كلِّ كربةٍ وفى كلِّ شدّةٍ فرَّجَ الله عنه وأعانه، فجاء التاجرُ غانما سالما إلى المدينة، ودخل على النّبيّ صلّى الله عليه وسلّم وأخبره بالقصّة وبالدّعاء فقال النّبيّ عليه الصلاة والسّلام لَقَدْ لَقَّنَكَ اللهُ أسمائَهُ الحُسنى الّتي إذا دُعي بها أجابَ وإذا سُئل بها أعطى،
(لوامع البيّنات، ص 70 – 71، لشيخ الإسلام فخر الدين الرازي)
சுருக்கம்:
நபீ பெருமானார் அவர்களின் காலத்தில் சிரியா நாட்டுக்கும், திரு மதீனா நகருக்குமிடையில் வியாபாரம் செய்யக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். இவர் வியாபாரக் கூட்டங்களுடன் சேராமல் அல்லாஹ்வை நம்பினவராக தனிமையாகவே போய் வருவார்.
 
ஒரு சமயம் சிரியாவிலிருந்து வியாபாரப் பொதிகளுடன் திரு மதீனா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த போது வழியில் குதிரை மீது ஒரு திருடன் வந்து வியாபாரியிடம் நில் என்று கூற வியாபாரி அவனிடம் என்னையும், எனது வியாபாரச் சரக்கையும் விட்டு விடு என்றார்.
 
அதற்கு அத்திருடன் விட்டு விடவா? வியாபாரச்சரக்கு என்னுடையது. உன்னைக் கொல்ல வேண்டும் என்றான். அப்போது வியாபாரி நான் “வுழூ”ச் செய்து தொழுது “துஆ” கேட்பதற்கு நேரம் தர வேண்டும் என்றார். அவன் அனுமதித்தான். அவர் “வுழூ” சுத்தம் செய்து நான்கு “றக்அத்” தொழுது பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்.
 
“துஆ”வின் தமிழாக்கம்:
இரக்கமுள்ளவனே! இரக்கமுள்ளவனே! வலுப்பமிகு “அர்ஷ்” ஐ உடையவனே! படைப்பவனே! படைப்பை மீள் எழுப்புபவனே! தான் நாடியதைச் செய்பவனே! உன்னுடைய “அர்ஷ்” சிம்மாசனத்தின் தூண்களின் கோணங்களை நிரப்பியுள்ள உனது “தாத்”தின் பிரகாசத்தைக் கொண்டும், உனது படைப்புகள் மீது உனக்குள்ள சக்தி கொண்டும், அனைத்தையும் சூழ்ந்துள்ள உனது அருளைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன். நீயல்லாத எதுவுமில்லை. அபயம் – பாதுகாப்பு வழங்குபவனே! எனக்கு பாதுகாப்பு வழங்குவாயாக! (மூன்று தரம்)
 
வியாபாரி பிரார்த்தனை செய்து முடிந்ததும் வெள்ளை நிறமும், கறுப்பு நிறமும் கலந்த ஒரு குதிரையில், பச்சை நிற உடையில், இரும்பினாலான ஈட்டி போன்ற ஓர் ஆயுதத்தோடு ஒருவர் நின்றார். அவ் ஆயுதம் ஒளியினாலானது போலிருந்தது. அவரைக் கண்ட திருடன் வியாபாரியை விட்டு ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கு வந்த குதிரை வீரன் பக்கம் சென்றான். அவ்வேளை அங்கு வந்திருந்த குதிரை வீரன் திருடனை தனது ஆயுதத்தால் குத்திய போது அவன் கீழே விழுந்தான்.
 
இதன் பின் வந்த குதிரை வீரன் வியாபாரியிடம் அவனைக் கொன்று விடு என்று கூறினார். அப்போது விபாயாரி நீங்கள் யாரென்று கேட்டு, நான் இதுவரை எவரையும் கொலை செய்ததில்லை. இவரைக் கொல்வதற்கும் நான் விரும்பவில்லை என்றார். அப்போது வந்தவரே அவனைக் கொன்றார்.
 
அதன்பின் வந்தவர் வியாபாரியிடம் “நான் மூன்றாம் வானத்திலுள்ள ஒரு “மலக்” அமரர். நீங்கள் “துஆ” கேட்டீர்கள். மூன்று தரம் கேட்டீர்கள். முதல் தடவை கேட்ட போது வானத்தின் வாயல்களில் வாள் வெட்டுச் சத்தம் எங்களுக்கு கேட்டது. ஏதோ ஒன்று நடந்துள்ளது என்று நாங்கள் புரிந்து கொண்டோம். பின்னர் நீங்கள் இரண்டாம் தரம் “துஆ” கேட்ட போது வானத்தின் வாயில்கள் திறக்கப்பட்டன. அப்போது நெருப்புத்தணல் போல் இருந்தது. மூன்றாம் தரம் நீங்கள் “துஆ” கேட்ட போது வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து துன்பத்தில் விழுந்துள்ளவனுக்கு நீங்கள் கை கொடுக்கவில்லையா? என்று சத்தமிட்டார். அப்போது நான் “இறைவா! திருடனைக் கொன்று வியாபாரியைக் காப்பாற்றும் பொறுப்பை எனக்குத் தருவாயாக!” என்று கேட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த வியாபாரியிடம் அல்லாஹ்வின் அடியானே! நீ அறிந்து கொள்வாயாக! எவனாவது ஒருவன் தனக்கு ஒரு கஷ்டம், துக்கம் போன்றதற்காக இந்த “துஆ”வை அவன் ஓதினால் அவனுக்கு உதவி கிடைக்கும். விடிவு கிடைக்கும் என்று கூறி மறைந்து விட்டார்.
 
குறித்த வியாபாரி பாதுகாப்பு பெற்றவராக திரு மதீனா நகர் வந்து பெருமானார் அவர்களிடம் சென்று நடந்த நிகழ்வுகளை விபரமாகக் கூறி தான் ஓதிய “துஆ” பற்றியும் சொன்னார். அப்போது பெருமானார் அவர்கள் அல்லாஹ் உங்களுக்கு “அஸ்மாஉல் ஹுஸ்னா” கற்றுத் தந்துள்ளான். அவை கொண்டு அவன் அழைக்கப்பட்டால் பதில் சொல்வான், அவை கொண்டு அவனிடம் கேட்டால் தருவான் என்று கூறினார்கள்.
ஆதாரம்: லவாமிஉல் பையினாத், பக்கம் 70-71,
ஆசிரியர்: இமாம் பக்றுத்தீன் றாஸீ
 
அன்பிற்குரிய ஸூபிஸ சமூகமே! ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளே! தரீகாவின் ஆதரவாளர்களே! “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஐயமறத் தெரிந்து அதன் வழி செல்பவர்களே!
 
பெருமானார் அவர்கள் கற்றுத் தந்த “துஆ”க்களிலும், குத்புமார், மற்றும் வலீமார் கற்றுத் தந்த “துஆ”க்களிலும் சொல்லற்கரிய பயன்கள் உள்ளன.
 
நான் எழுதியுள்ள வரலாறில் வியாபாரி ஓதி இறையுதவியைப் பெற்ற “துஆ” பெருமானார் அவர்களால் சரி காணப்பட்ட, அவர்கள் அங்கீகரித்த “துஆ”வாகும். உங்களில் யாருக்காவது கஷ்டம், வறுமை, கவலை இருக்குமாயின் கூறுப்பட்ட “துஆ”வை தினமும் பக்தியுடன் ஓதி வந்தால் பயன் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு தரமாவது தொடர்ந்து ஓதுவதால் மட்டும்தான் நாம் எதிர்பார்க்கும் பயனை அடையலாம்.
 
அல்லாஹ்வின் திரு நாமங்களில் اِسْمُ الْأَعْظَمْ என்று சொல்லப்படுகின்ற ஓர் “இஸ்ம்” திரு நாமம் இருப்பது உண்மைதான். அதைக் கொண்டு அல்லாஹ் அழைக்கப்பட்டால் உடனே விடை கிடைக்கும் என்பதும் உண்மைதான். அது எதுவென்று திட்டமாக அறிந்தவர்கள் இறைஞானிகளும், ஸூபீ மகான்களுமேயாவர். குறிப்பாக ஸூபிஸம், மற்றும் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தத்துவம் அறிந்தவர்கள் குறித்த திரு நாமம் கொண்டு “துஆ” செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
 
குறிப்பு: என்மீது “மஹப்பத்” உள்ளவர்கள் “துஆ” செய்கின்ற போது எனக்காக ஒரு நிமிடம் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம்.
 
தொடரும்… (2ம் பக்கம் பார்க்கவும்)
RELATED ARTICLES

Most Popular

Recent Comments