Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கல்முனையில் பேசும் பொருளாகிய “யா காதிர் முறாத் ஹாஸில்” என்ற அறபு வசனம்

கல்முனையில் பேசும் பொருளாகிய “யா காதிர் முறாத் ஹாஸில்” என்ற அறபு வசனம்

حُمُرٌ مُعَمَّمَةٌ – سُفُنٌ مُثَقَّبَةٌ
طُرُقٌ مُخَرَّبَةٌ – مَنْ هَؤُلَاءِ سَلُوْا

“ஹுமுறுன் முஅம்மதுன் – ஸுபுனுன் முதக்கபதுன்
துறுகுன் முகர்றபதுன் – மன் ஹாஉலாயி ஸலூ”

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

கல்முனையில் பேசும் பொருள் “யா காதிர் முறாத் ஹாஸில்” என்ற அறபு வசனமேயாகும்.

ஏன் இந்தக் குழப்பம்? பொறாமையா? அறியாமையா? எந்த “ஆமை”யாயிருந்தாலும் அதற்கு மருந்துண்டு. மருத்துவமனையும் உண்டு. கவலை வேண்டாம். يَا قَادِرْ مُرَادْ حَاصِلْ “யா காதிர் முறாத் ஹாஸில்” எனும் இவ் ஞானக் குழந்தை இன்று நேற்று பிறந்த குழந்தையல்ல. இக்குழந்தையின் வயது பல நூறாண்டுகளைக் கடந்தது. நாஹூர் பாதுஷா, காரணக் கடல், கன்ஜே ஸவா, ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்கள் “வபாத்” மறைந்த அன்றுதான் இக்குழந்தை பிறந்தது.

இன்று இக்குழந்தை தொடர்பாக ஒவ்வொரு சொல்லாகவும், ஒவ்வோர் எழுத்தாகவும் ஆய்வு செய்யத் துணிந்து செயல்படுகிறார்கள் முதுகெலும்பில்லாத முனிவர்களிற் சிலர். இவர்கள் துறை தெரியாமல் தோணி தொடுக்கத் தொடங்கி புலி வாலைப் பிடித்தவர்களாகி செய்வதறியாமற் தடுமாறுகிறார்கள். எங்களை விட்டாற் போதும் என்று உயிரற்ற நாவால் சொல்லிக் கொண்டுமிருக்கிறார்கள்.

இக்குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இதற்கு கால் உள்ளதா? கை உள்ளதா? என்று கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.

முல்லாக்களே! முப்தீகளே!

உங்களின் எதிர் நடவடிக்கை அறியாமையின் வெளிப்பாடாயிருந்தால் فَاسْئَلُوْا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ “நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிஞர்களிடம் கேளுங்கள். என்ற இறைவனின் புத்திமதியை – ஆலோசனையை அறிந்து செயல்படுங்கள். தெளிவு கிடைக்கும்.

اَلْعِلْمُ بِالتَّعَلُّمِ
“அறிவை அதைக் கற்பதன் மூலமே அறிய முடியும்” என்ற எம் பெருமகனார் ஏந்தல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் புத்திமதியையும் கேட்டுச் செயல்படுங்கள். தெளிவினும் தெளிவு உங்களுக்கு வெளிச்சமாகும்.

அல்லது உங்களின் எதிர்ப்பு நடவடிக்கை பொறாமையின் வெளிப்பாடாயின் இந் நோயை சுகப்படுத்துவதற்கான மருந்தும், மருத்துவ மனையும் உண்டு. அங்கு சென்று ஆன்மிக சிகிச்சை பெறுங்கள். தெளிவினுந் தெளிவு தானாக வந்து விடும். ஏற்க மறுக்கும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

“யா காதிர் முறாத் ஹாஸில்” என்ற இக்குழந்தையின் பெயருக்குரிய பொருள் “சக்தியுள்ளவனே! என் நாட்டம் நிறைவேற வேண்டும்” என்பதாகும்.

இவ்வசனத்தில் “யா காதிர்” சக்தியுள்ளவனே என்று அழைக்கப்பட்டவன் அல்லாஹ் என்று நீங்கள் கருதினால் நீங்கள் அல்லாஹ்விடமே கேட்கிறீர்கள். இதில் என்ன பிழை உள்ளது? சொல்வீர்களா? அல்லாஹ்விடம் இவ்வாறு கேட்பது பிழையா? அவ்வாறாயின் சரியான ஆதாரங்களுடன் கூறுங்கள். நாம் சொல்வது பிழையில்லையெனில் ஏற்றுக் கொண்டு மக்களை குழப்பாமல் மௌனிகளாயிருங்கள்.

“யா காதிர்” என்ற சொல் மூலம் அழைக்கப்பட்டவர்கள் நாஹூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா என்று நீங்கள் கருதினால் “யா காதிர்” என்று அவர்களை அழைத்து அவர்களிடம் சொல்வது பிழையா? அவ்வாறாயின் அதற்கான சரியான ஆதாரங்களோடும் அறிவியுங்கள்.

நீங்கள் எந்த ஓர் ஆதாரமும் கூறாமல் இவ்வசனம் பிழை என்று வாயால் மட்டும் சந்திகளிலும், சந்தைகளிலும் குரைத்துக் கொண்டும், கத்திக் கொண்டும், கரைந்து கொண்டுமிருப்பது உங்களின் இயலாமையேயாகும். நீங்கள் உங்களின் ஆதாரங்களை எழுத்து மூலம் பகிரங்கமாக அறிவித்தால் எங்களின் பதில் மின்னல் வேகத்தில் சந்தைக்கும், சந்திக்கும் வரும்.

“யா காதிர் முறாத் ஹாஸில்” என்ற வசனத்தை எதிர்க்கும் முல்லாக்காள்!
“ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று “பத்வா” எழுதி விட்டு அதில் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பேசிய எனது பெயரைக் குறிப்பிட்ட “முப்தின்”காள்!

நீங்கள் அனைவரும் எனது பார்வையிலும், விஷயம் தெரிந்த மகான்களின் பார்வையிலும் சரக்கற்ற வெறும் கப்பல்கள்தான். ஆயினும் பொது மக்களுக்கு இது புரிவதில்லை. காரணம் உலமாஉகள் என்ற “லேபல்”தான்.

“ஸூறத்” மே இன்ஸான்ஹே – “ஸீறத்” நெஹீஹே
“ஸீறத்”மே ஹயவான்ஹே – “மகர்தும்” நெஹீஹே!

உருவத்தில் மனிதன்தான். ஆயினும் மனித பண்பாடு இல்லை.
பண்பாட்டில் மிருகங்கள்தான். ஆயினும் வால் இல்லை

என்று அறிஞர் அல்லாமா இக்பால் அன்று சொன்னார்கள். இப்பாடலில் “இன்ஸான்ஹே” என்ற சொல்லுக்குப் பதிலாக “ஆலிம்ஹே” என்ற சொல்லை இன்று இவன் பயன்படுத்தியுள்ளான்.

முல்லாக்களே! முப்தின்களே!

என்னையோ, என்னுடனுள்ள உலமாஉகளையோ உங்களால் ஏமாற்ற முடியாது. பேக்காட்டவும் முடியாது. நாங்கள் பனங்காட்டு நரிகள். பனைகளின் சலசலப்புக்கு நரிகள் அஞ்சி ஓடியதற்கு வரலாறே இல்லை.

இப்போது நீங்கள் அனைவரும் கை கோர்த்துக் கொண்டு திசை மாறிப் பறக்கின்றீர்கள். புதிய சாயம் ஒன்றைப் பூசிக் கொண்டு மக்களை உங்கள் பக்கம் திருப்புவதற்காக பொய் சொல்லியும், ஏமாற்றியும் வருகிறீர்கள். இது உங்களுக்கு பொருத்தமானதன்று.

வேலைக் கள்ளிக்கு பிள்ளைச் சாட்டு என்ற பாணியில் திசை மாறிப் பறக்கிறீர்கள். மக்களையும் உங்களுடன் மாறிப் பறக்க வைக்கின்றீர்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” என்று ஒன்றிருப்பதாகவும், ஆயினும் அதற்கு நான் கூறி வருகின்ற விளக்கம் பிழையென்றும், அதற்கு வேறு விளக்கம் இருப்பதாகவும் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையாயின் அந்த விளக்கத்தை தெளிவாகவும், பகிரங்கமாகவும் எழுத்து மூலமும், பேச்சு மூலமும் விளக்கி வையுங்கள். திரை மறைவில் நின்று கூச்சல் போடாதீர்கள். கொக்கரிக்கவும் வேண்டாம்.

உங்களின் தோலை உரித்து நீங்கள் வெறும் வெங்காயம்தான் என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக நான் ஒரு வழி சொல்கிறேன். ஓர் ஆலோசனை வழங்குகின்றேன். நீங்கள் அதற்கு உடன் பட்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு நான் “எனி டைம் ரெடி” என்பதை முன்கூட்டியே உங்களுக்கு சுபச் செய்தியாக கூறி வைக்கிறேன்.

பொது மக்களில் 10 ஆயிரம் பேர்களையும், அறிவுள்ளவர்களிலும், புத்தி ஜீவிகளிலும் 500 பேர்களையும் காத்தான்குடியில் ஒன்று கூட்டித் தருகிறேன். நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட மூன்று இமாம்களால் எழுதப்பட்ட மூன்று அறபு நூல்களையும் உங்களிடம் தந்து அவற்றில் நான் குறிப்பிடும் பாடங்களை மட்டும் நீங்கள் வாசித்து அவற்றுக்கு விளக்கம் கூறுமாறும் உங்களைப் பணிப்பேன். இதை மட்டும் நீங்கள் செய்யத் தயார் என்றால் எனக்கு எழுத்து மூலம் அறிவியுங்கள். நீங்கள் இதற்கு உடன் பட்டால் தலைவர், செயலர் ஆகியோர்களின் கையெழுத்துக்களுடன் எனக்கு அறிவியுங்கள். இவ்வாறு செய்தீர்களாயின் அது எனக்குப் போதும். இன்ஷா அல்லாஹ்!

தொடர்ந்தால் தொடர்வேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments