தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இன்று பாதுஷா நாயகம் அவர்களின் திருக்கொடி ஏறுவதையிட்டு இக் கட்டுரை வெளியாகிறது!
என் கனவில் தோன்றி உண்மையை உணர்த்திய உத்தம புத்திரர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்கள்!
யா காதிர் முறாத் ஹாஸில்!
1965 அல்லது 66ம் ஆண்டு தமிழ்நாடு நீடூர் “மிஸ்பாஹுல் ஹுதா” அறபுக் கல்லூரியில் நான் கற்றுக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சுமார் 20 வயது.
ஒரு நாளிரவு 12 மணி வரை பாடக் குறிப்புக்கள் எழுதி முடித்துவிட்டு உறங்கினேன். நள்ளிரவில் – நடுநிசியில் யாரோ ஒருவர் என்னை அழைத்தது போல் உணர்ந்தேன். கண் விழித்து எழுந்து பார்த்து அவதானித்தேன். எவரையும் காணவில்லை. மீண்டும் உறங்கினேன்.
உறக்கத்தில் கனவொன்று கண்டேன். நான் உறங்கிக் கொண்டிருந்த மாடி மண்டபத்தில் ஒருவர் படுத்திருக்கிறார். அவர் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருக்கிறார். அவரைச் சுற்றி மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊர் மக்களும் திரண்டு பக்திப் பரவசத்துடன் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவரை அணுகி யாரிவர்? என்று கேட்டேன். இவர்தான் காரணக்கடல் ஷாஹுல் ஹமீத் நாயகம் பாதுஷா என்றார். கனவிலேயே எனது உடலும், உள்ளமும் நடுங்கத் தொடங்கின. நானும் அக்கூட்டத்துடன் ஒருவனாக நின்றிருந்தேன். சில நிமிடங்களின் பின் படுத்திருந்த பாதுஷா அவர்களின் தலைப் பக்கமாக மாறி நின்றேன்.
எவரும் எதிர்பாராத நிலையில் படுத்திருந்த பாதுஷா அவர்கள் போர்வையை நீக்கிவிட்டு எழுந்து அமர்ந்தார்கள். அவ்வேளை அங்கு கூடி நின்ற மக்கள் எழுப்பிய “ஸுப்ஹானல்லாஹ் – அல்லாஹு அக்பர்” என்ற ஒலி அம் மண்டபத்தையே குலுக்கியது. நான் அவர்களின் முதுகுப் பக்கம் – பின் பக்கம் நின்றிருந்ததால் திரு முகம் எனக்குத் தெரியவில்லை. இதனால் அவர்களின் திரு முகம் காண்பதற்காக இடம் மாறி அவர்களின் எதிரில் வந்து நின்றேன்.
குனிந்திருந்த பாதுஷா அவர்கள் தலையை உயர்த்தினார்கள். என் விழிகளும், அவர்களின் விழிகளும் நேருக்கு நேர் சந்தித்தன. அதோடு என்னை ஆட்கொண்டிருந்த அச்சம், நடுக்கமெல்லாம் கலைந்து போயின.
அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கூடி நின்ற மக்கள் கூட்டத்தை விலக்கியவராக தனது ஒரு காலை தரையில் இழுத்துக் கொண்டு பாதுஷா அவர்களிடம் சென்று ஊனமுற்ற தனது காலைக் காண்பித்தார். பாதுஷா அவர்கள் தங்களின் திருக் கரத்தால் அவரின் ஊனமுற்ற காலைத் தடவி விட்டார்கள். அவ்வளவுதான். அவர் அக்கணமே ஆரோக்கியம் பெற்று மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார். நின்றவர்கள் மீண்டும் “தக்பீர்” முழங்கினார்கள்.
இந்த நிகழ்வை நேரில் கண்ட என் நெஞ்சில் பாதுஷா அவர்கள் மீதிருந்த நம்பிக்கையும், “மஹப்பத்” அன்பும் அதிகமாயின. அவ்லியாஉகளின் கையே நோய் நிவாரணி என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மன நிறைவு பெற்றேன். அவர்களின் பாதம் முத்தி அதை என் தலைமேல் வைத்து அருள் பெற நாடினேன். எனினும் சனக் கூட்டம் அதிகமாயிருந்ததால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து ஒரு கால் ஊனமுற்ற ஒரு பெண் நொண்டி நொண்டி அங்கு வந்து பாதுஷா அவர்களிடம் சென்று தனது காலை காண்பித்தாள். அவர்கள் முன்னர் வந்தவருக்குத் தடவி விட்டதுபோல் தடவி விட்டார்கள். ஆயினும் அவள் சுகம் பெறவில்லை. கண்ணீர் வடித்தவளாக அவள் திரும்பிச் சென்றாள்.
இந்த நிகழ்வு எனக்கு பாதுஷா மீதிருந்த நல்லெண்ணத்தை கள்ளெண்ணமாக மாற்றியது. ஆன்மிகம் தெரியாமல், அவ்லியாஉகளின் மகிமை புரியாமல் “ஷரீஆ” மட்டுமே இஸ்லாம் என்று எண்ணியிருந்த என் நெஞ்சில் “ஷாத்தான்” விளையாடத் தொடங்கினான்.
பாதுஷா என்பவர் ஒரு வலீயாக – இறை நேசராக இருப்பாராயின் அவர் ஒரு பெண்ணின் காலை எவ்வாறு தடவுவார்? “இது “ஷரீஆ”வுக்கு முரணானதல்லவா? என்று ஷாத்தான் என்னிடம் கேட்டான். எனது “ஈமான்” நம்பிக்கையை தவிடுபொடியாக்க முயற்சித்தான். பலத்த போராட்டத்தின் பின் தோல்வி கண்டு ஓடினான்.
என் கனவின் போது எனக்கு கற்றுத் தந்து கொண்டிருந்த “உஸ்தாத்” ஆசிரியர்களில் இருவரையும் கண்டேன். அவர்களில் ஒருவர் மாணவர்களுக்கு வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். இவர் பெயரின் முதலெழுத்து S – எஸ். கனவில் இவரைத் திரும்பிப் பார்த்த பாதுஷா அவர்களின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
மற்றவர் ஒரு கதவு நிலையில் சாய்ந்தவராக நின்றிருந்தார். இவரின் பெயரின் முதல் எழுத்து Z – இஸட். இவரைத் திரும்பிப் பார்த்த பாதுஷா அவர்கள் சற்று கோபத்துடன் “உன்னைத் திருத்திக் கொள்” என்று அவருக்கு எச்சரித்தார்கள். இதோடு கனவு கலைந்தது.
காலையில் கண் விழித்தேன். “ஸுப்ஹ்” தொழுகையை முடித்து விட்டு ஹோட்டல் சென்று நாஸ்தா உண்ட பின் S – எஸ் ஆசிரியரிடம் வந்து அன்றிரவு கண்ட கனவு பற்றிக் கூறினேன். கேட்டு மகிழ்ந்த ஆசிரியர் ஐந்து ரூபாய் பணமும் தந்தார்.
அதையடுத்து Z – இஸட் ஆசிரியரிடம் வந்து கண்ட கனவை விபரமாகக் கூறினேன். பாதுஷா நாயகம் அவர்கள் கடிந்து கொண்டதையும் அவரிடம் சுட்டிக் காட்டினேன்.
என் செய்தி கேட்டு கண்ணீர் வடித்த Z – இஸட் அவர்கள், பாதுஷா அவர்கள் என்னையா எச்சரித்தார்கள்?! எழு. என்னுடன் வா என்று சொன்னவராக என்னையும் அழைத்தக் கொண்டு நாஹூர் நகர் செல்லும் பேரூந்தில் ஏறி அமர்ந்தார். நானும் அமர்ந்தேன். இருவரும் நாஹூரை அடைந்து பாதுஷாவின் தர்ஹாவை நோக்கி நடந்தோம். அவர்களின் புனித உடலை மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் சுவனச் சோலைக்குள் சென்றதும் Z – இஸட் அவர்கள் தேம்பித் தேம்பி அழுதவர்களாக பின்வருமாறு பாடினார்கள். நானும் சேர்ந்து பாடினேன்.
أَمُرُّ عَلَى جِدَارِ دِيَارِ لَيْلَى – اُقَبِّلُ ذَا الْجِدَارَ وَذَا الْجِدَارَا
وَمَا حُبُّ الدِّيَارِ شَغَفْنَ قَلْبِيْ – وَلَكِنْ حُبُّ مَنْ سَكَنَ الدِّيَارَا
பாடி முடிந்த பின் Z – இஸட் அவர்கள் பாதுஷாவே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் என்ன குற்றம் செய்தேன் பாதுஷா! என்னதான் செய்தாலும் என்னை மன்னியுங்கள் என்று அழுது சலித்து மன்றாடினார்கள்.
அதன் பிறகு என்னைத் தனியாக அழைத்துச் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.
அதாவது எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்குப் பெயர் சூட்டும் விடயத்தில் என்னுள்ளே இழுபறிகள் நடந்தன. ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ சிறந்தவர்களா? ஷாஹுல் ஹமீத் பாதுஷா சிறந்தவர்களா? என என் மனதிற்குள் போராட்டம். இறுதியில் ஹாஜாதான் சிறந்தவர்கள் என்று நான் முடிவு செய்து அவர்களின் பெயரையே என் குழந்தைக்குச் சூட்டினேன். இது தொடர்பாகவே பாதுஷா நாயகம் எச்சரித்துள்ளார்கள் என்று கூறினார்கள்.
ஷாஹுல் ஹமீத் பாதுஷா எஜமான் அவர்கள் எனது கனவில் தோன்றியதை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.
ஏனெனில் ஒரு “குத்புஸ்ஸமான்” அவர்களைக் கனவில் காண்பது அந்தக் குத்பின் “ஜத்து” பாட்டனாரைக் காண்பது போன்றாகும் என்று குத்புமாரில் பலர் சொல்லியிருப்பது இதற்கு ஒரு சான்றாகும். இது மட்டுமல்ல. நான் பெருமைக்காக எழுதவில்லை. எனது எதார்த்த நிலை பற்றிக் குறிப்பிடுவதாயின் எனக்கும், நாஹூர் பாதுஷா நாயகம் அவர்களுக்கும் எனது ஆபாஉகள் – பாட்டன்மார் வழியில் ஒரு தொடர்பு உண்டு என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.
எனது தந்தை மதிப்பிற்குரிய மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ ஆவார்கள். இவர்கள் காத்தான்குடியில் அல்ஆலிமுல் பாழில் முஹம்மத் அலீ அவர்களின் மகன் ஆவார்கள். எனது தந்தையின் தந்தையான இவர் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பிரசித்தி பெற்ற ஒரு ஹாஷ்யமான பேச்சாளராக வாழ்ந்துள்ளார்கள். இவர்கள் நான் பிறப்பதற்கு முன் – 1944ம் ஆண்டிற்கு முன் “வபாத்” மரணித்து காத்தான்குடி 06ம் குறிச்சி பிரதான வீதியில் “இரும்புத் தைக்கா” என்று பிரசித்தி பெற்றிருந்த பள்ளிவாயலில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இப்பள்ளிவாயல் மர்ஹூம் இஸ்மாயீல் ஹாஜியார் (லங்கா ஹார்ட்வெயார்) அவர்களால் புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாயலின் தற்போது “ஹவ்ழு” உள்ள இடத்தில் அவர்களின் அடக்கவிடம் இருந்தது. இதை நானும் அறிவேன். காத்தான்குடியில் தற்போது 100 வயதைக் கடந்தவர்கள் இருந்தால் அவர்களும் அறிவார்கள்.
இஸ்மாயீல் ஹாஜியார் பள்ளிவாயல் கட்டிடத்திற்கு படம் எடுத்த – வரைந்த போது அலி ஆலிம் அவர்களின் அடக்கவிடத்தின் மேல் “ஹவ்ழு” சுவர் அமைந்ததால் தலைவர் இஸ்மாயீல் ஹாஜியார் அவர்கள் என் தந்தை உயிரோடிருந்த காலத்தில் அவர்களை நேரில் கண்டு விபரத்தைக் கூறி ஆலோசனை கேட்ட போது, என் தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் அவர்கள், “என் தகப்பனார் முஹம்மத் அலீ அவர்கள் தற்போது அங்கு இல்லை. பள்ளிவாயல் கட்டப் போவதை அறிந்து அவர்கள் வேறோர் இடத்துக்கு மாறிவிட்டார்கள்” என்று கூறினார்களாம். இவ்விபரத்தை இஸ்மாயீல் ஹாஜியார் அவர்கள்தான் என்னிடம் கூறியவர்களாவர்.
எனது தந்தையின் தந்தை முஹம்மத் அலீ அவர்கள் எங்கு பிறந்தவர்கள் என்பதற்கு ஆவண ரீதியான ஆதாரமில்லை. ஆயினும் இவரை காத்தான்குடி மக்கள் “நாஹூர் ஆலிம் மகன்” என்றும், என் தந்தையை நாஹூர் ஆலிமின் பேரர் என்றும் அழைத்து வருகிறார்கள்.
எனது பாட்டனார் முஹம்மத் அலீ அவர்களின் தந்தை மீரான் ஸாஹிப் ஆலிம் என்பவர்தான் உண்மையில் நாஹூர் ஆலிம். அவர்கள்தான் தற்போது இந்தியா – தமிழ் நாட்டிலுள்ள நாஹூர் வாசியாவார்கள். இவரின் – மீரான் ஸாஹிப் ஆலிம் அவர்களின் வரலாறு கிடைக்கவில்லை. எனினும் இவர் குறித்த நாஹூர் நகரில் பிறந்து அங்கேயே வாழ்ந்தவர் என்று அறிய முடிகிறது. இதனால்தான் அவர் மீரான் ஸாஹிபு என்று பெயர் வைக்கப்பட்டிருந்தார் போலும். ஏனெனில் நாஹூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்களுக்கு மீரான் ஸாஹிபு என்று ஒரு பெயர் இருந்ததற்கு ஆதாரம் உண்டு.
எனது நாலாவது பாட்டனார் மீரான் ஸாஹிபு அவர்களின் தந்தை “அல்லாஹ் பக்ஷ்” என்ற பெயர் உள்ளவராக இருந்துள்ளார். இவர் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர் என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
மேற்கண்ட இவ் விபரங்கள் மூலம் எனது பரம்பரை துருக்கி நாட்டைச் சென்றடைகிறது என்பதை அறிய முடிகிறது. “அல்லாஹ் பக்ஷ்” الله بخش என்றால் “அல்லாஹ் பிச்சை” என்று பொருள் வரும். “பக்ஷ்” என்ற சொல் பாரசீக மொழியை சேர்ந்ததாகும். காத்தான்குடியில் இப் பெயரில் பலர் வாழ்ந்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடற்குரியதாகும்.
மேற்கண்ட பரம்பரை வரலாறுகள் மூலம் எனக்கும், நாஹூர் நகருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உண்டு என்ற உண்மை விளங்கப்படுகிறது.
குறிப்பு: எனது தந்தையின் தந்தை முஹம்மத் அலீ அவர்கள் மன்னார் எருக்கலம்பிட்டி, மருதமுனை, காத்தான்குடி முதலான ஊர்களில் திருமணம் செய்தவர்கள் என்பதும், அவர்களின் வழித்தோன்றல்கள் இப்போதும் குறித்த ஊர்களில் இருப்பதாகவும் அறிய முடிகிறது.