றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 46வது வருட புனித ஸஹீஹுல் புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 20.01.2023 வெள்ளிக்கிழமை அன்று திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகியது.தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் இம்மஜ்லிஸ் 18.02.2023 சனிக்கிழமை அன்று நிறைவு செய்யப்படவிருக்கின்றது.
இந்நிகழ்வுகளில் முஹிப்பீன்கள் அனைவரும் கலந்து அருள்பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.