அல் ஆரிப்பில்லாஹ், ஸூபிஸ வரலாற்றின் சரித்திர நாயகன், அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்கள் தமது 79வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2023 ஞாயிற்றுக்கிமை அன்று அன்னாரின் ”நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை“ நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து புனித காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் ஹுப்புன் நஸீதா குழுவினால் கவ்வாலி வாழ்த்துப்பாடலும், அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களினால் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களுக்குப் பல வருடங்கள் பணி புரிந்து, அவர்களிடம் மார்க்க ஞானங்களைக் கற்று, அல்ஜாமிஅதுர் றப்பானிய்யாவின் ஆசானாயிருந்து, அதிபராக இலங்கும் காதிரிய்யா திருச் சபையின் தலைவரும், ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் முதலாவது ”கலீபா“வுமாகிய சங்கைக்குரிய மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள், எமது பள்ளிவாயலில் நடைபெற்று வரும் அனைத்து வலீமாரின் நிகழ்வுகளையும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி செவ்வனே நடாத்தி வருவதையிட்டு அன்னாருக்கு “ஆஷிகுல் ஆரிபீன்” – (இறைஞானிகளின் காதலர்) என்று ஷெய்குனா அன்னவர்களால் பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. Hons. அவர்களும், ஜனாப் MI. ஜெம்ஸித் (CompTIA A+) அவர்களும் இணைந்து எழுதிய “அத்துர்ருல் அஃலா” – (உயரிய முத்துக்கள்) எனும் நூல் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இறுதியாக ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடனும், நீடிய ஆயுளுடனும் நலமாக வாழ விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்று, இந்நிகழ்வுக்காக வருகை தந்திருந்த சுமார் 3000த்திற்கும் அதிகமான மக்களுக்கு அருள் அன்னதானம் வழங்கப்பட்டு, இனிதே ஸலாவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.