தொடர் 03
مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللهَ
மனிதர்களுக்கு நன்றி செய்யாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செய்யாதவனாவான்!
அதி சங்கைக்கும், மரியாதைக்குமுரிய குத்புஸ்ஸமான் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அவர்களின் திருப் பேரர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
எல்லாமாயுள்ள ஏகன் அல்லாஹ்வின் நல்லருளாலும், கண்மணி நாயகம், கருணைக் கடல் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “றஹ்மத்”தாலும், காரணக்கடல் குத்புல் மஜீத் நாஹூரீ நாயகம் அவர்களின் “கறாமத்”தாலும் நானும், என்னுடன் வந்தவர்களிற் சிலரும் நாட்டுக்கு வந்து விட்டோம். அறபாத் ஹாஜியும், அவரின் மனைவியும் அஜ்மீர் ஷரீப் சென்றுள்ளார்கள். 21ம் திகதி நாட்டுக்கு வருவார்கள். தொடர்பு கொள்ள விரும்பினால் கீழ் தரப்பட்டுள்ள இலக்கத்தோடு தொடர்பு கொள்ள முடியும்.
கம்பம் நகருக்கு நான் ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை நான் கூறாமலேயே புரிந்து கொண்ட நீங்கள் இப்பாவியைப் பார்ப்பதற்காக பல கிலோமீற்றர் தூரம் வந்து பார்த்தது மட்டுமன்றி அப்பாவின் அருட் போர்வையால் என்னைப் போர்த்தி எனக்காக “துஆ” செய்தது உங்களின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாகும். فَمَنْ يُشَابِهْ أَبَهُ فَمَا ظَلَمَ
உங்களைக் கொண்டு நானும், என்னைக் கொண்டு நீங்களும் “ஸஆதத்” பெற அல்லாஹ் அருள் செய்வானாக!
நீங்கள் உங்களின் அப்பா அம்பா நாயகம் அவர்களை தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி அல்லாஹ் என்னைப் பொருந்திக் கொள்வதற்கு “துஆ” செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
காதிமுல் கவ்மி, மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
11.01.2023
0094 75 75 76 760