Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ நான் உங்கள் போன்ற மனிதனே!

إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ நான் உங்கள் போன்ற மனிதனே!

தொடர் – 1

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அன்பிற்குரிய முரீதீன்களே!
 
என்னை நேசிக்கும் அன்பர்களே!
 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
 
காத்தான்குடியில் என்னிடம் ஞான ஒப்பந்தம் செய்த ஆண்கள் 1783 பேர்களும், பெண்கள் 2234 பேர்களும் உள்ளீர்கள். நீங்கள் அனைவரும் “போர்ம்” நிரப்பி உங்களின் விருப்பத்தின்படியே என்னிடம் “பைஅத்” பெற்றுள்ளீர்கள். உங்களில் எவரையும் நான் வற்புறுத்தி “பைஅத்” தரவில்லை.
 
இதேபோல் என்னிடம் நமது இலங்கை நாட்டின் பல ஊர்களைச் சேர்ந்த பல ஆண்களும், குறைந்தளவான பெண்களும் “பைஅத்” செய்துள்ளார்கள். இதேபோல் இந்தியா தமிழ் நாட்டிலும், கேரளா மாநிலத்திலும் பலர் “பைஅத்” செய்துள்ளார்கள். ஆயினும் இங்கு பெண்களில் எவரும் “பைஅத்” பெறவில்லை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments