தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அறபு மொழியில் பல்லிக்கு وَزَغَةٌ என்றும், سَامْ أَبْرَصْ என்றும் சொல்லப்படும். முந்தினது சிறியது. பிந்தினது பெரியது.
روى البخاري ومسلم والنسأي وابن ماجه عن شريك عن عائشة رضي الله عنها أنّها اِسْتَأْمَرَتِ النَّبِيَّ فى قَتْلِ الوَزْغَانِ فأمرها بذلك،
அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெருமானார் அவர்களிடம் பல்லிகளைக் கொல்வது தொடர்பாக ஆலோசனை கேட்ட போது ஆம், கொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜஹ், அறிவிப்பு: ஆயிஷா நாயகி.
மேற்கண்ட இந்த நபீ மொழி மூலம் பல்லியைக் கொல்வது ஆகும். கொல்வதால் குற்றமில்லை என்ற உண்மை தெளிவாகிறது.
وفى الصحيحين أنّ النّبيّ صلى الله عليه وسلّم أمر بقتل الوزغ وسمّاه فُويسقا، وقال كان ينفخ النّار على إبراهيم عليه الصلاة والسلام، وكذلك رواه الإمام أحمد فى مسنده،
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பல்லியைக் கொல்லுமாறு பணித்தார்கள். அதற்கு “புவைஸிக்” என்றும் பெயர் சொன்னார்கள். فُوَيْسِقْ என்ற சொல் اَلْفَاسِقَةُ என்ற சொல்லின் تَصْغِيْرْ அமைப்பாகும். இதற்கு சரியான பொருள் கெட்டது என்பதேயாகும். பெருமானார் அவர்கள் பல்லியைக் கொல்ல வேண்டும் என்று சொன்னதோடு அது கெட்டது என்றும் சொல்லியுள்ளார்கள். இன்னும் பல்லியானது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நும்றூத் என்ற சர்வாதிகார அரசன் நெருப்புக் குழியில் எறிந்த நேரம் உயிரினங்களில் பல்லி மட்டும் அந்த நெருப்பை ஊதி நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டது என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்
وفى الحديث الصحيح من رواية أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، لِدُونِ الْأُولَى، وَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، لِدُونِ الثَّانِيَةِ»
ِ ஒருவன் பல்லியை ஒரே அடியில் அடித்துக் கொன்றால் அவனுக்கு இன்னின்ன நன்மையுண்டு என்றும், இரண்டாவதடியில் கொன்றால் அவனுக்கு இன்னின்ன நன்மையுண்டு என்றும், மூன்றாவதடியில் கொன்றால் அவனுக்கு இன்னின்ன நன்மையுண்டு என்றும் கூறினார்கள்.
இரண்டாவதடியில் கொல்பவனுக்கு முதலாம் அடியில் கொல்பவனுக்கு கிடைக்கின்ற நன்மையை விடக் குறைவான நன்மையும், மூன்றாவதடியில் கொல்பவனுக்கு இரண்டாம் அடியில் கொல்பவனுக்கு கிடைக்கின்ற நன்மையை விடக் குறைவான நன்மையும் கிடைக்கும் என்றும் அருளினார்கள்.
ஸஹீஹான நபீ மொழி, அறிவிப்பு அபூ ஹுறைறா
وأيضا أنّ من قتلها فى الأولى فله مأة حسنةٍ وفى الثانية دُون ذلك وفى الثالثة دون ذلك،
முதலாவது அடியில் கொன்றவனுக்கு நூறு நன்மை என்றும், இரண்டாவது அடியில் கொன்றவனுக்கு அதை விடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவனுக்கு அதை விடக் குறைந்த நன்மையும் உண்டு என்றும் ஹதீது வந்துள்ளது.
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتُلُوا الْوَزَغَ، وَلَوْ فِي جَوْفِ الْكَعْبَةِ»
“கஃபா”வின் உட் பகுதியில் பல்லிகள் இருந்தாலும் அவற்றைக் கொல்லுங்கள் என்றும் ஹதீது வந்துள்ளது. இது தபறானீ நூலில் உள்ளது. எனினும் இது பலமற்ற நபீ மொழியாகும்.
وفى حديث عائشة رضي الله عنها لمّا اُحرِقَ بَيْتُ المَقْدِسِ كانتِ الأوزاغُ تنفخُهُ،
ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த ஹதீதில் “பைதுல் மக்திஸ்” எரிக்கப்பட்ட போது பல்லிகள் அதை ஊதிக் கொண்டிருந்தன என்று வந்துள்ளது.
وفى سنن ابن ماجة عن عائشة رضي الله عنها، أنّه كان فى بيتِها رُمْحٌ موضوعٌ فَقِيْلَ لها ما تَصْنَعِيْنَ بهذا؟ فقالت أقتُلُ به الوزغَ، فإنّ النّبيّ صلّى الله عليه وسلّم أخبرَنَا أنّ إبراهيم عليه الصّلاة والسّلام لمّا اُلقِي فى النّار لم يكن فى الأرض دابَّةٌ إلّا طفِئَتْ عنه النارَ غير الوَزَغِ، فإنّه كان ينفخ عليه النّارَ فأمر صلّى الله عليه وسلّم بقتلِه،
அன்னை ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் ஒரு ஈட்டி இருந்தது. அவர்களிடம் இதனால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்ட போது அதனால் பல்லிகளை அடித்துக் கொல்வோம் என்று கூறினார்கள். ஏனெனில் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குழியில் எறியப்பட்ட போது உலகிலிருந்த அனைத்து ஊர்வன – உயிருள்ளவையும் அந்த நெருப்பை அணைத்தன. ஆயினும் பல்லி மட்டும் அணைக்கவில்லை என்று நபீ பெருமானார் எங்களிடம் சொல்லியுள்ளார்கள் என்று அன்னை ஆயிஷா நாயகி கூறினார்கள்.
ஸுனன் இப்னு மாஜஹ், அறிவிப்பு: ஆயிஷா நாயகி
முஸ்னத் அஹ்மத், இப்னுன்னஜ்ஜார்
مَنْ قَتَلَ وَزَغَةً مَحَا اللهُ عَنْهُ سَبْعَ خَطِيْئَاتٍ،
ஒருவன் ஓர் பல்லியைக் கொன்றானாயின் அவனின் ஏழு பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியதாக ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த ஹதீது ஒன்று உள்ளது.
(தாரீகு இப்னுன்னஜ்ஜார், அறிவிப்பு: ஆயிஷா நாயகி)
عن ابن عبّاس رضي الله عنهما أنّ النّبيّ صلّى الله عليه وسلّم قال مَنْ قَتَلَ وَزَغَةً فَكَأَنَّمَا قَتَلَ شَيْطَانًا،
எவன் ஒரு பல்லியைக் கொன்றானோ அவன் ஒரு ஷெய்தானை கொன்றவன் போலாவான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
அல்காமில், அறிவிப்பு: இப்னு அப்பாஸ்
روى الحاكم فى كتاب الفتن مِن المُستدرَكِ عن عبد الرحمن بن عوف رضي الله عنه أنّه قال ‘ كان لا يُولَدُ لأحدٍ مولودٌ إلّا اُتِيَ به النّبيُ صلّى الله عليه وسلّم فيدعو له، فاُدخِلَ عليه مروانُ بن الحكم فقال هو الوزَغُ بنُ الوزَغِ المَلعُونُ بنُ الملعونِ، ثمّ قال صحيح الإسناد،
அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். பெருமானார் அவர்களின் காலத்தில் முஸ்லிம்களில் யாருக்காவது குழந்தை பிறந்தால் அப்பிள்ளையை பெருமானாரிடம் கொண்டு வராமல் இருக்கமாட்டார்கள். அவ்வாறு கொண்டுவரப்பட்டால் பெருமானார் அவர்கள் அக்குழந்தைக்காக “துஆ” பிரார்த்தனை செய்வார்கள். ஒரு சமயம் “மர்வான் இப்னுல் ஹகம்” என்பவர் கொண்டு வரப்பட்ட போது அவன் பல்லியின் மகன் பல்லி என்றும், சபிக்கப்பட்டவனின் மகன் சபிக்கப்பட்டவன் என்றும் நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் கூறினார்கள்.
ஹாகிம் அவர்கள் இந்த நபீ மொழி பலமானதென்று கூறியுள்ளார்கள்.
قال يحيى بن معمر لَأَنْ أَقْتُلَ مِأَةَ وَزَغَةٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُعْتِقَ مِأَةَ رَقَبَةٍ، وَإِنَّمَا قَالَ ذَلِكَ لِأَنَّهَا دَابَّةُ سُوْءٍ، زَعَمُوْا أَنَّهَا تَسْقى مِنَ الْحَيَّةِ وَتَمُجُّ فِى الْإِنَاءِ،
யஹ்யப்னு மஃமர் பின்வருமாறு கூறியுள்ளார்கள். நூறு பல்லிகளை நான் கொல்வது நூறு அடிமைகளை உரிமையிடுவதை விடச் சிறந்ததாகும் என்று. ஏனெனில் இது கெட்டதாகும்.
பல்லிக்கு செவிப் புலன் இல்லை. இது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நெருப்பை ஊதியதற்கான தண்டனையாகும். பல்லி வெண்குஷ்ட நோயால் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டதாயிருக்கும். ஒருவன் ஒரு சபையில் பேசிக் கொண்டிருக்கும் வேளை பல்லி “சக் சக்” என்று சத்தமிட்டால் – பல்லி தட்டினால் அவர் பேசிய விடயம் உண்மை என்பதற்கு அது ஆதாரம் என்று பலர் நம்புகிறார்கள். இது மூட நம்பிக்கையாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந் நம்பிக்கை அதிகமான மக்களிடம் இருந்தது. ஆயினும் தற்போது அது குறைந்து போயிற்று. எனினும் சொல்லுக்குச் செவி மடுக்காத பாட்டிமாரிடம் இப்போதும் அந்த நம்பிக்கை உண்டு.
தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே!
நீங்கள் ஸுன்னிஸமும், வஹ்ஹாபிஸமும் கலந்த ஓர் அமைப்பாகும். உங்களை “ஸுன்னீ”கள் “முகல்லித் வஹ்ஹாபீ”கள் என்று கூறுகிறார்கள். இதற்கான காரணம் நீங்கள் “ஷாபிஈ மத்ஹப்” சட்டங்களை உங்களுடைய தப்லீக் மத்ரசாக்களில் கற்றுக் கொடுக்கிறீர்கள். தொழுகையிலும் “ஷாபிஈ மத்ஹப்” சட்டப்படி தொழுகிறீர்கள். வஹ்ஹாபீகள் போல் “மத்ஹப்” தேவையில்லை என்று நீங்கள் சொன்னதாக, சொல்வதாக நான் அறியவில்லை. நீங்கள் உங்களின் இடங்களிலாவது மௌலித் ஓதுவதாகவோ, வலீமார் பேரில் கந்தூரி கொடுப்பதாகவோ, வலீமார்களைக் கொண்டு “வஸீலா” தேடுவதாகவோ, வலீமாரின் தர்ஹாக்கள் சென்று “சியாறத்” செய்ததாகவோ நான் காணவுமில்லை, அறியவுமில்லை. இதனால்தான் நீங்கள் பலரால் “முகல்லித் வஹ்ஹாபீ” என்று அழைக்கப்படுகிறீர்கள். உங்களின் நடவடிக்கைகளில் வஹ்ஹாபிஸ சாயல் தென்படுவதாக பலர் குற்றம் சொல்கிறார்கள். ஆகையால் பலருக்கு உங்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக நீங்கள் ஒன்றோ நூறு வீதமும் ஸுன்னீகளாக இருந்து கொள்ளுங்கள். அல்லது நூறு வீதமும் வஹ்ஹாபீகளாக இருந்து கொள்ளுங்கள்.
உங்களின் நோக்கம் அதிக நன்மைகளை அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். உங்களின் நோக்கம் பாராட்டப்பட வேண்டியதே. இதற்காக நாலு மாதம் என்றும், நாற்பது நாட்கள் என்றும் வெளியூர்களுக்குச் செல்கிறீர்கள். இவ்வாறு செல்வபவர்களில் பலருக்கு பல அசௌகரியங்கள் உள்ளன. பலர் கடன் பெற்றுக் கொண்டும் உங்களுடன் வருகிறார்கள். இத்தகைய சிரமம் எதுவுமின்றி அதிக நன்மையை அள்ளிக் கொள்வதற்கு நான் ஓர் ஆலோசனை கூறுகின்றேன்.
பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்பதும், ஒட்டடைகளை அகற்ற வேண்டும் என்பதும் வீடுகள் அசுத்தமின்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதும் ஹதீதுகள் கொண்டு தரிபடுத்தப்பட்ட விடயங்களாதலால் நீங்கள் குழுக் குழுவாக இணைந்து வீடுகள், கடைகள், பொது இடங்கள் போன்றவற்றில் உள்ள பல்லிகளைக் கொன்றும், ஓட்டடைகளை அகற்றியும் சுத்தமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு ஆவன செய்தீர்களாயின் சிறப்பாக இருக்கும்.
அல்ஹம்து லில்லாஹ்!
முற்றும்.