இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 08.04.2023 (சனிக்கிழமை பி.ப ஞாயிறு இரவு) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றமும், பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் ஸியாறத் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.
இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.