தொடர்: 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“மதல்” مَثَلْ என்பதும், “மித்ல்” مِثْلْ என்பதும் இரண்டும் ஒன்றல்ல. அது வேறு, இது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தாமும் குழப்பத்திலாகி, மற்றவர்களையும் குழப்பத்திலாக்கிவிடுகிறார்கள்.
எனவே, இவ்விரண்டுக்குமுள்ள வேறுபாட்டை ஆதாரங்களோடு விளக்கி வைப்பதற்காகவே இத்தலைப்பைத் தெரிவு செய்தேன்.
இது ஒரு முக்கியமான தலைப்பு. நான் எவரையும் குறை சொல்லவுமில்லை. குறை சொல்லுமளவு நான் தகுதியானவனுமில்லை. எனினும் உலமாஉகளின் அறபுத் தராதரங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அனைவரும் கல்வி, அறபு மொழி தராதரத்தில் ஒன்று போன்றவர்களல்ல.
அவர்களில் அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கின்ற “உஸ்தாத்”மார்களையும், அறபு மொழியோடும், அறபு நூல்களோடும் தொடர்புள்ள உலமாஉகளையும் தவிர ஏனைய உலமாஉகளில் அநேகர் “ஷரீஆ”வின் அடிப்படையிலும், “தவ்ஹீத்” ஏகத்துவ அடிப்படையிலும், பொதுவாக “தஸவ்வுப்” ஸூபிஸ அடிப்படையிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளார்கள்.
எனவே, அறிந்த உலமாஉகள் மேலும் அறிந்து கொள்வதற்காகவும், அறவே அறியாதவர்கள் ஓரளவேனும் அறிந்து கொள்வதற்காகவும் நான் அறிந்தவற்றை பேசியும், எழுதியும் வருகிறேன்.
“மதல், மித்ல்” مَثَلْ , مِثْلْ
முதலில் இது தொடர்பாக இமாம்கள், குறிப்பாக ஞான வள்ளல் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், அஷ்ஷெய்கு முஹம்மத் அமீன் அல்குர்தீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் அறபு மொழியில் எழுதியுள்ள விளக்கத்தை இங்கு தமிழில் தருகிறேன்.
قال الشيخ أبو طاهر رحمه الله فعلم أنّه لا يلزم من كون الشيئ لا صورة له أن لا يُرى في صورة على ما قرّرناه ، ألا ترى أنّ كثيرا من الأشياء التي لا أشخاص لها ولا صورة تُرى في المنام بأمثلة تناسبها بأدنى معنى ولا يوجب التشبيه ولا التمثيل، وذلك كالمعاني المجرّدة مثل الإيمان والكفر والشـرف والقرآن والهدى والضّلالة والحياة الدنيا ونحو ذلك،
وأمّا الإيمان فكقول النبيّ صلّى الله عليه وسلّم رأيت النّاس في المنام يُعرضون، منهم من قميصه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقَيْهِ، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصه ، فقالوا يا رسول الله ما أوّلتَ ذلك؟ قال الإيمان، فالإيمان لا شكل له ولا صورة، ولكن جُعل القميصُ له مثالا فرُؤي بواسطته، وكذلك الكفر يُمثّل في المنام بالظّلمة، وكذلك الشـرف والعِزُّ يُرى بواسطة صورة الفرس، وكذلك يُمثَّل القرآن باللّؤلؤ، ويمثّل الهدى بالنّور، والضّلالةُ بالعَمَى،
ولا شكَّ أنَّ بين هذه الأشياء مُضاهاةً لِتِلْكَ المعاني المرئيَّةِ، وتَجَسُّدُ المعاني لا ينكره العلماءُ بالله تعالى، قال: وموضِعُ الغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كالمِثْلِ بكسـر الميم وسُكون المُثَلَّثَةِ ،وذلك خطأ فاحشٌ، فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ،
قال تعالى’إنّما مثل الحياة الدنيا كماء أنزلناه من السّماء ‘ والحياةُ لا صورةَ لها ولا شكلَ، والماء ذُو شكلٍ وصورةٍ، وقد مثَّلَ الله تعالى به الحياةَ، وكذلك قولُه تعالى ‘مثلُ نوره كمشكاةٍ فيها مصباحٌ ‘ وغيرُ ذلك،
فَعُلِمَ أَنَّهُ لَا مِثْلَ للهِ تَعَالَى، وَلَكِنْ لَهُ الْمَثَلُ الْأَعْلَى فِى السَّمَوَاتِ وَالْأَرْضِ، قَالَ: وَمِنْ هُنَا جَوَّزَ الْأَكْثَرُوْنَ مِنَ السَّلَفِ الصَّالِحِ جَوَازَ تَجَلِّيْهِ تَعَالَى لِعَبْدِهِ فِى الْمَنَامِ كَمَا مَرَّ فِى الْأَمْثَالِ،
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்கண்ட அறபு வசனங்களுக்கான விளக்கத்தை தமிழில் எழுதுகிறேன்.
தமிழாக்கம்:
உருவம் இல்லாத ஒன்றை கனவுலகில் உருவத்தில் காண முடியும். காண முடியாதென்பது பிழையாகும். ஏனெனில் சடமும், உருவமும் இல்லாத பல வஸ்துக்களை கனவுலகில் அவற்றுக்குப் பொருத்தமான உதாரணங்கள் மூலம் காண முடியும். அல்லாஹ்வையும் காண முடியும். இதனால் “தஷ்பீஹ்” இறைவனை இன்னொன்றுக்கு ஒப்பாக்குதல் என்ற கருத்து வந்தவிடாது.
சடமும், உருவமும் இல்லாத, கனவுலகில் சடமுள்ளதாக காணப்படுகின்றவை اَلْمعَانِي الْمُجَرَّدَةُ சடமும், உருவமும் இல்லாத வெறும் கருத்துக்கள் போன்று.
உதாரணமாக “ஈமான்” விசுவாசம், “குப்ர்” நிராகரிப்பு – இறைமறுப்பு, சிறப்பு, திருக்குர்ஆன் – அல்லாஹ்வின் பேச்சு, நேர்வழி, வழிகேடு, உலக வாழ்வு என்பன போன்று. மேற்கண்ட இவற்றுக்கு சடமுமில்லை, உருவமுமில்லை.
ஆயினும் பின்வரும் நபீ மொழியை ஆய்வுக்கு எடுத்தால் உருவமில்லாத “ஈமான்” நம்பிக்கை – விசுவாசம் என்பது கனவுலகில் ஓர் உருவத்தில் தோற்றும் என்பது தெளிவாகும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.
رأيت الناس فى المنام يعرضون، منهم من قميصُه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقيه، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصَه، فقالوا يا رسول الله! ما أوّلت ذلك؟ قال الإيمانُ،
ஹதீதின் மொழியாக்கம்:
(எனது கனவில் சில மனிதர்களை நான் கண்டேன். அவர்களிற் சிலர் அணிந்திருந்த “கமீஸ்” சட்டை அவர்களின் கரண்டைக் கால் வரை நீளமாயிருந்தது. இன்னும் சிலர் அணிந்திருந்த சட்டை அவர்களின் அரைக் கனுக்கால் வரை இருந்தது. நபீ தோழரும், அவர்களின் கலீபாவுமான உமர் இப்னுல் கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் சட்டையை தரையைத் தொடுமளவு இழுத்துக் கொண்டு வந்தார்கள்) இவ்வாறு கனவு கண்டேன் என்றார்கள். அப்போது தோழர்கள், அல்லாஹ்வின் திருத்தூதரே! இக்கனவின் கருத்து என்ன? என்று கேட்டார்கள். அது “ஈமான்” விசுவாசம் – நம்பிக்கை என்றார்கள்.
“ஈமான்” நம்பிக்கை என்பது சடப் பொருளில்லை. அதற்கு உருவமும் இல்லை. இத்தகைய “ஈமான்” நம்பிக்கை கனவுலகில் சட்டை உருவத்தில் காட்டப்பட்டுள்ளது. அதாவது சடம், உருவம் இல்லாத ஒன்று சட்டை உருவத்தில் கனவுலகில் தோற்றியுள்ளது. இவ்வாறுதான் அல்லாஹ்வுமாவான்.
“குப்ர்” இறை நிராகரிப்பு என்பதும் இவ்வாறுதான். இதற்கும் சடமுமில்லை, உருவமுமில்லை. எனினும் இது கனவுலகில் இருள் தோற்றத்தில் தென்படும். இவ்வாறுதான் அல்லாஹ்வைக் காண்பதுமாகும்.
இவ்வாறுதான் சிறப்பு, கௌரவம் என்பவையுமாகும். இவ்விரண்டிற்கும் சடமுமில்லை, உருவமுமில்லை. எனினும் இவ்விரண்டும் கனவுலகில் குதிரையின் உருவத்தில் தோற்றும். இவ்வாறுதான் அல்லாஹ்வைக் காண்பதுமாகும்.
இவ்வாறுதான் திருக்குர்ஆனை முத்தின் உருவத்திலும், நேர்வழியை ஒளி உருவத்திலும், வழிகேடு குருடு உருவத்திலும் கனவுலகில் தோன்றும். திருக்குர்ஆன் என்றால் அல்லாஹ்வின் கலாம் – அவனின் பேச்சும், நேர்வழியும், வழிகேடும் சடமற்றவையும், உருவமற்றவையுமாகும். எனினும் இவை மேற்கண்ட உருவத்தில் கனவுலகில் தோற்றும். இவ்வாறுதான் அல்லாஹ்வும் ஆவான்.
மேலே கூறிய விடயங்களில் கனவுலகில் ஷேட்டின் உருவத்தில் தோற்றிய “ஈமான்” விசுவாசத்திற்கும், இருளின் உருவத்தில் தோற்றிய “குப்ர்” இறை நிராகரிப்புக்கும், குதிரையின் உருவத்தில் தோற்றிய சிறப்பு, கௌரவம் என்பதற்கும், முத்தின் உருவத்தில் தோற்றிய திருக்குர்ஆனுக்கும், ஒளியின் உருவத்தில் தோற்றிய நேர்வழிக்கும், குருடு உருவத்தில் தோற்றிய “ழலாலத்” வழிகேட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் பொருத்தமிருப்பதினாற்தான் அவ்வாறு தோற்றியுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
تَجَسُّدُ الْمَعَانِيْ لَا يُنْكِرُهُ الْعُلَمَاءُ بِاللهِ،
வெறும் கருத்துக்கள் சடத்தில் தோற்றுவதையும், உருவத்தில் தோற்றுவதையும் இறைஞானிகள் ஒரு போதும் எதிர்க்கவில்லை.
وَمَوْضِعُ الْغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رُؤْيَةَ اللهِ فى صورةٍ ظَنُّهُ أَنَّ الْمَثَلَ بِفَتْحَتَيْنِ كَالْمِثْلِ بِكَسْرِ الْمِيْمِ وَسُكُوْنِ الْمُثَلَّثَةِ وَذلك خَطَأٌ فَاحِشٌ،
அல்லாஹ்வை கனவுலகில் ஏதோ ஒரு சடத்திலும், ஏதோ உருவத்திலும் காண முடியாதென்று கூறுபவன் செய்த தவறு என்னவெனில் அவன் “மதல் – மித்ல்” مِثْلْ – مَثَلْ இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை அறியாமற் போனதேயாகும். அவன் அவ்விரண்டும் ஒன்றுதான் என்று விளங்கிக் கொண்டதேயாகும். இதன் விபரம் தொடர் 02ல் வரும்.
தொடரும்…
குறிப்பு: தொடர் ஒன்றை வாசித்தவர்கள் தொடர் இரண்டையும் தவறாமல் வாசிக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
Pages: 1 2