தொடர்: 02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“மதல்” என்றால் உதாரணம். “மித்ல்” என்றால் நிகர். நிகர் என்ற பொருளுக்கு كُفْوٌ “குப்வுன்” என்ற சொல்லும் பயன்படுத்தப்படும்.
مَثَلْ
உதாரணம். مِثْلْ நிகர்.
فإن المِثْلَ بالسُّكون يستدعِى المساواةَ فى جميع الصِّفات كالسّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر مِن جميع الوجوه فى كلّ حال،
مِثْلْ
என்ற சொல்லில் இரண்டாவது எழுத்துக்கு “ஸுகூன்” வைத்தால் “மித்ல்” என்று வரும். இச் சொல்லுக்கே நிகர் என்று பொருள் சொல்ல வேண்டும். ஒன்றுக்கு இன்னொன்று நிகரானதென்று சொல்வதாயின் இரண்டும் எதிலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒன்றுபோல் இருக்க வேண்டும். இதற்கு كَالسَّوَادَيْنِ وَالْجَوْهَرَيْنِ என்று இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள் உதாரணம் சொல்லியுள்ளார்கள். இவ் இரு உதாரணங்களும் சரியானவையாக இருந்தாலும் கூட இவ்விரு உதாரணங்களும் சரியான தெளிவைத் தராதாகையால் மிக எளிதாக விளங்கும் பாணியில் நான் இரு உதாரணங்கள் சொல்கிறேன். ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரு தங்க மோதிரங்கள் போன்றும், இரு “கோல்ட் பிஸ்கட்” தங்கக் கட்டிகள் போன்றுமாகும். ஒரே பெறுமதியான இரண்டு டொலர் தாள்கள் போன்றுமாகும்.
ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு மோதிரங்களும் எல்லா அம்சங்களிலும் ஒன்று போலவே இருக்கும். எந்த ஒரு சிறிய மாற்றம் கூட இருக்காது. இது போன்றதே ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு “கோல்ட் பிஸ்கட்” தங்கக் கட்டிகளும், ஒரே பெறுமதியுடைய இரண்டு டொலர் தாள்களுமாகும். எந்த ஓர் அம்சத்திலும் எந்த ஓர் மாற்றமும் இருக்காது. இவ்வாறிருந்தால் மட்டுமே இது அதற்கு நிகர், அது இதற்கு நிகர் என்று சொல்ல முடியும். இவ்வாறிருந்தால் மட்டும்தான் مِثْلْ – “மித்ல்” என்ற சொல்லை பாவிக்க முடியும்.
ஆனால் “மதல்” مَثَلْ என்ற சொல் இதற்கு நேர் மாற்றமானது. இது அது போன்றதென்றோ, அது இது போன்றதென்றோ உதாரணம் சொல்வதற்கு மேற்கண்ட நிபந்தனை எதுவும் தேவையில்லை. ஏதோ ஒரு வகையில் – ஏதாவது ஓர் அம்சத்தில் மட்டும் இது அது போன்றும், அது இது போன்றும் இருந்தாற் போதும். எல்லா அம்சங்களிலும் இருக்கத் தேவையில்லை. உதாரணமாக مُنَاسٌ مَثَلُ أَسَدٍ முனாஸ் என்பவன் சிங்கம் போன்றவன் என்பது போன்று. இது உதாரணமேயன்றி நிகர் அல்ல. சிங்கத்திலுள்ள அனைத்து அம்சங்களும் முனாஸ் என்பவனில் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. சிங்கத்தின் தன்மைகளில் ஒன்றான வீரம் மட்டும் இருந்தாலும் உதாரணம் சொல்வதற்கு அது மட்டும் போதும். நிகர் என்ற பொருளில் مُنَاسْ مِثْلُ أَسَدٍ முனாஸ் சிங்கம் போன்றவன் என்று சொல்ல முடியாது. ஆயினும் உதாரணம் என்ற பொருளில் مُنَاسٌ مَثَلُ أَسَدٍ என்று சொல்ல முடியும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ
இவ்வுலக வாழ்வுக்கு உதாரணம் நாம் வானிலிருந்து இறக்கி வைத்த நீரைப் போன்றது என்று உலக வாழ்வுக்கு மழை நீரை உதாரணமாகச் சொல்லியுள்ளான். திரு வசனத்தில் வந்துள்ள مَثَلْ என்ற சொல் உதாரணம் என்ற பொருளுக்கு வந்துள்ளதேயன்றி “மித்ல்” நிகர் என்ற பொருளுக்கு வரவில்லை.
وَالْحَيَاةُ لا صورة لها ولا شَكْلَ، والماءُ ذُو شَكْلٍ وصورةٍ، وقد مثَّلَ الله تعالى به الحياةَ،
உலக வாழ்வு என்பதற்கு உருவமோ, தோற்றமோ இல்லை. ஆயினும் நீருக்கு உருவமும் உண்டு, தோற்றமும் உண்டு. அல்லாஹ் இத்திரு வசனத்தில் உருவமில்லாத ஒன்றை உருவமுள்ள ஒன்றுக்கு مَثَلْ – “மதல்” உதாரணமாகக் கூறியுள்ளான்.
இவ்வாறுதான்
مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ
அவனின் ஒளிக்கு உதாரணம் ஒரு “மிஷ்காத்” மாடம் போன்று. அதில் விளக்கு உண்டு என்று உருவமோ, தோற்றமோ இல்லாத இறைவனின் ஒளிக்கு உருவமும், தோற்றமும் உள்ள ஒன்றை உதாரணமாகக் கூறியுள்ளான்.
فَعُلِمَ أَنَّهُ لَا مِثْلَ للهِ تَعَالَى، وَلَكِنْ لَهُ الْمَثَلُ الْأَعْلَى فِى السَّمَوَاتِ وَالْأَرْضِ
மேற்கண்ட உதாரணங்கள் மூலம் அல்லாஹ்வுக்கு مِثْلْ – “மித்ல்” நிகர் இல்லை என்பதும், எனினும் அவனுக்கு مَثَلْ – உதாரணம் உண்டு என்பதும் தெளிவாகிவிட்டது.
மேற்கண்ட விளக்கத்தின்படியே நிகரின்றி உதாரணம் என்ற அடிப்படையில் முன்னோர்களில் அதிகமானோர் அல்லாஹ்வை கனவில் ஏதேனும் ஓர் உருவத்தில் காண முடியுமென்று கூறியுள்ளார்கள்.
قال الشيخ محي الدين ابن عربي قُدّس سـرّه فى الباب الرابع والستّين من الفتوحات المكيّة، اعلم أنّه لا ينبغي لمسلم أن يتوقّف في رؤية الله تعالى في المنام، لأنّه لاشيئ في الأكوان أوسعَ من عالَم الخَيال، وذلك أنّه يحكم بحقيقته على كلّ شيئ وعلى ما ليس بشيئ، ويُصوّر لك العدمَ المحضَ والمُحالَ والواجبَ فضلا عن الممكن، ويجعل الوجود عدما والعدمَ وجودا، ويُريك العلم لبنا والإسلام قُبّة والثباتَ في الدين قيدا، وقال دليلنا فيما قلنا قوله تعالى فأينما تُولّوا فثمّ وجه الله ووجهُ الشيئ حقيقتُه وعينه، فقد صوّر الخيالُ من يستحيلُ عليه بالدّليل العقليّ الصورةَ والتصوير، فعُلم أنّ ما جاز وقوعُه فى المنام والدّار الآخرةِ جاز وُقوعُه وتعجيلُه لمن شاء فى اليقظة والحياة الدّنيا،
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூல் 64ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(எந்த ஒரு முஸ்லிமும் கனவில் அல்லாஹ்வைக் காணும் விடயத்தில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் “ஆலம்” உலகங்களில் மிக விசாலமான ஆலம் – உலகம் “ஆலமுல் கயால்” عَالَمُ الْخَيَالْ எனப்படும் கனவுலகமேயாகும். அவ் உலகம் ஒவ்வொரு வஸ்துவுக்கும் அதற்குரிய எதார்த்தத்தையும் கொடுக்கும். எதார்த்தம் அல்லாததையும் கொடுக்கும் தன்மையுள்ளது.
அவ் உலகம் அறவே இல்லாத ஒன்றை இருப்பதாகவும், அசாத்தியமான ஒன்றை சாத்தியமானதாகவும் காட்டும். இன்னும் “ஹக்” அல்லாஹ்வையும் காட்டும், படைப்பையும் காட்டும். உள்ளமையை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும் காட்டும். இன்னும் அறிவைப் பாலின் உருவத்திலும், இஸ்லாம் என்பதை ஒரு “குப்பா” “டோம்” உருவத்திலும், மார்க்கத்தில் நிலைபெற்றிருப்பதை கை விலங்கின் உருவத்திலும் காட்டும் தன்மை உள்ளதாகும். கனவு உலகம் மேற்கண்ட தன்மை உள்ளதாக இருப்பதற்கு எங்களின் ஆதாரம் “நீங்கள் எங்கு நோக்கினாலும், எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் “வஜ்ஹ்” முகம் உண்டு” என்ற அல்லாஹ்வின் பேச்சேயாகும். அதாவது திருக்குர்ஆனின் வசனமேயாகும். ஒரு வஸ்தின் முகம் என்பது அவ் வஸ்து தானானதென்பதையே குறிக்கும். وَجْهُ الشَّيْءِ حَقِيْقَتُهُ وَعَيْنُهُ ஒரு வஸ்தின் “வஜ்ஹ்” முகம் என்பது அது அவ் வஸ்து தானானதென்பதையே குறிக்கும். அதற்கு வோறனதென்று காட்டாது. இப்றாஹீமின் முகம் என்பது இப்றாஹீமையே முழுமையாக குறிக்கும். இஸ்மாயீலின் முகம் என்பது அவனையே குறிக்கும்.
“ஆலமுல் கயால்” எனும் கனவுலகம் எவனுக்கு உருவமில்லையோ அவனுக்கு உருவத்தைக் காட்டக் கூடியதாகிவிட்டது. எனவே, கனவிலும், மறுமையிலும் எது நடப்பது சாத்தியம் என்றும், ஆகுமென்றும் உள்ளதோ அது அல்லாஹ் நாடியவர்களுக்கு விழிப்பிலும், உலக வாழ்விலும் கிடைக்கும்.
தொடர் ஒன்றின் தலைப்பிலிருந்து இதுவரை நான் எழுதிய விளக்கமும், விபரமும் பின்வரும் நூலில் இருந்து எடுத்த ஆதாரங்களாகும்.
அல்யவாகீத் வல் ஜவாஹிர், பாகம் 01, பக்கம் 107-108, ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ
கனவில் அல்லாஹ்வைக் காண்பது தொடர்பாக குறித்த அதே நூல் 115ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள விபரங்களை இங்கு எழுதுகிறேன்.
وأما الكام على رؤية الله تعالى فى المنام فقد قدّمناأوّل المبحث بقول المتكلّمين فيها، وها نحن نذكر لك قول الصوفيّة فنقول وبالله التوفيق،
اعلم أنّ الأصل فى صحّة الرؤية ما رواه الطبراني وغيره مرفوعا ‘رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمْرَدَ قَطِطٍ له وفرةٌ من شعر، وفى رجليه نعلان من ذهب، الحديث، قال الحافظ السيوطي رحمه الله وهو حديث صحيح،
قال الشيخ محي الدين ابن عربي فى الباب الأحد وثمانين وثلاثمأة فى الفتوحات المكيّة قد اضطربت عقول العلماء فى معنى هذا الحديث وفى صحّته، فَنَفَاهُ بعضُهم،وأثبته بعضُهم، وتوقّفَ فى معناه وأوّله، ولا يحتاج الأمر إلى تأويل، فإنّه صلّى الله عليه وسلّم إنّما رأى هذه الرؤية فى عالم الخيال، الّذي هو النّوم،
ومن شأن الخيال أنّ النائم يَرى فيه تجرُّدَ المعاني فى الصُّور المحسوسة، وتجسُّدَ ما ليس من شأنه أن يكون جسدًا، لأنّ حضـرته تُعطي ذلك، فما ثَمَّ أوسع من الخيال، قال : ومن حضرته أيضاظهرَ وجودُ المُحال، فإنّك ترى فيه واجب الوجود الّذي لا يقبل الصُّورَ فى صورة ، ويقول لك مُعبّرُ المنام صحيحٌ ما رأيتَ، ولكنّ تأويلها كذا وكذا، فقد قَبِلَ المُحالَ الوجودُ، فى هذه الحضـرة، فإذا كان الخيالُ بهذه القوّةِ من التّحكّم فى الأمور من تجسُّدِ المعاني وجعلِه ما ليس قائما بنفسه وهو مخلوقٌ، فكيف بالخالق؟ وكيف يقول بعضهم إنّ الله تعالى غيرُ قادرٍ على خلق المُحال، وهو يشهد من نفسه قدرة الخيال على المحال، (اليواقيت والجواهر، ص 118، الجزء الأوّل، المؤلّف – الإمام عبد الوهّاب الشعراني)
மேலே எழுதியுள்ள அறபு வசனங்களுக்கான மொழியாக்கம், மற்றும் விளக்கம் عيد الفطر “பித்றா” பெருநாள் கழிந்த பின் எழுதப்படும். إن شاء الله
பெருநாள் நெருங்கிவிட்ட படியால் அன்புத் தொல்லைகளால் எழுத முடியவில்லை. (துன்யா ஹால் விழாங்காய்ப் பால்)
عَنْ أُمِّ الطُّفَيْلِ، امْرَأَةِ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «رَأَيْتُ رَبِّي فِي الْمَنَامِ فِي صُورَةِ شَابٍّ مُوَقَّرٍ فِي خَضِرٍ، عَلَيْهِ نَعْلَانِ مِنْ ذَهَبٍ، وَعَلَى وَجْهِهِ فِرَاشٌ مِنْ ذَهَبٍ» (المعجم الكبير للطبراني)
عَنْ عِكْرِمَةَ قَالَ: سُئِلَ ابْنُ عَبَّاسٍ: هَلْ رَأَى مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ عَزَّ وَجَلَّ؟ قَالَ: «نَعَمْ، رَآهُ فِي صُورَةِ شَابٍّ بَيْنَ شَعَرٍ مِنْ لُؤْلُؤٍ، كَأَنَّ قَدَمَيْهِ فِي خُضْرَةٍ» لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ إِلَّا ابْنُهُ، تَفَرَّدَ بِهِ: إِسْحَاقُ بْنُ الضَّيْفِ ‘ (المعجم الأوسط)
عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ رَبِّي جَعْدًا أَمْرَدَ عَلَيْهِ حُلَّةٌ خَضْرَاءُ» قَالَ: وَأَخْبَرَنَا أَبُو أَحْمَدَ، ثنا ابْنُ أَبِي سُفْيَانَ الْمَوْصِلِيُّ وَابْنُ شَهْرَيَارَ قَالَا: ثنا مُحَمَّدُ بْنُ رِزْقِ اللَّهِ بْنِ مُوسَى، ثنا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ. فَذَكَرَهُ بِإِسْنَادِهِ إِلَّا أَنَّهُ قَالَ: «فِي صُورَةِ شَابٍّ أَمْرَدَ جَعْدٍ» . قَالَ: وَزَادَ عَلِيُّ بْنُ شَهْرَيَارَ: «عَلَيْهِ حُلَّةٌ خَضْرَاءُ» . وَرَوَاهُ النَّضْرُ بْنُ سَلَمَةَ، عَنِ الْأَسْوَدِ بْنِ عَامِرٍ بِإِسْنَادِهِ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهُ فِي صُورَةِ شَابٍّ أَمْرَدَ، دُونَهُ سِتْرٌ مِنْ لُؤْلُؤِ قَدَمَيْهِ ـ أَوْ قَالَ: رِجْلَيْهِ ـ فِي خُضْرَةٍ. (الأسماء والصفات للبيهقي)
தொடரும்…
Pages: 1 2