இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ, அல் ஆலிமுல் அறூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக புனித றமழான் 24ம் இரவான 15.04.2023 (சனி பி.ப ஞாயிறு இரவு) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான 36வது வருட முப்பெரும் நாதாக்களின் முபாறகான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது.தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகிய இம்மஜ்லிஸில் கத்முல் குர்ஆன் நிகழ்வும் முப்பெரு நாதாக்களின் புகழ்பாடும் புனித மௌலித் மஜ்லிஸும் நடைபெற்று இறுதி நிகழ்வாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.