هو عبد الكريم بن إبراهيم بن عبد الكريم، اَلْجِيْلِيْ أو الجِيْلَانِيْ، نسبته إلى جيلان، وهي منطقةٌ فى بلاد فارس، (انظر معجم البلدان (2 (201 – وهو بغداديُّ الأصل، وُلد سنة 767 هـ، وتَنَقَّلَ فى بُلدان كثيرة، كالهند وفارس ومصر وفلسطين والحجاز، ثمّ اتّجه سنة 796 هـ، إلى مدينة زُبَيْد فى اليمن ، فأقام فيها حتّى وفاته سنة 826 هـ ،
أخذ الجيلي التصوّف عن شيخ صوفيّة اليمن اسماعيل الجَبْرَتِيْ وعن مؤلّفاتِ من سبقه من أئمّة الصوفيّة، فَبَرِعَ فى علم القوم حتّى صار من أكبر صوفيّة القرن التاسع الهجري،
وللجيلي نحو ثلاثين مؤلّفا، عامّتُها فى تقرير العقيدة الصوفيّة، منها الإنسان الكامل ، والمناظر الإلهيّة، والقاموس الأعظم، وشرح مشكلات الفتوحات، والوجود المطلق، ومراتب الوجود، (قام يوسف زيدان بحَصـر مؤلّفات الجيلي والتعريف بها، فى كتابه الفكرُ الصوفي عند الجيلي، ص 52 )
والجيلي من دُعاة مذهب وحدة الوجود، فلقد كانت هذه العقيدة هي الشغلَ الشاغِلَ له، وهي ظاهرة بوُضوحٍ فى مُعظمِ مؤلّفاته،
فهو يرى أي يعتقد أنّ الله تعالى هو المنفرد بالوجود، وإثبات هذا هو غاية التوحيد، وفى هذا يقول ‘ كلمة الشهادة مَبْنِيّة على سلب، وهي ‘ لا ‘ وإيجابٍ، وهي ‘ إلّا ‘ ، معناه لا وجود لشيئ إلّا الله (الإنسان الكامل للجيلي ،2 -134
أمّا الكون أو الخلق أو العالم فهو وهم من الأوهام، أو خَيَالٌ من الخيالات، الّتي تَطْرَأ على عقول المحجوبين، والخلقُ عند الجيلي ليس له وجود حقيقيّ ، بل وجودُه مجازيّ اعتباريّ، وحقيقته عنده أنّه هو الله، ولكنّه تجلّى بصُور المخلوقات،
அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ்!
இம்மகானின் பெயர் அப்துல் கரீம். தந்தையின் பெயர் இப்றாஹீம். அவரின் தந்தை அப்துல் கரீம். இவர்கள் ஜீலீ அல்லது ஜீலானீ என்று அழைக்கப்படுவார்கள். “ஜீலான்” என்பது பாரசீகம் – ஈரான் நாட்டின் ஒரு மாகாணம். (இங்குதான் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களும் பிறந்தார்கள்)
شَرَّفْتَ جِيْلَانَ بِالْمِيْلَادِ سَاكِنَهُ
எனும் பாடலடி இதை விளக்குகிறது.
அப்துல் கரீம் ஜீலீ அவர்களின் விபரம் தேவையானோர் “முஃஜமுல் புல்தான்” எனும் நூல் 02ம் பாகம், 201ம் பக்கத்தைப் பார்க்கவும். இவர்களின் கரு “பக்தாத்” நகராகும்.
இவர்கள் ஹிஜ்ரீ 767ல் பிறந்தார்கள். சுமார் 677 வருடங்கள் கடந்து விட்டன. அதிக நாடுகளுக்கும், ஊர்களுக்கும் பயணித்துள்ளார்கள். இந்தியா, பாரசீகம், மிஸ்ர், பலஸ்தீன், சஊதி போன்ற நாடுகளுக்கு பயணித்துள்ளார்கள். பின்னர் ஹிஜ்ரீ 796ல் எமன் நாடு வந்து ஹிஜ்ரீ 826ல் மரணிக்கும் வரை “சுபைத்” எனும் ஊரிலேயே வாழ்ந்து அங்கேயே “வபாத்” ஆனார்கள்.
மகான் ஜீலீ அவர்கள் “தஸவ்வுப்” ஞானக் கலையை அக்காலத்தில் எமன் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஸூபீகளின் தலைவர் அஷ் ஷெய்கு இஸ்மாயீல் ஜபறதீ றஹிமஹுல்லாஹ் மூலமும், தங்களுக்கு முன் வாழ்ந்த ஸூபீ மகான்களின் நூல்களிலிருந்தும் கற்றுக் கொண்டார்கள். இறுதியில் ஹிஜ்ரீ 09ம் நூற்றாண்டின் ஸூபீகளின் தலைவராக விளங்கினார்கள்.
மகான் ஜீலீ அவர்கள் சுமார் 30 நூல்கள் எழுதியுள்ளார்கள். அவற்றில் ஸூபீகளின் “அகீதா” கொள்கை விளக்கமே கூறியுள்ளார்கள். அவற்றில் “அல் இன்ஸானுல் காமில்”, “அல்மானாளிறுல் இலாஹிய்யா”, “அல்காமூஸுல் அஃளம்”, “ஷர்ஹு முஷ்கிலாதில் புதூஹாத்”, “அல்வுஜூதுல் முத்லக்”, “மறாதிபுல் வுஜூத்” என்பன அடங்கும். விபரம் தேவையானோர் யூஸுப் ஸைய்தான் அவர்கள் எழுதிய “அல்பிக்றுஸ் ஸூபிய்யு இன்தல் ஜீலீ” எனும் நூல் 52ம் பக்கத்தைப் பார்க்கவும்.
மகான் ஜீலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையில் பிரசித்தி பெற்றிருந்தார்கள். அவர்களின் நூல்களில் இது தொடர்பான விளக்கம் நிறைய உள்ளன.
மகான் ஜீலீ அவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை உண்டு என்றும், இதுவே தனது இலட்சியம் என்றும் நம்புகிறார்கள். “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமா سَلْبْ “ஸல்ப்”, إِيْجَابْ “ஈஜாப்” அடிப்படையில் அமைந்துள்ளதென்று கூறுகிறார்கள். அதாவது இல்லை – ஆம் என்ற அடிப்படையில் அமைந்துள்ளதென்று கூறுகிறார்கள். திருக்கலிமாவின் பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை உண்டு என்றும், வேறு எதற்கும் அது கிடையாது என்றும் சொல்கிறார்கள்.
ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில், 02-134
(“கவ்ன்” அல்லது “கல்கு” அல்லது “ஆலம்” என்பது வெறும் “வஹ்ம்” பேதமையாகும். அல்லது “கயால்” ஏமாற்றும் பொய்த் தோற்றமாகும். திரையகன்றவர்களுக்கு இவ்வாறுதான் தெரியும். இமாம் ஜீலீ அவர்கள் படைப்புக்கு அல்லது உலகத்திற்கு எதார்த்தமான “வுஜூத்” உள்ளமை இல்லையென்று திட்டமாகச் சொல்கிறார்கள். அதாவது அதற்கு “வுஜூத் ஹகீகீ” இல்லை என்றும், அதற்கு “வுஜூத் மஜாஸீ” தான் – ஏமாற்றக் கூடிய பொய் “வுஜூத்” தான் உள்ளதென்றும் கூறுகிறார்கள். அவர்களிடம் படைப்பின் “ஹகீகத்” எதார்த்தம் அது அல்லாஹ் தானானதே என்பதேயாகும். எனினும் அல்லாஹ்தான் படைப்புகளின் உருவத்தில் வெளியாகியுள்ளான்) என்று கூறியுள்ளார்கள்.
மேலும் மகான் ஜீலீ அவர்கள் பின்வருமாறு தங்களின் பாடல் ஒன்றில் கூறியுள்ளார்கள்.
فأوصافه والاسم والأثـر الّـذي – هو الكون عينُ الذات والله جامع
فما ثمّ من شيئ سوى الله فى الورى – وما ثمّ مسموع وما ثمّ سامع
(قصيدة النّادرات العينيّة للجيلي، ص 88)
அல்லாஹ்வின் “அவ்ஸாப்” தன்மைகள், அவனின் திரு நாமம், மற்றும் அவனின் செயல், “கவ்ன்” படைப்பு எல்லாமே அவனின் உள்ளமை – “தாத்” தானானவையாகும். அல்லாஹ் எனும் திரு நாமம் இவை யாவையும் உள்வாங்கியதாக உள்ளது.
அல்லாஹ்வின் படைப்பில் அவன் தவிர வேறெந்த வஸ்தும் கிடையாது. அவன் தவிர கேட்கப்பட்டதும் ஒன்றுமில்லை, கேட்பதும் ஒன்றுமில்லை, கேட்பவனும், கேட்கப்பட்டவனும் அவன்தான்.
ஆதாரம்: கஸீததுல் நாதிறாதில் ஐனிய்யா,
பக்கம் 88, ஆசிரியர்: அப்துல் கரீம் ஜீலீ
மேலும் மகான் ஜீலீ பின்வருமாறு தனது பாடலில் கூறுகிறார்கள்.
هو المُوجد الأشياء وهو وجودها – وعـينُ ذوات الكُلِّ وهــو الجوامـعُ
حــقائق ذاتٍ فـى مراتب حــقِّـه – تُسمَّى باسم الـخلق والحقّ واسـع
(قصيدة النّادرات العينيّة للجيلي، ص 91،92 )
அனைத்து வஸ்துக்களின் “வுஜூத்” உள்ளமையாக அவனே இருந்து கொண்டு அவனே அவ் வஸ்துக்கள் யாவையும் உண்டாக்கினவனாவான்.
ஒரே “தாத்” உள்ளமையின் எதார்த்தங்கள் “கல்க்” படைப்பு எனும் பெயர் மூலம் அழைக்கப்படும். அவனோ விசாலமானவன்.
ஆதாரம்: கஸீததுன் நாதிறாதில் ஐனிய்யா,
பக்கம் 91, 92, ஆசிரியர் ஜீலீ
ولئلّا يظنّ أحد أنّ الجيلي يعتقد أنّ المخلوق له وجود حقيقيّ أو ذاتٌ مستقلّة يتجلّى الله فيها، بيّن الجيليّ (فما تجلّى إلّا على نفسه، لكنّا نُسمّي تلك اللّطيفة الإلهيّة ‘عبدا ‘ باعتبار أنّها عوض عن العبد، وإلّا فلا عبدَ ولا ربّ، إذ بانتفاء المربُوب انْتَفى اسمُ الربّ ، فما ثمّ إلّا الله وحده، الواحد الأحد )
(الإنسان الكامل للجيلي ، ص 97 )
மகான் ஜீலீ அவர்கள், படைப்புக்கு “வுஜூதுன் ஹகீகிய்யுன்” எதார்த்தமான உள்ளமை உண்டு என்றோ, அல்லது தனியான – பிரத்தியேகமான “தாத்” உண்டு என்றோ, அதில் அவன் “தஜல்லீ” வெளியாகின்றான் என்றோ எவரும் எண்ணிவிடாமல் இருப்பதற்காக فما تجلّى إلّا على نفسه அவன் தன் மீதேயன்றி அவன் வெளியாகவில்லை என்று விபரித்துள்ளார்கள். அந்த நுட்பமான, தெய்வீக வெளிப்பாட்டிற்கே நாம் “அப்து” அடிமை என்று கூறுகிறோம். இவ்வாறு கூறுவது கூட அந்த “தஜல்லீ” வெளியாதல் “அப்து” என்பதற்குப் பதிலாக வந்திருப்பதைக் கவனத்திற் கொண்டேயாகும். இல்லையெனில் அப்தும் இல்லை, றப்பும் இல்லை. “மர்பூப்” “அப்து” இல்லையெனில் “றப்பு” என்பதுமில்லை. அங்கே அல்லாஹ் மாத்திரமே உள்ளான்.
ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில், பக்கம் 97, ஆசிரியர் ஜீலீ
وصرّح الجيلي أنّ الله تبارك وتعالى هو (عينُ هويّة المسمّى بالخلق والحقّ)
(الإنسان الكامل للجيلي ، ص 5)
மேற்கண்ட விளக்கத்தின் மூலம் “ஹக்” என்றும், “கல்க்” என்றும் சொல்லப்பட்டது அல்லாஹ்தான் என்று மகான் ஜீலீ தெளிவாக கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில், பக்கம் 05, ஆசிரியர் – ஜீலீ
குறிப்பு: “வஹ்ததுல் வுஜூத்” – எல்லாமவனே என்ற தத்துவத்தை இதைவிடத் தெளிவாகச் சொல்ல முடியுமா? இத் தத்துவத்தைச் சொன்னவர் 1944ம் ஆண்டு பிறந்து 1979ம் ஆண்டு சொன்ன காத்தான்குடி அப்துர் றஊபா? அல்லது ஹிஜ்ரீ 767ல் பிறந்த சுமார் 677 வருடங்களுக்கு முன் சொன்ன அப்துல் கரீம் ஜீலீ நாயகமா? “பத்வா” வழங்கிவிட்டு பஞ்சணையில் படுத்துறங்கும் முப்தீகள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லது அப்துல் கரீம் ஜீலீ அவர்களுக்கும் “முர்தத் பத்வா” வழங்க வேண்டும்.
தொடரும்…