Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்هُوَ الْكُلُّ எல்லாமவனே எனும் தத்துவத்தை அறிவால் அறிந்து கொள்ள முடியாமல் அனுபவரீதியில் அறிந்து கொள்ள...

هُوَ الْكُلُّ எல்லாமவனே எனும் தத்துவத்தை அறிவால் அறிந்து கொள்ள முடியாமல் அனுபவரீதியில் அறிந்து கொள்ள விரும்புவோர் தமது மூக்கணாங்கயிறை மூன்று மாதங்களுக்கு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். என்னுடனேயே தங்கியிருக்கவும் வேண்டும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“எல்லாம் அவனே” எனும் தத்துவத்தை அறிவால் அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்ற, ஜீரணிக்க முடியாமல் ஏங்கி நிற்கின்ற பல பட்டதாரிகளையும், PhD செய்த பெரும் மகான்களையும் நான் அறிகின்றேன். அறிந்தாலும் கூட நான் வியப்படையவில்லை. ஏனெனில் “நக்குண்பதற்கும் “நஸீப்” வேணும்” என்ற முன்னோர்களின் தத்துவ வசனம் எனக்கு ஆறுதல் கூறுகிறது.

இலங்கைத் திரு நாட்டில் அறிவுத்துறையில் “துறையா” நட்சத்திரம் போல் வாழ்ந்த ஒரு மகா மனிதரை நான் அறிவேன். அவருடன் சுமார் ஒரு வருடம் நெருங்கி வாழ்ந்திருக்கிறேன். அவரின் பெயரை இங்கு குறிப்பிட நான் விரும்பவில்லை. “தஸவ்வுப்” எனும் ஸூபிஸக் கலை தவிர்ந்த ஏனைய எல்லாக் கலைகளிலும் அவர் போல் இன்னொருவரை இவ் இலங்கைத் திரு நாட்டில் நான் கண்டதேயில்லை. அறிவில் மட்டுமன்றி வணக்க வழிபாட்டிலும் அவர் போல் பேணுதலுள்ள ஒருவர் இருந்திருக்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். அவரின் பெயரைக் குறிப்பிட நான் எவருக்கும் அஞ்சவில்லை. எனினும்
اُذْكُرُوْا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوْا عَنْ مَسَاوِيْهِمْ،
“உங்களில் மரணித்தவர்கள் செய்த தவறுகளைக் கூறாமல் – குறைகளை எடுத்தியம்பாமல் அவர்கள் செய்த நன்மைகளை மட்டும் கூறுங்கள்” என்ற பெருமானார் அவர்களின் பொன் மொழி என் கண் முன் நின்று “வேண்டாம்” என்று கையசைப்பதால் நான் அவரின் பெயரைக் கூறவில்லை. ஆயினும் அவர் என் நெஞ்சில் நீங்காத இடத்தை இதுவரை பிடித்த வண்ணமே இருக்கிறார்.
 
رحمه الله رحمة واسعة، وأدخله الفردوس الأعلى بمنّه وكرمه وجوده وإحسانه،
இதுவே வரலாறு:
என் தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் அவர்கள் அதிக காலம் இந்தியாவிலேயே ஓதியவர்களாவர். எந்த ஒரு அறபுக் கல்லூரியிலும் அதிக காலம் ஓதி மௌலவீ “ஷஹாதத்” பெற்றவர்களல்லர். எனினும் இந்தியாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் பல வலீமாரின் தொடர்பிலிருந்து அவர்களின் அருளாசி பெற்றவர்கள் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.
 
இவர்கள் தினமும் காலை சுமார் 11 மணியிலிருந்து 12 மணி வரை இறைஞான மகான் அப்துல் கரீம் ஜீலீ அவர்களின் “அல் இன்ஸானுல் காமில்” என்ற நூலை சில நாட்களிலும், ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களின் “புஸூஸுல் ஹிகம்” எனும் நூலை சில நாட்களிலும் வாசிப்பார்கள். இது அவர்களின் வழக்கம். சில நாட்களில் தூக்கம் மிகைத்து விடுமாயின் தங்களின் நெஞ்சில் கிதாபை வைத்தவாறு உறங்குவார்கள்.
 
ஒரு நாள் எனது தகப்பனார் வெளியே போன பின் “அல் இன்ஸானுல் காமில்” என்ற நூலை நான் எடுத்து வாசித்துப் பார்த்தேன். அந்நேரம் எனக்கு 21 வயதாயிருந்தது. அது நான் ஓதிக் கொண்டிருந்த காலமாகும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
கீழே நான் எழுதியுள்ள இந்த அறபுப் பந்தியை நான் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மகானிடம் காட்டி இதற்கு விளக்கம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இது “தஸவ்வுப்” ஞானத்தின் உச்சக்கட்டப் பேச்சாகும். இதற்கு என்னால் விளக்கம் கூற முடியாது. இதற்கு இறைஞானிகளான ஆரிபீன்களால் மட்டுமே விளக்கம் கூற முடியும். உங்கள் தந்தையிடமே இதற்கான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.’
 
அவர்களிடம் நான் காட்டி விளக்கம் கேட்ட அதே அறபுப் பந்தியைத்தான் நான் கீழே எழுதியுள்ளேன்.
குறித்த நூல் 105ம் பக்கம், الباب الحادى عشـر 11ம் பாடம் என் கண்ணில் பட்டது. அதை எந்த ஒரு மாற்றமுமின்றி முழுமையாக எழுதுகிறேன்.
 
التشبيه الإلهي عبارة عن صورة الجمال، لأنّ الجمالَ الإلهيَّ له معانٍ، وهي الأسماء والأوصاف الإلهيّة، وله صُورٌ، وهي تجلّياتُ تلك المعاني فيما يقع عليه مِن المَحسُوسِ أو المعقول، فالمحسُوسُ كما فى قوله رأيتُ ربّي فى صورة شابٍّ أمرَدَ، والمعقولُ كقوله أنا عند ظنِّ عبدي بي فَلْيَظُنَّ بِيْ مَا شَاءَ، وهذه الصورة هي المُرادةُ بالتّشبيه، ولا شكّ أنّ الله تعالى فى ظُهوره فى صورة جمالِه باقٍ على ما استحقَّ من تنزِيهِه، فكما أعطيت الجناب الإلهيّ حقَّه من التنزيه فكذلك أعطِهِ مِن التشبيه الإلهيّ حقَّه،
واعلم أنّ التشبيه فى حقِّ الله تعالى حُكمٌ بِخِلَافِ التّنزيه، فإنّه فى حقّه أمرٌ عينيُّ، وهذا لا يشهده إلّا الكمّلُ مِن أهلِ الله تعالى، وأمّا مَنْ سِواهم من العارفين فإنّه لا يُدرِكُ ما قُلناه إلّا إيمانا وتقليدا، لِما تَقْتَضِيْهِ صُور حُسنِه وجمالِه، إذ كلُّ صورةٍ مِن الموجوداتِ هي صورةُ حُسنِه، فإن شَهِدْتَ على الوجه التَّشْبِيْهِيِّ ولم تشهد شيئا من التنزيه فَقَدْ أَشْهَدَكَ الحقُّ حُسنَهُ وجمالَه مِن وجهٍ واحدٍ، وإن أشهدك الصورةَ التشبيهيّةَ وتعقّلتَ فيها التنزيهَ الإلهيَّ فقد أشهدك الحقُّ جمالَه وجلالَه فى وَجْهَيِ التشبيه والتنزيه، ‘ فأينما تولوا فثم وجه الله ‘ فَنَزِّهْ إِنْ شِئْتَ وَشَبِّهْ إِنْ شِئْتَ، فعلى كلِّ حالٍ أنت غارقٌ فى تجلّياتِه، ليس لك عنه منفك، إذ أنت وما عليه هُويّتُك من حالٍ وعملٍ ومعنًى بأجمعك صورةٌ لِجمالِه له، فإن بقيتَ على تشبيهِك الخلقيِّ فأنت تشهد صورةً حسنة، وإن فُتِحَ لك عينُ التنزيه فيك على تشبيهك فأنت صورةُ حُسنِه وجمالِه ومعناه، وإن ظفرتَ بما وراء التشبيه والتنزيه، وذلك الذّاتُ، (فاختر لنفسك فى الهوى من تصطفي)
الإنسانُ الكامل، ج1، ص 105-106، الباب الحادى عشر، المؤلف عبد الكريم الجيلي)
 
அல் இன்ஸானுல் காமில், பக்கம் 105-106, 11ம் பாடம், ஆசிரியர்: அப்துல் கரீம் ஜீலீ
தொடரும்….
RELATED ARTICLES

Most Popular

Recent Comments