Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்யார் இந்த ஸிறாஜ் நஜாஹீ?

யார் இந்த ஸிறாஜ் நஜாஹீ?

அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
 
மௌலவீ ஸிறாஜ் நஜாஹீ என்பவர் காதிரிய்யா TV மூலம் எனது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த, நான் கூறி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை விழித்து, “நான் றஊப் மௌலவீயோடு விவாதித்து அவர் சொல்வது பொய்யென்று நிறுவ தயார். அவர் வருவாரா? அவர்தான் வர வேண்டும்” என்று காரசாரமாக கர்ஜித்தார்.

அவர் தன்னை சிங்கம் என்று நினைத்து கர்ஜித்தாலும் அவர் கர்ஜித்தது என் காதுக்கு கழுதை கத்தினாற் போல் கேட்டது.
 
இவர் இலங்கையில் இருக்கிறாரா? அல்லது இமய மலையில் இருக்கிறாரா? என்று பொது மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.
 
ஏனெனில் “ஸூபீகளிடம் விவாதமில்லை” என்ற தலைப்பில் நான் பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டுமுள்ளேன். பல கூட்டங்களில் பகிரங்கமாகப் பேசியுமுள்ளேன். நான் எழுதிய கட்டுரைகளும், பேச்சுக்களும் இலங்கை, இந்தியா முதலான தமிழ் பேசும் மக்களிடம் பரவலாக உள்ளன. நான் பேசிய CDகளும், எழுதிய கட்டுரைகளும் தேவையானோர் எனது அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
 
நான் கடந்த காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்களுக்கும், “பத்வா” வழங்கிய முப்தீகளுக்கும் பின்வருமாறு பகிரங்கமாகப் பேசியும், எழுதியுமுள்ளேன்.
 
(தம்பி ரிஸ்வி முப்தி அவர்களே! “பத்வா” வழங்கிய முல்லாக்களே! நீங்கள் என்னுடன் விவாதிப்பதற்கு தகுதியற்றவர்கள், உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” உம் தெரியாது, அதற்கும் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்குமுள்ள வித்தியாசமும் தெரியாது. இதனால்தான் எனக்கும், நான் சொன்ன கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் “பத்வா” வழங்கியுள்ளீர்கள். ஆகையால் உங்களோடு விவாதிப்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்கள். எனவே, நீங்கள் விவாதிக்கு முன் “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்ன? என்பதை என்னிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால்
فَاسْئَلُوْا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ
“நீங்கள் அறியாதவர்களாயின் அறிந்தவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” என்ற அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி நீங்கள் அனைவரும் காத்தான்குடியில் என்னுடன் பத்து நாட்கள் தங்கியிருந்து கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் வாருங்கள். உங்களுக்கு தங்குமிட வசதியும், மூன்று வேளை உணவும், குளிர்பானங்களும், நீங்கள் விரும்பினால் பயணச் செலவுகளும் தருகிறேன்) என்று ஒரு தரமல்ல இரண்டு தரமல்ல. பல தரம் பகிரங்கமாகப் பேசியும் உள்ளேன். கட்டுரைகள் எழுதிப் பகிரங்கமாகப் பதிவு செய்துமுள்ளேன். இச் செய்தியை இலங்கை நாட்டவர்களும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலுமுள்ள தமிழ் மொழி அறிந்தவர்கள் நன்கறிவர்.
 
இவ்வாறிருக்கும் நிலையில், இலங்கை நாட்டில் கொழும்பு நகரில் வாழும் மௌலவீ ஸிறாஜ் நஜாஹீ அவர்களுக்கு இத்தகவல் தெரியாமற் போனது வியப்பானதும், சிந்திக்க வேண்டியதுமாகும். இவர் இத்தனை காலமும் தொடர் கோமாவில் இருந்தாரா? அல்லது “அனானிய்யத்” நானென்ற மமதைப் போதையில் மயங்கிக் கிடந்தாரா? இது பழைய கதை.
 
ஒரு வகையில் உலமா சபையினர் புத்திமான்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் எதார்த்தம் புரிந்து மௌனிகளாக உள்ளனர். இந்த வகையில் இவர்கள் பாராட்டுதற்குரியவர்களேயாவர்.
 
நான் எவருடனும் விவாதிக்கத் தயாரில்லை என்ற செய்தி தமிழ் நாட்டில் வாழும் பேராசிரியர் முஜீப் றஹ்மான் அவர்களுக்கும், சீனாவில் வாழும் பேராசிரியர் முபிஸால் அபூ பக்ர் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் நிலையில் இரத்மலானையிலுள்ள அறிஞர் அல்லாமா ஸிறாஜ் நஜாஹீ அவர்களுக்கு கிடைக்காமற் போனதேனோ?!
 
இவரின் பேச்சின் மூலம் இவருக்கு இச் செய்தி கிடைத்துள்ளதென்று அறிய முடிகிறது. ஆயினும் இவர் மனமுரண்டாகவே விவாதத்திற்கு நான் வர வேண்டுமென்று குரங்குப் பிடி அல்லது உடும்புப் பிடி பிடித்து நிற்கிறார். இவரின் இப்பிடியின் பின்னணி எதுவாக இருக்குமோ என்று சிந்திக்கத் தூண்டியுள்ளது. புலனாய்வாளர்களுடன் தொடர்பு கொண்டுதான் இவரின் குரங்குப் பிடியின் பின்னணி என்ன என்பதை அறிய வேண்டும்.
 
அன்புள்ள தம்பி மௌலவீ ஸிறாஜ்!
 
அல்லாஹ் உங்களுக்கு நல்லறிவைத் தருவானாக! நீங்கள் என்னுடன் நெருங்கிப் பழகிய ஒருவர். காத்தான்குடியிலுள்ள எனது வீட்டுக்குப் பல தரம் மௌலவீ அப்துல்லாஹ் ஜமாலீ அவர்களுடன் வந்துள்ளீர்கள். சாப்பிட்டுள்ளீர்கள். உறங்கியுள்ளீர்கள். என்னைக் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்துள்ளீர்கள்.
 
உங்கள் தந்தை எனது நண்பர் மௌலவீ முஹம்மத் அவர்கள் கொழும்பிலுள்ள எனது வீட்டுக்கு பல தரம் வந்து நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இந்தச் செய்தியை உங்களிடமும் நான் சொல்லியுள்ளேன். நினைத்துப் பாருங்கள்.
 
நீங்கள் விவாதத்திற்கு அழைப்பதை நிறுத்திவிட்டு நான் கூறி வரும் முறையற்ற “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று நிறுவி முறையான “வஹ்ததுல் வுஜூத்” ஐ நீங்கள் எனக்குக் கற்றுத் தந்தால் நான் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு உங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைப்பேன்.
 
அதாவது எனது சென்ற கால நண்பனும், உங்களின் இக்கால நண்பனுமான மௌலவீ MLAM காஸிம் பலாஹீ அவர்கள் என்னிடம் வந்த போது தன்னை அல்ஜாமிதுர் றப்பானிய்யா அறபுக் கல்லூரிக்கு “டிறக்டர்” பணிப்பாளராக ஆக்குங்கள் என்று கேட்டார். நான் அவருக்கு உரிய காரணத்தைக் கூறி திருப்திப்படுத்திவிட்டு அவரைத் தொடர்ந்தும் என்னோடு வைத்துக் கொண்டிருந்தேன். நான் அவரை மிகவும் நேசித்தேன். அதேபோல் அவரும் என்னை நேசித்தார். அந்த நேசத்தின் பயனாக நான் அவரை ஹாஜா கரீப் நவாஸ் அவர்களின் தரிசனத்திற்காக அஜ்மீர் நகருக்கும் அழைத்துச் சென்றுள்ளேன்.
 
அவர் என்னுடன் இருந்த காலத்தில் ஒரு தரமேனும் நான் அவரை வேதனைப் படுத்தவுமில்லை. அவர் என்னை வேதனைப் படுத்தவுமில்லை. ஒற்றுமையாகவே இருந்தோம். பின்னர் கொரோனாவின் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாட்களில் சிலரை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் இவருடன் பலரை கடமையிலிருந்து நிறுத்தினோம். இதுவே நடந்த உண்மை.
 
ஆயினும் இவர் இன்று நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் முறையற்றது என்று சொல்கிறார். இவர் இதை என்னோடு இருக்கும் போது சொல்லியிருந்தால் முறையான வஹ்ததுல் வுஜூதை இவர் மூலம் நான் கற்றிருப்பேன். அல்ஹம்து லில்லாஹ்!
 
எனதன்பிற்குரிய மௌலவீ ஸிறாஜ் நஜாஹீ அவர்களே! விவாதிக்கும் நோக்கத்தை விட்டு விட்டு “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை நீங்கள் என் மூலம் கற்றுக் கொள்ள விரும்பினால் கற்றுக் கொள்ளும் நோக்குடன் காத்தான்குடி வந்து சுமார் பத்து நாட்களாவது தங்கியிருங்கள். நான் கற்றதை – அறிந்ததை உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். சரியென்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். பிழை என்றால் எனக்குக் கற்றுத் தாருங்கள்.
 
காத்தான்குடியில் எனது தலைமையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் மாநாட்டில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். உங்களின் உஸ்தாத் மரியாதைக்குரிய “நஜ்முல் உலமாஇ” முஹாஜிரீன் ஹழ்றத் அவர்களும் இரண்டாம் நாள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அவர்கள் தங்களின் உரையில் மேடையிலிருந்த என்னைச் சுட்டிக் காட்டி “இதோ இருக்கின்ற இந்தச் சீதேவிக்கல்லவா “முர்தத்” என்று பட்டம் கொடுத்துவிட்டார்கள்” என்று தங்களின் மன வேதைனையை வெளிப்படுத்தினார்களே! அவ்வேளை நீங்கள் இருக்கவில்லையா? அல்லது உங்கள் செவியினுள் அது நுழையவில்லையா?
 
அன்பிற்குரிய மௌலவீ ஸிறாஜ் நஜாஹீ அவர்களே!
أيّها الصديق مولوي سراج نجاحي! اعلم حقّ اليقين أنّ سرّا من أسرارِك فى داخل جيب قميصـي، وهو سرّ جرى بعد تمام مجلس عقد النّكاح للمولوي محمد معروف، كما لا يخفى عليك، إذا جاوزتَ الحدودَ وتعمّدت الأنانيّة، وأظهرت العداوةَ والحماقة والبلادة فأنا أظهر هذا السرّ لكي يكون جهرا يعلمه العلماء فى هذه الدولة وفى غيرها من الدّول الإسلاميّة والعربيّة والعجميّة، فتكون بعد إفشائه أخسأ النّاس وأخبث النّاس، يا صديقي! وضعت قدمَك فى بحر محيط لا ساحل له ولا انتهاء، قبل معرفة عمقه، لأنّ بحر وحدة الوجود بحر عميق غامض، وقد سبح فيه العارفون الكاملون، والأولياء الواصلون، والعلماء الرّاسخون، وكيف تسبح أنت فيه مع قلّة قوّتك العلميّة،فأخّر قدميك كما قدّمتهما قبل معرفة قدر العمق، وأتِ خاني لتشـرب خمور الوصال وتعرف حلاوة العرفان والإيقان، والله يرشدك ويعلّمك ما لم تعلم ويلهمك ما لم تعرف، وأخيرا السلامة لك فى سكوتك،
خادم القوم،
நீங்கள் தொடர்ந்தால் நானும் தொடரத் தயார். என் உடலுக்கே 80 வயது. எனது ஆன்மிகத்துக்கு 40 வயதுதான். உடல் சோர்ந்து போனாலும் உள்ளம் வீரமாகவே உள்ளது.
أنا قائم بالله وبرسوله وبأوليائه، فلا يستطيع أحد أن يحرّكني ولو قدر إصبع،
عبد الرؤوف عبد الجواد،
RELATED ARTICLES

Most Popular

Recent Comments