Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுபவர்களாகவும்,...

குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுபவர்களாகவும், அது தொடர்பான தத்துவ வசனங்கள் சொல்பவர்களாகவும் இருந்தார்கள்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுபவர்களாகவும், அது தொடர்பான தத்துவ வசனங்கள் சொல்பவர்களாகவும் இருந்தார்கள்.

இதற்கு முதல் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களைப் பதிவு செய்திருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர்களின் இயற் பெயர் அலீ. இவர்கள் ஹிஜ்ரீ 591ல் غمارة “ஙமாறா” என்ற இடத்தில் பிறந்தார்கள். இது மொறோக்கோ நாட்டிலுள்ள ஒரு சிற்றூர். இது “சப்தா” என்ற நகருக்கு அண்மையில் உள்ளது.
இவர்கள் தங்களின் சிறு வயதிலேயே “தூனுஸ்” நாடு சென்று கல்வி ஞானம் கற்று பின்னர் கிழக்கு நாடுகளுக்குச் சென்று “ஹஜ்” வணக்கம் செய்து விட்டு “இறாக்” நாட்டுக்கு வந்தார்கள்.
 
மீண்டும் “ஙமாறா” வந்து அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் என்ற இறை ஞான மகான், குத்புஸ்ஸமான் அவர்களிடம் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானங்களை கற்றார்கள்.
இவர்களின் ஞான குரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் ஆவார்கள்.
இவர்கள் “மஷீஷ்” என்ற இறைஞானியின் மகன் ஆவார்கள். இவர்கள் “பஷீஸ்” என்றும் அழைக்கப்படுவார்கள். இவர்கள் மோறோக்கோவில் வாழ்ந்த ஸூபீகளில் ஒருவராவார்கள். மொறோக்கோவில் தாங்கள் பிறந்த “ஙமாறா” என்ற ஊரிலேயே வசித்து வந்தார்கள். அப்துர் றஹ்மான் அல் அத்தார் எனும் பிரசித்தி பெற்ற ஸூபீ மகானிடம் ஸூபிஸம் கற்றார்கள். மொறோக்கோவில் வாழ்ந்த ஸூபீகளில் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களுக்குப் பெரும் கௌரவம் இருந்தது. இவர்கள் இயற்றிய “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” என்ற ஸலவாத் உலகப் பிரசித்தி பெற்றதாகும். ஷாதுலிய்யா தரீகாவைச் சேர்ந்தவர்கள் தினமும் இதை ஓதி வருவார்கள். இவர்கள் ஹிஜ்ரீ 622ல் ஓர் எதிரியால் நஞ்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு “ஷஹீத்” ஆனார்கள். இவர்களின் வரலாறு மிகப் பெரியது. சுருக்கமாக எழுதியுள்ளேன்.
 
அபுல் ஹஸன் ஷாதுலீ: பின்னர் ஷாதுலீ நாயகம் “தூனுஸ்” நாட்டுக்கு பக்கத்திலுள்ள “ஷாதுலா” என்ற இடத்திற்கு வந்து அங்குள்ள زَغْوَانْ என்ற மலையில் ஸூபிஸ ஞானப் பயிற்சிகள் செய்து மனிதர்களைக் காணாமல் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் பெயருக்குப் பின்னால் “ஷாதுலீ” என்ற சொல் சேர்க்கப்படுகிறது. இது “ஷாதுலா” எனும் கிராமத்தின் பெயராகும்.
 
பின்னர் “ஷாதுலா” என்ற ஊரிலிருந்து “தூனுஸ்” நாடு வந்து ஸூபிஸ ஞானம் சொல்லத் தொடங்கினார்கள். ஸூபிஸ ஞானக் கருத்துகளால் அதிகமான மக்கள் கவரப்பட்டு அவர்களுக்கு பெரிய ஆதரவு ஏற்பட்டது. எனினும் “தூனுஸ்” நாட்டு நீதிவானாலும், இன்னும் பலராலும் கடுமையான எதிர்ப்புக்கு முகம் கொடுத்து இறுதியில் “மிஸ்ர்” நாட்டை வந்தடைந்தார்கள். “இஸ்கந்தரிய்யா” எனும் இடத்தில் தங்கியிருந்தார்கள். அவ்விடத்திலேயே தங்களின் ஸூபிஸ ஞானத்தைச் சொல்வதற்கு பொருத்தமான இடமாக அறிந்து அங்கேயே தங்களின் ஸூபிஸ பிரச்சாரத்தில் வேகமாக இறங்கினார்கள். இறுதி வரை அங்கேயே வாழ்ந்து “ஹஜ்” வணக்கம் செய்தவற்காக பாலைவன வழியால் பயணித்துக் கொண்டிருந்த சமயம் “மிஸ்ர்” நாட்டின் கிழக்கே உள்ள “ஐதாப்” عيذاب என்ற பாலை வனத்தில் ஹிஜ்ரீ 656ல் “வபாத்” ஆனார்கள்.
 
இவர்களின் ஏனைய வாழ்க்கை குறிப்புக்களை அறிய விரும்புவோர் பின்வரும் நூல்களைப் பார்க்கலாம். அவை..
 
العِبَر – (3-282)، الطبقات الكبرى (3-4)، جامع كرامات الأولياء (2-341)، معجم المؤلّفين (7-137)، الأعلام (4-305)، الموسوعة الصوفيّة (ص 229)، لطائف المنن، المفاخر العليّة، أبو الحسن الشّاذلي،
وقد كان الشاذلي رضي الله عنه من المؤمنين بوحدة الوجود، الدّاعين إليها، كما يُبيّن هذا معتقد شيخه عبد السلام بن مشيش، وأقوالُ الإمام أبي الحسن الشّاذلي رضي الله عنهم،
 
இமாம் ஷாதுலீ நாயகம் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை நம்பினவர்களில் ஒருவராகவும், அதன் பக்கம் மக்களை அழைப்பவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறுதான் இருந்தார்கள் என்பதற்கான ஆதாரம் அவர்களின் ஞான குரு அஷ்ஷெய்கு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களும், ஷாதுலீ நாயகம் அவர்களின் பேச்சுக்களுமேயாகும்.
 
இடைக்குறிப்பு: ஒரு “ஷெய்கு” – குருவின் “முரீது” சிஷ்யன் தனது குருவின் கொள்கை வழியிலேயே இருப்பார் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். அந்த வகையில் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களின் சிஷ்யனாகிய இமாம் ஷாதுலீ அவர்கள் தங்களின் குரு சென்ற கொள்கை வழியிலேயே இருப்பார் என்பதும், இமாம் ஷாதுலீ நாயகம் அவர்களின் பேச்சுக்களும் இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை வழி நடந்தவர்கள் என்பதற்கு ஆதாரங்களாகும். (இடைக்குறிப்பு முடிவுற்றது)
 
وأمّا شيخ الشاذلي عبد السلام بن مشيش ألّف صلاة على النبيّ صلّى الله عليه وسلّم، وسمّاها بالصلاة المشيشيّة، يقرأها الشاذليون صباح كلّ يوم ومسائه، وفى أيّام المناقب، ضمّنها ابن مشيش عقيدة وحدة الوجود،
ومنها قوله ‘ اللهم زُجَّ بِيْ فى بحار الأحديّة، وانشُلني من أوحال التوحيد، وأَغْرِقْنِي فى عين بحر الوحدة، حتّى لا أرى ولا أسمعَ ولا أَجِدَ ولا اُحِسَّ إلّا بها’ (جامع الصلوات للنّبهاني، ص 93)
وهذا القول – أي هذه العبارة تدلّ على وحدة الوجود دلالة واضحة، لا يخفى معناه على من بحثها من أهل التصوف ووحدة الوجود،
 
இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ அவர்களின் ஷெய்கு – ஞான குரு அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் நபீ பெருமானார் மீது ஒரு “ஸலவாத்” கோர்வை செய்து அதற்கு “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” என்று பெயர் வைத்தார்கள். இந்த ஸலவாத்தை ஷாதுலிய்யா தரீகாவைச் சேர்ந்த சகோதரர்கள் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும், இன்னும் “மனாகிப்” நடைபெறும் காலங்களிலும் ஓதி வருவார்கள். இதைக் கோர்வை செய்த மகான் அவர்கள் இதில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
அந்த ஞானக் கருத்துக்களிற் சிலதை இங்கு குறிப்பிடுகிறேன். அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் மகான் அவர்கள் இறைவனிடம் பின்வருமாறு கேட்கின்றார்கள். “இறைவா! என்னை “அஹதிய்யத்” எனும் கடல்களில் எறிந்து விடுவாயாக! “தவ்ஹீத்” எனும் சேறுகளிலிருந்து என்னை வெளியாக்கி வைப்பாயாக! மேலும் “வஹ்தத்” எனும் கடலில் மூழ்கச் செய்வாயாக! இவ்வாறு நீ செய்தால் நான் எதைக் கேட்பதாயினும், எதைப் பார்ப்பதாயினும், எதை பெறுவதாயினும், எதை உணர்வதாயினும் அந்த “வஹ்தத்” கொண்டே செய்வேன்” என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: ஜாமிஉஸ்ஸலவாத்.
பக்கம் 93, ஆசிரியர்: இமாம் நபஹானீ
 
“அஹதிய்யத்” என்பதும், “வஹ்தத்” என்பதும் அல்லாஹ்வின் அந்தஸ்துக்களில் இரு பெரும் அந்தஸ்துக்களாகும். இரு பெரும் “மகாம்”களாகும். இவ்விரு “மர்தபா”க்களையும் சுருக்கமாகச் சொல்லி எவருக்கும் தெளிவை ஏற்படுத்த முடியாது. விளக்கமாகச் சொன்னால் மட்டுமே விளங்கும். இங்கு அவை பற்றி விளக்கி வைக்காமல் மகான் இப்னு மஷீஷ் அவர்கள் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறார்கள் என்பதை மட்டும் எழுதுகிறேன்.
 
“மர்தபா”க்களில் “பனா” ஆகும் நிலையைத் தருவாயாக! என்று பொருள் வரும். அதாவது நானில்லை, நீதான் உள்ளாய் என்று உணரும் நிலையைத் தருவாயாக! என்று கேட்கிறார்கள். “தவ்ஹீத்” எனும் சேறுகளிலிருந்து என்னை வெளியாக்கிவிடுவாயாக! என்றும் கேட்கிறார்கள். இவ்வசனத்தில் “தவ்ஹீத்” என்பது சேறு போல் கூறப்பட்டுள்ளது. “தவ்ஹீத்” என்பது எவ்வாறு சேறாகும்? என்றால் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற அறிவுடனும், உணர்வுடனும் அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று நம்புதல் சேறு கலந்தது போன்ற ஒரு வகை “தௌஹீத்” ஆகும். இன்று வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்களின் நிலை போன்று. இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் ஒருவன் என்றுதான் நம்பியுள்ளார்கள். இதில் மாற்றமில்லை. எனினும் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற உணர்வுடனும், அறிவுடனுமே அவன் ஒருவன் என்று நம்பியுள்ளார்கள். இவ்வாறு நம்புதல் சேறிலும், சகதியிலும் புரண்டு கிடப்பது போன்றதேயாகும். எவன் அல்லாஹ்வும், படைப்பும் ஒன்று என்ற அறிவுடனும், உணர்வுடனும் அவன் ஒருவன் என்று நம்புகிறானோ அவனே அல்லாஹ்வை “தவ்ஹீத்” செய்தவனாவான்.
 
“தவ்ஹீத்” تَوْحِيْدْ என்ற சொல் وَحَّدَ – يُوَحِّدُ – تَوْحِيْدًا என்ற சொல்லடியிலுள்ள ஒரு சொல்லாகும். இச் சொல்லுக்கு ஒன்றாக்கி வைத்தல், ஒன்றாக ஆக்கி வைத்தல் என்று பொருள். ஒரேயொரு வஸ்துவை ஒன்றாக்கி வைத்தல் என்பதும், ஒன்றாக ஆக்கி வைத்தல் என்பதும் அர்த்தமற்றதாகும். ஏனெனில் ஒன்றை ஒன்றாக்கி வைத்தல் என்பதும், ஓன்றாக ஆக்கி வைத்தல் என்பதும் பிழைதான். ஏனெனில் تَوْحِيْدُ الْوَاحِدِ مُحَالٌ ஒன்றை ஒன்றாக்குதல் என்பதும், ஒன்றை ஒன்றாக ஆக்கி வைத்தல் என்பதும் பிழைதான். ஒன்று என்பது ஒன்றுதான். அதை ஒன்றாக ஆக்கி வைத்தல் என்பதும், ஒன்றாக்கி வைத்தல் என்பதும் பழைதான். பிழை மட்டுமல்ல. அது சாத்தியமற்றதுமாகும். ஆயினும் பலதை ஒன்றாக்குதல் சாத்தியம். ஒருவனிடம் ஒரு பேனாவை கொடுத்து இதை ஒன்றாக்கி வை என்று கூறுதல் அர்த்தமற்றதாகும். ஆனால் பல பேனாக்களைக் கொடுத்து இவற்றை ஒன்றாக்கி வை என்று கூறுதல் பொருத்தமானதும், சாத்தியமானதுமாகும். இதுவே تَوْحِيْدُ الْكَثْرَةِ பலதை ஒன்றாக்குதல் என்று சொல்லப்படும். இதுவே அசல் தவ்ஹீத் ஆகும்.
 
அவர்கள் அல்லாஹ்விடம் இறைவா! உனது “தாத்” – உள்ளமை எனும் கடலிலும், “ஸிபாத்” தன்மைகள் எனும் கடலிலும் என்னை மூழ்க வைப்பாயாக! என்று கேட்கிறார்கள். இதன் சுருக்கம் என்னவெனில் நான் உன்னில் “பனா” ஆகும் நிலையை எனக்குத் தருவாயாக! என்பதாகும்.
 
இன்னும் ஷாதுலீ நாயகம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
أوصاني أستاذي أنْ حَدِّدْ بصرَ الإيمان تجدِ الله فى كلّ شيئ، وعند كلّ شيئ، ومع كلّ شيئ، وفوق كلّ شيئ، وقريبا من كلّ شيئ، ومحيطا بكلّ شيئ بقرب هو وصفه، وبإحاطة هي نعته، وعدعن الظرفية، والحدود، وعن الأماكن، والجهات، وعن الصحبة، والقرب بالمسافات، وعن الدور بالمخلوقات وامْحَقِ الكلّ بوصفه الأوّل والآخر والظاهر والباطن كان الله ولا شيئ معه ‘ (الطبقات الكبرى ، لواقح الأنوار فى طبقات الأخيار للشعراني، 13 – 2)
எனது ஞான குரு எனக்கு பின்வருமாறு “வஸிய்யத்” நல்லுபதேசம் செய்தார்கள்.
 
(“ஈமான்” உடைய பார்வையை நீ கூராக்கிக் கொள். இவ்வாறு நீ செய்தால் ஒவ்வொரு வஸ்திலும் அல்லாஹ்வைப் பெற்றுக் கொள்வாய். காண்பாய். இன்னும் ஒவ்வொரு வஸ்திடத்திலும் காண்பாய். இன்னும் ஒவ்வொரு வஸ்துவுடனும் காண்பாய். இன்னும் ஒவ்வொரு வஸ்தின் மேலாலும் காண்பாய். அனைத்து வஸ்துக்களை விட நெருக்கமானவனாகவும் காண்பாய். அனைத்து வஸ்துக்களையும் தன்னுடைய நெருக்கத்தால் சூழ்ந்தவனாகவும் காண்பாய். அந்த சூழ்தல் என்பது கட்டுப்பாடுகளற்ற, இடம், திசை, தோழமை, மற்றும் தூரத்தைக் கொண்டு நெருங்குதல் போன்றவற்றை விட்டும் காலியானதாகும். அனைத்தையும் அவனுடைய “முந்தினவன், பிந்தினவன், வெளியானவன், உள்ளானவன்” என்ற தன்மைகள் கொண்டு அழித்து விடு. அவனுடன் எந்தவொரு வஸ்துவும் இல்லாத நிலையில் அவன் மாத்திரமே இருந்தான்) என்று சொன்னார்கள்.
 
ஆதாரம்: தபகாதுல் குப்ரா, லவாகிஹுல் அன்வார் பீ தபகாதில் அகார், 13-2
ஆசிரியர்: இமாம் ஷஃறானீ
 
மேற்கண்ட தத்துவத்தில் “ஹுலூல் – இத்திஹாத்” தொனிப்பது போல் சிலருக்கு தோணும். ஆனால் அவ்வாறு ஒன்றுமில்லை. சாராம்சம் என்னவெனில் ஒருவனின் “ஈமான்” விசுவாசம் பூரணத்துவம் பெற்றுவிட்டால் அவன் எல்லா வஸ்துக்களிலும் “ஹக்”கை – அல்லாஹ்வை காணும் பாக்கியம் பெறுவான் என்பதாகும்.
 
தொடரும்…
RELATED ARTICLES

Most Popular

Recent Comments