وحدةُ الوجود أعظمُ اللَّذَّاتِ عند الصوفيّة،
قال عليّ اليشرطيّ الشّاذلي: لذّةُ الرّبِّ تُغيِّبُ العبدَ عن وجودِه، حِسًّا ومعنًى، (رِحلة إلى الحقّ، لفاطمة اليشرطيّة، ص 337)
قال أحمد الدَّرْدِيْر الخلوتي: اللهم أغرقنا فى عين بحر الوحدة السارية فى جميع الموجودات، وأذقنا لذّة تجلّى الذّات، وأدمها علينا، (أحمد الدردير لعبد الحليم محمود، ص 147)
يقول أحدُ الصوفيّة المعاصرون ‘وهذه اللّذّةُ المعنويّةُ هي التي يسعَى إليها الصّوفيّة جاهدين، ويترقبون نوالَها فى أيّ لحظة من اللّحظات، لأنّها اَسْمَى ما تستوعِبُ عُمرَ الإنسان، وهي اَسمى من المأكولات والمشـروب والاستمتاع بالقصور والحُور، (أبو الحسن الشّاذلي لِعلي سالم عمّار، ص 71)
واللّذّة التي تحصل للمتصوّفة تُشبِه لذّةَ المَخمُورين بخَمرِهم، ونَشْوَةَ السُّكارى حال سكرهم، بل قال القاسم البصـري وسَكره أي الإحساس بوحدة الوجود يزيد على سكر الشّراب، (الطبقات الكبرى، ص 1-150)
ஸூபீ மகான்களிடம் இன்பங்களில் மிகப் பெரும் இன்பம் “வஹ்ததுல் வுஜூத்” பேரின்பமாகும்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
பேரின்பம், சிற்றின்பம் என்று இரண்டு வகையான இன்பங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதாயின் சிற்றின்பம் என்றால் சிறிய இன்பம் என்றும், பேரின்பம் என்றால் பெரிய இன்பம் என்றும் சொல்லப்படும். இவ்விரு இன்பங்களிலும் எந்த இன்பமாயினும் அதை பிறருக்கு வார்த்தையால் விபரித்துக் காட்ட முடியாததேயாகும். இவ்விரு இன்பங்களில் எந்த இன்பமாயினும் அது அனுபவித்து உணரக் கூடியதே.
பிறருக்குச் சொல்வதால் அவர் அதை அனுபவிக்க முடியாது. சீனியின் இனிமையால் நாவு நுகரும் இன்பம் சிற்றின்பம் என்றும், இறை வணக்க வழிபாட்டின் மூலம் கிடைக்கின்ற இன்பம் பேரின்பம் என்றும் சொல்லப்படும். இறைஞான மகான்களில் சிற்றின்பத்தில் பேரின்பத்தை அனுபவிப்பவர்களும் உளர். இது ஆன்மிகப் படித்தரங்களில் மிக உயர்ந்த படித்தரமாகும். இது தொடர்பாக என்னால் எந்தவொரு விளக்கமும் சொல்ல முடியாது. சொன்னாலும் கூட ஒரு மகான் சொல்வது போல் அமையாது.
எனினும் இது தொடர்பாக முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் கூறியுள்ள ஒரு குறிப்பை மட்டும் விளக்கமின்றி எழுதுகிறேன். இது தொடர்பான சரியான விளக்கத்தை அறிய விரும்புவோர் காமிலான ஒரு குருவை சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
يقول ابن عربي: إذا شَاهدَ الرجلُ الحقَّ فى المرأةِ كان شهودُهُ فى مُنْفَعِلٍ، وإذا شاهده فى نفسه – من حيث ظهور المرأة عنه – شَاهَدَهُ فى فاعِلٍ، وإذا شاهده فى نفسه من غير استحضار صورة ما تكوَّن عنه كان شهوده فى منفعل عن الحق بلا واسطة، فشهوده للحق فى المرأة أتمّ وأكمل، لأنّه يشاهد الحقّ من حيث إنّه فاعلٌ مُنفَعِلٌ، ومن نفسه من حيث هومنفعل خاصة، فلهذا أحبّ صلّى الله عليه وسلّم النّساء لكمال شهود الحقّ فيهنّ، إذ لا يشاهد الحقّ مجردا عن المواد أبدا، فإنّ الله بالذات غنيّ عن العالمين، وإذا كان الأمر من هذا الوجه ممتنعا، ولم تكن الشهادة إلا فى مادة، فشهود الحقّ فى النّساء أعظم الشهود وأكمله، (فصوص الحكم بشرح القاشاني ، ص 333 )
மேற்கண்டவாறு இப்னு அறபீ அவர்கள் தங்களின் இறுதி நூலான “புஸூஸுல் ஹிகம்” எனும் நூலில் கூறியுள்ளார்கள். அவர்களின் கூற்றின் சுருக்கம் என்னவெனில் இறைவனின் பூரண காட்சி பெண் மூலமே பெற முடியும் என்பதாகும்.
மேற்கண்ட விடயத்துக்கு அவர்கள் விளக்கம் கூறியிருந்தாலும் கூட அதை என்னால் விபரமாக எழுத முடியாது. “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை அறிவில் ஆழமாகச் செல்பவர்களால் மட்டுமே இதற்கு விளக்கம் கூற முடியும். இதற்கு விளக்கம் கூறுவதாயின் அவர்கள் போன்ற ஒருவரால் மட்டுமே கூற முடியும்.
இடைக்குறிப்பு:
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழு முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்களை தங்களின் “பத்வா”வில் சரி கண்டு பெரும் மகான் என்று எழுதியுள்ளதால் தலைமை முப்தீ தம்பி ரிஸ்வி முப்தீ அவர்களுக்கு இவ்விபரம் தெரிந்திருக்கலாம். விபரம் தேவையானோர் அவர்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும். (இடைக்குறிப்பு முடிந்தது)
தலைப்புக்கான விளக்கம்:
01. இறைஞான மகான் அலீ அல் யஷ்றதீ அஷ்ஷாதுலீ அவர்கள் பேரின்பம் பற்றிக் கூறுகையில் நான் தலைப்பில் அறபியில் எழுதியுள்ளது போல் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“இறைவனின் பேரின்பம் அடியானை அவனின் உள்ளமையிலிருந்து கருத்தாலும், உணர்வாலும் மறைத்து விடும் என்று கூறியுள்ளார்கள்”
ஆதாரம்: ரிஹ்லதுன் இலல் ஹக்,
ஆசிரியர்: பாதிமா யஷ்றதிய்யா, பக்கம்: 337
சுருக்கம் என்னவெனில் ஒருவனுக்குப் பேரின்பம் ஏற்பட்டால் அவன் தன்னையே மறந்து விடுவான். அவன் ஒருவன் இருக்கின்றான் என்ற உணர்வை இழந்து விடுவான் என்று கூறியுள்ளார்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களை என்னைவிடச் சிறந்த மகான்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதைக் கருத்திற் கொண்டே “நானில்லை – நானில்லை” என்று முன்னோர்களான ஞானமகான்கள் படியுள்ளார்கள். இன்று வாழும் ஞான மகான்களும் பாடியுள்ளார்கள். இதேபோல் “ஹக்கிற்கு கல்கு வேறில்லை” படைத்தவனுக்கு படைப்பு வேறில்லை என்றும் முன்னோர்களான ஞான மகான்கள் பாடியுள்ளார்கள். இன்று வாழும் ஞான மகான்களும் “வேறில்லை – வேறில்லை ஹக்கும், கல்கும் வேறில்லை” என்று பாடியுள்ளார்கள்.
02. இறைஞானி அஹ்மத் அத்தர்தீர் அல் கல்வதீ அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்விடம் வேண்டியுள்ளார்கள்.
“யா அல்லாஹ் அனைத்துப் படைப்புக்களிலும் ஓடிக் கொண்டிருக்கின்ற “வஹ்தத்” எனும் கடலில் எங்களை மூழ்கச் செய்வாயாக! உன்னுடைய “தாத்”தின் “தஜல்லீ” உடைய இன்பத்தை எங்களுக்கு அனுபவிக்கச் செய்வாயாக! மேலும் அதை எங்கள் மீது நிலைபெறச் செய்வாயாக!
ஆதாரம்: அஹ்மத் அத்தர்தீர்,
ஆசிரியர்: அப்துல் ஹலீம் மஹ்மூத். முன்னாள் கெய்ரோ அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத் தலைவர்,
பக்கம் 147
இறைஞானி அஹ்மத் அத்தர்தீர் என்ற மகானின் பிரார்த்தனையின் சுருக்கம் என்னவெனில் உலகிலுள்ள யாவும், அவற்றின் செயல்பாடுகளும் அல்லாஹ்வின் “தாத்” உடைய “தஜல்லீ” வெளிப்பாடு என்பதேயாகும். இவ்வாறுதான் வசனத்தில் சொல்ல முடியும். வசனத்தில் இதைவிடச் சுருக்கமாகச் சொல்வதாயின் படைப்புகளாகத் தோற்றுபவனும் அவனே, அவற்றின் செயல்களாக வெளியாபவனும் அவனே என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதே சரியான “ஈமான்” நம்பிக்கையாகும்.
03. தற்கால ஸூபீ மகான்களில் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்.
“பேரின்பம் என்று சொல்லப்படுகின்ற கருத்தோடு சம்பந்தப்பட்ட இவ் இன்பத்தை அடைவதற்காகவே ஸூபீ மகான்கள் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வேளை அவ் இன்பம் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான் என்று அதை எதிர்பார்த்திருக்கிறார்கள். ஏனெனில் அவ் இன்பம்தான் மனிதன் தனது வாழ்வில் பெறும் உச்சக்கட்ட இன்பமாகும். அவ் இன்பம் எந்த ஒரு உணவிலும், எந்த ஒரு பானத்திலும், எந்த ஒரு மாளிகையிலும், எந்த ஒரு “ஹூறுல் ஈன்” சுவர்க்கத்துப் பேரழகி மூலமும் கிடைக்காத பேரின்பமாகும்”
ஆதாரம்: அபுல் ஹஸன் ஷாதுலீ,
ஆசிரியர்: அலீ ஸாலிம் அம்மார்.
பக்கம்: 71
சுவர்க்கத்தில் கண்கள் சிவந்த, “ஹூறுல் ஈன்” சுவர்க்கத்துப் பேரழகிகள் மூலம் இன்பம் அனுபவிப்பதற்காக – அந்த நோக்கத்தோடு இராப் பகலாக கண் விழித்து வணக்க வழிபாடுகள் செய்பவர்களும், “தப்லீக் ஜமாஅத்” அமைப்பில் இணைந்து நாற்பது நாள், நான்கு மாதமும், பத்து நாளும் என்று வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் சகோதரர்களும் ஸூபிஸத்தின் மூலம் கிடைக்கின்ற அல்லாஹ்வின் “தாத்”தில் “பனா”வாகி இன்பக் கடலில் நீந்தி விளையாட விரும்பாமலிருப்பதேனோ?! படைப்புகளால் கிடைக்கின்ற இன்பத்தை விட படைத்தவனால் கிடைக்கின்ற இன்பம் நிகரற்ற பேரின்பம் என்பதை இன்னோர் அறியாமலிருப்பதேனோ?
பேரின்பம் என்பது சொல்லால் புரிய வைக்க முடியாததும், எழுத்தால் புரிய வைக்க முடியாததுமான ஓர் இன்பமாகும். இதற்கு நிகரான இன்பம் இவ் உலகில் ஒன்றுமே இல்லை. இன்று மனிதன் வெறும் சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காக கோடி கோடியாக அள்ளிக் கொட்டுகிறான். ஒருவன் தனது மகளின் அல்லது மகனின் திருமணத்திற்காக கோடான கோடிப் பணத்தை அள்ளி இறைக்கிறான். ஒருவன் தான் வசிப்பதற்காக ஆயிரம் கோடி செலவிட்டு ஆடம்பர வீடு – இல்லை மாளிகை கட்டுகிறான். இவ்வாறெல்லாம் செய்கின்ற முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர்களை நான் சுட்டிக் காட்டவில்லை. மாறாக “லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” என்று விசுவாசம் – ஈமான் கொண்ட முஸ்லிம் பண முதலைகளையே நான் தொட்டுக் காட்டுகிறேன். இவ்வாறு செய்வோரிற் பலர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை நாட்டுக்கு இஸ்லாமிய மத குருக்கள், ஷெய்குமார் என்று வருபவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை பெற்ற அவர்களின் “முரீத்” சிஷ்யர்கள் என்பதை நினைக்கும் போது இரத்தக் கண்ணீர்தான் வடிக்க வேண்டியதாயுள்ளது.
கேவலம் திருக்குர்ஆனை உள்ளத்தில் சுமந்த ஓர் அரசியல்வாதி கூட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பல்லாயிரம் மக்கள் மத்தியில், பல இலட்சம் மக்கள் பார்க்கும் வேளையில் பெண்களுடன் அன்ன நடை போட்ட காட்சி இறை பக்தி உள்ளோரின் உள்ளங்களை நடுங்க வைத்தது. இதற்கு இலங்கை முப்தீகள் வழங்கிய “பத்வா” என்ன? “பத்வா” என்பது ஆளுக்கா? அவரால் ஏற்பட்ட சொற் செயலுக்கா? இச்சம்பவத்திற்கு மார்க்கத்தில் “பத்வா” என்ன? முல்லாக்களும், முப்தீகளும் உறக்கத்தில் கிடந்தார்களா? மயக்கத்தில் கிடந்தார்களா? இவர்கள் “துன்யா”வுடைய உலமாக்களா? “ஆகிறா”வுடைய உலமாக்களா?
பொது மக்களே சிந்தியுங்கள். நீதிக்காக குரல் கொடுங்கள்.
நமது இத்திரு நாட்டில் பௌத மத குருக்களால் தீர்ப்பு வழங்கி பௌத மதத்தைச் சேர்ந்த ஒருவர் மதம் மாற்றப்பட்டதற்கு வரலாறுண்டா? இந்து மத குருக்களால் தீர்ப்பு வழங்கி இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் மதம் மாற்றப்பட்டதற்கு வரலாறுண்டா? கிறித்துவ மத குருக்களால் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஒருவர் மதம் மாற்றப்பட்டதற்கு வரலாறுண்டா? முஸ்லிம் மத குருக்கள் மட்டும் முஸ்லிம்களை மதம் மாற்றி “பத்வா” வழங்கியதுடன் அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் அறிவித்த இந்த முல்லாக்களுக்கு பைத்தியமா? அல்லது இவர்களின் மனமுரண்டா? இவர்களின் பாட்டுக்குத் தாளம் போட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் யார்?
அல்லாஹ்வின் தீர்ப்பே இறுதித் தீர்வாகும்.
04. ஸூபிஸ தத்துவத்தால் ஸூபீகளுக்கு ஏற்படுகின்ற பேரின்பம் போதைப் பொருள் பாவித்தவர்களுக்கு அப் பொருட்களால் ஏற்படுகின்ற இன்பம் போல் இருக்கும். போதை நேரத்தில் அவர்களுக்கு ஏற்படுகின்ற போதை போன்று இருக்கும். இல்லை. அல் காஸிமுல் பஸரீ அவர்கள் சொல்வது போல் ஸூபிஸம் தருகின்ற போதை போதைப் பொருட்கள் தருகின்ற போதையை விட உயர்ந்ததாயிருக்கும்.
அத்தபகாதுல் குப்றா, ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ, 150-1.
போதை வஸ்துக்கள் தருகின்ற போதை போன்றதென்று சொல்லப்பட்டது மனிதர்களுக்குப் பேரின்பம் என்றால் எவ்வாறிருக்கும் என்பதை விளக்கி வைப்பதற்காக சொல்லப்பட்டதேயன்றி எதார்த்தம் அவ்வாறில்லை.
பேரின்ப போதையுள்ள ஒருவர் ஒரு நாள் என்னிடம் வந்து ஒரு முஸ்லிம் இவ் உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லுங்கள் என்று கேட்டார். நான் அவரிடம், நீங்களே சொல்லுங்கள் என்றேன். அதற்கவர் “நெருப்புக் கடலில் மெழுகு கப்பலில் பயணிப்பது போன்றதாகும்” என்றார். ஸுப்ஹானல்லாஹ்! இதுவே “ஸிறாதுல் முஸ்தகீம்” ஆகும்.