தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
أقوال قطب الأقطاب وفرد الأحباب والباز الأشهب السيّد الشّيخ محي الدين عبد القادر الجيلاني البغدادي قدّس سرّه عن عقيدة وحدة الوجود، التي هي أساس الدّين،
تَنْفَرِدُ مَعَ رَبِّكَ بِبَاطِنِكَ، وَتَكُوْنُ مَعَ الْخَلْقِ بِظَاهِرِكَ،
“மனிதா! நீ உனது இறைவனுடன் உள்ரங்கத்தில் தனித்திருந்து கொள். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளுடன் வெளிரங்கத்தில் இருந்து கொள்” என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்பத்ஹுர் றப்பானீ, பக்கம் 43,
ஆசிரியர்: ஜீலானீ
اَلْحَمْدُ للهِ الَّذِيْ وُجِدَ فِى كُلِّ شَيْءٍ، وَحَضَرَ عِنْدَ كُلِّ شَيْءٍ،
)الفيوضات الربانية فى المآثر والأوراد القادرية، جمع اسماعيل القادري، ص 38(
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கு உரியனவாகும். அவனை ஒவ்வோர் வஸ்திலும் பெற்றுக் கொள்ளப்படும். அவன் ஒவ்வோர் இடத்திலும் சமூகமளித்தவனாக உள்ளான்.
ஆதாரம்: அல்புயூழாதுர் றப்பானிய்யஹ், பக்கம் 38
ومعنى الوصول إلى الله عزّ وجلّ خُرُوْجُكَ عَنِ الْخَلْقِ، فَإِذَا وَصَلْتَ إِلَى الْحَقِّ عزّ وجلّ فَكُنْ آمِنًا أَبَدًا مِنْ سِوَاهُ عزّ وجلّ، فَلَا تَرَى لِغَيْرِهِ وُجُوْدًا البتّة، (فتوح الغيب، 40-41، للجيلاني(
“அல்லாஹ் அளவில் “வுஸூல்” சேர்தல் என்றால் நீ படைப்பை விட்டும் வெளிப்படுவதாகும். நீ அல்லாஹ் அளவில் சேர்ந்தால் அவன் தவிரவுள்ளதை விட்டும் அச்சமற்றவனாக இருந்து கொள். நீ அல்லாஹ் தவிர வேறொன்றுக்கும் “வுஜூத்” உள்ளமை இருப்பதாக காணமாட்டாய்”
ஆதாரம்: புதூஹுல் ஙைப்,
பக்கம் 40-41, ஆசிரியர்: ஜீலானீ.
يقول الجيلاني: معنى الوُصول إلى الله عزّ وجلّ خُرُوجك عن الخلق، فإذا وصلتَ إلى الحقّ عزّ وجلّ فكُن آمنا أبدا مِن سِواه عزّ وجلّ، فلا تَرى لغيرِه وجودا البتّة، (فتوح الغيب، 40-41، للجيلاني(
அல்லாஹ் அளவில் சேர்தல் என்பது நீ “கல்க்” படைப்பை விட்டும் வெளியாவதாகும். நீ அல்லாஹ் அளவில் சேர்ந்தால் அவனல்லாததை – அவனுக்கு வேறானதை விட்டும் எப்போதும் அச்சமற்றவனாக இரு. இவ்வாறிருந்தால் அவனுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை எனும் இருக்கை உண்டு என்பதைக் காண்பாய். படைப்புக்கு அது இருப்பதாக நீ அறவே காணமாட்டாய்.
புதூஹுல் ஙைப், பக்கம்: 40-41, ஆசிரியர்: ஜீலானீ
يقول عبد القادر الجيلاني أنّه بإمكان الصوفيّ رؤية الله فى الدّنيا، وذلك بِرَفْعِ حُجُبِ الكائناتِ عن قلبِه، واعتقاده أنّ الموجود هو الله وحده،
“அல்லாஹ்வை இவ்வுலகில் காண முடியும். அது சாத்தியம் என்று சொல்லும் ஸபீகள் அது எதனால் சாத்தியமாகிறது என்பதற்கான வழியையும் சொல்லிக் காட்டுகிறார்கள். அதாவது படைப்புகள் – சிருட்டிகள் எனும் திரைகள் அவனின் உள்ளத்திலிருந்து நீங்க வேண்டும். அதோடு அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்று அவன் நம்பவும் வேண்டும்” என்று குத்பு நாயகம் சொல்லியுள்ளார்கள்.
المؤمن العارف له عينان ظاهرتان، وعينان باطنتان، فَيَرَى بالعينين الظاهرتين ما خَلَقَ الله عزّ وجلّ فى الأرض، ويَرَى بالعينين الباطنتين ما خلق الله عزّ وجلّ فى السموات، ثمّ ترفع الحجُبُ عن قلبِه، فيراه فيصير مقرَّبًا، كن عاقلا، تدبَّرْ ما أقول، وتفهَّمْ، (الفتح الرباني، ص 16-17، للجيلاني(
“இறைஞானமுள்ள விசுவாசிக்கு வெளிரங்கமான இரு கண்களும், உள்ரங்கமான இரு கண்களும் உள்ளன. அவன் வெளிரங்கமான தனது இரு கண்கள் கொண்டும் வல்ல அல்லாஹ் பூமியில் படைத்தவற்றைப் பார்ப்பான். அவனின் உள்ரங்கமான இரு கண்கள் கொண்டும் அல்லாஹ் வானங்களில் படைத்தவற்றைப் பார்ப்பான். பின்னர் அவனின் உள்ளத்தை மூடிக் கொண்டிருந்த திரைகளை அல்லாஹ் நீக்குவான். அப்போது அவன் அல்லாஹ்வைக் காண்பான். அவனுக்கு மிக நெருக்கமானவனாகவும் மாறிவிடுவான். மனிதா! நீ புத்தியுள்ளவனாய் இருந்து கொள்! நான் சொல்வதை நன்றாக சிந்தித்து விளங்கிக் கொள்” என்று கூறியுள்ளார்கள்.
அல்பத்ஹுர் றப்பானீ, பக்கம் 16-17, ஆசிரியர் ஜீலானீ.
يقول الشّيخ محي الدين عبد القادر الجيلاني رحمه الله ‘شَجَاعَةُ الخَوَاصِّ فى الزُّهدِ فى الدّنيا والآخرة ‘ (الفتح الربّاني للجيلاني، ص 25(
يقول الشّيخ محي الدين عبد القادر الجيلاني رحمه الله ‘ من أراد اللهَ فعليه بالزُّهد فى الآخرة ‘ (فتوح الغيب للجيلاني، ص 123(
يقول الشّيخ محي الدين عبد القادر الجيلاني رحمه الله ‘ اِخْلَعْ نَعْلَيْكَ، دُنْيَاكَ وَآخِرَتَكَ، وَتَجَرَّدْ عَنِ الْأَكْوَانِ، وافن عن الْكُلِّ، وتَطَيَّبْ بالتَّوْحِيْدِ، (فتوح الغيب، للجيلاني، ص125(
01. “விஷேடமானவர்களான “கவாஸ்”களின் குறிக்கோள் – அவர்களின் இலட்சியம் “துன்யா”விலும் – இம்மையிலும், “ஆகிறா”விலும் – மறுமையிலும் பற்றின்றி இருப்பதாகும்” என்று கூறியுள்ளார்கள்.
02. இரண்டாம் வசனத்திலும் இதே கருத்தையே குத்பு நாயகம் வலியுறுத்துகின்றார்கள். இவ்வுலகில் பற்றற்றிருத்தல் என்றால் இவ் உலக இன்ப சுகங்களை அனுபவிக்காமல் இருப்பதையே குறிக்கும். மறுமையில் பற்றறின்றி இருத்தல் என்றால் மறுமையின் இன்ப சுகங்களை அனுபவிக்க விரும்பாமலிருப்பது என்பதைக் குறிக்கும். இதுவே அவர்களின் பேச்சுக்கான விளக்கமேயன்றி அவர்கள் மறுமையை விரும்ப வேண்டாமென்று சொல்லவில்லை.
03. மூன்றாம் வசனத்திலும் இதே கருத்தையே குத்பு நாயகம் சற்று விளக்கமாக கூறியுள்ளார்கள். اِخْلَعْ نَعْلَيْكَ، دُنْيَاكَ وَآخِرَتَكَ துன்யா, ஆகிறா எனும் இரு செருப்புக்களையும் கழற்று என்று இறை வழி நடக்கும் ஒருவனுக்கு புத்திமதி கூறுகின்றார்கள். இவ்விரண்டின் இன்ப சுகங்களையும் நீ விட்டு விடு என்று கூறுகிறார்கள். இதன் சுருக்கம் இவ் உலகின் இன்ப சுகங்கள் என்ற செருப்பையும், மறுமையின் இன்ப சுகங்கள் என்ற செருப்பையும் கழற்றிவிட்டு இறைவன்பால் செல்லத் தயாராகுங்கள் என்று சொல்கிறார்கள். وَتَجَرَّدْ عَنِ الْأَكْوَانِ அனைத்து சிருட்டிகளையும், படைப்புகளையும் விட்டு விடு என்று போதிக்கின்றார்கள். இதையடுத்து அனைத்தை விட்டும் நீ “பனா” ஆகு என்றும் சொல்கிறார்கள். “கவ்ன்” என்ற சொல்லின் பன்மைச் சொல்தான் “அக்வான்” என்பதாகும். சர்வ சிருட்டிகளையும் உன் மனதிலிருந்து எடுத்து விடு என்று கூறுகிறார்கள். இறுதியில் وَتَطَيَّبْ بِالتَّوْحِيْدِ ஏகத்துவம் – எல்லாம் அவனே என்ற மணம் பூசிக் கொள் என்றும் கூறுகிறார்கள்.