أَوَّلُ مَنْ تَكَلَّمَ عَنِ الْمَقَامَاتِ ذُو النُّوْرِ الْمِصْرِيْ،
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
துன்னூன் அல்மிஸ்ரி:
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய, “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் – உள்ளமை ஒன்று என்று பேசிய, எழுதிய மெய்ஞ்ஞானிகள் எண்ணில் அடங்காதவர்களாவர். இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதாயின் ஆயிரம் “கெண்டெய்னர்” சுமக்கும் அளவு நூல்கள் எழுத முடியும். அல்ஹம்து லில்லாஹ்!
முதலில் அவர்களின் வாழ்க்கை, வரலாற்றுக் குறிப்புக்களில் முக்கியமானவற்றை எழுதிவிட்டு அவர்கள் சொன்ன தத்துவங்கள் பற்றிக் கூறுகிறேன்.
இவரின் இயற் பெயர் ثَوْبَانْ – தவ்பான். இவரின் சிறப்புப் பெயர் “அபுல் பைழ்”. இவரின் பட்டம் “துன்னூன்”.
இவர் ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும், சட்ட மேதையுமாவார்.
இவர் “மிஸ்ர்” நாட்டின் أَخْمِيْمْ “அக்மீம்” எனுமிடத்தில் ஹிஜ்ரீ 179ல் – கி.பி 796ல் பிறந்து ஹிஜ்ரீ 245ல் – கி.பி 859ல் இறையடி சேர்ந்தார்கள்.
இவர் “ஹதீது” கலை மேதையாகவும் விளங்கினார். இவர் காலத்தில் அறிவு, சட்டக்கலை, ஞானக் கலை, ஒழுக்கம், பக்தி போன்ற அம்சங்களில் இவர் போல் ஒருவர் இருந்ததில்லை.
இமாம் குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
يقزل الإمام القشيريّ فى رسالتِه أنّه أوّلُ مَن عرَّفَ التّوحيدَ بالمعنى الصوفي، وأنّه أوّلُ من وضَعَ تعريفاتٍ للوَجْدِ والسّماعِ والمقامات والأحوال، اتّهمَهُ معاصروه بالزّندقة، وحاولُوا الإيقاعَ بينه وبين الخليفة المُتوكِّلِ واصِفينه بأنّه أحدثَ علما لم تتكلّم الصحابةُ، فاستجْلَبَه المتوكِّلُ إليه فى بغداد سنة 829 م ويُقال إنّه لمّا دخل عليه وعظه فبكى، فردّه إلى مصر مُكرِما،
இறைஞானி குஷைரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ரிஸாலா”வில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(இமாம் துன்னூன் மிஸ்ரி அவர்கள்தான் முதன் முதலாக ஸூபீகளின் கருத்துப்படி “தவ்ஹீத்” என்பதை அறிமுகம் செய்து வைத்தவர்களாவார்கள். இதுமட்டுமல்ல. ஸூபீ மகான்கள் கூறுகின்ற وَجْدْ , سَمَاعْ , مَقَامَاتْ, أَحْوَالْ எனும் சொற்களுக்கு வரைவிலக்கணம் சொன்ன முதல் மனிதரும் இவர்தான். இவரின் காலத்தவர்கள் இவர்களை “சிந்தீக்” என்று சந்தேகப்பட்டார்கள்)
“சிந்தீக்” زنديق என்ற சொல் உர்தூ, பாரசீக மொழிகளில்,
هو الّذي يُظهر الإيمانَ ويُضمِرُ الكفرَ
“ஈமான் விசுவாசத்தை வெளிக்காட்டி “குப்ர்” ஐ மறைப்பவர் என்று சொல்லப்படும்”
இவரின் ஆன்மிகக் கருத்துக்கள் விடயம் தெரியாத உலமாஉகளுக்கு மார்க்கத்திற்கு முரணாகத் தென்பட்டதால் இவரைக் கொலை செய்வதற்கு பல வழிகளிலும் முயற்சித்தார்கள். ஆயினும் அல்லாஹ் இவரின் கழுத்தை வாளுக்கு இரையாக்க விரும்பவில்லை.
قَالَ السُّلَمِيُّ فِي (مِحَنِ الصُّوْفِيَّةِ) : ذُو النُّوْنِ أَوَّلُ مَنْ تَكَلَّمَ بِبَلْدَتهِ فِي تَرْتِيْبِ الأَحْوَالِ، وَمَقَامَاتِ الأَوْلِيَاءِ، فَأَنْكَرَ عَلَيْهِ عَبْدُ اللهِ بنُ عَبْدِ الحكَمِ، وَهَجَرَهُ عُلَمَاءُ مِصْرَ، وَشَاعَ أَنَّهُ أَحْدَثَ عِلْماً لَمْ يَتَكَلَّمْ فِيْهِ السَّلَفُ وَهَجَرُوْهُ حَتَّى رَمَوْهُ بِالزَّنْدَقَةِ.
இறைஞானி இமாம் ஸுலைமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “மிஹனுஸ் ஸூபிய்யா” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(துன்னூன் என்பவரே தங்களின் ஊரில் இறைஞானிகளுக்கு ஏற்படும் “அஹ்வால்” ஆன்மிக நிலைகளின் ஒழுங்கு முறை பற்றியும், வலீமார்களின் தரங்கள் பற்றியும் முதலில் பேசியவர்களாவர். அப்துல்லாஹ் இப்னு அப்துல் ஹிகம் என்பவர் இவரை நிராகரித்தார். “மிஸ்ர்” நாட்டு மார்க்க அறிஞர்களும் இவரை வெறுத்தார்கள். முன்னோரில் எவரும் பேசாத ஞானம் இவர் பேசுகிறார் என்று கூறி இவரை “சிந்தீக்” என்றும் சொன்னார்கள். رَمَوْهُ بِالزَّنْدَقَةِ என்றால் “சிந்தீக்” என்று சொன்னார்கள் என்றுதான் பொருளேயன்றி கல்லால் எறிந்தார்கள் என்பது கருத்தல்ல. “துன்னூன்” அவர்கள் “ஸுதான்” பரம்பரையில் உள்ளவரும், “குறைஷ்” குலத்தவர்களின் அடிமையாக இருந்தவருமாவார்.
فَلَمَّا مَاتَ أَظَلَّتِ الطَّيْرُ جَنَازَتَهُ، فَاحْتَرَمُوْا بَعْدُ قَبْرَهُ،
இவர் மரணித்த பின் இவரின் “ஜனாசா”விற்கு பறவைகள் நிழல் கொடுத்தன. பின்னர் இவரின் “கப்ர்” அடக்கவிடத்திற்கு கண்ணியம் செய்தனர்.
இவர் ஸூபீ மகான்களான வலீமாரில் மிகவும் முந்தினவராவார்.
இவரின் சில கருத்துக்கள்:
ذو النون المصري: هو أوّلُ من تكلّم عن المقامات، حيث ذكر أنّها سبعة، أوّلُها الإنابةُ، وآخرُها التوكُّلُ،
துன்னூன் அல்மிஸ்ரி என்பவர்தான் முதலில் வலீமாருக்குரிய “மகாமாத்” ஆன்மிக நிலைகள் பற்றிப் பேசியவராவார். ஏழு நிலைகள் என்றும், பத்தொன்பது நிலைகள் என்றும் கூறியுள்ளார்கள். அவற்றில் முந்தினது “இனாபத்” என்றும், இறுதியானது “தவக்குல்” என்றும் கூறியுள்ளார்கள். இவ்விரு அம்சங்கள் தொடர்பான விளக்கம் பின்னால் வரும்.
أمّا الجنيدُ بن محمد البغدادي فقد ذَكَرَ أربعةَ مقاماتٍ، التوبةُ والخوفُ والرجاءُ والمُراقبةُ، (نشأةُ الفلسفة الصوفيّة لِعرفان عبد الحميد، ص 151)
ஜுனைத் இப்னு முஹம்மத் வலீமாரின் ஆன்மிக படித்தரங்கள், ஆன்மிக நிலைகள் நான்கு என்று கூறியுள்ளார்கள். இந் நிலைகளின் விபரமும் பின்னால் வரும்.
وَعَدَّ أبو سعيد الخرّاز عشَرَ مقامات، التوبةُ، والخوفُ، والرجاءُ، والصّلاحُ، والإرادةُ، والطّاعةُ، والمحبّةُ، والشّوقُ، والولايةُ، والقُربُ، (حقائق عن التصوّف لعبد القادر عيسى، ص 274)
والمقاماتُ عند أبي طالب المكّيّ تِسعةٌ، التوبةُ، والصّبرُ، والشّكرُ، والرّجاءُ، والخوفُ، والزُّهدُ، والتوكُّلُ، والرِّضَا، والمحبّةُ، (قوت القلوب لأبي طالب المكيّ، 1-208، والتّنوير لابن عطاء الله السِّكّندري، ص 3 )
இறைஞானிகளும், ஸூபீ மகான்களும், மற்றும் “தரீகா”க்களின் “மஷாயிகு”மாரும் ஒருவன் அல்லாஹ்வை அறிவதற்கும், அவனை அடைவதற்கும் பல வழிகள் கூறியுள்ளார்கள். இவ் வழிகளைக் கடக்காத எவனும் அல்லாஹ்வை அறிந்தாலும் கூட அவனை அடைய முடியாது.
இதுவரை 23 “மகாமாத்” கடவைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இது நான் சொன்னதுமல்ல. எனது கற்பனையுமல்ல. மாறாக இறைவழி நடந்து, இறைவனையறிந்து, அவனை அடைந்து, “பனா” நிலையடைந்த ஆன்மிக ஞானிகள், மற்றும் ஸூபீ மகான்கள் கூறிய “மகாமாத்”துகளாகும். படித்தரங்களாகும். இவர்கள் கூறியுள்ள இவற்றின் விபரங்களை ஒவ்வொன்றாக விளக்கி வைப்பதாயின் ஒரேயொரு கட்டுரையில் கூறிவிட முடியாது. சிறிய அளவிலேனும் ஒரு நூல்தான் எழுத வேண்டும்.
இதன் விபரங்களை வாசிக்கின்றவர்கள் தாமும் இவ்வழி நடந்து எதார்த்தமான உண்மையைக் கண்டறிய விரும்பினால், அல்லாஹ்வைக் கண்டு பேரின்பம் சுவைக்க விரும்பினால் இவர்கள் மேற்கண்ட சுமார் 23 அம்சங்களையும் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.
மேற்கண்ட 23 விடயங்களில் زُهْدٌ பற்றில்லாமை, تَوَكُّلْ ஒப்படைத்தல், اَلرِّضَا பொருந்திக் கொள்தல் முதலானவையும் அடங்கும். “துன்யா” இவ்வுலகப் பற்று உள்ளத்தை விட்டும் முழுமையாக வெளியேற வேண்டும். ஓர் ஊசியின் பற்றுக் கூட அவன் உள்ளத்தில் இருத்தலாகாது.
يقول أحمد المُستغانَمِي (المريدُ يريد الخُروجَ عن الكلِّ، فإذا وقف مع البعض فيكون قاطعا له عن الله، ولو وقف مع ذُبابٍ أو غُبارِ الطريق، وقد بَلَغنَا أنّ بعض المشائخِ أَمَرَ تلميذَه بالخُروجِ عن الحِسِّ، أي يَتَجَرَّدُ، فخرج ذلك المريد عن كلِّ ما يملِكُ، ولم يترك شيئا زائدا عن ستر العورة، إلّا إبرةً تركها لِتَرْقِيعِ ثوبه، فتعذَّرَ عليه الفتحُ، فسئلَ شيخَه عن السبب المانع، فقال له الشّيخ: إبرةٌ، إذا بقيت للمريد تحجِبُه عن ربِّه، فنزعها المريدُ، ففُتِح عليه من حينِه، (المِنح القُدُّوسيّة للمستغانمي، ص 260)
அறிஞர் அஹ்மத் அல் முஸ்தஙானமீ அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள். ஒரு “முரீத்” சிஷ்யன் தனக்குள்ள அனைத்துச் சொத்துக்கள், மற்றும் உடைகள் அனைத்தை விட்டும் வெளியேறி “துன்யா” இவ் உலகின் எந்தவொரு தொடர்புமின்றி வாழ, இழக்க விரும்புகிறான். ஆயினும் அவற்றில் சிலதை மட்டும் வைத்துக் கொள்வதால் அவை கொசுவாகவோ, அல்லது பாதையால் நடந்து செல்லும் போது உடலில் அல்லது உடையில் பட்ட புழுதியாகவோ இருந்தாலும் அவற்றால் அல்லாஹ்வை அடைவது கஷ்டம் என்று அவனுக்கு விளங்கினால் அவற்றை விட்டும் வெளியேற வேண்டும்.
ஒரு வரலாறு உண்டு. அதை இங்கு எழுதுகிறேன். இறைஞானிகளில் ஒருவர் தனது “முரீத்” சிஷ்யனுக்கு அவனுக்குள்ள சொத்து, சுதந்திரம் அனைத்தை விட்டும் வெளியேறுமாறும், அனைத்தையும் முற்றாகத் துறந்து விடுமாறும் பணித்தார். அவர் கட்டளைப்படி அவன் தனது மானத்தை மறைக்குமளவு ஒரு துணித் துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்கிருந்த அனைத்தையும் துறந்தான். ஆயினும் துணி கிழிந்தால் அதற்கு அண்டை போடுவதற்காக ஓர் ஊசியை மட்டும் எடுத்துக் கொண்டான். அவ்வாறு எடுத்துக் கொண்டாலும் அவனுக்கு ஞான வழி திறக்காது. அவனுக்கு திறக்கவுமில்லை. அப்போது அவன் தனது குருவிடம் வந்து நான் எனக்கிருந்த அனைத்தையும் துறந்து, அனைத்து தொடர்புகளையும் அறுத்துவிட்டு உடை கிழிந்தால் அதற்கு அண்டை போடுவதற்காக ஓர் ஊசியை மட்டும் வைத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு ஞான வழியில் வெற்றி கிடைக்கவில்லையே ஏன்? என்று கேட்டான். அதற்கு அந்த குரு ஓர் ஊசி இருந்தாலும் கூட ஒரு சிஷ்யனை அல்லாஹ்வை விட்டும் துண்டித்து விடும் என்று கூறினார்கள். உடனே அந்த சிஷ்யன் தான் வைத்திருந்த ஊசியையும் தூக்கியெறிந்தான். அதன் பிறகுதான் அவனின் ஆன்மிக வழியில் வெற்றி கிடைத்தது.
அல் மினஹுல் குத்தூஸிய்யா,
பக்கம் 260, ஆசிரியர்: முஸ்தஙானமீ
ஸூபீகள் போல் எல்லோரும் வாழ்வது கடினம். குறிப்பாக இக்காலத்தில் வாழ்வது மிகவும் கடினம். எனினும் முஸ்லிம்கள் தம்மால் முடிந்த அளவு ஸூபீகளின் கொள்கையிலும், மற்றும் அவர்களின் பண்பாடுகளிலும் முயற்சிக்க வேண்டும்.
முற்றும்.