தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
أبو إسماعيل الهَرْوِي،
هو عبد الله بن محمد بن علي، أبو إسماعيل الأنصاري الهروي الحنبلي، المُلقَّبُ بشيخ الإسلام، وُلد فى هَرَاةْ – بأَفْغَانِسْتَانْ، سنة 396 هـ، أخذَ التصوّفَ عن الخرقاني، تولّى التّدريسَ والتّحديثَ والوعظَ والتفسير فى خُراسان، وعَظُمَ أمرُه، له كلامٌ حسنٌ فى إثباتِ الصّفات، والردِّ على أهل الكلام، ولكن لهُ كلامٌ خطيرٌ فى التصوّف يدلّ على إيمانِه بوحدة الوجود، ولهذا فإنّ العلماءَ من أهل السنّة تارةً يُثنون عليه، وتارةً يقدحون فيه، حتّى ذكر ابن تيميّة أنّ الهَروي ينتهي (إلى التوحيد الّذي هو حقيقة الإتّحاد)، له مؤلّفاتٌ، منها ‘منازل السائرين، والفاروق فى الصفات، وطبقات الصُّوفيّة ‘، تُوفّي بِهَرَاةْ سنة 481 هـ،
அபூ இஸ்மாயீல் ஹர்வீ என்பவர் “அன்ஸார்” குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஹன்பலீ மத்ஹப் வழி செல்பவருமாவார். இவர் தனது காலத்தில் அறிஞர்களால் “ஷெய்குல் இஸ்லாம்” இஸ்லாமின் தலைவர் எனப் பட்டம் சூட்டப்பட்டிருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டில் “ஹறாத்” என்ற ஊரில் ஹிஜ்ரீ 396ல் பிறந்தார். கர்கானீ என்ற குருவிடம் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் கற்றார். “குறாஸான்” நாட்டில் கல்வி கற்றுக் கொடுத்தல், பிரசங்கம் செய்தல், “ஹதீது”கள் விரிவுரை செய்தல், திருக்குர்ஆன் விரிவுரை செய்தல் முதலான பணிகளைப் பொறுப் பேற்றுச் செய்தார். இதனால் இவரின் மகிமை பெருகியது. அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகளை தரிபடுத்தும் விடயத்தில் அழகான ஞானம் இவருக்கு இருந்தது. “இல்முல் கலாம்” என்பதை மறுப்பதிலும் திறமை இருந்தது. “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுவதிலும், ஸூபிஸ ஞானம் பேசுவதிலும் அபார திறமை இவருக்கு இருந்தது. இக்கலையில் ஆழமாகப் பேசும் திறமையும் இருந்தது. இதனால் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய உலமாஉகள் சில நேரம் இவரைப் புகழ்வார்கள். சில நேரம் இவரை இகழ்வார்கள். இவர் பற்றிக் கூறிய இப்னு தைமிய்யா இவர் “ஹுலூல் – இத்திஹாத்” உள்ளவர் என்று கூறியுள்ளார். இவர் பல நூற்கள் எழுதியுள்ளார். அவற்றில் “மனாசிலுஸ் ஸாயிரீன், அல்பாறூக் பிஸ்ஸிபாத், தபகாதுஸ்ஸூபிய்யா” போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஹர்வீயின் தத்துவம்:
قال أبو إسماعيل الهَروِي: لَا تَتَحَقَّقُ الْحَقِيْقَةُ (الحقيقة من أسماء وحدة الوجود) بِإِثْبَاتِ النَّفْسِ، بَلْ تَتَحَقَّقُ الْحَقِيْقَةُ بِنَفْيِ الْوُجُوْدِ، وَلَا تَثْبُتُ الْحَقِيْقَةُ بِالْإِثْنَيْنِيَّةِ، فَإِثْبَاتُ الْإِثْنَيْنِيَّةِ شِرْكٌ، وَنَفْيُ الْإِثْنَيْنِيَّةِ تَوْحِيْدٌ، (نفحات الأنسِ من حضرات القدس، لعبد الرحمن الجامي،ص 173)
அபூ இஸ்மாயீல் ஹர்வீ பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
(“ஹகீகத்” என்பது – “ஹகீகத்” என்பது “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பெயர்களில் ஒன்று – தன்னைத் தரிபடுத்துவதன் மூலம் உறுதியாகாது. எனினும் “வுஜூத்” எனும் உள்ளமை தனக்கு இல்லை என்பதன் மூலமே “வஹ்ததுல் வுஜூத்” தரிபடும். உறுதியாகும். இரண்டைக் கொண்டு இது ஒருபோதும் உறுதியாகாது. இரண்டு என்ற கொள்கை இணையாகும். இரண்டில்லை என்பதே சரியான “தவ்ஹீத்” ஆகும்)
(நபஹாதுல் உன்ஸ் மின் ஹழ்றதில் குத்ஸ், ஆசிரியர்: அப்துர் றஹ்மான் அல்ஜாமீ, பக்கம்: 173)
இஸ்மாயீல் ஹர்வீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். சுருக்கம் என்னவெனில் “வஹ்ததுல் வுஜூத்” உள்ளமை ஒன்று என்பது திட்டமாவதாயின் “வுஜூத்” உள்ளமை என்பது ஒன்றேயன்றி அது இரண்டோ, பலதோ அல்ல என்பது திட்டமாக வேண்டும். அதாவது “துவிதம்” இரண்டு உள்ளது என்ற நம்பிக்கை நீங்கி இரண்டில்லை ஒன்றுதான் எனும் “அத்வைதம்” திட்டமாக வேண்டும்.
இஸ்லாம் துவிதத்தை வலியுறுத்துகிறதா? அத்வைதத்தை வலியுறுத்துகிறதா? என்ற அடிப்படை கூடத் தெரியாதவர்களே உலமாஉகளிலும், பொது மக்களிலும் அதிகமாக உள்ளார்கள். “துவிதம்” என்பது இரண்டைக் குறிக்கும். அத்துவிதம் என்பது அல்லது அத்வைதம் என்பது ஒன்றையே குறிக்கும். “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற அனைவரும் அத்வைதம் பேசுபவர்களேயாவர். இவ்விபரம் நமது உலமாஉகளுக்கு தெரியாமலிருப்பது விந்தையாக உள்ளது.
ஹக்கு வேறு, கல்கு வேறு – படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று நம்பினவர்கள் அனைவரும் இரண்டு “வுஜூத்” உள்ளமை என்று சொல்பவர்களேயாவர். அல்லாஹ்வுக்கு ஒரு “வுஜூத்” என்றும். படைப்புக்கு தனியான வேறு “வுஜூத்” உள்ளமை உண்டு என்றும் சொல்பவர்களாவர். இவ்வாறு சொல்பவர்கள் – உள்ளமையை இரண்டாக அல்லது பலதாக ஆக்கியவர்கள் – “காபிர்கள்” என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இதுவே ஸூபிஸத்தின் முடிவாகும். ஸூபீ மகான்கள் அனைவரும் தமக்கிடையே கருத்து வேறுபாடின்றி “ஹக்கு வேறு, கல்கு வேறு” என்று சொல்வதும், நம்புவதும் “குப்ர்” என்று சொல்லியுள்ளார்கள்.
ஸூபீ மகான்களால் எழுதப்பட்ட எந்த நூலை வாசித்தாலும் இந்த விபரம் நிச்சயமாக அதில் இருக்கும்.
وقد أشار الصوفيّ المُعاصرحسَنْ بن رضوان (إلى أنّ سرّ وحدة الوجود أن يشهد الصوفيُّ الحقَّ تعالى كلَّ ذرّةٍ من ذرّات الكائنات، مع التنزيه التّامّ عن الحلول و الاتّحاد، مُعَلِّلًا ذلك بقوله (إذ لا شيء فى الوجود غيرُه، حتّى يَحُلَّ فيه أو يَتَّحِدَ به) – روض القلوب المستطاب، لحسن بن رضوان، ص 334 .
(حسن بن رضوان بن محمد، من شيوخ الطريقة الخلوتيّة، وُلد سنة 1239 هـ فى إحدى قُرى بني يُوسف بمِصْرَ، تعلّم فى الأزهر، ودخل طريقَ التصوّف، له مؤلّفات، منها نفحات فيض الرضوان فى الدّلالة على معالم سلوك طريق العرفان، والتّوجّه الأفخم فى التوسّل يالاسم الأعظم، وروض القلوب المستطاب، وهي اُرجوزة طويلة فى التصوّف، تقرب من اثني عشر ألف بيت، ورُبّما كانت أكبر منظمة فى قواعد التصوّف، توفّي بمصر سنة 1310 هـ، )
தற்கால ஸூபீ ஹஸன் இப்னு ரிழ்வான் பின்வருமாறு கூறுகிறார். (“வஹ்ததுல் வுஜூத்” என்பதின் இரகசியம் என்னவெனில் ஒரு ஸூபீ அல்லாஹ்வின் ஒவ்வொரு படைப்பிலும் “ஹுலூல் – இத்திஹாத்” இன்றி அல்லாஹு தஆலாவைக் காண்பதாகும். இதற்குக் காரணம் உள்ளமையில் அவனல்லாத ஒரு வஸ்து இல்லாதிருப்பதாகும். அவனல்லாத ஒன்று இருந்தால்தானே “ஹுலூல்” இறங்குதல் என்பதற்கும், “இத்திஹாத்” ஒன்று இன்னொன்றுடன் கலத்தல் என்பதற்கும் இடமேற்படும். இரண்டில்லையென்றால் எது எதில் இறங்குவது? எது எதோடு ஒன்றாவது?)
(றவ்ழுல் குலூபில் முஸ்ததாப், ஆசிரியர்: ஹஸன் இப்னு ரிழ்வான், பக்கம் 334)
وقال الحلّاج: والشِّركُ إثباتُ غيرٍ، والشركُ لا شكّ جحدٌ،
“ஷிர்க்” என்பது அல்லாஹ் அல்லாத ஒன்று அல்லது அல்லாஹ்வுக்கு வேறான ஒன்று உண்டு என்று தரிபடுத்துவதாகும். “ஷிர்க்” என்பது சந்தேகமின்றி அல்லாஹ்வை மறுப்பதாகும் என்று இமாம் மன்சூர் ஹல்லாஜ் அருளியுள்ளார்கள்.
إنّ أبا نصر الطُّوسي مؤلِّفُ كتاب اللُّمع وهو (الكتاب الأمّ فى تاريخ التصوّف، قد صرّح بأنّه بلَغَه أنّ جماعة تقول بالحلول، ثمّ ذكر أنّه لا يعرف شيئا عن هذه الجماعة، وشكّك فى أن يكون أحدٌ من الصوفيّة قد اعتقد بالحلول، وقال (فالحلول أبعدُ ما يكون عن مفهوم الصوفي) (دراسة فى التجربة الصوفية، لِنَهاد خياطة، ص 14)
அபூ நஸ்ர் அத்தூஸீ என்பவர் “அல்லுமஉ” என்ற நூலின் ஆசிரியராவார். இந்நூல் ஸூபிஸ வரலாற்றின் தாய் நூலாகும். இந்நூலில் ஒரு கூட்டம் “ஹுலூல்” கொள்கை பேசுவதாக அவருக்கு செய்தி கிடைத்ததாக எழுதியிருந்தார். பின்னர் அவர்கள் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாதென்றும் குறிப்பிட்டுள்ளார். “ஹுலூல்” கொள்கையுடையோர் ஸூபீகளில் இருப்பார்கள் என்று சந்தேகப்பட்டார். இறுதியாக ஸூபீகளின் கருத்துக்கு “ஹுலூல்” கொள்கை மிகவும் தூரமானதென்று கூறியுள்ளார்.
திறாஸதுன் பித் தஜ்ரிபதிஸ் ஸூபிய்யா, ஆசிரியர்: நிஹாத் கயாதா, பக்கம் 140)
يقول ابن عربي: فَهُوَ مِنْ حَيْثُ الْوُجُوْد عَيْنُ الْمَوْجُوْدَاتِ، (فصوص الحكم، لابن عربي بشرح القاشاني، ص 77)
அல்லாஹ் “வுஜூத்” எனும் உள்ளமையைக் கவனித்து படைப்புக்கள் தானானவனாகவே உள்ளான்.
(புஸூஸுல் ஹிகம், இப்னு அறபீ, ஷர்ஹுல் காஷானீ, பக்கம் 77)
يقول الغزّالي: فالموجودُ وجهُهُ فَقَطْ،
படைப்பு அவனின் “தாத்”துதான். (மிஷ்காதுல் அன்வார், இமாம் – ஙஸ்ஸாலீ, பக்கம்: 71)
படைப்பு அல்லாஹ்வின் “வஜ்ஹ்” முகம் மட்டுமே என்று இமாம் ஙஸ்ஸாலீயின் வசனம் கூறுகிறது. இது பொருத்தமற்ற கருத்தாகும். ஙஸ்ஸாலீ அவர்களின் “வஜ்ஹ்” என்ற சொல் அல்லாஹ்வின் “தாத்”தையே குறிக்கும். இவ்வசனம் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் “வஜ்ஹ்” முகம் உண்டு என்ற வசனம் போன்றதாகும். (02-115) அதில் “வஜ்ஹ்” என்ற சொல்லுக்கு “தாத்” என்று விரிவுரை எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
يقول علي وَفَا: هو عليّ بن محمد السِّكّندري الشاذلي ابن شيخ الطريقة الوَفائيّة الشاذليّة، وشيخها بعده، وُلد فى القاهرة سنة 759 هـ، أو 761 هـ، كان يَسْتَمِيْلُ العوام بالأذكار المُلْحِنة، فكثر أتباعُه، وغَلَوا فى ذكرهم يا علي! يا حكيم! وكانوا كما يقول معاصِرُه ابن حجر إذا قالوا يا علي يُؤمُون إليه، وسجد له أصحابُه ذات اليوم، فأنكر عليهم ابن حجر، فقرأ علي وفا قول الله تعالى ‘فأينما تولّوا فثمّ وجه الله ‘ (البقرة 115) له مؤلّفات، منها الباعثُ على الخلاص فى أحوال الخواصّ، الوَصايا، مفاتيح الخزائن العليّة، دِيوان شعر، توفّي بالقاهرة، سنة 817 هـ، (807)
அலீ வபா: இவர் அலீ இப்னு முஹம்மத். இஸ்கந்தரிய்யாவையும், ஷாதுலிய்யா தரீகாவையும் சேர்ந்தவர். இவர், الطريقة الوفائيّة الشّاذليّة “தரீகா”வின் “ஷெய்கு”வின் மகனாவார். தந்தையின் பிறகு இவர் “ஷெய்கு” ஆனார். இவர் கெய்ரோவில் ஹிஜ்ரீ 759ல் அல்லது 761ல் பிறந்தார். இராகமான “திக்ர்”கள் மூலம் பொது மக்களைச் சாய்த்துக் கொண்டார். அவரின் ஆதரவாளர்கள் பெருகினர். அவரைக் கண்ணியம் செய்வதில் எல்லையைக் கடந்தார்கள். அவர் அதைப் பொருந்திக் கொள்பவராகவும் இருந்தார். அவர்கள் தமது “திக்ர்”களில் يا عليُّ يا حليمُ என்று சொல்வார்கள். அவ்வாறு சொல்லும் போது அவரைச் சுட்டிக் காட்டுவார்கள். ஒரு நாள் அவரின் சிஷ்யர்கள் அவருக்கு “ஸுஜூத்” செய்தார்கள். இதைக் கண்ட இப்னு ஹஜர் அவர்களைத் தடுத்தார்கள். அப்போது அங்கிருந்த அலீ வபா அவர்கள் நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அலீ வபா அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றில்
الباعث على الخلاص من أحوال الخواص، الوصايا، مفاتيح الخزائن العليّة، ديوان شعر،
என்பவை அடங்கும். இவர் ஹிஜ்ரீ 807ல் கெய்ரோவில் “வபாத்” ஆனார்.
“அலீ வபா” அவர்கள் கூறிய தத்துவங்களும், இவர் “ஷரீஆ”வுக்கு முணராக நடந்தாரா? இல்லையா? என்பது தொடர்பான விபரங்களும் அடுத்த தொடரில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்…
தொடரும்…
ஸூபிஸமே சுவாசம்! இறைஞானமே எமது தாகம்!
(ஷஷபத்வா||வுக்கு விடிவு வரவில்லையானால் நாம் ஐ. நா வரை செல்லத் தயார்)