தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عبد الغنيّ النابلسيّ،
هو عبد الغني بن إسماعيل بن عبد الغني بن إسماعيل، الدِّمشقيّ، الحنَفِيّ، المشهور كأسلافِه بالنابلسـي، وُلد سنة 1050 هـ فى مدينة دِمشق، ونشأَ بها، تحت كنف والده، الّذي كان صوفيّا على طريقة ابن عربي،
அப்துல் ஙனீ அந்நாபலஸீ அவர்கள் “திமஷ்க்” சிரியாவின் தலை நகரான டமஸ்கஸ் நகரைச் சேர்ந்த, ஹனபீ மத்ஹப் வழியைச் சேர்ந்தவர்களாவர். தங்களின் முன்னோர் போல் “நாபலஸீ” என்று அறிமுகமானவர்களாவர். ஹிஜ்ரீ 1050ம் ஆண்டு டமஸ்கஸ் பட்டணத்தில் பிறந்தார்கள். தந்தையின் மேற்பார்வையின் கீழ் அங்கேயே வளர்ந்தார்கள். இவரின் தந்தை இப்னு அறபீ அவர்களின் தரீகா வழியில் நடந்த ஒரு ஸூபீ ஆவார்கள்.
أخذ النّابلسـي علوم الفقه، والحديث، والكلام، واللّغة عن علماء الشّام، حتّى تمكّنَ من هذه العلوم، وأخذ التصوّفَ عن البلخي، (هو سعيد أو أبو سعيد البلخي، من مشائخ الطريقة النّقشبنديّة، قدِمَ دِمشق 1087 هـ)
நாபலஸீ அவர்கள் “பிக்ஹ்” சட்டக் கலையையும், “ஹதீது” கலையையும், “தவ்ஹீத்” கொள்கைக் கலையையும், மொழியையும் சிரியாவின் உலமாஉகளிடம் கற்றார்கள். “தஸவ்வுப்” எனும் ஸூபிஸக் கலையை “பல்கீ” அவர்களிடமிருந்து கற்றார்கள். (பல்கீ அவர்கள் ஸயீத் அல்லது அபூ ஸயீத் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் “நக்ஷபந்திய்யா” ஷெய்குமார்களில் ஒருவர். ஹிஜ்ரீ 1087ல் டமஸ்கஸ் வந்தார்கள்.
ولمّا تجاوز الأربعين لَزِمَ الخلوةَ المُقرّرةَ عند الصّوفيّة، فأقام فى بيتِه سبعَ سنين، لا يخرج منه، تاركا صلاة الجمعة والجماعة، معفيا شعرَه، مطيلا أظفاره مُلازما للرّياضات الصوفيّة، مواظبا على قراءة كُتُبِ دُعاةِ وحدة الوجود،
நாபலஸீ அவர்கள் 40 வயதை அடைந்த பின் ஸூபீகளிடம் அறியப்பட்ட “கல்வத்”தை மேற் கொண்டார்கள். அவர்களின் வீட்டிலேயே ஏழு ஆண்டுகள் “ஜமாஅத்”துடன் தொழப் போகாமலும், “ஜும்ஆ” தொழுகைக்குப் போகாமலும் வீட்டிலேயே இருந்தார்கள். தலைமுடிகளை வளர விட்டவர்களாகவும், நகங்களை வளர்த்தவர்களாகவும், ஸூபீ மகான்களின் பயிற்சிகளில் கவனம் செலுத்தியவர்களாகவும் இருந்தார்கள். “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய மகான்களின் நூல்களை வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
يقول عنه أحدُ معاصريه من الصوفيّة، (أَدْمَنَ المطالعةَ فى كتب الشّيخ محي الدين ابن عربي قدّس الله سرّه وكُتُبَ السادة الصوفيّة، كابن سبعين، فعادت عليه بركاتُ أنفاسِهم، فأتاه الفتحُ اللّدنّيُّ) (سِلكُ الدّرر للمرادي)
ஸூபீ மகான்களில் நாபலஸீ அவர்களின் காலத்தவர்களில் ஒருவர் பின்வருமாறு சொல்கிறார்.
(நாபலஸீ அவர்கள் தொடர்ந்து – இடைவிடாமல் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹு அவர்களின் நூல்களையும், குறிப்பாக இறைஞானி இப்னு ஸப்ஈன் அவர்களின் நூல்களையும் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் அந்த மகான்களின் அருள் இவர்களுக்கு கிடைத்து “இல்ஹாம்” எனும் அறிவை பெற்றுக் கொண்டார்கள்.
ولمّا بلغ مرتبة اليقين عند الصوفيّة ، واستشعر وحدة الوجود خرج من خلوته، وقلع عَزْلتَه،وقام برحلات إلى بلدان الشام ومصـر، لزيارة أضْرِحَةِ المقدّسين عند الصوفيّة، وللإتّصال بأقطاب الصوفيّة الأحياء، ثم عاد إلى دمشق، سنة 1143 هـ ،
ஸூபீ மகான்கள் கூறுகின்ற “யகீன்” உடைய தரத்தை அடைந்து “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை உணர்ந்த போது “கல்வத்”தை விட்டும் வெளியேறி தனித்திருப்பதைத் துண்டித்து சிரியாவிலுள்ள கிராமங்களுக்கும், மிஸ்ர் நாட்டிற்கும் பயணம் செய்தார்கள். இப்பயணத்தின் நோக்கம் ஸூபீ மகான்களில் உயிரோடுள்ளவர்களைச் சந்திப்பதும், மரணித்தவர்களின் “தர்ஹா” அடக்கவிடங்களுக்குச் செல்வதுமேயாகும். இறுதியில் ஹிஜ்ரீ 1143ல் டமஸ்கஸ் வந்து சேர்ந்தார்கள்.
وفى دمشقَ كرّس حياتَه للتّدريس، والتأليف، ونشر التصوّف، وقام بالتدريس فى الجامع الأمويّ، وفى المدرسة السليمانيّة، كما تولّى إفتاءَ الحنفيّة، وتُوفّي بدمشق سنة 1143 ه، (سِلك الدّرر للمرادي، 3-31)
டமஸ்கஸ் நகரில் வாழ்ந்த காலத்தில் கற்றுக் கொடுப்பதிலும், நூல்கள் எழுதுவதிலும், ஸூபிஸ ஞானத்தைப் பரப்புவதிலும் தங்களை அர்ப்பணித்தார்கள். டமஸ்கஸ் நகரிலுள்ள “அல்ஜாமிஉல் அமவீ” எனும் ஜும்ஆப் பள்ளிவாயலில் ஞான வகுப்புக்கள் நடத்தினார்கள். இதே தலை நகரிலுள்ள ஸுலைமானிய்யாப் பாடசாலையிலும் கற்றுக் கொடுத்தார்கள். இதேபோல் ஹனபீ மத்ஹபின் “முப்தீ” பத்வா கொடுப்பவராகவும் நியமிக்கப்பட்டார்கள். ஹிஜ்ரீ 1143ல் டமஸ்கஸ் நகரிலேயே மரணித்தார்கள்.
ஆதாரம்: ஸில்குத் துறர்,
ஆசிரியர்: முறாதீ (பக்கம் 03-31)
وللنّابلسـي رحمه الله مؤلّفات كثيرة فى التصوّف، منها،
1 ) إيضاح المقصود من معنى وحدة الوجود،
2 ) جواهر النّصوص فى حلّ كلمات الفصوص،
3 ) جمع الأسرار فى منع الأشرار من الطعن على الصوفية الأخيار،
4 ) الوجود الحقّ
5 ) شرح ديوان ابن الفارض
6 ) ديوان الحقائق،
ويرى النّابلسـي رحمه الله أنّ الله وحده هو الموصوف بالوجود على وجه الحقيقة ، وفى هذا يقول:
ليس لله فى الوجود شريك – لا اشتباه فيه ولا تشكيكٌ
((ديوان الحقائق للنّابلسي 2 ஃ 16
இமாம் நாபலஸீ அவர்கள் பல கலைகளில் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். ஸூபிஸம், “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக எழுதிய நூல்களின் பெயர்கள் மேலே அறபியில் எழுதப்பட்டுள்ளன. “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் சந்தேகம் உள்ளவர்கள் கீழே உள்ள நூல்களையும், கீழே எழுதப்படும் நூல்களையும் வாசித்தால் தெளிவு ஏற்படும்.
நாபலஸீ அவர்கள் பின்வருமாறும் சொல்லியுள்ளார்கள்.
எதார்த்தத்தில் அல்லாஹ் மட்டுமே “வுஜூத்” உள்ளமை கொண்டு வர்ணிக்கப்பட்டவனாவான். அதாவது எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்கு மட்டுமே “வுஜூத்” உள்ளமை உண்டு. வேறொன்றுக்கும் அது கிடையாது. இது தொடர்பாக அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(உள்ளமையில் அல்லாஹ்வுக்கு நிகர் இல்லை. அதில் எவருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இதன் பின் இதைத் தொடர்ந்து – “மவ்ஜூத்” உள்ளது யாவும் அல்லாஹ் என்று நம்பினார்கள்)
தீவானுல் ஹகாயிக், ஆசிரியர் நாபலஸீ, (02-16)
ثمّ اعتقد تبعا لذلك أنّ كلّ موجود فهو الله، قال النّابلسي،
ألا إنّ ذاتي ذاتُ كُلِّ الخلائقِ – وسَلْ عنه ذا علمٍ كريمِ الخلائقِ
((ديوان الحقائق للنّابلسي 2 ஃ 343
மேற் சொன்ன கருத்தைப் பின்பற்றி “இருக்கக் கூடிய அனைத்தும் அல்லாஹ் தானானவை” என்று நம்பினார்கள். இக்கருத்தை பின்வருமாறு பாடலில் கூறுகிறார்கள்.
“அறிந்து கொள் நிச்சயமாக எனது “தாத்”, படைப்புகள் அனைத்தின் “தாத்”துகளாகும். இது பற்றி நற்குணமுள்ள அறிஞனிடம் கேள்” என்று கூறியுள்ளார்கள்.
இப்பாடல் மூலம் அல்லாஹ் சொல்ல வேண்டிய வசனத்தையும், கருத்தையும் இமாம் நாபலஸீ அவர்கள் சொல்லியிருப்பது சிந்தனையிற் கொள்ள வேண்டியதாகும்.
வலீமாரில் அல்லாஹ்வின் “பனா” நிலை மிகைத்தால் அவர்கள் அல்லாஹ் பேசுவது போல் பேசுவார்கள். உதாரணமாக,
أَنَا الْكُلُّ فِى الْكُلِّ وَالْكُلُّ فِيَّ – وَلَا شَيْءَ إِلَّايَ تَمَّ الثَّنَاءُ
எல்லாவற்றிலும் நானே எல்லாம். எல்லாம் என்னாய் உள்ளன. என்னைத் தவிர வேறொன்றுமில்லை என்பது போன்று.
இந்தியா, ஜோர்தான், இறாக், சிரியா, ஈரான் பயணம்:
நானும், அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களும், அல்ஹாஜ் நஸார் அவர்களும் மேற்கண்ட நாடுகளுக்கு வலீமாரை “சியாறத்” தரிசிக்கும் நோக்கத்தோடு மட்டும் 2000ம் ஆண்டு பயணித்தோம். சுமார் 45 நாட்கள் பயணித்தோம்.
முதலில் இந்தியா சென்று தமிழ் மாநிலம், வட மாநிலங்களும் சென்று வலீமாரின் “சியாறத்” தரிசனத்தை முடித்து விட்டு ஜோர்தான் சென்றோம். அங்குள்ள வலீமாரைத் தரிசித்து விட்டு இறாக் சென்று அங்குள்ள வலீமாரின் தரிசனத்தை முடித்து விட்டு சிரியா சென்று அங்குள்ள வலீமாரையும் தரிசித்து விட்டு ஈரான் வந்து அங்குள்ள வலீமாரையும் சந்தித்து விட்டு நாடு திரும்பினோம்.
எங்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போது எந்த ஒரு நாட்டின் வழியாகவும் இலங்கை வர வாய்ப்பின்றி “பக்தாத்” தலை நகரில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்தோம். அக்கால கட்டத்தில் தினமும் காலையும், மாலையும் குத்பு நாயகம் அவர்களின் தரிசனம் எமக்குக் கிடைத்தது. எந்த ஒரு வழியாலும் வருவதற்கு “வீஸா” எடுக்க முடியாமற் போகவே குத்பு நாயகம் அவர்கள் பேரில் அறபியில் ஒரு “கஸீதா” பாடல் எழுதி அவர்களிடம் உதவி கேட்ட பிறகுதான் “வீஸா”விற்கான கதவு திறந்தது.
எங்களின் பயணத்தின் போது பல நபீமார்களினதும், பல நபீ தோழர்களினதும், நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினது மனைவியர்களிற் பலரினதும், மற்றும் எண்ணற்ற வலீமாரினதும் தரிசனம் எமக்கு கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்!
இன்று என்னுடன் வந்த இருவரும் பொருளாதாரத்தில் பெருங் கோடீஸ்வரர்களாக ஒளிர்கிறார்கள். ஆனால் நானோ பொருளாதாரம் தவிர ஆன்மிகச் செல்வத்தில் ஒளிர்கிறேன்.
எந்த ஓர் ஆலிமாயிருந்தாலும் அவர் அல்லாஹ்வினால் நேசிக்கப்படுவாராயின் அவருக்குப் பணச் செல்வத்தை மட்டும் அல்லாஹ் கொடுக்கமாட்டான். ஆனால் ஏனைய செல்வங்களை வழங்குவான்.
இப்பயணத்தின் போதே இத்தலைப்பின் கதாநாயகர் குத்பு – அப்துல் ஙனீ அந்நாபலஸீ குத்திஸ ஸிர்றுஹு அவர்களின் தரிசனம் எமக்கு கிடைத்தது. இவர்கள் சிரியா நாட்டின் தலை நகரான “திமஷ்க்” டமஸ்கஸில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்களின் கண்ணாடியால் அமைக்கப்பட்ட அடக்கவிடம் தலை நகரில் ஒரு பள்ளிவாயலின் உள்ளே உள்ளது. இவர்கள் இத்தலைப்பிற்குரியவர்கள் என்ற வகையில் இந்த வரலாறை எழுத வேண்டியாயிற்று.
என் உள்ளத்தை எரிக்கும் ஒரு நிகழ்வை இவ்விடத்தில் குறிப்பிடாமல் இருக்க என்னால் முடியவில்லை. என்னை விட அறிவிலும், அறபு மொழியிலும் திறமையுள்ள எனது ஆரம்ப கால நண்பர் ஒருவரை இன்னொருவர் பேட்டி கண்ட போது திருக்கலிமாவுக்கு என்ன பொருள் என்று பேட்டி கண்டவர் அவரிடம் கேட்கிறார். அதற்கவர் “அவாம்முன்னாஸ்” சாதாரண மக்கள் சொல்லும் “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்ற பொருளைச் சொல்கிறார். பேட்டி கண்டவர் அவரிடம் இதற்கு வேறு கருத்து உண்டா? என்று கேட்க “வேறு கருத்துக் கிடையாது என்றும், அப்துல் ஙனீ நாபலஸீ அவர்கள் நான் சொன்ன கருத்தையே சொல்லியுள்ளார்கள்” என்றும் சொன்னார். மீண்டும் பேட்டி கண்டவர் அவரிடம் சிலர் வேறு கருத்தும் சொல்கிறார்களே என்று கேட்ட போது (அவர்களெல்லாம் மடையர்கள்) என்று பதில் கூறுகிறார்கள்.
இவர் திருக்கலிமாவுக்கு வேறு ஆழமான பொருள் கூறிய ஸூபீ மகான்களையும், “ஆரிபீன்” இறைஞானிகளையும் ஒரே வார்த்தையில் “மடையர்கள்” என்று சொன்னாரே இவரின் இந்த வசனம்தான் எனதுள்ளத்தை இன்று வரை சுட்டுக் கரித்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் இந்த மகானுக்குப் பின்வரும் தத்துவத்தை விளக்கி வைப்பானாக!
إِنَّ الشُّهْرَةَ آفَةٌ – كُلٌّ يَتَمَنَّاهَا
وَإِنَّ الْخُمُوْلَ نِعْمَةٌ – كُلٌّ يَأْبَاهَا،
வானத்தைப் பார்த்தேன், பூமியைப் பார்த்தேன். மனிதனை எங்கும் காணல்லையே!
தொடரும்…