தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
أوّل من أنكر عقائد جماعة التّبليغ بدولة سريلانكا، وأوّل من نَطَقَ بعبارةِ ‘ هو الكلُّ ‘ هو الشّيخ الكامل والعارف الواصل والمدفون بمقبرة كُفِّهاوَتَّ الشّيخ عبد القادر العالم الصوفيّ القادريّ القاهريّ، رحمه الله رحمة واسعة،
لهذا الوليّ العظيم مزارٌ جميل معظّم فى مقبرة كُفِّهاوتَّ بكولومف من سريلانكا، يأتيه المريدون والمحبّون لزِيارتِه ولنيلِ فضلِه وفيضِه، وهذا الشّيخ رحمه الله ألّف فى حياتِه كُتُبًا كثيرة بلغة تامل، لغة المسلمين بدولة سريلانكا، وتَرجَمَ كتبا كثيرة من كتب الشّيخ الأكبر محي الدين ابن عربي رضي الله عنه، كأسرار الخلوة وغيرها، وترجم الشّيخ كتابه إلى لغة تامل باسم கல்வத்தின் ரகசியங்கள் ، يقول الشّيخ في ترجمتِه فى الصفحة الثانية،
அறிந்து கொள்ளும். வுஜுதில் உள்ளமையில் அல்லாஹ்வையும், அவனது செயல்களையும் தவிர வேறில்லை. (எல்லாம் அவனே) யாவும் அவனைக் கொண்டே நிலைத்திருக்கின்றன. அவனளவிலேயே மீளுகின்றன. கண்ணிமைப் பொழுதாவது அல்லாஹு தஆலா ஆலத்தை – அகிலத்தை விட்டும் மறைந்து கொண்டானேயானால் முழு உலகமும் ஒரேயடியாக இல்லாமலாகிவிடும்)
கல்வத்தின் இரகசியங்கள், பக்கம் 02, ஆசிரியர்: ஸூபீ ஹழ்றத் நாயகம்.
இங்கு மிகப் பிரதானமாக கவனிக்க வேண்டிய விடயம் ஸூபீ நாயகம் “எல்லாம் அவனே” என்ற வசனம் பாவித்திருப்பதேயாகும்.
معنى قول الشّيخ بالعربيّة مختصـرا، اعلم أنّه ليس فى الوجود إلّا الله وأفعالُه، (بل الكلُّ هو الله) وكلّ شيء قائمٌ به تعالى، وراجعٌ إليه، فإنّ غاب الله عن العالم ولو طرفة عين لصار العالم كلّه معدوما فى آنٍ واحد،
ஷெய்கு நாயகம் அவர்களின் மொழி பெயர்ப்பில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் உயர் தத்துவமான “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை அதே வசனத்தில் அவர்கள் கூறியிருப்பது – எழுதியிருப்பது “எல்லாம் அவனே” என்று நம்புவதும், சொல்வதும், எழுதுவதும் சரியானதென்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். அதோடு ஷெய்குனா அவர்களும் இதே தத்துவத்தை சரி கண்டவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும்.
ஷெய்கு நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” பேசவுமில்லை, எல்லாம் அவனே என்று சொல்லவுமில்லை, எழுதவுமில்லை என்று குரல் எழுப்புவோர் இவ் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமின் அடிப்படை தத்துவமான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா தருகின்ற ஞானச் சுருக்கத்தை “வஹ்ததுல் வுஜூத்” பேசுவோர் “எல்லாம் அவனே” என்று பேசுவதும், எழுதுவதும் அவர்களின் வழக்கமாகும். அவர்கள் அர்த்தமின்றி அவ்வாறு சொல்லவுமில்லை, எழுதவுமில்லை. “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை தெளித்து வடித்தெடுத்தால் “எல்லாம் அவனே” என்ற சாரமே வரும்.
“வஹ்ததுல் வுஜுத்” என்ற இரு சொற்களாலான வசனத்துக்கு எல்லாம் அவனே என்ற பொருள் நேரடிப் பொருள் அல்ல. “உள்ளமை ஒன்று” என்பதே அதன் நேரடிப் பொருள். எனினும் இப் பொருளைக் கருவாகக் கொண்டு ஆய்வு செய்தால் எல்லாம் அவனே என்ற சாரம் வரும்.
ஒரு வசனத்தின் நேரடிப் பொருள் ஒன்றிருக்க அதன் மூலம் விளங்கப்படும் சாரத்தைக் கருத்திற் கொண்டு அந்த சாரத்தை அதற்குப் பொருளாகக் கொள்வது பிழையாகாது.
உதாரணமாக “தவ்ஹீத்” என்ற சொல் போன்று. இச் சொல்லின் நேரடிப் பொருள் “ஒன்றாக்கி வைத்தல்” என்பது மட்டும்தான். எனினும் இப் பொருள் மூலம் விளங்கப்படுகின்ற கருத்தை ஆய்வு செய்து இதற்கு ஒரே சொல்லில் ஏகத்துவம் என்று சொல்வது போன்றாகும்.
والشّيخ عبد القادر العالم الصوفيّ رحمه الله صرّح فى ترجمتِه المسمّاة ب கல்வத்தின் ரகசியங்கள் بِلفظَةِ ‘ بلِ الكلُّ هو الله ‘ هذا دليل واضحٌ لِجَوَازِ أن يُقالَ எல்லாம் அவனே ، فَعَلَى كلّ مريد من مريدي الشّيخ أن يُؤمن كما قال، ويقول سِرًّا وجهرا ‘ بَلِ الْكُلُّ هُوَ اللهُ ‘، ويجب عليه أن ينكر من يقول خلافَه،
ஸூபீ ஹழ்றத் நாயகம் அவர்கள் தாங்கள் மொழியாக்கம் செய்த “அஸ்றாருல் கல்வத்” – கல்வத்தின் ரகசியங்கள் எனும் நூலில் بَلِ الْكُلُّ هُوَ اللهُ எல்லாம் அல்லாஹ்தான் என்று தெளிவான வசனத்தில் எழுதியிருப்பது “எல்லாம் அவனே” என்று சொல்வது கூடும் என்பதற்கு தெளிவான ஆதாரமாகும். எனவே, ஷெய்கு நாயகம் அவர்களின் சிஷ்யர்கள் அனைவர் மீதும் அவர்கள் சொன்னது போல் நம்புவதும், “எல்லாம் அவனே” என்று பகிரங்கமாகவும், இரகசியமாகவும் சொல்வதும் அவசியமாகும். அதேபோல் இதற்கு மாறாக சொல்பவனை மறுப்பதும், அவனுக்கு எதிராக “பத்வா” வழங்குவதும் அவசியமாகும்.
ويقول الشّيخ أيضا فى كتاب ஸூபீ ஹழ்றத் நினைவு மலர் فى صفحة 21،
ஸூபீ ஹழ்றத் நினைவு மலர் 21ம் பக்கத்தில் ஷெய்குனா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(உனக்கு பதவி வேண்டுமானால் “நான்” என்பதை அழித்துவிடு. வித்தில் மறைந்திருக்கின்ற விருட்சம் வெளியாக வேண்டுமானால் வித்து அழிய வேண்டும். வித்து இருக்கும் வரை மரம் வராது. ஆகவே “நீ” இருக்கும் வரை அவன் வரமாட்டான். எப்படி மரத்தால் செய்யப்பட்ட யானையில் மரத்தை காணுகிற போது யானையைக் காண முடியாதோ அது போல் நீ “பனா” வாகிப் போனால் – நீ இல்லாமற்போனால் அவன் வருவான். நான் வேறு, அவன் வேறு என்ற திரை அற்றுப் போக ஓயாமல் அவனை தியானிக்க வேண்டும். அல்லாஹ்வின் நினைவிலேயே இருக்க வேண்டும்)
يقول الشّيخ رحمه الله : بجب على المريد أن يُجاهد حقّ الجهاد لإزالة الغيريّة ولإثبات العينيّة، ويشتغلَ بالعبادات لإثبات هذه العقيدة،
معنى قول الشّيخ بالعربيّة مختصرا، (إذا أردتَ مرتبةً أو منصبةً عند الله أَفْنِ نفسك، وادفَنْ وجودَك ، لأنّ الشّجرة لا تنبثُ إلّا بعد فَناءِ البذْرِ، وكذلك الربّ سبحانه وتعالى لا يتجلّى عليك إلّا بعد فَنائِك فيه، كالفيلِ المصنوعِ من الخشبة، فإن رأيتَ الخشبةَ غاب عنك الفيلُ، وإن رأيتَ الفيلَ غاب عنك الخشبة، فاذكر ربّك حتّى ينعدِمَ حجابُ الغيريّة بينك وبينه تعالى، شيخنا هذا رحمه الله يقول ‘ الغيريّة بين الخالق والمخلوق حجابٌ ‘ فأوّلُ فرض على الإنسان كشفُ حجابِ الغيريّة،
ويقول الشّيخ أيضا فى نفس الكتاب المذكور فى صفحة 23،
(“லிமனில் முல்குல் யவ்ம” இன்று அரசாட்சி யாருக்கு? என்பதை உனது கல்பின் காது கொண்டு கேட்பாய். “லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்” அடக்கியாளும் ஒருவனான அல்லாஹ்வுக்கே என்று உனது கல்பின் நாவு கொண்டு பதில் சொல்வாயாக! (அவனன்றி வேறு எதுவும் இல்லை) உசுப்புபவனும், உசுப்பப்படுபவனும் அவனன்றி வேறு யாருமில்லை. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுக்கே சொந்தம். முன்னும், பின்னும் அவனுக்கே புகழ்)
يصرّح شيخُنا بأنّ ما سِوى الله عدمٌ محضٌ، أيّها المريدون لشيخنا عبد القادر الصّوفيّ قُدّس سرّه، إنّ شيخنا يقول فى مكانٍ من كتبه ‘ الكلُّ هو الله ‘ ويقول فى مكان آخر منها ‘ أَفْنِ وجودَك حتّى يتبيَّنَ أنّك الحقّ ‘، ويقول أيضا رَاقِبِ اللهَ حتّى تزُولَ الغيريّة التي هي الحِجابُ بينك وبينه تعالى،
நான் என்பதை அழித்துவிடு. நான் வேறு, அவன் வேறு என்ற திரை அற்றுப் போக ஓயாமல் அவனை தியானிக்க வேண்டும்.
ويقول شيخنا فى مكانٍ آخر ‘ لَيْسَ شَيْءٌ سِوَى اللهِ ‘
அல்லாஹ் அன்றி வேறு ஒன்றுமே இல்லை.
وهذه العباراتُ كلُّها ثمراتُ وحدةِ الوجود، وخُلاصاتُها، فكيف تقولون إنّ الشّيخ رحمه الله لم يقل بوحدة الوجود، ولم يقل بأنّ الكلَّ هو الله؟
والشّيخ عبد القادر الصوفيّ قُدّس سرّه: يُنشِدُ فى مجلسِ الراتبِ – الذكر – هذه القصيدة بالتامل،
ஐனில்லா அறபியே!
மீமில்லா அஹ்மதே!
அர்ஷளாவும் சிரசுடைய
அண்ணலே ஸலாம்!
அதி சங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா, வஸெய்யிதுனா, வல் ஆரிபு பில்லாஹ், அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபீ ஹழ்றத் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசவில்லை என்றும், எல்லாம் அவனே என்று சொல்லவில்லை என்றும் பலர் பேசிக் கொள்கிறார்கள். இவ்வாறு பேசுவோர் எதார்த்தத்தில் நான் பேசிவருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எதிர்ப்பவர்களோ, எல்லாம் அவனே என்ற தத்துவத்தை எதிர்ப்பவர்களோ அல்ல. இவர்களும் ஷெய்கு நாயகம் அவர்களின் “முரீது”கள்தான். இதேபோல் சங்கைக்குரிய மௌலானா வாப்பா அவர்களின் “முரீது”களும்தான்.
ஆயினும் கண்ணியத்திற்குரிய ஷெய்குனா அவர்களிடம் “பைஅத்” பெற்ற அவர்களின் “முரீது” சிஷ்யர்களையும், கண்ணியத்திற்குரிய மௌலானா வாப்பா அவர்களிடம் “பைஅத்” பெற்ற அவர்களின் சிஷ்யர்களையும் எனக்கு எதிராக திசை திருப்புவதற்கு சில பொறாமைக் காரர்கள் செய்த சதியேயாகும். அவர்களின் இச்சதியால் நானும் பாதிக்கப்பட்டேன். ஷெய்கு நாயகம் அவர்களும் பாதிக்கப்பட்டார்கள். இடையிலுள்ள அப்பாவிகள் சிலரும் பாதிக்கப்பட்டார்கள்.
சதிகாரர்களான சில நயவஞ்சகர்கள் செய்த, மூட்டிவிட்ட நெருப்பினால்தான் மௌலானா வாப்பா அவர்களிடம் “பைஅத்” பெற்ற, எம்மோடிருந்த சிலர் எம்மை விட்டும் தூரமாகியுள்ளார்கள். இதேபோல் ஷெய்குனா ஸூபீ ஹழ்றத் நாயகம் அவர்களிடம் “பைஅத்” பெற்ற சிலரும் எம்மை விட்டும் தூர நிற்கிறார்கள். ஒரே குடும்பத்திற்குள் சில ஷெய்தான்கள் இருந்து இவ்வாறு சதி செய்வது கவலைக்குரியதாகும்.
ஆனால் நானோ எனது ஞான குருக்களான மரியாதைக்குரிய எனது முதலாவது ஷெய்கு திரு மக்கா நகரைச் சேர்ந்த கலாநிதி அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்கு முஹம்மத் அல்பாஸீ அவர்களையும், எனது இரண்டாவது ஷெய்கு கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்கு ஸூபீ ஹழ்றத் நாயகம் அவர்களையும், எனது மூன்றாவது ஷெய்கு சங்கைக்குரிய மௌலானா வாப்பா நாயகம் அவர்களையும் எனது இரு கண்களாலும் ஒன்று போலவே பார்க்கிறேன். இவர்களைக் கண்ணியப்படுத்துகிறேன். இவர்களின் “சில்சிலா”க்களைத் தினமும் ஓதுகிறேன். இவர்கள் பெயரில் வருடாந்தம் கந்தூரி அன்னதானம் செய்கிறேன். கொழும்பு சென்றால் ஷெய்குனா அவர்களை சியாறத் – தரிசிக்கிறேன். இந்தியா சென்றால் மௌலானா வாப்பா அவர்களைத் தரிசிக்கிறேன். திரு மக்கா சென்று டொக்டர் பாஸீ நாயகம் அவர்களைச் சந்திப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.
நடந்த அந்தரங்கம் தெரியாத “தரீகா”வைச் சேர்ந்தவர்களிற் சிலர் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள். அல்லாஹ் நீதியாளன். நீதியே செய்வான். பொறுத்திருப்போம்.
எனவே, புரிந்துணர்வும், பொறுமையும் இல்லாததால் என்மீது தப்பான எண்ணமுள்ள அனைவரும் புரிந்துணர்வோடும், பொறுமையோடும், மனிதாபிமானத்தோடும் நடந்து கொள்ளுமாறு அவர்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இறுதியாக, ஷெய்குனா அவர்களும், மௌலானா வாப்பா அவர்களும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்கள் என்பதும், எல்லாம் அவனே என்று சொன்னவர்கள் என்பதும், ஹக்கு வேறு, கல்கு வேறு என்ற நம்பிக்கை “குப்ர்” எனும் நிராகரிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னவர்கள் என்பதும் உண்மையே!
குறிப்பு: அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் எமக்கு வழங்கப்பட்ட “பத்வா” தொடர்பாக நீதியான நடவடிக்கை எடுத்து நாங்கள் எங்களுக்குரிய அனைத்து உரிமைகளுடன் வாழ வழி செய்யவில்லையானால் இந்த விவகாரம் ஐ.நா வரை செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
والله على كل شيء قدير،
முற்றும்.