தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
فيما يُقال عند ذكر سيّدنا لُقمانَ، والسيّدة مريم،
فإن قيل: إذا ذكر لقمان ومريم، هل يُصلّي عليهما كالأنبياء، أم يُترضّى كالصحابة والأولياء، أم يقول عليهما السلام؟ فالجواب: أن الجماهير من العلماء على أنهما ليسا نبيين، وقد شذّ من قال: نبيّان، ولا التفات إليه، ولا تعريج عليه، وقد أوضحتُ ذلك في كتاب ‘ تهذيب الأسماء واللغات ‘ فإذا عُرف ذلك، فقد قال بعضُ العلماء كلاماً يُفهم منه أنه يقول: قال لقمان أو مريم صلَّى الله على الأنبياء وعليه أو وعليهما وسلم، قال: لأنهما يرتفعان عن حال من يُقال: رضي الله عنه، لما في القرآن مما يرفعهما، والذي أراه أن هذا لا بأس به،
وأن الأرجح أن يقال: رضي الله عنه، أو عنها، لأن هذا مرتبة غير الأنبياء، ولم يثبتْ كونهما نبيّين، ولو قال: عليه السلام، أو: عليها، فالظاهر أنه لا بأس به،
கேள்வி: ஸெய்யிதுனா லுக்மான், ஸெய்யிததுனா மர்யம் ஆகியோரின் பெயர்கள் கூறப்பட்டால் என்ன சொல்ல வேண்டும்? நபீமாரின் பெயர்களைக் கேட்டால் صَلَّى اللهُ عَلَيْهِ என்று சொல்வது போல் சொல்ல வேண்டுமா? அல்லது நபீ தோழர்களினதும், வலீமார்களினதும் பெயர்களைக் கேட்டால் رَضِيَ اللهُ عَنْهُ என்று சொல்வது போல் சொல்ல வேண்டுமா?
பதில்: மேற்கண்ட லுக்மான், மர்யம் இருவரும் நபீமார் அல்ல. சிலர் நபீமார் என்று சொன்னாலும் பலம் வாய்ந்த சொற்படி அவ்விருவரும் நபீமார் அல்ல என்பதுதான் முடிவாகும்.
எனவே, லுக்மான், மர்யம் இருவர் விடயத்திலும் சிறந்தது رَضِيَ اللهُ عَنْهُ என்று அல்லது رَضِيَ اللهُ عَنْهَا என்று சொல்வதேயாகும். நபீமார் அல்லாதவர்கள் விடயத்தில் இவ்வாறுதான் சொல்ல வேண்டும். எனினும் மேற்கண்ட இவ் இருவருக்கும் عليه السلام – عليها السلام என்றும் சொல்லலாம். (அல் அத்கார், பக்கம் 21)
பொதுவாக நபீமாரின் பெயர்களைச் சொல்லும் போதும், கேட்கும் போதும் عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ என்று சொல்வது மிகச் சிறந்தது. ஸஹாபாக்கள் – நபீ தோழர்கள், வலீமாரின் பெயர்களைச் சொல்லும் போதும், காதால் கேட்கும் போதும் رَضِيَ اللهُ عَنْهُ என்று ஆணுக்கும், رَضِيَ اللهُ عَنْهَا என்று பெண்ணுக்கும் சொல்ல வேண்டும். வலீமாரின் பெயர்களைச் சொல்லும் போதும், கேட்கும் போதும் قَدَّسَ اللهُ سِرَّهُ الْعَزِيْزْ என்றும் சொல்ல முடியும். “பிர்அவ்ன்”, “இப்லீஸ்” ஆகியோரின் பெயர்களைக் கேட்கும் போதும், சொல்லும் போதும், மேலும் இதேபோல் இஸ்லாமியர்களுக்கு எதிராக இயங்குபவர்களின் எந்தப் பெயராயினும் அதைச் சொல்லும் போதும், எழுதும் போதும் لَعْنَةُ اللهِ عَلَيْهِ என்று சொல்வது கடமையுமல்ல. “ஸுன்னத்”தும் அல்ல. விரும்பியவர்கள் அவ்வாறு சொல்லலாம். வஹ்ஹாபீகள், வழி கேடர்களின் பெயர்களைச் சொல்லும் போதும், எழுதும் போதும் يَهْدِيْهِ اللهُ என்று சொல்வது பொருத்தமானதாகும்.
فى استحباب الترضي والترحم على الصحابة والتابعين،
நபீ தோழர்கள், தாபியீன்களின் பெயர்களைச் சொல்லும் போதும், கேட்கும் போதும் رَضِيَ اللهُ عَنْهُ என்று அல்லது رَحِمَهُ اللهُ என்று சொல்வது “முஸ்தஹப்பு” நல்ல காரியம்.
يُستحبّ الترضّي والترحّم على الصحابة والتابعين
ஸஹாபா – நபீ தோழர்களின், தாபியீன்களின் பெயர்களைச் சொல்லும் போதும், கேட்கும் போதும் رَضِيَ اللهُ عَنْهُ என்றோ, رَحِمَهُ اللهُ என்றோ சொல்வது நல்ல காரியமாகும். இதேபோல் அவர்களுக்குப் பின்னால் தோன்றிய உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள், வணக்கசாலிகள், நல்லடியார்களின் பெயர்களைச் சொல்லும் போதும், கேட்கும் போதும் மேற்கண்டவாறு சொல்வது நல்ல காரியமாகும்.
فيقال: رضي الله عنه، أو رحمه الله، ونحو ذلك، وأما ما قاله بعضُ العلماء: إن قوله: رضي الله عنه مخصوص بالصحابة، ويُقال في غيرهم: رحمه الله فقط، فليس كما قال، ولا يُوافَقُ عليه، فإن كان المذكور صحابياً ابن صحابي قال: قال ابن عمر رضي الله عنهما، وكذا ابن عباس، وابن الزبير، وابن جعفر، وأُسامة بن زيد ونحوهم لتشمله وأباه جميعاً.
பெயர் சொல்லப்படுபவர் நபீ தோழராகவும், நபீ தோழரின் மகனாயும் இருந்தால் றழியல்லாஹு அன்ஹுமா என்று சொல்ல வேண்டும்.
ஆண் ஒருவருக்கு هُ – ஹூ என்றும், இரு ஆண்களுக்கு هُمَا என்றும், மூன்று, அல்லது மூன்றுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு هُمْ என்றும் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணாயின் هَا “ஹா” என்றும், இரு பெண்களாயின் هُمَا “ஹுமா” என்றும், மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட பெண்களாயின் هُنَّ என்றும் சொல்ல வேண்டும்.
முற்றும்.