தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
سئل نفع الله به، بما لفظه لابن تيميّة إعتراضٌ على متأخّرى الصوفيّة، وله خوارقُ فى الفقه والأصول، فما محصّل لذلك، فأجاب بقوله،
ابن تيميّة عبدٌ خذله الله وأضلّه وأعماه وأصمّه وأذلّه، وبذلك صرّح الأئمّة الّذين بيّنوا فسادَ أحواله وكَذِبَ أقواله، ومن أراد ذلك فعليه بمطالعة كلام الإمام المجتهد المتَّفَقِ على إمامته وجلالته وبُلوغِه مرتبةَ الإجتهاد أبى الحسن السبكي، وولده التاج، والشّيخِ الإمامِ العِزِّ بن جماعة، وأهلِ عصرهم وغيرِهم من الشافعيّة والمالكيّة والحنفيّة،
ولم يقصـر اعتراضَه على متأخّرى الصوفيّة، بل اعترض على مِثلِ عمر بن الخطّاب وعليّ بن أبي طالب رضي الله عنهما كما يأتي،
والحاصل أَنْ لا يُقام لكلامه وزنٌ، بل يُرمى فى كلّ وَعْرٍ وحزن، ويُعتقد فيه أنّه مُبْتَدِعٌ ضالٌّ ومُضِلٌّ جاهلٌ غالٍ، عامله الله بعَدْلِه، وأجارنا من مِثلِ طريقته وعقيدتِه وفعلِه آمين،
வழிகேட்டின் தந்தை இப்னு தைமிய்யஹ் பற்றி ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் பதாவல் ஹதீதிய்யஹ்” என்ற நூல் 86ம் பக்க ஆரம்பத்திலிருந்து 87ம் பக்கம் முடியும் வரை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளார்கள்.
அவை யாவையும் அறபு மொழியிலும் எழுதி தமிழிலும் மொழியாக்கம் செய்தால் இவ் ஆக்கம் பல பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாகிவிடும். ஆகையால் சுருக்கமாக எழுதியுள்ளேன். மேலதிக விளக்கம் தேவையானோர் குதர்க்கம் பண்ணவோ, விவாதம் செய்யவோ என்னிடம் வராமல் அறிவைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் வருமாறு அன்பாயும், பணிவாயும் கேட்டுக் கொள்கிறேன்.
இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் பதாவல் ஹதீதிய்யஹ்” என்ற நூலில் அவர்கள் எழுதியுள்ளவற்றில் மிக முக்கியமான தகவல்களை மட்டும் இங்கு தருகின்றேன்.
கேள்வி: இமாம் இப்னு ஹஜர் அவர்களே! இப்னு தைமிய்யஹ் என்பவர் பின்னோர்களான ஸூபீகளை ஆட்சேபித்துள்ளதுடன், “பிக்ஹ்” என்ற சட்டக் கலையிலும் பல தவறுகள் செய்துள்ளார். இவர் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் “பத்வா” மார்க்கத் தீர்ப்பு என்ன?
பதில்: (இப்னு தைமிய்யஹ் என்பவர் அல்லாஹ் கீழ்த்தரமாக்கிய, வழி கெடுத்த, குருடாக்கிய, செவிடாக்கிய அல்லாஹ்வின் ஓர் அடியானாவார்.
இவ்வாறுதான் அவரின் கெட்ட நிலைமைகளையும், அவரின் பொய், புரட்டுகளையும் விவரித்த பல இமாம்கள் கூறியுள்ளார்கள்.
யாராவது அவரின் பொய், புரட்டுகளை அறிய விரும்பினால் எல்லா இமாம்களாலும், அறிஞர்களாலும் “முஜ்தஹித்” என்று போற்றிப் புகழப்பட்ட இமாம் அபுல் ஹஸன் அஸ் ஸுப்கீ றஹிமஹுல்லாஹ், அவர்களின் மகன் இமாம் தாஜுத்தீன் அஸ் ஸுப்கீ றஹிமஹுல்லாஹ், அஷ்ஷெய்குல் இமாம் அல் இஸ்ஸுப்னு ஜமாஅஹ் றஹிமஹுல்லாஹ் ஆகியோர்களினதும், அவர்கள் காலத்தைச் சேர்ந்த ஷாபிஈ, மாலிக், ஹனபீ மத்ஹபுகளைப் பின்பற்றிய இமாம்களினதும் நூல்களை வாசித்தறிந்து கொள்ள வேண்டும். இம் மூன்று மத்ஹபுகளும் குறிப்பாக கூறப்பட்டதற்கான காரணம் இவரை எதிர்த்தவர்களில் அநேகர் இம் மூன்று மத்ஹபுகளையும் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
இப்னு தைமிய்யஹ் என்பவர் ஸூபீகளில் பின்னோர்களான மகான்களை ஆட்சேபித்ததோடு நின்றுவிடாமல் பெருமானாரின் “கலீபா”க்களான ஸெய்யிதுனா உமர், ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களையும் ஆட்சேபித்துள்ளார். இதன் விபரம் பின்னால் வரும்.
சுருக்கம் என்னவெனில் இப்னு தைமிய்யாவின் பேச்சுக்கு எந்த மதிப்பும் இல்லை, அவரின் பேச்சு சாக்கடையில் எறியப்பட வேண்டியதாகும். அவர் பற்றிய சுருக்கம் என்னவெனில் அவர் ஒரு “பித்அத்” காரர், வழி தவறியவர், வழி கெடுப்பவர், வரம்பு மீறிய அறிவிலி என்பதாகும். அல்லாஹ் அவர் விடயத்தில் தனது நீதியை நிலை நாட்டுவானாக! அவரின் கொள்கையில் இருந்து எம்மனைவரையும் பாதுகாப்பானாக!) மேலே எழுதிய அறபு பந்திகளின் தமிழாக்கம் இதோடு முடிவடைகிறது.
இப்னு தைமிய்யா தொடர்பாக மேற்கண்டவாறு “பத்வா” வழங்கிய மகான் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களாவர்.
இப்னு ஹஜர்
இவர்கள் அஹ்மத் இப்னு முஹம்மத், இப்னு அலீ, இப்னு ஹஜர் அல்ஹைதமீ, அஸ்ஸஃதீ, அல் அன்ஸாரீ, ஷிஹாபுத்தீன் ஷெய்குல் இஸ்லாம், அபுல் அப்பாஸ் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
இவர்கள் “மிஸ்ர்” நாட்டின் “அபுல் ஹைதம்” பிரதேசத்தில் ஹிஜ்ரீ 909ல் பிறந்து 974ல் (கி.பி 1503-1566) மரணித்தார்கள்.
இவர்கள் “பிக்ஹ்” சட்டக்கலை ஆய்வாளரும், பல்கலை எழுத்தாளருமாவார்கள். கெய்ரோ அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் படித்துள்ளார்கள். திரு மக்கா நகரில் மரணித்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ஸஊதி வஹ்ஹாபிஸம் பிறந்த நாடாகவும், அது வளர்ந்து வரும் நாடாகவும் இருப்பதால் அங்கு அவர்களுக்கு “தர்ஹா” இல்லாமற் போயிற்று.
இலங்கை நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள ஸுன்னத் வல் ஜமாஅத் அறபுக் கல்லூரிகளில் பல்லாண்டுகள் கல்வி கற்று வெளியாகும் மௌலவீ ஒருவர் தனது கல்லூரி வாழ்வில் ஆயிரம் தரமேனும் இவர்களின் பெயர் சொல்லியிருப்பார் என்று என்னால் நிச்சயமாக கூற முடியும். வெளியாகும் மௌலவீ மட்டுமல்ல உஸ்தாதுமாரும் இவ்வாறுதான்.
“இப்னு ஹஜர்” என்றால் “கல்லின் மகன்” என்று பொருள். அறபுக் கல்லூரிகளில் கற்றுத் தந்த உஸ்தாதுமார் “கல்லை உடைத்தாலும் இப்னு ஹஜரின் சொல்லை உடைக்க முடியாது” என்று எம்மிடம் கூறியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடற்குரியதாகும்.
இவர்கள் “வபாத்” மறைந்து 469 வருடங்கள் கடந்து விட்டன. இவர்கள் உலகப் புகழ் பெற்ற இறைஞான மகான் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றியும், அவர்களின் நூல்களை வாசிப்பது, கற்றுக் கொள்வது பற்றியும் தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூலில் பல இடங்களில் கூறியுள்ளார்கள் என்பது இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
இவர்கள் பல்கலைகளிலும் 20க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய மகான் ஆவார்கள். நூல்களின் பெயர்கள் தேவையானோர் எம்மோடு தொடர்பு கொண்டால் தரப்படும்.
இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” “எல்லாம் அவனே” என்ற மெய்ஞ்ஞான தத்துவத்தை உலகுக்கு பகிரங்கமாக அறிமுகம் செய்து வைத்த இப்னு அறபீ நாயகம், இப்னுல் பாரிழ் நாயகம் ஆகியோர் பற்றி எழுதிய தகவல்கள் மிக விரைவில் நூல் வடிவில் வெளிவரும். இன்ஷா அல்லாஹ்!
இப்னு தைமிய்யஹ்வின் புரட்டல்கள்.
இப்னு தைமிய்யஹ் என்பவர் திருக்குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும், இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள் ஆகியோருக்கும் முரணான அவர் கண்டுபிடித்த மார்க்க சட்டங்களிற் சில.
இந்த விபரம் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ அவர்களின் “அல் பதாவல் ஹதீதிய்யஹ்” என்ற நூல் 87ம் பக்கத்தில் வந்துள்ளது. விரிவையஞ்சி அறபு வசனங்களை எழுதவில்லை. விபரம் தேவையானோர் குறித்த நூலில் குறித்த பக்கத்தைப் புரட்டினால் விளங்கும்.
01. إِنَّ الصَّلَاةَ إِذَا تُرِكَتْ عَمْدًا لَا يَجِبُ قَضَائُهَا
ஒருவன் தொழுகையை வேண்டுமென்று விட்டால் அதை “கழா” செய்யத் தேவையில்லை. மறந்து விட்டவனே “களா” செய்ய வேண்டும் என்றிருக்கும் நிலையில் வேண்டுமென்று விட்டவன் “களா” செய்யத் தேவையில்லை என்று சொன்னவர் சற்றுத் தலை சரியில்லாதவராகவே இருப்பார்.
02. وَإِنَّ الْحَائِضَ يُبَاحُ لَهَا الطَّوَافُ بِالْبَيْتِ وَلَا كَفَّارَةَ عَلَيْهَا
தீட்டுள்ள பெண் “கஃபஹ்”வை “தவாப்” செய்வது ஆகும். அதற்காக “கப்பாறஹ்” அவசியமில்லை.
03. وَإِنَّ الْمُكُوْسَ حَلَالٌ لِمَنْ أَقْطَعَهَا، وَإِنَّهَا إِذَا اُخِذَتْ مِنَ التُّجَّارِ أَجْزَئَتْهُمْ عَنِ الزَّكَاةِ،
வரி எடுப்பது “ஹலால்” ஆகும். வியாபாரிகளிடமிருந்து வரி வாங்கப்பட்டால் அவர்கள் “ஸகாத்” கொடுக்கத் தேவையில்லை. அந்த வரி “ஸகாத்” ஆகிவிடும்.
04. وَإنَّ الْمَائِعَاتِ لَا تَنْجُسُ بِمَوْتِ حَيَوَانٍ فِيْهَا كَالْفَأْرَةِ،
நீர், பால் போன்ற திரவமானவற்றில் எலி போன்றது விழுந்து செத்துவிடுமாயின் அந்தப் பானம் அசுத்தமாகாது.
05. وَإِنَّ الْجُنُبَ يُصَلِّيْ تَطَوُّعَهُ بِاللَّيْلِ، وَلَا يُؤَخِّرُهُ إِلَى أَنْ يَغْتَسِلَ قَبْلَ الْفَجْرِ،
“ஜுனுப்” முழுக்கான ஆணாயினும், பெண்ணாயினும் இரவில் “ஸுன்னத்”தான தொழுகை தொழலாம். குளிக்கும் வரை அதைப் பிற்படுத்த தேவையில்லை.
06. وَإِنَّ شَرْطَ الْوَاقِفِ غَيْرُ مُعْتَبَرٍ، بَلْ لَوْ وَقَفَ عَلَى الشَّافِعِيَّةِ صُرِفَ إِلَى الْحَنَفِيَّةِ وَبِالْعَكْسِ،
“வக்பு” செய்கின்ற ஒருவனின் நிபந்தனையைக் கவனிக்கத் தேவையில்லை. ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்களுக்கென்ற நிபந்தனையுடன் ஒருவன் ஏதாவதொன்றை “வக்பு” செய்தால் அதை “ஹனபீ” மத்ஹபைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம். இதற்கு மாற்றமாகவும் செய்யலாம்.
07. وَإِنَّ مُخَالِفَ الْإِجْمَاعِ لَا يَكْفُرُ وَلَا يَفْسُقُ،
இஸ்லாமிய மூலாதாரங்களில் ஒன்றான “இஜ்மாஉ” என்பதற்கு மாற்றம் செய்தவன் “காபிர்” ஆகவும் மாட்டான். “பாஸிக்” கெட்டவனாகவும் மாட்டான்.
08. وَإِنَّ رَبَّنَا (سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يَقُوْلُ الظَّالِمُوْنَ وَالْجَاحِدُوْنَ عُلُوًّا كَبِيْرًا ) مَحَلُّ الْحَوَادِثِ (تَعَالَى الله عَنْ ذَلِكَ وَتَقَدَّسَ)
அல்லாஹ் சிருட்டிகளின் – படைப்புக்களின் தலமாக உள்ளான்.
09. وَأَنَّهُ مُرَكَّبٌ تَفْتَقِرُ ذَاتُهُ اِفْتِقَارَ الْكُلِّ لِلْجُزْءِ،
அல்லாஹ் – அவனின் “தாத்” இணைக்கப்பட்டதாகும். அவன் – அந்த “தாத்” மொத்தம் என்பது தனது பாகத்தளவில் தேவையாவது போல் தேவையாகிறது.
10. وَقَوْلُهُ بِالْجِسْمِيَّةِ وَالْجِهَةِ وَالْإِنْتِقَالِ،
அல்லாஹ்வுக்கு சடம் உண்டு. திசை உண்டு. அவன் இடம் பெயர்கிறான். ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாறுகின்றான் – திரும்புகின்றான்.
11. وَإِنَّ الْقُرْآنَ مُحْدَثٌ فِى ذَاتِ اللهِ
நிச்சயமாக அல் குர்ஆன் அல்லாஹ்வின் “தாத்”தில் படைக்கப்பட்டதாகும்.
12. وَإِنَّ الْعَالَمَ قَدِيْمٌ
உலகம் பூர்வீகமானது.
13. وَأَنَّهُ بِقَدْرِ الْعَرْشِ لَا أَصْغَرُ وَلَا أَكْبَرُ،
அல்லாஹ் “அர்ஷ்” என்ற சிம்மாசனத்தின் அளவில் உள்ளவன்தான். அதைவிட சிறியவனுமில்லை. அதைவிடப் பெரியவனுமில்லை.
14. وَإِنَّ النَّارَ تَفْنَى
நரகம் அழிந்து விடும்.
15. وَإِنَّ الْأَنْبِيَاءَ غَيْرُ مَعْصُوْمِيْنَ،
நபீமார் பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்.
16. وَإِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ لَا جَاهَ لَهُ وَلَا يُتَوَسَّلُ بِهِ،
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “பொருட்டு” என்பது கிடையாது. அவர்களைக் கொண்டு “வஸீலஹ்” தேடுவதும் கூடாது.
17. وَإِنَّ إِنْشَاءَ السَّفَرِ إِلَيْهِ بِسَبَبِ الزِّيَارَةِ مَعْصِيَةٌ لَا تُقْصَرُ الصَّلَاةُ فِيْهِ،
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை “ஸியாறத்” தரிசிப்பதற்காக அங்கு பயணிப்பது பாவமாகும். ஆகையால் அந்தப் பயணத்தில் தொழுகையை “கஸ்ர்” சுருக்கித் தொழுவதும் கூடாது.
மேற்கண்ட 17 விடயங்களும் இப்னு தைமிய்யாவின் புரட்டல்களும், கண்டுபிடிப்புகளுமாகும். இவை யாவும் மார்க்கத்திற்கு முரணானவை என்பதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை.
மேற்கண்ட விபரங்கள் யாவும் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் பதாவல் ஹதீதிய்யஹ்” என்ற நூல் 86ம், 87ம் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.
கலாநிதி மஹ்மூத்
இப்னு தைமிய்யஹ்வின் புரட்டல்களையும், பொய்களையும் விவரமாக எழுதி அவற்றுக்கான பதில்களையும் எழுதியுள்ளார்கள் இந்தியா குஜ்றாத் மாநிலத்தின் “பூர்பந்த்” என்ற ஊரைச் சேர்ந்த டொக்டர் – கலாநிதி அஸ் ஸெய்யிதுஷ் ஷரீப் மஹ்மூத் அஸ் ஸெய்யிது ஸபீஹ் அவர்கள். இந்நூல் 526 பக்கங்கள் கொண்டதாகும். இதில் இப்னு தைமிய்யஹ்வின் இஸ்லாமுக்கு முரணான 60 கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டு விளக்கம் எழுதியுள்ளார்.
இந் நூலும், இப்னு ஹஜர் ஹைதமீ அவர்களின் அல் பதாவல் ஹதீதிய்யஹ் என்ற நூலும் என்னிடமுள்ளன. பார்க்க விரும்புவோர் எனது அலுவலகத்திற்கு வந்து வாசித்துப்பார்க்கலாம்.
قال ابن بَطُوْطَةَ فى رحلته (1 – 109 ، 110 ) وَكَانَ بِدِمَشْقَ مِنْ كِبَارِ فُقَهَاءِ الْحَنَابِلَةِ تَقِيُّ الدِّيْنِ ابْنُ تَيْمِيَّةَ كَبِيْرَ الشَّامِ، يَتَكَلَّمُ فِى الْفُنُوْنِ ، إِلَّا أَنَّ فِى عَقْلِهِ شَيْئًا، وَكُنْتُ إِذْ ذَاكَ بِدِمَشْقَ، فَحَضَرْتُهُ يَوْمَ الْجُمُعَةِ، وَهُوَ يَعِظُ النَّاسَ عَلَى مِنْبَرِ الْجَامِعِ وَيُذَكِّرُهُمْ، فَكَانَ مِنْ جُمْلَةِ كَلَامِهِ أَنْ قَالَ ‘إِنَّ الله يَنْزِلُ مِنْ سَمَاءِ الدُّنْيَا كَنُزُوْلِيْ هَذَا، وَنَزَلَ دَرَجَةً مِنْ دَرَجِ الْمِنْبَرِ ‘
இருபது வருடங்கள் உலகை சுற்றிய வரலாற்றாசிரியர் “இப்னு பதூதஹ்” தனது رِحْلَةُ ابْنِ بَطُوْطَةْ என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.
சிரியாவின் தலை நகரான டமஸ்கஸ் நகரில் வாழ்ந்த ஹன்பலீ மத்ஹபைச் சேர்ந்த உலமாஉகளில் தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யஹ் என்பவர் பெரியவராக இருந்தார். பல்கலைகளில் பேசுவார். ஆயினும் அவரின் “அக்ல்” புத்தியில் ஏதோ ஒன்று உள்ளது. நான் இச்சம்பவத்தின் போது டமஸ்கஸ் நகரில் இருந்தேன். ஜும்அஹ் தொழுகைக்காக சென்றேன். இப்னு தைமிய்யஹ் பள்ளிவாயல் மின்பரில் நின்று மக்களுக்கு உபன்னியாசம் செய்து கொண்டிருந்தார். அவர் தனது பேச்சில் அல்லாஹ் முன் வானத்திற்கு இறங்குகின்றான் என்று சொன்ன போது كَنُزُوْلِيْ هَذَا நான் இறங்குவது போல் என்று சொல்லிக் கொண்டு “மின்பர்” படியிலிருந்து ஒரு படி இறங்கினார். இதை நான் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்னு தைமிய்யஹ்
هُوَ أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ عَبْدِ الْحَلِيْمِ ، اَلْمَعْرُوْفُ بِابْنِ تَيْمِيَّةَ، كَانَ مِنْ عُلَمَاءِ الْحَنَابِلَةِ، وَتُوُفِّيَ سَنَةَ 728 هـ ،
“இப்னு தைமிய்யஹ்” என்று பிரசித்தி பெற்ற இவரின் பெயர் அஹ்மத், தந்தையின் பெயர் அப்துல் ஹலீம். புனைப் பெயர் அபுல் அப்பாஸ். இவர் சிரியாவிலுள்ள சிறை ஒன்றில் ஹிஜ்ரீ 728ல் மரணித்தார். இவர் சிரியாவில் “ஹர்றான்” என்ற ஊரில் பிறந்தார்.
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணான கருத்துக்களும், கொள்கைகளும் கூறி மக்களை வழி கெடுத்தவரும், அவரின் காலத்து அறிஞர் பெரு மக்களால் (எனக்கு “பத்வா” வழங்கிய போலிகள் போன்றவர்களால் அல்ல) “காபிர்” என்றும், “பாஸிக்” கெட்டவர் என்றும் “பத்வா” வழங்கப்பட்டவரும், வழி கெட்ட கொள்கையை பேசி வந்ததால் பலமுறை சிறையிலடைக்கப்பட்டு இறுதியில் அங்கேயே மரணித்தவருமான இப்னு தைமிய்யாவை “ஷெய்குல் இஸ்லாம்” இஸ்லாமின் தலைவர் என்று சொல்வதும், அவரின் பெயரை சொல்பவர்களும், செவியேற்பவர்களும் “றஹிமஹுல்லாஹ்” என்று சொல்வதும் எந்த வகையில் நியாயமாகும்? இதற்கு இஸ்லாமில் இடமுண்டா? இக்கேள்விக்கு யார் பதில் கூறாவிட்டாலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பதில் கூற வேண்டும். கூறுவார்களா? ஊமைகள் போல் நடிப்பார்களா? இவர்கள் பதில் கூறவே மாட்டார்கள். அல்லாஹ்வுக்கும், றஸூல் நாயகமவர்களுக்கும் விசுவாசமாக பதில் கூறுவதாயின் இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் கூறியது போன்றே கூற வேண்டும். அவ்வாறு கூறுமளவு இவர்களின் “ஈமான்” பலமாக இல்லை. இவர்கள் அவ்வாறு கூறினால் வருகின்ற வருமானத்தில் பாதி இல்லாமற் போய்விடும். அவர்களை விடுவோம்.
ஆனால் தம்மை ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் என்று கூறிக் கொண்டு உலமா சபையின் அநீதியான “பத்வா”வை அமுல் படுத்திக் கொண்டிருக்கின்ற ஏனைய உலமாஉகளாவது எனது இக்கேள்விக்கு பதில் கூறுவார்களா?
இன்றுள்ள தவ்ஹீத் அமைப்புக்களைச் சேர்ந்த வஹ்ஹாபிகள் அனைவரும், மற்றும் அறிவுக்கும், தமக்கும் சம்பந்தமில்லாத, இறை ஞானமென்றால் என்வென்று கூடத் தெரியாத “பத்வா” வியாபாரிகளான முல்லா மகான்களும், இப்னு தைமிய்யாவையும், இவரின் கொள்கை வழி வாழ்ந்த வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் நஜ்தீ என்பவரையும் தலைமேல் வைத்துக் கொண்டு இவர்களின் கொள்கை வழி நடப்பதும் எந்த வகையில் நியாயமாகும்?
இத்தகைய வழி கெட்ட கொள்கையுள்ள ஷெய்தான்களை, அல்லாஹ்வின் எதிரிகளை, பகைவர்களை, விரோதிகளை தலைமேல் வைத்து இவர்களுக்கு பூசை செய்து வருகின்ற உலமா சபைக்கும், வஹ்ஹாபிகளுக்கும் எனது கேள்விகளுக்கு விடை தர முடியுமாயின் இவர்கள் பகிரங்கமாக விடை தரட்டும்.
“தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானம் பேசிய எனக்கும், நான் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்ட உலகில் வாழ்கின்ற பல இலட்சம் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிய முல்லாக்களுக்கு எதிராகவும், மற்றும் இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் போன்ற வழிகேடர்களின் வஹ்ஹாபிஸ வழிகேட்டை பரப்பி வருகின்றவர்களுக்கு எதிராகவும் மறுமையில் அல்லாஹ்வின் நீதி மன்றில் நான் ஒரு வழக்கு தாக்கல் செய்வேன். இன்ஷா அல்லாஹ்!
இஸ்லாமின் எதிரிகளான இவர்கள் தமது குருக்களான – வழிகாட்டிகளான மேற்கண்ட இருவரையும் வகீல்களாக நீதி மன்றுக்கு அழைத்து வரட்டும். நான் நபீமார், றசூல்மார், மற்றும் வலீமார் அனைவரையும் வகீல்களாக அங்கு அழைத்து வருவேன். அல்லாஹ்வின் நீதி மன்றில் சந்திப்போம். அவன் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம்.
தரீகாவாதிகளே! ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளே! அவ்லியாஉகளின் ஆதரவாளர்களே! நீங்கள் அனைவரும் நேர்வழியிலும், நல்வழியிலுமே உள்ளீர்கள்.
காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிபாஇய்யா, சிஷ்திய்யா, அலவிய்யா, ஜிப்ரிய்யா, நக்ஷபந்திய்யா போன்ற தரீகாக்கள் வழியில் வாழ்கிறீர்கள். தரீகாக்களின் ஷெய்குமார் வந்தால் அவர்களை கண்ணியப்படுத்துகிறீர்கள். அவர்களின் கை, கால்களை முத்தமிடுகிறீர்கள். அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். றாதிப், ஹழ்றா, போன்ற “திக்ர்” சபைகளில் கலந்து கொள்கிறீர்கள். தர்ஹாக்களுக்கு செல்கிறீர்கள். நல்ல காரியம் எல்லாமே செய்கிறீர்கள். உங்களைப் பாராட்டுகிறேன். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்வை தருவானாக!
ஆனால் நீங்கள் எதிரிகளுக்கு எதிராக குரல் கொடுக்காமலும், சத்தியத்தை நிலை நாட்ட முன்வராமலும் இருந்தீர்களாயின் நாளடைவில் எதிரிகள் பலம் பெற்று உங்களின் “தைக்கா” பள்ளிவாயல்களையும், “சாவியா”க்களையும், வலீமாரின் “தர்ஹா”க்களையும் தகர்த்து தரை மட்டமாக்கிவிடுவார்கள். இவ்வாறு நடக்குமா? என்று சிந்திக்காதீர்கள். இதற்கு முன் இவ்வாறு நடந்ததே இதன் பிறகும் இவ்வாறு நடக்கும் என்பதற்கான ஆதாரமாகும். இது வெகு தொலைவில் இல்லை. இவ் அடியேனின் கருத்தை அலட்சியம் செய்து விடாதீர்கள். இப்படியொரு துற்பாக்கிய நிலை இந்நாட்டில் நடைபெறுமாயின் நானும், நீங்களும் உயிரோடிருந்தாலும் கூட பயனில்லாமற் போய்விடும். அவ்வேளை அழுது சலிப்பதால் பயன் ஒன்றுமில்லை.
ஸுன்னீ உலமாஉகளே!
வஹ்ஹாபிகளாலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இரு முக நடவடிக்கைகளினாலும் மார்க்கம் மாசுபடுத்தப்படும் போது மார்க்கம் கற்ற நீங்கள் மௌனிகளாக ஒதுங்கிப் போயிருப்பது நியாயமா? பங்கறுள் பதுங்கிக் கிடப்பது முறையா? சொல்லுங்கள். சொல்லவும் பயம் என்றால் மௌலவீ பட்டத்தை தூக்கி எறியுங்கள்.
وَعَالِمٌ بِعِلْمِهِ لَمْ يَعْمَلَنْ – مُعَذَّبٌ مِنْ قَبْلِ عُبَّادِ الْوَثَنِ
தனது அறிவின் படி செயல்படாத ஓர் அறிஞன் – ஆலிம், விக்கிரகத்தை வணங்கியவர்களுக்கு முன்னரே தண்டிக்கப்படுவான் என்ற கவிஞனின் கவி உங்களின் காதுகளைத் தொடவில்லையா?
“ரிஸ்க்” தருபவன் அல்லாஹ்தான் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்குமாயின் நீங்கள் இவ்வாறு இருக்கமாட்டீர்கள்.
وَمَا عَلَيَّ إِلَّا الْبَلَاغُ