ومِن العلماء الّذين كَفَّرُوْا أَهْلَ وَحْدَةِ الوجود،
“வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகான்களை “காபிர்”கள் என்று “பத்வா” வழங்கிய கயவர்கள்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
.1 القاضي زين الدين الكتّاني، هو زين الدين عُمر بن أبي الحزم بن عبد الرحمن الكتّاني، مِن فقهاء الشافعيّة، أصلُه من دِمشق، وُلد بالقاهرة سنة 653 هـ، تَوَلَّى القَضاءَ فى دِمْيَاطٍ، ودرَّسَ فى عددٍ من المدارس الكبار، كان كما يقول ابنُ كثير بارعا فاضلا، عنده فوائد كثيرةٌ جِدّا، غيرَ أنّه كان سيِّئَ الأخلاق، مُنقبِضًا على النّاس، له حاشية على الروضة للنّووي فى الفقه، تُوفِّي سنة 730 هـ،
يقول القاضي زين الدين: قولُ ابن عربي الحقُّ هو الخلق فهو قولُ معتقد وحدة الوجود، وهو قولٌ كأقوال المجانين، بل أسخفُ مِن هذا، للعلم الضروريّ، بأنّ الصّانِعَ غيرُ المصنوعِ، ومن صدّقَ المذكور فى الأمور أو بعضِها ممّا هو كُفرٌ يكفرُ،
தமிழில்: “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்களை “காபிர்”கள் என்று சொன்ன உலமாஉகளிற் சிலர் பின்வருமாறு.
01. அல்காழீ செய்னுத்தீன் அல் கத்தானீ அவர்கள். இவர் செய்னுத்தீன் உமர் ஆவார். ஷாபிஈ மத்ஹப் சட்ட மேதைகளில் ஒருவர். இவரின் பூர்வீகம் டமஸ்கஸ். ஹிஜ்ரீ 653ல் கெய்ரோவில் பிறந்தார். “திம்யாத்” என்ற நகரில் நீதிவானாக கடமை செய்தார். பெரும் மத்ரஸாக்கள் பலதில் கற்றுக் கொடுத்தார். இப்னு கதீர் என்பவர் இவர் பற்றிக் கூறுகையில் மிகத் திறமை உள்ளவராகவும், சிறப்புள்ளவராகவும் இருந்தார். அவரிடம் அதிக பிரயோசனங்கள் உள்ளன. ஆயினுமவர் கெட்ட குணமுள்ளவராகவும், மனிதர்களுடன் சேர்ந்து வாழாமலும் இருந்தார். இமாம் நவவீ அவர்கள் “பிக்ஹ்” கலையில் எழுதிய “றவ்ழா” எனும் நூலுக்கு ஒரு “ஹாஷியா”வும் எழுதியுள்ளார்.
இவர் ஹிஜ்ரீ 730ல் “வபாத்” ஆனார். இவர் இப்னு அறபீ பற்றி பின்வருமாறு சொல்கிறார். “இறைவன்தான் படைப்பு” என்ற இப்னு அறபீ அவர்களின் பேச்சு “வஹ்ததுல் வுஜூத்” உடையவர்களின் பேச்சாகும். இது பைத்தியக் காரர்களின் பேச்சை விட மிகக் கீழ்த்தரமான பேச்சு. ஏனெனில் படைத்தவன் படைப்புக்கு வேறானவன் என்பதே இயற்கை அறிவாகும். எவனொருவன் மேலே சொன்ன விடயத்தை உண்மையாக்கி வைத்தானோ அவன் “காபிர்” ஆகிவிடுவான். இவ்வாறு சொல்லியுள்ளார் காழீ செய்னுத்தீன் அவர்கள்.
இவர் ஸூபிஸத்தை மறுக்கின்ற காரணத்தாலும், குறிப்பாக இப்னு அறபீ நாயகத்தை மறுக்கின்ற காரணத்தாலும் இவர் சரக்கில்லாக் கப்பல் போன்றவரேயாவார். இவர் அறியாமையால் அவ்வாறு சொல்லியிருந்தால் அல்லாஹ் இவரை மன்னிப்பானாக! மன முரண்டாகச் சொல்லியிருந்தால் இவரைத் தண்டிப்பானாக!
.2 القاضي سعد الدين الحارثي، (هو سعد الدين مسعود بن أحمد بن زيد الحارثي، من علماء الحديث وفقهاء الحنابلة، نِسبتُه إلى الحارثيّة، قرية قُربَ بغداد، وُلد سنة 652 هـ بمصر، ونشأ بها، وسكن دِمشقَ له مؤلّفات، منها شرح المقنع لابن قدامة، وشرح سنن أبى داؤود، لم يكملها، توفّي بالقاهرة سنة 711 هـ،
يقول سعد الدّين ‘ ما ذُكر من الكلام المنسوب إلى الكتاب المذكور أي فصوص الحكم – يتضمَّنُ الكفر، وكلُّ هذه التّمويهات ضلالةٌ وزندقةٌ،
தமிழில்: ஸூபிஸத்தையும், இப்னு அறபீ அவர்களையும் எதிர்த்தவர்களில் இரண்டாமவர் ஸஃதுத்தீன் ஹாரிதீ என்பவராவார். இவர் ஹதீதுக் கலை அறிஞரும், “ஹன்பலீ மத்ஹப்” இன் சட்ட மேதைகளில் ஒருவருமாவார். “ஹாரிதிய்யா” கிராமத்தைச் சேர்ந்தவர். இது “பக்தாத்” நகருக்கு அண்மையிலுள்ள ஒரு கிராமம். இவர் ஹிஜ்ரீ 652ல் “மிஸ்ர்” நாட்டில் பிறந்தார். அங்கேயே வளர்ந்தார். டமஸ்கஸ் நகரில் வசித்து வந்தார். இவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் “இப்னு குதாமா” என்பவரின் “முகன்னஉ” எனும் நூலுக்கான விரிவுரையும் ஒன்று. இன்னும் “ஷர்ஹு ஸுனனி அபீ தாஊத்” என்ற விரிவுரை நூலும் ஒன்று. எனினும் அது நிறைவு செய்யப்படவில்லை. இவர் கெய்ரோவில் ஹிஜ்ரீ 711ல் “வபாத்” ஆனார்.
ஸஃதுத்தீன் பின்வருமாறு சொல்கிறார். இப்னு அறபீ அவர்களின் “புஸூஸுல் ஹிகம்” எனும் நூலில் கூறப்பட்ட எல்லாமே “குப்ர்” நிராகரிப்பை உள்வாங்கியதாக உள்ளது. அதில் கூறப்பட்ட எல்லாமே வழிகேடும், “சந்தகா” எனும் “குப்ர்” மாகும்.
இவர் ஓதிப் படித்தவராக இருக்கலாம். இதை நான் ஆட்சேபிக்கவில்லை. எனினும் இவருக்கு ஸூபீகளின் சர்பத்தில் – பாலூதாவில் “நஸீப்” இல்லை.
اَلنَّصِيْبُ يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ جَبَلَيْنِ، وَالنَّصِيْبُ لَا يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ شَفَتَيْنِ،
விதி என்பது இரண்டு மலைக்கிடையில் இருந்தாலும் அது வரவே செய்யும். “நஸீப்” விதி என்பது இரு உதட்டுக்கு மத்தியில் இருந்தாலும் அது வரவே வராது.
.3 شرف الدين الزّواوي المالكي، فقد قال عن كتاب فصوص الحكم، (ما تضمَّنَه هذا التصنيفُ من الهَذَيان والكفر والبُهتان، فكلّه تلبيسٌ وضلالٌ، وتحريفٌ وتبديلٌ، ومن صدّقَ بذلك أو اعتقدَ صِحَّتَه كان كافرا مُلحِدًا، صادًّا عن سبيل الله تعالى، مُخالِفًا لمِلَّةِ رسول الله صلّى الله عليه وسلّم، مُلحدا فى آيات الله، مُبدّلا لكلماتِ الله، فإن أظهر ذلك وناظر عليه كان كافرا، (العقد الثمين للفاسي، ص1763)
ஸூபிஸத்தையும், இப்னு அறபீ அவர்களையும் எதிர்த்த மூன்றாவது நபர் ஷறபுத்தீன் அஸ்ஸவாவீ அல்மாலிகீ ஆவார்.
இவர் இப்னு அறபீ அவர்களின் “புஸூஸுல் ஹிகம்” எனும் நூல் பற்றிக் கூறுகையில் இவரின் இவ் ஆக்கம் எல்லாமே பொய்யும், புரட்டும், வழிகேடுமேயாகும். இதை உண்மையாக்கி வைத்தவன் அல்லது இது சரியென்று நம்பினவன் “காபிர்” ஆகவும், நாத்திகனாகவும் ஆவான். அல்லாஹ்வின் வழியை தடை செய்தவனாகவும் ஆவான். கண்மணி நாயகம் அவர்களின் மார்க்கத்திற்கு மாறு செய்தவனாகவும் ஆவான். அத்தாட்சிகளை மறுத்தவனாகவும், அல்லாஹ்வின் பேச்சை மாற்றியவனாகவும் ஆகிவிடுவான். இதை வெளிப்படுத்தி சரியென்று வாதித்தவன் “காபிர்” ஆவான்.
ஆதாரம்: அல் இக்துத் தமீன், العقد الثمين, ஆசிரியர்: பாஸீ, பக்கம்: 1763)
இவர் அறியாமையால் இவ்வாறு சொல்லியிருந்தால் இவரை அல்லாஹ் மன்னிக்க வேண்டும். மன முரண்டாகச் சொல்லியிருந்தால் அல்லாஹ் இவரைத் தண்டிப்பானாக!
.4 شيخ الإسلام (فى زعم الوهّابيّة) ابن تيميّة، حيث قال عن أهل وحدة الوجود، ‘ هم من أعظم النّاس زندقة ونفاقا ‘ (الاستقامة لابن تيميّة، 1-394)
وقال أيضا: هُم مَلَاحدةٌ ليسُوا مِن اثْنَتَيْنِ والسّبعين فِرقة، (مجموع فتاوى ابن تيميّة، 17-338(
وقال أيضا: وهذا كلُّه كُفرٌ باطنا وظاهرا، بإجماع كلّ مسلم، ومن شكَّ فى كفر هؤلاء – بعد معرفة قولهم، ومعرفة دين الإسلام، فهو كافرٌ، (مجموع فتاوى ابن تيميّة، 2-368(
وقال أيضا: وهؤلاء إذا قيل فى مقالتهم إنّها كفرٌ، لمْ يُفْهِمْ هذا اللّفظُ حالهم، فإنّ الكفرَ جنسٌ، تحته أنواع مُتفاوِتَةٌ، بل كفرُ كلِّ كافرٍ جزءٌ من كفرهم، (مجموعُ فتاوى ابن تيميّة، 2-127(
தமிழில்: ஸூபிஸத்தையும், ஸூபீ மகான்களையும் எதிர்த்தவர்களில் இப்னு தைமிய்யா நாலாவது நபராவார். இவர் மிகவும் கீழ்த்தரமானவராவார். ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்களை மிகவும் கேவலமாக எதிர்த்தவர் இவர் மட்டுமே! இவர் பற்றிய சிறு குறிப்பொன்று கடந்த தொடரில் எழுதப்பட்டுள்ளது. தேவையானோர் தேடிப் பயன் பெற்றுக் கொள்ளலாம்.
இவர்தான் ஸூபிஸத்தையும், ஸூபீ மகான்களையும் எதிர்த்தவர்களில் நாலாம் நபராவார்.
இவர் பின்வருமாறு சொல்கிறார். “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையுடையோர் அனைவரும் கடுமையான “சிந்தீக்”களும், “முனாபிக்”களுமேயாவர். (அல் இஸ்திகாமா, 394-1, ஆசிரியர்: இப்னு தைமிய்யா)
இப்னு தைமிய்யா இன்னும் பின்வருமாறு சொல்கிறார்.
அவர்கள் – ஸூபீகள் அனைவரும் நாத்திகர்களாவர். இறை மறுப்பாளர்களாவர். அவர்கள் 72 கூட்டங்களைச் சேர்ந்தவர்களல்லர். (மஜ்மூஉ பதாவா இப்னி தைமிய்யா, 17-338)
இப்னு தைமிய்யா மீண்டும் சொல்கிறார்.
இது – ஸூபிஸம் என்பது எல்லாமே வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் “குப்ர்” இறை மறுப்பேயாகும். உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரின் முடிவும் இதுவே. இந்த ஸூபீகளின் பேச்சுக்களையும், இஸ்லாமையும் அறிந்த பின்னும் ஒருவன் இவர்கள் “காபிர்” என்பதில் சந்தேகம் கொண்டால் அவனும் “காபிர்”தான். (மஜ்மூஉ பதாவா இப்னி தைமிய்யா, 02-368)
மேலும் இப்னு தைமிய்யா சொல்கிறார். ஸூபீகளின் பேச்சில் “குப்ர்” உண்டு என்று சொன்னால் இது அவர்கள் “காபிர்”கள் என்பதை விளக்கி வைக்காது. ஏனெனில் “குப்ர்” என்ற சொல் “ஜின்ஸ்” எல்லா வகைக் “குப்ர்”களையும் எடுத்துக் கொள்ளும். அதனுள்ளே பல்வகை “குப்ர்”கள் உள்ளன. ஆகையால் ஒவ்வொரு “காபிர்”களின் “குப்ர்” உம் அவர்களின் “குப்ர்”இல் ஒரு பகுதி என்றே சொல்ல வேண்டும்.
(மஜ்மூஉ பதாவா இப்னி தைமிய்யா, 2-127)�
.5 نور الدين البكري، هو نور الدين عليّ بن يعقوب بن جبريل البكري، من فقهاء الشافعيّة، وُلد سنة 637 هـ، نشأ بالقاهرة، ودرس الفقه والأصول والحديث، كان من المنكرين على ابن تيميّة، ثمّ إنّ السلطان غضب على البكري وأراد قتله، فاختفى عند ابن تيميّة، عندما كان مقيما بمصـر، للبكري مؤلّفات، منها تفسير سورة الفاتحة وكتاب فى البيان، وكتاب الحكم، (توفّي سنة 724 هـ) قال البكري عن أقوال أهل وحدة الوجود: تضيفُ هذه الأقوال المتقدّمة فى الإستفتاء ويكون المرادُ بها ظاهرُها، فصاحبُها ألعنُ وأقبحُ من أن يُتأوَّلَ له ذلك، بل هو كاذبٌ فاجر، كافرٌفى القول والاعتقاد، (العقد الثمين للفاسي، 2-175)
தமிழில்: “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் பேசியவர்களை காபிர்கள், முர்தத்துகள் “சிந்தீக்”குகள் என்று மதம் மாற்றி “பத்வா” வழங்கிய அறிவில்லா முண்டங்களான முல்லாக்களில் ஐவரின் விபரங்கள் எழுதியுள்ளேன். ஏனையோரின் விபரங்கள் தொடர்ந்து வெளிவரும்.
அவர்களில் ஐந்தாம் நபர் “நூறுத்தீன் பக்ரீ” ஆவார். இவர் “ஷாபிஈ மத்ஹப்” சட்ட மேதைகளில் ஒருவர். இவர் ஹிஜ்ரீ 673ல் பிறந்து கெய்ரோவில் வாழ்ந்தார். பல் கலைகள் கற்றார். இப்னு தைமிய்யா என்பவரை எதிர்த்தவர்களில் இவரும் ஒருவராவார்.
அக்காலத்து அரசன் இவர் மீது கடும் கோபம் கொண்டு நூறுத்தீன் பக்ரீயை கொலை செய்ய திட்டமிட்டார். அவ்வேளை “மிஸ்ர்” நாட்டில் இருந்த இப்னு தைமிய்யா என்பவரிடம் பாதுகாப்புக் கருதி ஒழித்துக் கொண்டார். இவர் ஹிஜ்ரீ 724ல் காலமானார்.
இவர் தனது அறியாமை காரணமாகவோ, அல்லது பொறாமை காரணமாகவோ “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்களுக்கு எதிராகச் செயல்பட்டார். அவர்களை பொய்யர்கள், காபிர்கள் என்றெல்லாம் சொல்லியுள்ளார்.
அல் இக்துத் தமீன், பக்கம் 02-175, ஆசிரியர்: பாஸீ
“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பேசியவர்களை காபிர்கள் என்றும், “சிந்தீக்”குகள் என்றும், “முர்தத்”துகள் என்றும் “பத்வா” வழங்கி அவர்களை இழிவு படுத்தியவர்கள் உலமாஉகளேயன்றி பொது மக்கள் அல்ல. “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்களை கொலை செய்தவர்களும் உலமாஉகளேதான். கொலை செய்தல் பெரும் பாவம் என்று சொன்னவர்களும் அவர்கள்தான். மௌலவீ பாறூக் அவர்களைக் கொன்றவர்களும் அவர்கள்தான். “எல்லாம் அவனே” என்று பேசிவிட்டு எல்லாம் அவனில்லை என்ற பாணியில் திசை மாறிப் பேசியவர்களும் அவர்கள்தான். ஸூபிஸத்திற்கு வரைவிலக்கணம் தெரியாமலிருந்து கொண்டு நாங்கள் தான் ஸூபீகள் என்று சொல்பவர்களும் அவர்கள்தான். திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் மாறாகப் பேசிவிட்டு நாங்கள்தான் ஸுன்னீகளும், ஸூபீகளும் என்று சொல்பவர்களும் அவர்கள்தான். “மஹ்ஷர்” ஓதுவதும், கையில் “அஸா” எடுப்பதும் “பித்அத்” என்று பேசுபவர்களும் அவர்கள்தான். பணத்திற்காகவும், புகழுக்காகவும் அதைச் சரி காண்பவர்களும் அவர்கள்தான். “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” கொடுத்தவர்களும் அவர்கள்தான். “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரை அதில் குறிப்பிட்டு என்னை அவமானப்படுத்தியவர்களும் அவர்கள்தான். குற்றவாளி விசாரிக்கப்பட்ட பின் தீர்ப்பு வழங்குவதே மார்க்கம். அதுவே “ஷரீஆ” சட்டம் என்று சொன்னவர்களும் அவர்கள்தான். என்னை விசாரிக்காமல் தன்னிச்சையாகப் “பத்வா” வழங்கியவர்களும் அவர்கள்தான்.
இதனால்தானோ என்னவோ திருக்குர்ஆனை ஓதிய ஏழு “காரீ”களில் ஒருவர் மட்டும் ஏனைய “காரீ”களுக்கு மாற்றமாக, إِنَّمَا يَخْشَى اللهُ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءَ “அல்லாஹ் தனது அடியார்களில் “உலமாஉ” மார்க்க அறிஞர்களையே பயப்படுகிறான்” என்று ஓதினார்கள் போலும்.
بِجَعْلِ كَلِمَةِ اللهِ فَاعِلًا لِيَخْشَى وَجَعْلِ كَلِمَةِ الْعُلَمَاءِ مَفْعُوْلًا لِيَخْشَى، لِيَفْهَمَ النَّاسُ أَنَّ الْعُلَمَاءَ هُمْ شِرَارُ خَلْقِهِ تَعَالَى،
பொய் “பத்வா” கொடுத்து மாட்டிக் கொண்ட நீங்கள் உங்கள் மானம், கௌரவம் காப்பதற்காக பொய்யை மெய்யாக்க குறுக்கு வழிகளைத் தேடிக் கொண்டும், அரசியல் அதிகாரமுள்ளவர்களுக்கு பதினெட்டாக மடிந்து கொண்டும், வளைந்து கொண்டும் உள்ளீர்கள். நீங்கள் உங்களின் புத்தியைப் பயன்படுத்தி “பத்வா”வை வாபஸ் பெற்று நமது இலங்கைத் திரு நாட்டில் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையை நிலை நாட்ட முன்வாருங்கள். இன்றேல் ஜெனீவாவில் ஐ.நா சபையிலேயே நீங்கள் மடிந்து கிடக்க நேரிடும். இது சத்தியம். அதோடு அல்லாஹ்வின் கோபம் உங்கள் மீது நிச்சயம் இறங்கும்.
தொடரும்….