العارفون الّذين نُفُوا مِن أهلِ وحدةِ الوُجُود،
“வஹ்ததுல் வுஜூத்” பேசியதற்காக பொறாமையுள்ள உலமாஉகளால் நாடு கடத்தப்பட்ட இறைஞானிகள்! இறை நேசர்கள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“எதார்த்தவாதி பொது சன விரோதி” இவ்வாறு பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நான் அறிந்த வகையில் இவ்வாறு சொல்வதை விட “எதார்த்தவாதி “ஷரீஆ”வாதிகளின் (ஷரீஆ உலமாஉகளின்) விரோதி” என்று சொல்வதே இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருத்தமானதாகும்.
ஏனெனில் எதார்த்தம் பேசிய மகான்களில் அநேகர் மார்க்க அறிஞர்களான “உலமாஉஷ் ஷரீஆ” علماء الـشـريعة “ஷரீஆ”வின் உலமாஉகளால்தான் கொலை செய்யப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் உள்ளார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
ஸூபிஸம் பேசிய என்னையும், நான் பேசிய தத்துவத்தைச் சரி கண்டவர்களையும் முதலில் “முர்தத்” என்று கூறியவர்கள் ஸூபிஸம் தெரியாத இலங்கை நாட்டு முல்லாக்களேயன்றி பொது சனங்கள் அல்ல. இது சிறுவர்கள், முதியவர்கள் அனைவரும் அறிந்த விடயமேயாகும்.
எனக்கும், எனது கருத்தைச் சரிகண்ட உலகில் வாழும் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய முல்லாக்கள் உலகில் முஸ்லிம்களில் பல இலட்சம் பேர்களை கொலை செய்த கொலைக் குற்றவாளிகளேயாவர். பெருமானார் ﷺ அவர்களின் “ஸஹீஹ்” ஆன, تَكْفِيْرُ الْمُسْلِمِ كَقَتْلِهِ “ஒரு முஸ்லிமை காபிர் என்று சொல்வது அவனைக் கொலை செய்வது போன்றாகும்” என்ற நபீ மொழியின் படி “பத்வா” வழங்கிய முல்லாக்கள் அனைவரும் கொலைக் குற்றவாளிகளேயாவர். பலரைக் கொலை செய்த கொலை காரர்களுமேயாவர்.
இவர்களாலும், இவர்கள் போன்றவர்களாலுமே ஸூபிஸ ஞானம் குழியிலிடப்பட்டுள்ளது எனலாம். மறுமையில் கேள்விக் கூண்டில் நிறுத்தப்படுபவர்களும் இவர்களேதான்.
இஸ்லாமிய வரலாற்றில் நாடு கடத்தப்பட்ட இறைஞானிகளும், ஸூபீ மகான்களும் பலர் உள்ளனர். அவர்களில் எட்டுப் பேர்களை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
.1 أبو يزيد البسطامي، فقد نُفي من بسطام سبع مرّات، (النّور من كلمات أبي طَيفور، للسّهلكي، ص 64، واللّمع للطّوسي، ص 427)
.2 أبو حمزة الصُّوفي، اُخرج من طَرْطُوس، (نفحات الأنس، للجامي، ص 231)
.3 الحُسين بن مكّي الصّبيحيّ، طُرد من البصرة، (اللّمع للطّوسي، ص 500)
.4 محمد بن الفضل البلخي، اُخرِجَ من بَلْخَ، (نفحات الأنس للجامي، ص 319)
.5 الحكيمُ التُّرمذي، طُرِد من تُرمُذ (الطبقات الكبرى للشعراني، ص 1-16)
.6 أبو مدين، نُفي مِن بجايا – فى الجزائر إلى تِلَمْسان، (الطبقات الكبرى للشعراني، ص 1-17)
.7 أبو الحسن الشّاذلي، نُفي مَن تُونس، (الطبقات الكبرى للشعراني، ص 1-17)
.8 ابنُ سبعين، اُخرِجَ من المغرب، الطبقات الكبرى للشعراني، وابن سبعين وفلسفتُهُ الصوفيّة للتّفْتَازَانِيْ، ص 47-48)
அபூ யஸீத் அல் பிஸ்தாமீ
أبو يزيد طَيْفُورْ بن عيسى بن شَرُوشان البِسطامي، هو عالم مُسلم، من أهل القرن الثالث الهجري، يُلقَّبُ بـ (سلطان العارفين) اسمُه الفارسيّ (بَا يزيد) كما عُرف كذلك باسم طَيْفُوْرْ، كان جدُّه ‘شَروْشانْ ‘ مجوسيّا وأسلم، وله أخوان، هما آدمٌ وعليٌّ، وُلد سنة 188 هـ فى بسطام، فى بلاد خُراسان، فى محلّةٍ يقال لها مَحَلَّةُ مَوْبِدَان، رُوي عن اسماعيل السّدي، وجعفر الصادق، (توفّي سنة 261 هـ)، قال البسطامي بوحدة الوجود، ونُسبت إليه بعضُ الشّطحات، كقوله (لا إله إلا أنا فاعبدونِ)، وقولِه سُبْحَانِيْ مَا أَعْظَمَ شَأْنِيْ؟ يُعرف أتباعُه بالطَّيفوريّة أو البسطامية، وما يزال قبرُه إلى يومنا هذا محلَّ تقدير الصوفيّة وإجلالهم،
தமிழில்: நாடு கடத்தப்பட்ட ஸூபிஸ மகான்களில் ஒருவர் மேலே கூறப்பட்ட “அபூ யஸீத் அல் பிஸ்தாமீ” ஆவார்கள்.
இவர்கள் “அபூ யஸீத் தைபூர் இப்னு ஈஸா இப்னி “ஷறூஷான்” ஆவார்கள். இவர்கள் ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய “ஆலிம்” அறிஞராவார்கள். இவர்கள் “ஸுல்தானுல் ஆரிபீன்” “இறைஞானிகளின் அரசன்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறே “தைபூர்” என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் பாட்டனார் – தந்தையின் தந்தை “மஜூஸீ” நெருப்பு வணங்கியாயிருந்து இஸ்லாமானவராவார். இவரின் பெயர் “ஷறூஷான்”. அபூ யஸீத் அவர்களுக்கு ஆதம், அலீ என்ற பெயர்களில் இரு சகோதரர்கள் இருந்தனர்.
ஹிஜ்ரீ 188ல் ஈரான் நாட்டின் “குறாஸான்” பிரதேசத்திலுள்ள “பிஸ்தாம்” எனுமிடத்தில் பிற்நதார்கள். ஹிஜ்ரீ 261ல் “வபாத்” மரணித்தார்கள். இவர்கள் தங்களின் “ஜத்பு” நிலையில் لا إله إلا أنا فاعبدوني “என்னைத் தவிர வேறெந்த தெய்வமும் இல்லை. எனவே என்னையே வணங்குங்கள்” என்றும், سبحاني ما أعظم شأني “நான் துய்யவன். எனது விஷயம் என்னே வலுப்பமானது?” என்றும் சொன்னதாக அறிவிக்கப்படுகிறது. இவர்களின் சிஷ்யர்கள் “தைபூரிய்யா” அல்லது “பிஸ்தாமிய்யா” என்று அழைக்கப்படுவார்கள். அவர்களின் சமாதி இன்று வரை ஸூபீ மகான்களால் தரிசிக்கப்பட்டும், கண்ணியப்படுத்தப்பட்டும் வருகிறது.
இவர்கள் பொறாமை, வஞ்சகம் நிறைந்த உலமாஉகளால் ஏழு முறை “பிஸ்தாம்” நகரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும், இவர்களைக் கடத்தியவர்கள் அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸூபிஸம் தெரியாத போலி உலமாஉகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அபூ ஹம்ஸதஸ் ஸூபீ
நாடு கடத்தப்பட்டவர்களில் இவர்களும் ஒருவர். இந்த மகானின் வரலாற்றுக் குறிப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்தபின் பதிவு செய்வேன். இன்ஷா அல்லாஹ்! இவர்கள் “தர்தூஸ்” நகரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள்.
அல்ஹுஸைன் இப்னு மக்கீ அஸ்ஸபீஹீ
நாடு கடத்தப்பட்ட ஸூபீ மகான்களில் இவர்களும் ஒருவர். இந்த மகானின் வரலாற்றுக் குறிப்புகளும் எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பின் பதிவிடுவேன். இன்ஷா அல்லாஹ்! இவர்கள் இறாக் “பஸறா” நகரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள்.
முஹம்மத் இப்னுல் பழ்ல் அல் பல்கீ
இவர்களும் நாடு கடத்தப்பட்ட ஸூபீகளில் ஒருவராவார்கள். இவர்கள் بَلْخْ – பல்க் நாட்டிலிருந்து கடத்தப்பட்டவர்களாவர்.
இவர்கள் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னுல் பழ்ல் ஆவார்கள்.
أحد علماء أهل السنة والجماعة ومن أعلام التصوف السُّنِّيّ في القرن الرابع الهجري أصله من بلخ وسكن سمرقند وبها توفي سنة 319 هـ، وصفه أبو عبد الرحمن السلمي بأنه «من أجلّ مشايخ خراسان»، وكان أبو عثمان الحيري يحبّه ويقول عنه «لو وجدت في نفسي قوة لرحلت إلى أخي محمد بن الفضل ليستريح سري برؤيته، هو سِمْسار الرجال». صحب أحمد بن خضرويه و أسند الحديث وكان إليه المنتهى في الوعظ والتذكير في سمرقند. طرد من بلخ لأنه كان يجري آيات الصفات على ظاهرها بلا تأويل، والعلوم عنده ثلاثة: علم بالله وعلم من الله وعلم مع الله، فالأول معرفة صفات الله والثاني علم الظاهر والباطن والحلال والحرام، والثالث علم الخوف والرجاء والمحبة والشوق.
இவர்கள் “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகளில் ஒருவரும், ஹிஜ்ரீ நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸூபீ மகான்களில் ஒருவருமாவார்கள். இவர்களின் பூர்வீகம் “பல்க்” நாடாகும். ஆயினுமிவர்கள் “ஸமர்கந்த்” நகரிலேயே வாழ்ந்து வந்துள்ளார்கள். ஹிஜ்ரீ 319ல் அங்கேயே “வபாத்” மறைந்தார்கள்.
இறைஞானி அப்துர் றஹ்மான் அவர்கள் இவர்கள் பற்றிக் கூறுகையில் مِنَ أَجَلِّ مَشَائِخِ خُرَاسَانْ குறாஸான் நாட்டின் மிகச் சிறந்த ஞான குருக்களில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இறைஞானி அப்துர் றஹ்மான் அல்ஹிப்ரீ அவர்கள் இவர்கள் பற்றிக் குறிப்பிடுகையில், (எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் எனது சகோதரர் முஹம்மத் இப்னுல் பழ்ல் அவர்களை நேரில் கண்டு எனது உள்ளம் மன நிம்மதி பெறுவதற்காக அவர்களின் காலடி செல்வேன். அவர்கள் மனிதர்களின் “ஸிம்ஸார்” என்று கூறியுள்ளார்கள்.
இவர்கள் “பல்க்” நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதற்கான காரணம் என்னவெனில்,
لكون مذهبه مذهب أهل الحديث من إجراء آيات الصفات وأخبارها على ظاهرها بلا تأويل، والإيمان بها على علم الله فيها،
இவர்கள் “அஹ்லுல் ஹதீத்” உடைய போக்கில் இருந்ததேயாகும். அதாவது அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களுக்கு வலிந்துரை கொள்ளாமல் அவற்றுக்கு நேரடிப் பொருள் கூறியதேயாகும்.
ولمّا أرادوا إخراجَه قال لا أخرجُ إلّا إن جعلتُم فى عُنقي حبلا ومررتُمْ بي على أسواق البلد وقلتم هذا مُبْتَدِعٌ، نُريد أن نُخرجَه من بلدنا، ففعلوا ذلك وأخرجُوه، فالتفت إليهم وقال، يا أهلَ بَلْخَ نَزَعَ اللهُ من قلوبكم معرِفَتَه، قال الأشياخ فلم يخرج بعد دعوتِه عليهم تلك مِن بَلخَ صوفيٌّ أبدا مع أنّها كانت أكثر بلاد الله صوفيّة،
அவர்களை “பல்க்” நாட்டிலிருந்து வெளியேற்ற நினைத்த போது, உங்களால் என்னை வெளியேற்ற முடியாது. ஆயினும் நான் சொல்வது போல் செய்தால் மட்டும்தான் உங்களால் என்னை வெளியேற்ற முடியும் என்று கூறி பின்வருமாறு செய்யுமாறு அவர்களைப் பணித்தார்கள்.
(எனது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி இவ் ஊரிலுள்ள கடைத் தெருக்களில் என்னை இழுத்துச் செல்லுங்கள். அவ்வாறு செய்யும் போது இவர் ஒரு “பித்அத்” காரன். இவரை நாங்கள் நாடு கடத்தப் போகிறோம் என்று சொல்லுங்கள் எனக் கூறினார். அவர்கள் அவ்வாறே செய்து நாடு கடத்தினார்கள். அவர் இறுதியில் இழுத்துச் சென்றவர்களை விழித்து “பல்க்” வாசிகளே! அல்லாஹ் உங்களின் உள்ளங்களிலிருந்து அவனின் ஞானத்தை களைந்து விடுவானாக! என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போல் அந்த நிகழ்வின் பின் “பல்க்” நாட்டில் ஓர் இறைஞானியும் தோன்றவில்லை என்று “பல்க்” நாட்டிலுள்ள ஸூபீ மகான்கள் கூறுகின்றார்கள்.
அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 13, ஆசிரியர்: இமாம் ஷஃறானீ
இதுவரை “வஹ்ததுல் வுஜூத்” பேசியதால் நாடு கடத்தப்பட்ட ஸூபிஸ மகான்கள் எட்டுப் பேர்களில் இருவரின் வரலாறுகளை மட்டுமே பதிவு செய்துள்ளேன். எஞ்சிய அறுவரின் வரலாறுகளை அடுத்து வரும் தொடர்களில் பதிவு செய்வேன். இன்ஷா அல்லாஹ்!