தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنِ ابْنِ أَبِي الْجَدْعَاءِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ: مَتَى كُنْتَ نَبِيًّا؟، قَالَ: ‘ وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ ‘ (مسند أحمد 4-66، 5-259، سنن الترمذي، رقم 3609، البداية والنهاية 2-308 و 223)
அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் எப்போது நபீயானீர்கள்? என்று நான் கேட்ட போது, நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடலுக்கும், உயிருக்கும் இடையில் இருந்த வேளை என்று நபீகளார் கூறியதாக நபீ தோழர் அபுல் ஜத்ஆ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் (04-66, 05-259), அறிவிப்பு: அபுல் ஜத்ஆ,
ஸுனனுத் துர்முதீ – 3609, அல்பிதாயா வன்னிஹாயா 02-308, 223.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَتَى وَجَبَتْ لَك النُّبُوَّةُ؟ قَالَ: ‘ بَيْنَ خَلْقِ آدَمَ وَنَفْخِ الرُّوحِ فِيهِ ‘ (تاريخ بغداد، 03-70 ، 05-83، البداية والنهاية 2-208، 222)
அல்லாஹ்வின் திருத்தூதர் அண்ணலெம் பெருமானார் அவர்களிடம், “உங்களுக்கு எப்போது “நுபுவ்வத்” நபித்துவம் கிடைத்ததென்று” கேட்கப்பட்ட போது (ஆதம் நபீ அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களில் “றூஹ்” ஊதுவதற்கு இடைப்பட்ட நேரத்தில் கிடைத்தது) என்று அருளினார்கள்.
அறிவிப்பு: அபூ ஹுறைறா, தாரீகு பக்தாத் – 03-70, 05-83,
அல்பிதாயா வன்னிஹாயா, 02-208, 222.
عَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قالوا يارسول اللَّهِ أَخْبِرْنَا عَنْ نَفْسِكَ قَالَ: ‘ دَعْوَةُ أَبِي إِبْرَاهِيمَ وَبُشْرَى عِيسَى وَرَأَتْ أُمِّي حِينَ حَمَلَتْ بِي كَأَنَّهُ خَرَجَ مِنْهَا نُورٌ أَضَاءَتْ لَهُ قُصُورُ بُصْرَى مِنْ أَرْضِ الشَّامِ ‘
நபீ தோழர்கள் அவர்களிடம், அல்லாஹ்வின் திருத்தூதரே! உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்ட போது, (நான் எனது தந்தை இப்றாஹீம் அவர்களின் பிரார்த்தனை, நபீ ஈஸா அவர்களின் சுபச் செய்தி, என் தாயார் கண்ட கனவு. என் தாய் என்னைத் தனது வயிற்றில் சுமந்து கொண்டிருந்த பொழுது தன்னிலிருந்து ஓர் ஒளி வெளியானதாயும், அவ் ஒளியில் “ஷாம்” சிரியா நாட்டின் மன்னன் “புஸ்றா” என்பவனின் கோட்டைகள் தெரிந்ததாகவும் கூறினார்கள்)
அத்தபகாதுல் குப்றா, 1-119, தஹ்தீப் தாரீகி திமஷ்க், 1-39, அல்பிதாயா வன்னிஹாயா 2-175
عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ صَاحِبِ رَسُولِ اللَّهِ இ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ இ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ இ يَقُولُ: إِنِّي عَبْدُ اللَّهِ وَخَاتَمُ النَّبِيِّينَ، وَإِنَّ آدَمَ لَمُنْجَدِلٌ فِي طِينَتِهِ، وَسَأُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ؛ أَنَا دَعْوَةُ أَبِي إِبْرَاهِيمَ، وَبِشَارَةُ عِيسَى، وَرُؤْيَا أُمِّي الَّتِي رَأَتْ،
நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், (நான் அப்துல்லாஹ் – அல்லாஹ்வின் அடிமை, கடைசி நபீ, நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களி மண்ணோடு கலந்திருந்த நேரத்திலேயே மேற்கண்டவாறு நான் இருந்தேன் என்று சொன்னதாகவும், நான் எனது தந்தை நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை, நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சுபச் செய்தி, எனது தாய் கண்ட கனவு) என்று சொல்ல நான் கேட்டேன் என்றும் நபீ தோழர் இர்பாழ் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அத்தபகாதுல் குப்றா 01-118, முஸ்னத் அஹ்மத் 04-1277, அல்பிதாயா வன்னிஹாயா 02-223
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا كَانَ بَدْأُ أَمْرِكَ؟ قَالَ: «دَعْوَةُ أَبِي إِبْرَاهِيمَ، وَبُشْرَى عِيسَى، وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُورٌ أَضَاءَتْ لَهُ قُصُورُ الشَّامِ»
(அத்தபகாதுல் குப்றா 01-118, முஸ்னத் அஹ்மத் 04-27, அல்பிதாயா வன்னிஹாயா 02-223)
இந்த நபீ மொழியின் பொருள் மூன்றாவது நபீ மொழியின் பொருள் போன்றதே.
قولُه: لَمُنْجَدِلٌ – أي مُلْقًى، وأمّا دعوة إبراهيم فقولُه رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِنْهُمْ، (البقرة 129)، وبِشَارَةُ عيسى فقولُه وَمُبَشِّرًا بِرَسُوْلٍ يَأْتِيْ مِنْ بَعْدِيْ اِسْمُهُ أَحْمَدُ، (الصف 6) (الدّلائل كلّهامنقولةٌ من سِيَرِ أعلام النبلاء، من الجزء الأوّل، ص 30-31)
விளக்கம்: நபீ மொழி 01. இந்த நபீ மொழியின் மூலம் கண்மணி நபீகளார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னேயே படைக்கப்பட்டு நபீயாகவும் இருந்துள்ளார்கள் என்பது விளங்கப்படுகிறது. அதாவது நபீ ஆதம் அவர்கள் படைக்கப்பட்டு “றூஹ்” ஊதப்படுவதற்கு இடையில் இவர்கள் – இவர்களின் ஒளி படைக்கப்பட்டு அதற்கு நபீ பட்டமும் வழங்கப்பட்டுமுள்ளது என்ற அந்தரங்கமும் விளங்கப்படுகிறது.
விளக்கம்: நபீ மொழி 02:
இரண்டாவது நபீ மொழியும் இதே சுருக்கத்தையே துலக்கி வைக்கிறது. விபரம் தேவையில்லை.
விளக்கம்: நபீ மொழி 03:
இந்த நபீ மொழியில் வேறு விடயங்கள் விளங்கப்படுகின்றன. நபீ தோழர்கள் நபீ பெருமானாரிடம் أَخْبِرْنَا عَنْ نَفْسِكَ உங்களின் வரலாறைச் சொல்லுங்கள் என்று கேட்ட பொழுது பின்வருமாறு தங்களின் வரலாறைக் கூறினார்கள்.
மூன்று விடயங்களை நபீகளார் அவர்களுக்குக் கூறினார்கள். ஒன்று – أَنَا دَعْوَةُ أَبِيْ إِبْرَاهِيْمَ நான் எனது தந்தை நபீ இப்றாஹீம் அவர்களின் “துஆ” பிரார்த்தனை என்றார்கள். அதாவது நான் எனது தந்தை நபீ இப்றாஹீம் அவர்களின் பிரார்த்தனையால் வந்தவன் என்றார்கள். இதன் விபரம் என்னவெனில் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِنْهُمْ இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்கு ஒரு தூதரை அனுப்புவாயாக! என்று ஒரு பிரார்த்தனை செய்துள்ளார்கள். இது திருக்குர்ஆன் வசனமாகும். (பகறா அத்தியாயம், வசனம் 129)
அவர்களின் பிரார்த்தனையின் பயனாகவே நபீ பெருமானார் அவர்களை நபீயாக அல்லாஹ் அனுப்பி வைத்தான். இந்த வரலாறையே நபீகளார் “நான் இப்றாஹீம் அவர்களின் பிரார்த்தனை” என்று கூறினார்கள்.
இரண்டு – وَبُشْرَى عِيْسَى நான் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சுபச் செய்தி என்றும் கூறினார்கள்.
இதன் விபரம் என்னவெனில் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு சமயம் பின்வருமாறு கூறினார்கள்.
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ،
மேலும் மர்யமின் புதல்வர் ஈஸா, இஸ்றாயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள “தவ்றாத்”தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்குப் பின்னர் அஹ்மத் எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள் பால் அனுப்பப்பட்ட தூதராக நான் இருக்கிறேன் என்று கூறியதை நபீயே நீங்கள் நினைவு கூறுவீராக! பின்னர் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் அத்தூதர் வந்த போது இது தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறினார்கள். (61-06)
நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு சொன்னதையே மேற்கண்ட ஐந்தாவது நபீ மொழியும் நபீ பெருமானார் அவர்கள் بُشْرَى عِيْسَى ஈஸா நபீயின் சுபச் செய்தியென்று சுட்டிக் காட்டினார்கள்.
மூன்று – எனது தாய் என்னை வயிற்றில் சுமந்திருந்தபோது தன்னிலிருந்து ஓர் ஒளி வெளியானதைக் கண்டார்கள் என்றும், அவ் ஒளியினால் “ஷாம்” சிரியாவிலிருந்த “புஸ்றா” என்ற அரசனின் கோட்டைகள் அவர்களுக்குத் தெரிந்தன என்றும் கூறியுள்ளார்கள்.
விளக்கம்: நபீ மொழி 04.
நான் அல்லாஹ்வின் அடிமை, நபீமாரின் முத்திரை – இறுதி நபீ, நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மண்ணோடும், நீரோடும் கலந்திருந்த பொழுதே நான் நபீயாக இருந்தேன் என்று கூறிவிட்டு மேலே குறித்த மூன்று விடயங்களையும் கூறினார்கள்.
தொடரும்….