தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ومن الفوائد المُجَرَّبَة العظيمةِ البركةِ، الكثيرةِ الخيرِ، لِقَضاءِ الحَوائِجِ، وتَفريجِ الهَمِّ والغَمِّ، وهي من الأسرار المخزونة المكنونة، كما قاله شيخنا اليافعي: أن تقرأ بعد صلاة العشاء، على طهارة كاملة، في جلسة واحدة، اسمه تعالى «لَطِيْفٌ» ستَّ عَشَـَرةَ أَلف مرة وستمائة مرة وإحدى وأربعين مرة، والحذر ثم الحذر من الزيادة والنقص فإنه يبطل السر.
والحيلة في معرفة ضبط ذلك أن تأخذ سبحة عدتها 129 فتقرأ الاسم عليها 129، فيحصل المقصود،
وهذه أقرب الطرق المستقيمة لمعرفتها فإن عدة حروفه أربعة وهي ل ط ي ف جملتها 129 فاضربها في مثلها، فتكون جملتها ستة عشـر ألفا وستمائة وإحدى وأربعين وتسمي حاجتك فإنها تقضى إن شاء الله تعالى لا محالة،
وفي كل مائة وتسع وعشرين مرة تقول: لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير، وهذه للدعاء على الظالم،
ومنها لجلب الخير والرزق والبركة، تقول عقب كل صلاة مائة ثم تقول: الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز.
(منقول من كتاب حياة الحيوان، ص 36، للإمام كمال الدين الدميري)
எந்த ஒரு தேவையாயினும் அது நிறைவேறுவதற்காகவும், கவலை, துக்கம் என்பன நீங்குவதற்காகவும் பின்வரும் ஓதலை ஓத வேண்டும். இது பரீட்சிக்கப்பட்டதாகும். இமாம் யாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியது,
இஷா தொழுகையின் பிறகு “ஸுப்ஹ்” தொழுகைக்கு இடையில் ஓத வேண்டும். ஒரே இருப்பில் இருப்பது நிபந்தனையாகும்.
“லதீப்” لَطِيْفْ எனும் அல்லாஹ்வின் திரு நாமத்தை 16641 தரம் சொல்ல வேண்டும். يَا لَطِيْفْ “யா லதீப்” என்று சொல்லலாம். எண்ணிக்கையில் ஒன்று கூட குறையாமலும், கூடாமலும் இருத்தல் அவசியம். ஒன்று மட்டுமாவது குறைந்தாலும், கூடினாலும் இதிலுள்ள இரகசியம் இல்லாமற் போய் விடும்.
விரலால் எண்ணும் போதும், “தஸ்பீஹ்” ஜெபமாலை மூலம் எண்ணும் போதும் எண்ணிக்கை தவறி விடுவதற்கு சாத்தியம் இருப்பதால் பிழையின்றி எண்ணுவதற்கு ஒரு வழியுண்டு. அவ்வழியால் சென்றால் பிழை விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதாவது 129 மணிகள் கொண்ட ஒரு “தஸ்பீஹ்” மணிக் கோர்வை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை 129 தரம் திரும்பத் திரும்ப ஓதினால் சொல்லப்பட்ட 16641 எண்ணிக்கை வந்துவிடும். 129X129= 16641 வந்துவிடும்.
ஏனெனில் لَطِيْفْ என்ற சொல்லில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவை: ف ي ط ل என்பனவாகும்.
ل – “லாம்” எழுத்திற்கு 30
ط – “தே” எழுத்திற்கு 09
ي – “யே” எழுத்திற்கு 10
ف – “பேF” எழுத்திற்கு 80
மொத்தம்: 129
இதை 129 ஆல் பெருக்கினால் 16641 வரும். 129 மணிகள் உள்ள தஸ்பீஹ் கோர்வையை 129 தரம் ஓதினால் குறித்த தொகை வரும்.
இவ்வாறு ஓதும் போது ஓர் அநீதி காரனுக்கு எதிராக ஓதும் நோக்கம் இருந்தால் 129 ஒரு தரம் ஓதி முடிந்த பின்
لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ،
என்று ஒரு தரம் மட்டும் சொல்லிவிட்டு தொடர்ந்து “யா லதீப்” ஓத வேண்டும். ஒவ்வொரு 129 தரம் முடிந்தவுடன் மேலே சொன்ன திருமறை வசனத்தை ஒரு தரம் ஓத வேண்டும். இவ்வாறு 129 தரம் செய்தால் 16641 வந்து விடும். இவ்வாறு செய்தல் – அதாவது 129 தரம் ஓதி முடிந்த பின் திரு மறை வசனத்தை ஒரு தரம் ஓதுவது ஓர் எதிரிக்கு – அநீதிகாரனுக்கு எதிராக ஓதுவதாயிருந்தால் மட்டுமேயாகும். இது ஒரு ஐட்டம்.
ஐங்காலத் தொழுகைகளில் ஒவ்வொரு தொழுகையின் பின்னும் 100 தரம் மட்டும் “யா லதீப்” ஓதிவிட்டு
اَللهُ لَطِيْفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ،
என்று ஒரு தரம் மட்டும் சொல்லி வந்தால் “பறகத்” உண்டாகும். பொருளாதாரம் பெருகும். எல்லாமே நல்லதாய் முடியும். இது ஒரு ஐட்டம்.
ஆதாரம்: ஹயாதுல் ஹயவான்,
பாகம் 01, பக்கம் 36
ஆசிரியர்: கமாலுத்தீன் அத்தமீரீ றஹிமஹுல்லாஹ்.
ஆலோசனை:
“இஷா” தொழுகையின் பின் “ஸுப்ஹ்” தொழுகைக்கு இடையில் விரும்பிய நேரம் ஓதலாம்.
அமைதியாக, பக்குவமாக ஓதுவதாயின் ஒரு நிமிடத்தில் 50 தரம் “யா லதீப்” என்று சொல்ல முடியும். 16641 தரம் “யா லதீப்” என்று சொல்வதற்கு சுமார் 5.5 மணி நேரம் தேவைப்படும். ஒருவர் தனியே ஓதுவது சிரமமாயிருந்தால் ஒரு குழு சேர்ந்து மொத்த தொகையை அவர்களுக்கிடையில் பங்கு வைத்தும் ஓதலாம். இவ்வாறு ஓதவதாயின் ஓதுகின்ற அனைவரின் குறிக்கோளும் ஒன்றாகவே இருக்க வேண்டும். குழுவிலுள்ள அனைவரும் ஓதி முடிந்த பிறகு “துஆ” ஓதத் தெரிந்த, குழுவில் பக்குவமான ஒருவர் குழுவிலுள்ள அனைவரினதும் பிரதான குறிக்கோளை மனதில் கொண்டு பிரார்த்திக்க, மற்றவர்கள் “ஆமீன்” சொல்ல வேண்டும்.
எனினும், குழுவாகச் செய்யாமல் தனியே செய்ய விரும்புகின்ற ஒருவன் மூன்று மாதத்தில் ஒரு தரம் அல்லது ஐந்து மாதத்தில் ஒரு தரமாவது செய்வது நல்லது. குழுவாகச் செய்ய விரும்புவோர் மாதத்தில் ஒரு முறை கூடச் செய்யலாம். ஓதுபவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதன் மூலம் நேரத்தை குறைக்க முடியும்.
ஒருவர் தனது சொந்த விரோத, குரோதங்களுக்காக இவ்வாறு செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆயினும் மார்க்க, பொது நன்மை கருதி செய்யலாம். உதாரணமாக ஓர் ஊரில் உள்ள ஒருவன் குடிக்கிறான், ஆட்களை அடிக்கிறான், விபச்சாரம் செய்கிறான், திருடுகிறான், கொள்ளை அடிக்கிறான். யார் சொல்லியும் அவன் சீராகவில்லையானால் அவனுக்கு எதிராக இவ்வாறு செய்யலாம்.
அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
பயிருக்கு நீர் எவ்வாறோ மனிதனுக்குப் பணம் அவ்வாறே! என்ற தத்துவம் எதார்த்தமானதாயினும் வறுமையில் இன்பம் காண்பவர்களும் மனிதர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அல்லாஹ்வின் செயல் எதுவாயினும் அதைப் பொருந்திக் கொண்டவர்களாவர். எந்த ஒரு மனிதனாயினும், அவன் எந்த சமயத்தைப் பின்பற்றினவனாயினும், என்ன குலத்தவனாயினும் அல்லாஹ்வின் செயலை முழு மனதுடன் பொருந்திக் கொண்டவனாயிருக்க வேண்டும்.
ஒரு மனிதன் பொருளாதாரத்தில் தன்னை விடக் குறைந்தவனைப் பார்த்து திருப்தியடைய வேண்டுமேயன்றி அதில் தன்னை விட உயர்ந்தவனைப் பார்த்து வேதனையடைவதோ, அல்லாஹ்வின் மீது தப்பான எண்ணம் கொள்வதோ முழுமையான அறியாமையோயாகும். رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ எவர்களை அல்லாஹ் பொருந்தியும், அவர்கள் அல்லாஹ்வைப் பொருந்தியும் உள்ளார்களோ அவர்கள்தான் நல்லடியார்கள். அவர்கள் போல் நாம் யாவரும் வாழும் மனப் பக்குவத்தை நம்மனைவருக்கும் அல்லாஹ் நல்குவானாக!