தொடர் 04
العطاس والتثائب،
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اتَّفَقَ العلماءُ على أنه يُسْتَحَبُّ للعاطس أن يقولَ عَقِبَ عُطَاسِهِ: ‘الحمد لله ‘، فلو قال: ‘الحمد لله ربّ العالمين ‘ كان أحسن، ولو قال: ‘الحمد لله على كُلّ حالٍ ‘ كان أفضلَ،
“தும்மினவன் தும்மியதைத் தொடர்ந்து “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். அவன், “அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” என்று சொன்னால் அது அழகானதாகும். அவன், “அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்” என்று சொன்னால் அது மிகச் சிறந்ததாகும்” என்று மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒரே குரலில் கூறியுள்ளார்கள்.
روينا في سنن أبي داود وغيره بإسناد صحيح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ‘ إذا عطس أََحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ على كُلّ حالٍ، وَلْيَقُلْ أخُوهُ أوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّه، وَيَقُولُ هُوَ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ ‘ (رواه أبو داؤود 5033(
இந்த நபீ மொழி கடந்த பதிவு ஒன்றில் எழுதப்பட்டுள்ளது.
(உங்களில் ஒருவன் தும்மினால் அவன் اَلْحَمْدُ للهِ عَلَى كُلِّ حَالٍ “அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்” என்று சொல்லிக் கொள்ளவும். அவன் அவ்வாறு சொன்னதைக் கேட்டவன் يَرْحَمُكَ اللهُ “யர்ஹமுகல்லாஹ்” என்று சொல்லவும். அதற்கு மற்றவன் தும்மியவன் يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ “யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்” என்று சொல்லவும்)
(ஆதாரம்: அபூ தாஊத் 5033, அறிவிப்பு: அபூ ஹுறைறா)
தும்மினவன் சொன்ன குறித்த வசனத்தின் பொருள் “எல்லா நிலையிலும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!” என்பதாகும். அதைக் கேட்ட மற்றவன் சொன்ன வசனத்தின் பொருள் “அல்லாஹ் உங்களுக்கு “றஹ்மத்” அருள் செய்வானாக! என்பதாகும். அதற்கு மற்றவன் – தும்மினவன் சொன்ன வசனத்தின் பொருள் “அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டி உங்களின் நிலைமைகளை சீராக்குவானாக!” என்பதாகும்.
قال أصحابُنا: والتَّشْمِيْتُ وهو قوله: ‘يرحمك الله ‘، سنّةٌ على الكفاية، لو قاله بعضُ الحاضرين أَجْزَأَ عنهم، ولكنّ الأفضلَ أن يقوله كلُّ واحدٍ منهم،
“தஷ்மீத்” என்ற சொல் தும்மிய பின் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னவனுக்கு சொல்லப்படுகின்ற يَرْحَمُكَ اللهُ என்று சொல்வதைக் குறிக்கும். இது “ஸுன்னத் கிபாயா” என்று சொல்லப்படும்.
ஒரு கூட்டத்திலுள்ள ஒருவன் தும்மிவிட்டு அவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னால் அக் கூட்டத்திலுள்ள அனைவரும் அவனுக்கு பதில் சொல்லாமல் அவர்களில் ஒருவனாவது அவனுக்கு பதில் சொன்னால் அது போதும். கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களில் ஒருவன் சொல்வது மட்டும் மற்றவர்களும் சொன்னதற்கு சமமாகிவிடும். அவர்களில் ஒவ்வொருவரும் பதில் கூறுவது தவறு என்பது கருத்தல்ல. ஆயினும் அவர்களில் ஒவ்வொருவரும் பதில் சொல்வது சிறந்ததேயாகும். (ஆதாரம்: அல் அத்கார், ஆசிரியர்: இமாம் நவவீ, பக்கம் 442)
إذا لَمْ يَحْمَدِ الْعَاطِسُ لا يُشَمَّتُ، للحديث المتقدم، وأقلُّ الْحَمْدِ والتَّشْمِيْتِ وجوابِه أن يرفعَ صوتَه بحيث يُسمِعُ صاحبَه.
தும்மிவிட்டு தும்மினவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லாவிட்டால் அவனுக்கு “யர்ஹமுகுல்லாஹ்” என்று சொல்லத் தேவையில்லை. அதாவது அவ்வாறு சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகாது.
தும்மினவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லும் போது ஓரளவு தான் சத்தத்தை உயர்த்திச் சொல்ல வேண்டும். ஒரு கூட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்குமளவு சொல்லத் தேவையில்லை. ஆயினும் தும்மிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னவனுக்கு “யர்ஹமுகல்லாஹ்” என்று பதில் சொல்பவன் அவனுக்கு கேட்குமளவு சொல்ல வேண்டும். இதேபோல்தான் அதற்குப் பதில் சொல்பவனுமாவான்.
தும்மும் போது தும்முகின்றவன் ஓரளவுதான் சத்தத்தை உயர்த்த வேண்டுமேயன்றி பிறருக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமளவு சத்தத்தை உயர்த்துவது கூடாது.
إذا قال العاطسُ لفظاً آخرَ غير ‘ الحمد لله ‘ لم يستحقّ التشميت.
தும்மினவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லவில்லையானால் அவனுக்கு “யர்ஹமுகல்லாஹ்” என்று சொல்வது “ஸுன்னத்” ஆகாது. இதேபோல் தும்மினவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்ற வசனத்தைப் பயன்படுத்தாமல் வேறு வசனத்தைப் பயன்படுத்துவானாயின் அவனுக்கும் “தஷ்மீத்” – “யர்ஹமுகல்லாஹ்” என்று சொல்வது “ஸுன்னத்” ஆகாது. உதாரணமாக தும்மினவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லாமல் எங்கும் நிறைந்த ஏகன் என்றோ, அல்லாஹ்வுக்கு நிகராக எதுவுமில்லை என்றோ சொன்னால் அவனுக்குப் பதில் சொல்வது நபீ வழியாகாது.
روينا في سنن أبي داود والترمذي عن سالم بن عبيد الأشجعي الصحابي رضي الله تعالى عنه قال: ‘ بَيْنَا نَحْنُ عِند رسول الله صلى الله عليه وسلم إِذْ عَطَسَ رجلٌ مِنَ القوم، فقال: السلام عليكم، فقال رسول الله صلى الله عليه وسلم: وَعَلَيْكَ وَعَلى أُمِّكَ، ثم قال: إذَا عَطَسَ أحَدُكُمْ فَلْيَحْمَدِ اللَّه تَعالى، فذكر بعض المحامد، وَلْيَقُلْ لَهُ مَنْ عِنْدَهُ: يَرْحَمُكَ اللَّهُ، وَلْيَرُدَّ – يعني عليهم – يَغْفِرُ اللَّهُ لَنا ولكم ‘ (رواه أبو داؤود والترمذي 5031 – 284(
நபீ தோழர் ஸாலிம் இப்னு உபைத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(நாங்கள் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் இருந்த சமயம் எங்களில் ஒருவர் தும்மிவிட்டு “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொன்னார். அப்போது நபீகளார் அவர்கள், “உன் மீதும், உன் தாய் மீதும்” என்று கூறினார்கள். அதன் பிறகு “உங்களில் ஒருவர் தும்மினால் அல்லாஹ்வை அவர் புகழ வேண்டும்” என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் புகழ்களில் சிலதை கூறிக் காட்டினார்கள். அவ்வாறு தும்மிய ஒருவர் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அவரிடம் இருப்பவர் يَرْحَمُكَ اللهُ என்று சொல்ல வேண்டும். மற்றவர் – தும்மினவன் அவருக்கு يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ எங்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பானாக! என்று சொல்ல வேண்டும்) என்று கூறினார்கள்.
ஆதாரம்: அபூ தாவூத், துர்முதீ
அறிவிப்பு: ஸாலிம் இப்னு உபைத், அல் அத்கார் 443)
தும்முகின்றவன் தனது கையை அல்லது துணியை தனது வாயில் வைத்து சத்தத்தை தாழ்த்தி – குறைத்து தும்முவது நபீ வழியாகும். “ஸுன்னத்” ஆகும்.
السنّة إذا جاءَه العطاسُ أن يضعَ يدَه أو ثوبَه أو نحو ذلك على فمه، وأن يخفضَ صوتَه.
روينا في سنن أبي داود والترمذي عن أبي هريرة رضي الله عنه قال: ‘ كان رسول الله صلى الله عليه وسلم إذا عطَس وضعَ يدَه أو ثوبَه على فَمِه، وخَفَضَ أو غَضَّ بِهَا صوتَه، (رواه أبو داؤود والتُّرمُذي، 5029 – 274(
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தும்மினால் தங்களின் திருக்கரத்தை அல்லது தங்களின் துணியை தங்களின் திருவாயில் வைத்து தங்களின் சத்தத்தை தாழ்த்துவார்கள்.
ஆதாரம்: அபூ தாஊத் 5029 -274, அறிவிப்பு: அபூ ஹுறைறா.
இன்று வாழ்பவர்களிற் பலர் தும்மினால் மேற்கண்டவாறு செய்வதில்லை. ஒரு வீட்டிலிருந்து தும்மும் ஒருவரின் சத்தம் பல வீடுகளுக்கு கேட்கும். சிறு பிள்ளைகள் வீட்டில் இருந்தால் பயந்து நடுங்கிவிடுவார்கள். பயந்து அழுவார்கள். வாயில் கை வைப்பதும், அல்லது துணியை வைப்பதும் சத்தத்தைக் குறைப்பதற்கு வழி செய்யும். ஒரு சபையில் இருந்து தும்முவோர், கட்டாயம் தனது கையால் அல்லது துணியால் அதிக சத்தம் வராமலும், வாயிலுள்ள உணவு மற்றவர்களுக்கு தெறிக்காமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சபையில் சாப்பிடும் போது பேணப்பட வேண்டிய விடயங்களாகும். கொட்டாவி விடும் போது மேற்கண்ட ஒழுங்குகளைப் பேண வேண்டும்.
قال رسول الله صلى الله عليه وسلم: ‘ إنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَكْرَهُ رَفْعَ الصَّوْتِ بالتَّثاؤُبِ والعُطاسِ ‘
அல்லாஹ் சத்தத்தை உயர்த்தி தும்முவதையும், கொட்டாவி விடுவதையும் வெறுக்கிறான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
عن أُمّ سلمة رضي الله عنها قالت: سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول: ‘ التَّثاؤُبُ الرَّفِيعُ وَالعَطْسَةُ الشَّدِيدَةُ مِنَ الشيطان ‘
சத்தமாக கொட்டாவி விடுவதும், கடுமையான தும்மலும் “ஷெய்தான்” ல் நின்றுமுள்ளவை என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று உம்மு ஸலமா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அல் அத்கார், பக்கம் 444)
فصل: إذا تَكرّرَ العطاسُ من إنسان متتابعاً، فالسنّةُ أن يُشَمِّتَه لِكُلِّ مَرَّةٍ إلى أن يَبْلُغَ ثَلَاثَ مَرَّاتٍ.
ஒரு மனிதன் தொடர்ந்து தும்மினால் மூன்று தும்மலுக்கு மட்டுமே يرحمك الله என்று சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். நாலாவது தும்மல் முதல் ஆயிரம் தரம் தும்மினாலும் அதற்கு அவ்வாறு சொல்லத்தேவையில்லை.
روينا في ‘ صحيح مسلم ‘ وسنن أبي داود والترمذي عن سلمة بن الأكوع رضي الله عنه ‘ أنه سمعَ النبيَّ صلى الله عليه وسلم وَعَطَسَ عندَه رجلٌ، فقال له: يَرْحَمُكَ اللَّهُ، ثم عَطَسَ أخرى، فقال له رسولُ الله صلى الله عليه وسلم: الرَّجُلُ مَزْكُومٌ ‘
நபீ தோழர் ஸலமதுப்னு அக்வஉ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சபையில் ஒருவர் தும்மினார். நபீயவர்கள் அவருக்கு يرحمك الله என்று கூறினார்கள். இரண்டாவது முறையாகவும் தும்மினார். அதாவது அவர் தடிமலால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்கள்.
(ஆதாரம்: அபூ தாஊத், துர்முதீ, முஸ்லிம் 2993)
இந்த நபீ மொழி மூலம் ஒரு தரம் மட்டும் தும்மினவனுக்கே يرحمك الله என்று சொல்ல வெண்டும் என்பதும், இரண்டாம் முறை அவன் தும்மினால் அவ்வாறு சொல்லாமல் இவன் தடிமல் காரன் என்று சொல்ல வேண்டும் என்பதும் விளங்கப்படுகிறது.
இந்த நபீ மொழியை அடுத்து பின்வரும் நபீ மொழி கூறப்பட்டுள்ளது. இதில் முந்தின நபீ மொழியில் கூறப்பட்டதற்கு மாறான கருத்து தென்படுகிறது.
وأما رواية أبي داود والترمذي فقالا: قال سلمة: ‘ عَطَسَ رجل عندَ رسول الله صلى الله عليه وسلم وأنا شاهدٌ، فقال رسول الله صلى الله عليه وسلم: يَرْحَمُكَ اللَّهُ، ثم عَطَسَ الثانية أو الثالثة، فقال رسول الله صلى الله عليه وسلم: يَرْحَمُكَ اللَّهُ، هَذَا رَجُلٌ مَزْكُومٌ ‘
அபூ தாஊத், துர்முதீ இருவரும் “ஸலமா” சொன்னதாக பின்வருமாறு அறிவித்துள்ளார்கள். (நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சபையில் ஒருவர் தும்மினார். பெருமானார் அவர்கள் يرحمك الله என்று அவருக்குச் சொன்னார்கள். பின்னர் இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் தும்மினார். அதற்கும் பெருமானார் அவர்கள் يرحمك الله சொன்னார்கள். அதன் பிறகு இவர் தடிமலால் பாதிக்கப்பட்டவர்) என்று கூறினார்கள்.
இன்னுமொரு நபீ மொழி தெளிவாக வந்துள்ளது.
وأما الذي رويناه في سنن أبي داود والترمذي عن عبيد الله بن رفاعة الصحابيّ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ‘ يُشَمَّتُ العاطِسُ ثَلاثاً، فإنْ زَادَ، فإنْ شِئْتَ فَشَمِّتْهُ، وَإنْ شِئْتَ فَلا ‘
நபீ பெருமான் அவர்கள் சொன்னதாக உபைத் இப்னு ரிபாஆ என்ற நபீ தோழர் கூறுகிறார்கள்.
(தும்மியவனுக்கு يرحمك الله என்று மூன்று தரம் மட்டுமே சொல்ல வேண்டும். அதாவது தும்முகின்றவன் மூன்று தரம் தும்மினால் ஒவ்வொரு தரத்திலும் يرحمك الله என்று சொல்லலாம். மூன்று தரத்திற்கும் அதிகமாக அவன் தும்மினால் நீ விரும்பினால் يرحمك الله என்று சொல். விரும்பவில்லையானால் சொல்லத் தேவையில்லை. (இந்த நபீ மொழி “ழயீப்” பலம் குறைந்ததென்று சொல்லப்பட்டுள்ளது) (அல் அத்கார், பக்கம் 445)
தொடரும்…
இது தொடர்பான தீர்க்கமான முடிவை அறிய விரும்புவோர் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.