தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عن أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتْبَعُ الدَّجَّالَ مِنْ يَهُودِ أَصْفهَانَ، سَبْعُونَ أَلْفًا، عَلَيْهِمُ الطَّيَالِسَةُ»
“தஜ்ஜால்” என்பவனை “இஸ்பBஹான்” – “இஸ்பFஹான்” நாட்டைச் சேர்ந்த எழுபதாயிரம் “யஹூதீ” யூதர்கள் பின்பற்றுவர். அவர்கள் “தயாலிஸா” அணிந்திருப்பார்கள்.
“இஸ்பஹான்” பிரதேசத்தைச் சேர்ந்த யஹூதீகளில் தலையில் “தைலஸான்” அணிந்த எழுபதாயிரம் பேர் “தஜ்ஜால்” என்பவனைப் பின்பற்றுவார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் 5478, மிஷ்காதுல் மஸாபீஹ், பாகம் 09, பக்கம் 398)
பின்னொரு காலத்தில் “தஜ்ஜால்” என்பவன் தோன்றி மக்களை வழி கெடுப்பான். அவனை இஸ்பஹான் நாட்டைச் சேர்ந்த எழுபதாயிரம் பேர் பின்பற்றுவார்கள். அதாவது அவனுக்கு வழிப்படுவார்கள்.
“தைலஸான்” என்றால் தலையில் தொப்பிக்கு மேல், அல்லது தொப்பியின்றி ஒரு துணியைப் போட்டுக் கொள்வதாகும். அதாவது ஒரு சால்வையைப் போட்டுக் கொள்வதாகும். அதன் இரு தொங்கல்களில் ஒன்று வலது பக்கமும், மற்றது இடது பக்கமும் தொங்கிக் கொண்டிருக்கும்.
இதை அறபு மக்கள் அணிவார்கள். குறிப்பாக சஊதி மக்கள் அணிவார்கள். அது பல் நிறமுள்ளதாகவோ, வெள்ளை நிறமுள்ளதாகவோ, பச்சை நிறமுள்ளதாகவோ இருக்கும். சஊதி மக்களுக்கு இது அணிவது “பர்ழ்” போன்றதாகும்.
இது ஆரம்ப காலத்தில் உலமாஉகளான மார்க்க அறிஞர்களும், “தரீகா”வுடைய ஷெய்குமார்களும் அணிந்து வந்த ஒன்றாகும். அவர்கள் அணிந்த நோக்கம் வேறு. இப்போதுள்ளவர்கள் அணியும் நோக்கம் வேறு.
முன்னோர்களான உலமாஉகளும், குறிப்பாக ஷெய்குமாரும் அணிந்தது பாதையில் இரு மருங்கிலும் நடைபெறுகின்ற அனாச்சாரம், அட்டூழியங்களைக் கண்டு கொள்ளாமல், குறிப்பாக பெண்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அது ஒரு திரை போன்றதென்ற நல்லெண்ணத்தில் பயன்படுத்தி, பாவித்து வந்தார்கள். ஆனால் இன்று நமது நாட்டு அஜமீகள் – அறபீகள் அல்லாதவர்கள் சிலர் வேறு துன்யாவுடைய நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றார்கள். சிலர் தம்மைப் பெரிய மனிதன் என்று இனங் காட்டுவதற்கு அடையாளமாகவும், வேறு நோக்கங்களுக்காகவும் பாவிக்கிறார்கள். முன்னோர்களான உலமாஉகளும், ஷெய்குமார்களும் பாவித்த நோக்கம் இவர்களிடமில்லை.
“ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகள் இதற்கு شِعَارُ الْوَهَّابِيَّةْ “ஷிஆறுல் வஹ்ஹாபிய்யா” “வஹ்ஹாபீகளின் சின்னம்” என்று பெயர் வைத்துள்ளார்கள்.
இறுதி நாள் நெருங்கும் போது இப்பூமியில் வாழ்கின்ற யஹூதீகள் இதை நிச்சயமாக அணிவார்கள் என்பதற்கு மேற்கண்ட நபீ மொழி ஆதாரமாக உள்ளது. இக்காலத்தைப் பொறுத்த வரை இது அணிவது “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகளுக்கு பொருத்தமானதல்ல. ஆயினும் பிறரைக் கவர்ந்து அவர்களிடம் “பணப் பால்” கறக்கும் நோக்கத்துடன் அணிவது தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். إٍنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ செயல்கள் யாவும் “நிய்யத்” எண்ணத்தைப் பொறுத்ததே.
இது அணிவதை இகழ்ந்து இமாம் ஜலாலுத்தீன் ஸூயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், طَيُّ اللِّسَانْ عَنِ الطَّيْلَسَانْ என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தைலஸான்” பாவிக்காமல் தலைப்பாகை அணிவது சிறந்ததே!
اَِصفهان – بفتح الهمزة ويُكسَرُ وفتحِ الفاء، (إِصْفَهَانْ، أَصْفَهَانْ)
بلدٌ معروفٌ مِن بلادِ الأَرْفَاضِ، قال النووي رحمه الله، يجوز فيه كَسْرُ الهَمزة وفتحُها، وبالباءِ والفاءِ، (إِصْفَهَانْ – أَصْفَهَانْ، إِصْبَهَانْ – أَصْبَهَانْ)
“இஸ்பBஹான்” – “இஸ்பFஹான்” என்பது “றாபிழா” என்ற வழி தவறிய கூட்டத்தினர் வாழும் ஊராகும்.
اَلرَّافِضَةُ – فِرقةٌ مِن، أصحابِ الشيعة، والنِّسبةُ رَافِضِيٌّ، الفِرقةُ من الروافضِ وهُم الّذين تركوا قائدَهم فى حربٍ أو سِواها، ومنه قولهم لا خيرَ فى الرَّوَافِضِ،
ونُسخُ المِشكاة كلّها – أي كتاب مشكاة المصابيح – بالفاء، إصفهان، وفى المشارق بفتح الهمزة، وقيّدها أبو عُبيد العَكبري بكسرِ أوّلِه، وأهلُ خُراسان يقولونها بالفاء مكانَ الباء، وفى القاموس الصوابُ أنّها أعجميّةٌ، وقد يُكسَرُ همزُها، وقد يُبدَلُ بائُها فاءًا، وفى المعنى بكسر همزةٍ وفتحِها، وبفاءٍ مفتوحةٍ فى أهل الشرق، وباءٍ موحّدة فى الغرب، (مرقاةُ المفاتيح، شرح مشكاة المصابيح، للشّيخ عليّ القاري، ج 9، ص 398)
اَلطَّيَالِسَةُ – بفتح طاءٍ وكسرِ لامٍ، جمع طيلسان، وهو ثوب معروف،
اَلطَّيْلَسُ ج طَيَالِسْ، وَالطَّيْلَسَانْ، وَالطَّيْلِسَانْ، وَالطَّيْلُسَانْ ج طَيَالِسْ، كِساءٌ أَخْضَرُ، يلبسُه الخواصُّ مِن المشائخ والعلماء، وهو من لباسِ العَجم، وفى القاموس: اَلطَّيْلَسُ وَالطَّيْلَسَانُ مُثَلَّثَةُ اللّامِ، عن عياض وغيرِه مُعَرَّبٌ، أصلُه تَالِسَانْ، جمعه اَلطَّيَالِسَةْ، والهاءُ فى الجمع للعُجمة، واستدلَّ بهذا الحديث على ذمِّ لبسِه، ورواه السُّوطي فى رسالةٍ سمّاها (طيُّ اللِّسان عن الطَّيْلَسَانْ) (مرقاة المفاتيح، ج 9، ص 398)