தொடர்: 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ‘ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ ‘
முஸ்லிம்களும், யஹூதீகளும் போர் செய்யும் வரை மறுமை நாள் உண்டாகாது. முஸ்லிம்கள் அவர்களை – யஹூதீகளை கொல்வார்கள். அந்த யூதர்கள் மரத்திற்குப் பின்னாலும், கல்லுக்குப் பின்னாலும் மறைந்து கொள்வார்கள். அந்த மரம் அல்லது கல் அல்லாஹ்வின் அடியானான முஸ்லிமே! என்றழைத்து இதோ எனக்குப் பின்னால் ஒரு யஹூதீ – யூதன் மறைந்திருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு என்று சொல்லும். غَرْقَدْ – “ஙர்கத்” (Nitraria) என்ற மரத்தை தவிர. அது யஹூதீகளின் மரமாகும்.
ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அபூ ஹுறைறா
جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَأُخْرِجَنَّ الْيَهُودَ، وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ حَتَّى لَا أَدَعَ إِلَّا مُسْلِمًا»
யஹூதீகளையும், நஸாறாக்களையும் “ஜஸீறதுல் அறப்” Arabian Peninsula மண்ணிலிருந்து நான் வெளியேற்றுவேன். அங்கு முஸ்லிமைத் தவிர வேறெவரையும் விட்டு வைக்கமாட்டேன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي المَسْجِدِ، خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْطَلِقُوا إِلَى يَهُودَ»، فَخَرَجْنَا حَتَّى جِئْنَا بَيْتَ المِدْرَاسِ فَقَالَ: «أَسْلِمُوا تَسْلَمُوا، وَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ، وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ يَجِدْ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلَّا فَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ»
“நாங்கள் பள்ளிவாயலில் இருந்த போது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் (தமது அறையிலிருந்து) வெளியே வந்து, யூதர்களை நோக்கி நடங்கள் – செல்லுங்கள் என்று கூறினார்கள். உடனே நாங்கள் புறப்பட்டுச் சென்று “பைதுல் மித்ராஸ்” எனும் இடத்தை அடைந்தோம்.
அப்போது நபீயவர்கள், “இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும் பூமி அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்த விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரது செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்று விடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா.
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ،
(“முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை அறபு மண்ணிலிருந்து வெளியேற்றுங்கள்) என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: இப்னு அப்பாஸ்.
மேலே நான் எழுதியுள்ள நபீ மொழிகளில் “முஷ்ரிகீன்” என்ற சொல்லும், “யஹூத்” என்ற சொல்லும், “நஸாறா” என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
மேற்கண்ட மூன்று சொற்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களைக் குறிக்கும் சொற்கள் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
“ஜஸீறதுல் அறப்” – Arabian Peninsula
நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேற்கண்ட பொன் மொழிகளில் “ஜஸீறதுல் அறப்” என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார்களேயன்றி அதன் நீளம், அகலம் முதலான விபரங்கள் தொடர்பாக ஒன்றும் குறிப்பிடவில்லை.
எனினும் குறித்த சொல்லுக்கு விளக்கம் எழுதிய அறிஞர்கள் அது நீளத்தால் “அத்ன்” ஏடனுக்கும், இறாக்குக்கும் இடைப்பட்டதும், அகலத்தால் ஜித்தாவுக்கும், சிரியாவுக்கும் இடைப்பட்டதும் என்று விளக்கம் எழுதியுள்ளார்கள்.
இதன்படி சஊதி அரேபியா, ஜோர்தான், லெபனான், ஜெரூஸலம், பலஸ்தீன், இறாக், குவைத், சிரியா, யமன், ஐக்கிய அறபு இராச்சியம், ஓமான், கத்ர் முதலான நாடுகளாகும்.
دُوَلُ جَزِيْرَةِ الْعَرَبِ،
يُوجد في جزيرة العرب أو شبه الجزيرة العربية تسعةُ دولٍ بالإجمال هي الأردن والعراق والكويت والبحرين وقطر والإمارات العربية المتحدة وعُمان واليمن والمملكة العربية السعودية.
قال الإمام أحمد بن حنبل، وقد روينا فى الحديث الثابت عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ: «أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ»
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மரண வருத்தத்தில் இருந்த போது (“முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை “ஜஸீறதுல் அறப்” எல்லையிலிருந்து வெளியேற்றிவிடுங்கள்) என்று அருளினார்கள்.
ஆதாரம்: மஃரிபதுஸ் ஸுனன் வல் ஆதார், இமாம் அஹ்மத், 18584)
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: يَوْمُ الخَمِيسِ، وَمَا يَوْمُ الخَمِيسِ؟ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ، فَقَالَ: «ائْتُونِي أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: مَا شَأْنُهُ، أَهَجَرَ اسْتَفْهِمُوهُ؟ فَذَهَبُوا يَرُدُّونَ عَلَيْهِ، فَقَالَ: «دَعُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ» وَأَوْصَاهُمْ بِثَلاَثٍ، قَالَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ أَوْ قَالَ فَنَسِيتُهَا ‘ (رواه البخاري 4431)
(ஸயீத் பின் ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?) என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத் தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர்.
ஆகவே, நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தறுவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்.
“அறபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்துவந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில்முஸ்லிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஸயீத் பின் ஜுபைர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் (நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்) “மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌனமாயிருந்துவிட்டார்கள்” அல்லது “(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்துவிட்டேன்”
ஆதாரம்: புகாரீ 4431, அறிவிப்பு: ஸயீத் இப்னு ஜுபைர்.
மேற்கண்ட நபீ மொழி நான் அறிந்த வகையில் வெளிரங்கமான, மற்றும் உள்ரங்கமான சில “அஸ்றார்” இரகசியங்களை உள்வாங்கியது போல் தோணுகிறது. அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்த்து, தெளிவாகக் கூற மனமிருந்தாலும் கூட எனது கருத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் எனக்கும், எனது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படுத்துகின்ற பல்வேறு சிக்கல்களை கவனத்திற் கொண்டு அவற்றைத் தொடாமல் “ஜஸீறதுல் அறப்” எல்லையிலிருந்து முஷ்ரிகீன், மற்றும் யூதர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்ற பெருமானார் அவர்களின் கட்டளை பற்றி மட்டும் எழுதுகிறேன்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், நபீகட்கரசர் என்றும், மனிதருள் மாணிக்கம் என்றும், “றஹ்மதுன் லில் ஆலமீன்” உலக மக்கள் அனைவருக்கும் அருட் கொடை என்றும், இன, மத வேறுபாடின்றி உலக அறிஞர்கள் அனைவராலும், போற்றிப் புகழப்படுகின்றவர்கள் எந்த ஒரு நியாயமான காரணமுமின்றி முஷ்ரிகீன், யஹூதீ, நஸாறா போன்ற இணை வைப்பாளர்களை அறபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொல்லியிருப்பார்களா? என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
நபீ பெருமானார் அவர்கள் தமது வாழ்வில் யாருக்காவது அநீதி செய்தார்கள் என்பதற்கோ, இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதற்கோ, பாகு பாடு காட்டி நடந்தார்கள் என்பதற்கோ எந்த ஓர் ஆதாரமும் இல்லாதிருக்கும் நிலையில், யூதர்களையும், “நஸாறா”க்களையும், “முஷ்ரிகீன்”களையும் “ஜஸீறதுல் அறப்” அறபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுமாறு எவ்வாறு சொல்வார்கள்? அவர்களின் இப்பேச்சின் வெளித்தோற்றம் அறிவிலிகளுக்கு அநீதி போல் தோற்றினாலும் இதன் உள் தோற்றம் எதுவென்பது மனக் கண் திறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!
நான் மேலே எழுதிய நபீ தோழர் அபூ ஹுறைறா அறிவித்த, இமாம் புகாரீ அவர்கள் தங்களின் “ஸஹீஹுல் புகாரீ” எனும் நூலில் பதிவு செய்துள்ள நபீ மொழியில் இரண்டு இடங்களில் وَاعْلَمُوْا أَنَّ الْأَرْضَ للهِ وَرَسُوْلِهِ யஹூதீகளே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இப்பூமி – இவ் உலகம் அல்லாஹ்வுக்கும், அவனின் திருத் தூதருக்கும் சொந்தமானது என்ற வீர மொழி இப்பூமி குறித்த இருவருக்கும் மட்டும் சொந்தமானதாயிருப்பதினால்தான் “நான் உங்களை வெளியேற்றுவேன்” என்றும், “முஸ்லிம்களே! நீங்கள் வெளியேற்றுங்கள்” என்றும் கூறினார்கள்.
இந்த நபீ மொழியின் மூலம் இந்தப் பூமி – இவ் உலகம் குறித்த இருவருக்கும் மட்டுமே சொந்தமானதென்ற உண்மையை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
குறித்த அறபு மண் புனிதமானதேன்?
பரந்து விரிந்த இப்பூமியில் எண்ணற்ற நாடுகள் இருக்கும் நிலையில் குறிப்பாக “ஜஸீறதுல் அறப்” என்ற வசனம் மூலம் மேற்கண்ட நாடுகளை மட்டும் எம் பெருமானார் குறிப்பிட்டதிலிருந்து உலக நாடுகளில் இவை மட்டும்தான் புனிதமானவை என்பது தெளிவாகிறது.
இது மட்டுமல்ல. திரு மக்கா நகருக்கு குறிப்பிட்ட எல்லை உண்டு. அவ் எல்லைக்குள் முஸ்லிம் அல்லாத எவரும் – அவர் மன்னராயினும், மகுடாதிபதியாயினும், ஜனாதிபதியாயினும் உட் செல்லக் கூடாது என்ற சட்டம் அன்று முதல் இன்று வரை பேணப்பட்டே வருகிறது.
குறிப்பு:
அன்பிற்குரிய முஸ்லிம்களே! இஸ்லாம் மார்க்கத்தின் கடும் எதிரிகளான யூதர்களால் அறபு மக்கள் கொத்துக் கொத்தாக சித்திரவதை செய்து கொல்லப்படுவதும், மருத்துவமனைகளில் தங்கியிருந்த அப்பாவி முஸ்லிம்களும், பாலருந்தும் சிறுவர்களும் பரிதாபமாக கொல்லப்படுவதையும், யூதர்கள் முஸ்லிம்களின் “ஜனாசா”வின் மீது சலம் கழிப்பதையும் நீங்கள் பார்க்கும் போது உங்களை மீறி கோபமும், ஆத்திரமும் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் அல்லாஹ்வுக்காகவும், கண்மணி நாயகம் அவர்களின் திரு முகத்திற்காகவும் பொறுமை செய்து அறபு முஸ்லிம்களின் வெற்றிக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் இறைவனிடம் கையேந்துமாறும், ஆர்ப்பாட்டங்கள் செய்ய விரும்பினால் அரச அனுமதியோடு செய்து கொள்ளுமாறும், பள்ளிவாயல்களில் “துஆ” பிரார்த்தனை செய்யுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
اَللهم بَارِكْ لَنَا فِى شَامِنَا وَفِى يَمَنِنَا
இறைவா! எங்களின் “ஷாம்” நாட்டுக்கும், யமன் நாட்டுக்கும் நீ அருள் செய்வாயாக! என்ற பெருமானார் அவர்களின் பிரார்த்தனை வீணாகிவிடாது என்பதை நிச்சயமாக நீங்கள் நம்புங்கள். الله أكبر
தொடரும்…
குறிப்பு: அரசின் சட்ட விதிகளை மீறாமல் எமது வெற்றிக்காக உழைப்போம்!
தொடர்: 02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ‘ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ ‘
முஸ்லிம்களும், யஹூதீகளும் – யூதர்களும் யுத்தம் செய்யும் வரை மறுமை நாள் உண்டாகாது. முஸ்லிம்கள் அவர்களை – யஹூதீகளை கொல்வார்கள். அந்த யூதர்கள் மரத்திற்குப் பின்னாலும், கல்லுக்குப் பின்னாலும் ஒழிந்திருப்பார்கள். அந்த மரம் அல்லது கல் அல்லாஹ்வின் அடியானான முஸ்லிமே! என்றழைத்து இதோ எனக்குப் பின்னால் ஒரு யஹூதீ – யூதன் மறைந்திருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு என்று சொல்லும். ஆனால் غَرْقَدْ – “ஙர்கத்” (Nitraria) என்ற மரத்தை தவிர. அது யஹூதீகளின் மரமாகும்.
ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அபூ ஹுறைறா
நவீன ஆயுதங்களையும், படைப் பலத்தையும் நம்பிக் கொண்டு பலஸ்தீன மக்களைக் கொன்றொழித்து விட்டு பலஸ்தீனையும், “மஸ்ஜிதுல் அக்ஸா”வையும் ஆக்கிரமித்துக் கொண்டு அட்டூழியம் செய்யும் யூதர்களை கல்லும், மரமும் காட்டிக் கொடுத்து அவர்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்படும் காலம் நெருங்கிவிட்டதென்ற கருத்தை மேலே கூறிய நபீ மொழி உணர்த்துகிறது. அது இக்காலமாகவும் இருக்கலாம். எதிர் காலமாகவும் இருக்கலாம். நபீ பெருமானின் பேச்சு ஒருபோதும் பொய்யாகாது.
“ஜஸீறதுல் அறப்” மண் புனிதமானதேன்?
01. பலஸ்தீன் அதிகமான நபீமார்கள் வாழ்ந்த பூமி.
02. நபீ இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதலில் பலஸ்தீனுக்கே குடிபெயர்ந்தார்கள்.
03. பலஸ்தீனில் தனது சமூகத்திற்கு ஏற்பட்ட தண்டனையிலிருந்து அல்லாஹ் நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காப்பாற்றினான்.
நடந்தது என்ன?
பலஸ்தீனில் உள்ள مَدَائِنْ – “மதாயின்” எனும் நகர மக்களுக்கு நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபீயாக அனுப்பினான். அவ் ஊர் மக்கள் தன்னினச் சேர்க்கையில் முன்னணியில் இருந்தார்கள். அவர்களிற் பலர் திருமணம் செய்யாமல் தன்னினச் சேர்க்கையிலேயே காலம் கழித்தார்கள். நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவோ அவர்களை எச்சரித்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.
நபீ “லூத்” அலைஹிஸ்லஸாம் அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அல்லாஹ் அழகிய உருவத்தில் “மலக்” மார்களில் சிலரை அவ் ஊருக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் அவ் ஊரில் மனித உருவத்தில் இறங்கிய போது விடயம் தெரியாத அவ் ஊர் மக்கள் அந்த மலக்குகளையும் துரத்திப் பிடிக்க முற்பட்ட போது, அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “மதாயின்” நகரை தலை கீழாய் புரட்டி விடுமாறு கட்டளையிட்டான்.
அவர்கள் பூமிக்கு வந்து தங்களின் வலுப்பமிகு இறக்கையை பூமிக்கு கீழால் வைத்து அந் நகரை அவ்வாறே வான் பக்கம் தூக்கிச் சென்று அதை தலை கீழாய் புரட்டி விட்டார்கள். அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் செத்து மடிந்தார்கள். அவ் ஊர் சுக்கு நூறாகத் தகர்க்கப்பட்டு அவ் ஊர் இருந்த இடம் கடலாக மாறியது. அதுவே இன்று “டெட் சீ” செத்த கடல் என்று அழைக்கப்படுகிறது. இதில் மீனோ, புழுப் பூச்சோ எந்த உயிரும் வாழாது. இது உப்பு நீரை விடக் கசப்பான தன்மை உள்ள கடலாகும்.
இக்கடலை பார்க்கச் செல்லும் வெளி நாட்டவர்களுக்கு முதலில் கூறும் அறிவுரை “இங்கு தாமதிக்க வேண்டாம், நீரால் கை, கால், முகம் கழுவ வேண்டாம், நீரைக் குடிக்க வேண்டாம்” என்பதாகும்.
அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பொலீசாரிடம் ஏன் இத்தடைகள் என்று கேட்டேன். இது சபிக்கப்பட்ட, இது தண்டனை இறங்கிய இடம் என்று கூறினார்கள். அவர்கள் தடுத்தாலும் நான் மட்டும் கை, கால்களை நனைத்ததோடு ஒரு “கப்” நீரை வாயில் எடுத்த போது உப்புச் சுவையை விட மிகவும் கசப்பாக இருந்தது. நான் விழுங்காமல் வெளியே துப்பி விட்டேன். இவ்விடத்தில் நின்றால் பலஸ்தீன் மலை தெரியும். இவ்விடத்திலிருந்து சற்றுத் தூரத்திலேயே நபீ ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நல்லடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்களையும் தரிசித்தோம். இங்குள்ள மலையடிவாரம் ஒன்றில்தான் இரு கரங்களும் எதிரிகளால் துண்டிக்கப்பட்ட பின் ஆகாயத்தில் பறந்த நிலையில் போர் செய்து “ஷஹீத்” ஆன நபீ தோழர் ஜஃபர் இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கத்தலமும் உள்ளது. அங்கும் சென்றோம்.
04. நபீ தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து, இங்கு ஒரு பள்ளிவாயலையும் கட்டினார்கள்.
இவர்களின் அடக்கத்தலம் சிரியா நாட்டின் தலைநகரான டமஸ்கஸ் நகரில் “மஸ்ஜிதுல் அமவீ” பள்ளிவாயலில் கண்ணாடி அறை ஒன்றில் உள்ளது. இங்குள்ள ஒரு ”மனாறா”வில்தான் இறுதிக் கால கட்டத்தில் பூமிக்கு இறங்கவுள்ள நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள். இந்த “மனாறா”வைத் தொட்டு முத்தமிடும் பாக்கியம் எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் கிடைத்தது.
05. நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த நாடுகளில் இருந்து கொண்டுதான் முழு உலகையும் ஆட்சி செய்தார்கள்.
06. அல் குர்ஆனில் எறும்பு, மற்றும் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய பிரபலமான நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஓர் எறும்பு ஏனைய எறும்புகளிடம், “எறும்புகளே! உங்கள் பொந்துக்குள் நுழைந்து ஒழிந்து கொள்ளுங்கள்” என்று கூறியது ஜெரூஸலத்தில்தான் நடந்தது. இந்த இடம் பின்னர் “வாதிந்நம்ல்” எறும்புகளின் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படுகிறது.
07. நபீ சகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “மிஹ்றாப்” தொழுமிடம் இந்த ஜெரூஸலம் நகரில்தான் உள்ளது.
08. நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் தோழர்களிடம் இந் நாட்டைப் பற்றியும், இந்தப் புனித நகருக்குள் நுழையுமாறும் கூறினார்கள்.
09. செய்யிதுனா மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பெற்றெடுத்த இடமான “பத்லஹம்” – “பைதுல் லஹ்ம்” ஜெரூஸலத்தில்தான் உள்ளது.
10. எதிரிகள் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொல்ல வந்த போது அல்லாஹ் அவர்களை ஜெரூஸலத்தில் இருந்துதான் வானத்திற்கு அழைத்துச் சென்றான்.
11. ஸெய்யிதுனா மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பட்டுப் போன ஈத்த மரத்தை குலுக்கிய போது அது பழம் கொடுத்தது. இச்சம்பவமும் இந்த ஜெரூஸலத்திலேயே நடந்தது.
12. நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறுதி காலத்தில் பூமிக்கு வந்ததும் இந்த நகருக்கு வருவார்கள்.
13. நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மண்ணில்தான் – சிரியாவில்தான் தஜ்ஜாலை கொல்வார்கள்.
14. இந்த நகரத்தில் இருந்துதான் “யஃஜுஜ் மஃஜூஜ்”| கூட்டத்தினர் சண்டை – கலவரம் செய்யத் தொடங்குவார்கள்.
15. தொழுகை கடமையாக்கப்பட்ட பிறகு முஸ்லிம்களின் முதல் “கிப்லா” என்ற பெருமையும் இதற்கு உண்டு.
16. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்ணுலுகிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு மக்காவிலிருந்து “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயலுக்கே முதலில் அழைத்து வரப்பட்டார்கள்.
17. அனைத்து நபீமாரும் “பைத்துல் மக்திஸ்” பள்ளிவாயலில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்குப் பின்னால் தொழுதார்கள். இதனால் பலஸ்தீன் மீண்டும் அனைத்து நபீமாரின் பூமியாக மாறியது.
18. “ஜெஸீறதுல் அறப்” மண்ணில்தான் நபீமாரிற் பலரும், அவர்களின் பல மனைவியர்களும் அடக்கம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “முஅத்தின்” என்று பிரசித்தி பெற்ற “பிலால்” றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கம் பெற்றுள்ளார்கள்.
19. உலகப் பிரசித்தி பெற்ற, ஒரு நொடி நேரமும் வற்றாமல் தினமும் பல இலட்சம் மக்களுக்கு தாகத்தை தீர்க்கும் அருள் நிறைந்த “சம்சம்” கிணறு இந்த “ஜஸீறதுல் அறப்” மண்ணில்தான் உள்ளது.
20. பரந்து விரிந்த இப்பூமியில் திருக் “கஃபா” உள்ள இடத்தை விட أَفْضَلُ الْبُقَاعِ சிறந்த இடமான, திரு நபீ அவர்களின் திரு உடலைச் சுமந்துள்ள இடமும் இந்த மண்ணில்தான் உள்ளது.
21. உலகில் வாழும் 197 கோடி முஸ்லிம்களும் தமது வழிபாட்டின் போது முன்னோக்குமிடமான திருக் “கஃபா” இந்த மணிணிலேதான் உள்ளது.
இன்னுமிவை போன்ற பல இலட்சம் சிறப்பம்சங்கள் கொண்ட மண்தான் “ஜெஸீறதுல் அறப்” எனும் அறபு தீப கற்மாகும். இவற்றில் உலக முஸ்லிம்களின் பிரதான இடங்களான திரு கஃபாவும், திரு நபீ அவர்களின் திரு “றவ்ழா”வும் மூன்றாம் இடத்திலுள்ள “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயலும் அடங்கும். இவற்றை எந்த ஒரு சக்தியாலும், எந்த ஒரு மன்னனாலும், எந்த ஒரு ஜனாதிபதியாலும் அழிக்கவோ, ஆக்கிரமிக்கவோ முடியாது. முடியாது. முடியாது. பரந்து விரிந்த இப்பூமியில் ஒரேயொரு முஸ்லிம் இருக்கும் வரை இது நடக்காது. நடக்காது. நடக்காது. இஸ்றேலினதும், அமெரிக்காவினதும் கனவு பொய்க் கனவாகும். இன்று உலகில் உயிருடன் வாழும் “அப்தால்”கள் வாழுமிடம் இந்த மண்ணின் சிரியா மண்ணேதான். அவர்கள் இவர்களை தமது பார்வைகள் கொண்டே அழித்தொழிப்பார்கள்.
அறுக்கப்படும் மாடு என்று தெரிந்தும் அறுப்பவன் அதற்கு உணவு கொடுப்பது போல் யஹூதீகள் – யூதர்கள் அறுக்கப்படுபவர்கள் என்று அல்லாஹ் அறிந்திருந்தும் அவர்களை வாழ வைக்கிறான் என்றால் இதிலுள்ள் இரகசியத்தைப் புரிந்தவர்கள் ஸூபீகள் மட்டுமேயாவர்.
எந்த மதத்தவர்களாயினும், எந்த நாட்டிலுள்ளவர்களாயினும், எந்த மொழி பேசுபவர்களாயினும் இறைவனை அறிந்து அவனுக்கு இணை வைக்காமலும், மனச் சாட்சிக்கு மாற்றமின்றியும் வாழ்பவர்களே மனிதர்களாவர். அவர்களே சுவனம் செல்பவர்களுமாவர்.
உலகில் வாழும் மனிதர்களில் முஸ்லிம்களின் கடும் எதிரிகள் யூதர்களே!
யூதர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட “தவ்றாத்” வேதத்தையே பொய்யாக்கிய நயவஞ்சகர்களேயாவர். பெருமானார் அவர்களையே ஏமாற்றிய வரம்பை மீறிய கொடியவர்களுமாவர். இன்று சில நாடுகளில் திருக்குர்ஆனைத் தீயிட்டு எரிப்பவர்களும், காலால் மிதிப்பவர்களும் உள்ளனர். இவர்களும் யூதர்களேயாவர். யூதர்களின் நரித் தந்திரங்களில் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ». فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدَكَ، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ، فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى المَرْأَةِ يَقِيهَا الحِجَارَةَ ‘ (رواه البخاري – 3635)
நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
(யூதர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் வந்து அவர்களில் ஒருவன் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்து விட்டான் என்று சொல்லி இவர்களுக்குச் சட்டம் என்னவென்று கேட்டார்கள். அப்போது நபீ அலைஹிஸ்லஸாது வஸ்ஸலாம் அவர்கள், “தவ்றாத்” வேதத்தில் கல்லெறிந்து கொல்லுதல் தொடர்பாக என்ன சொல்லப்பட்டுள்ளது? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அவ்விருவரும் அவமானப் படுத்தப்பட்டு அவர்களுக்கு அடிக்க வேண்டுமென்று இருப்பதாகக் கூறினார்கள். அப்போது அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் யூதர்களிடம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அவர்கள் இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அவர்கள் “தவ்றாத்” வேதத்தைக் கொண்டு வந்து அனைவர் முன்னிலையிலும் ஒருவர் அதை விரித்து அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்று அதிலிருந்த வசனத்தை தனது கையால் மறைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும், பின்னாலுமுள்ள வசனத்தை ஓதிக் காட்டினார். அப்போது மேலே சொன்ன அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் அவ்வாறு கையால் மறைத்துக் கொண்டு ஓதியவரிடம் கையை எடு என்று சொல்ல அவர் கையை எடுத்தார். அப்போது “தவ்றாத்” வேதத்திலும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்ற வசனம் இருந்தது வெளியாகிவிட்டது. அவ்வேளை யூதர்கள் ஆம், நபீயே! அவர் – அப்துல்லாஹ் இப்னு ஸலாம் சொன்னது உண்மைதான், கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு அவ்விருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.
இந்த நபீ மொழியை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அவர் கல்லெறிந்து கொல்லப்படும் போது அவளுடன் தொடர்பு கொண்ட விபச்சாரன் அவளைக் கல் தாக்காமல் தன் உடலைக் கேடயம் போலாக்கி மறைத்துக் கொண்டதை நான் பார்த்தேன்) என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரீ 3635)
இந்த வரலாறின் மூலம் யூதன் என்பவன் பெருமானாரின் கண்ணைக் கட்ட முயன்றவன் என்பது தெளிவாகிறது. (தொடரும்…)