தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قال الإمام البوني رحمه الله في كتابِه ‘اللّمعة النورانية ‘، مِنَ السِّرِّ البديع: إذا كان الإنسانُ يَخافُ على نفسِه مِنْ قَتْلٍ أو عذاب أو غيره، فَلْيَذْبَحْ كَبشًا سَمِيْنًا سَلِيْمًا من العيوب، كما في الأُضْحِيَّةِ،
يذبَحُه في مَوْضِعٍ خالٍ ذبحا سَريعا مُوَجِّهًا إلى القبلة، ويقول عند الذَّبْحِ: اَللهم هَذَا لَكَ وَمِنْكَ، اَللهم إِنَّه فِدَائِيْ فَتَقَبَّلْهُ مِنِّيْ، وَيَحْفِرُ لِدَمِهِ حُفْرَةً، وَيَرْدِمُهَا بِالتُّرَابِ، حَتَّى لا يَطَأَ أَحَدٌ عَلَى دَمِهِ، وَيَقْسِمُه سِتِّيْنَ جُزْءًا: اَلْجِلْدُ جُزْءٌ وَالرَّأْسُ جُزْءٌ، وَالْبَطْنُ جُزْءٌ، إِلَى أَنْ يَأْتِيَ على سِتِّيْنَ جُزْءًا، وَلَا يَأْكُلُ مِنْهُ شَيْئًا لَا هُوَ وَلَا مَنْ تَجِبُ عَلَيْهِ نَفَقَتُهُ، ويُفَرِّقُهُ على الفقراء والمساكين، فإنَّه يكون فِدَاءً له، ولا يَنَالُهُ مَكْرُوْهٌ من جِهَةِ الأمرِ الذي يَخْشَاهُ، وهو مُتَّفَقٌ عليه، مُجَرَّبٌ مَعْمُوْلٌ به، والله تعالى المُحْسِنُ لعبيدِه المُنْعِمُ عليهم.
(البوني- أحمد -ت 1225: متصوّفٌ مغربيٌّ عاش فى القاهرة، له مصنفاتٌ فى علم الحُروف والسّحر، منها شمسُ المعارف الكبرى، وسرُّ الحِكم،
இமாம் பூனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்லும்அதுன் நூறானிய்யா” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். இது மிக அற்புதமான நூலாகும்.
(ஒருவன் தான் கொலை செய்யப்பட்டு விடுவேன் என்று, அல்லது துன்புறுத்தப்படுவேன், அல்லது தனக்கு ஏதோ ஒரு கஷ்டம் ஏற்படுமென்று பயந்தால் “உழ்ஹிய்யா” கொடுக்கப்படும் பிராணிக்குச் சொல்லப்பட்ட குறைகள் எதுவுமில்லாத ஓர் ஆடு அவன் அறுக்க வேண்டும். மனித நடமாட்டமில்லாத இடத்தில் “ஷரீஆ”வில் சொல்லப்பட்ட முறைப்படி அறுக்க வேண்டும். அறுக்கும் வேளை அவன் பின்வருமாறு சொல்ல வேண்டும். நினைக்க வேண்டும்.
اَللهم هَذَا لَكَ وَمِنْكَ، اَللهم إِنَّه فِدَائِيْ فَتَقَبَّلْهُ مِنِّيْ،
“அல்லாஹும்ம ஹாதா லக, வமின்க, அல்லாஹும்ம இன்னஹூ பிதாஈ, பதகப்பல்ஹு மின்னீ”
“இறைவா! இது உன்னில் நின்றும், உனக்காக உள்ளதாகும். இறைவா! இது எனது அர்ப்பணம். இதை நீ ஏற்றுக் கொள்வாயாக!”
அந்த ஆட்டின் குருதியில் எவரும் மிதிக்காமல் இருப்பதற்காக ஒரு குழி தோண்டி அதை மறைத்து விட வேண்டும். அவ் ஆட்டின் இறைச்சி மற்றும் அதன் தோல் உள்ளிட்ட அனைத்து உறுப்புக்களையும் 60 பங்குகளாக ஆக்கி அவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதற்காக செலவு செய்தவனும், இவனுடைய செலவில் வாழ்பவர்களும் இதன் இறைச்சியை சாப்பிடுதல் கூடாது.
இவ்வாறு செய்தவனின் வாழ்வில் எந்தக் கஷ்டமும், துன்பமும், நஷ்டமும் வராது.
இது பரீட்சிக்கப்பட்ட உண்மையாகும். அல்லாஹ் அருளாளன்.
எவர் இதற்காக செலவு செய்கிறாரோ அவர் தனது கையால் ஆட்டை அறுப்பது சிறந்தது. அவரால் அறுக்க முடியாது போனால் மற்றவர்கள் அறுக்க முடியும்.
மொத்த இறைச்சை 60 பங்குகளாக்கி 60 பேர்களுக்கு கொடுக்க முடியாமற் போனால் சுமார் பத்துப் பேர் சேர்ந்து 10 ஆடுகளை அறுத்து மொத்த இறைச்சை 60 பங்குகளாக்கியும் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் பலருக்கு கொடுக்க வாய்ப்பு உண்டு. இதற்கும் வசதியில்லாமற் போனால் தனி நபர் ஒருவர் ஓர் ஆட்டின் இறைச்சியுடன் இன்னும் இறைச்சியை மேலதிகமாக சேர்த்துக் கொடுக்க வேண்டும்.