أنا أصمّ عن كلّ كلمةٍ خبيثةٍ تصدر من أفواه الشياطين، وأعمى عن كلّ كتابةٍ متنجّسةٍ تكتبها أيدي الأباليس،
الإمام سِراجُ الدين البُلقيني،
அல் இமாம் ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அறபீ அவர்களையும், ஸூபிஸத்தையும் எதிர்த்தவர்கள் என்று வஹ்ஹாபீகளால் சொல்லப்படுவது முற்றிலும் பொய்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
سِراجُ الدين البُلقيني: هو سراجُ الدين عُمر بن رَسلان بن نصير الكِناني، من فقهاء الشّافعيّة، عسقَلانِيُّ الأصل، وُلد سنة 723 ه بِبَلدَةِ بُلقِينا، مِن غريبة مصـر، وتعلّم بالقاهرة، ووَلِيَ قضاءَ الشّام مدّة سنةٍ، ثمّ عاد إلى القاهرة مُشتغِلًا بالإفتاء والتّدريس والتصنيف، له مؤلّفاتٌ، منها تصحيحُ المِنهاج، والمُلِمّاتُ برَدِّ المُهِمّات، والتّدريبُ، كلُّها فى فقهِ الشّافعيّة، وحاشيةٌ على الكشّاف، تُوفِّي بالقاهرة، سنة 805 ه، (إنباء الغمر لابن حجر، 5 – 107، والدّليلُ الشافي لابن ثغري بَردِي، 1-497، والأعلامُ 5-46، ومُعجمة المؤلِّفين 7-284)
ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ:
“இவர் ஷாபிஈ மத்ஹபின் சட்ட மேதைகளில் ஒருவர். இவரின் பூர்வீகம் “அஸ்கலான்” என்ற இடமாகும். (இது பழைய பலஸ்தீன் நகரங்களில் ஒன்று) இவர் ஹிஜ்ரீ 723ல் மிஸ்ர் நாட்டின் “புல்கீனா” என்ற இடத்தில் பிறந்தார். கெய்ரோவில் கற்றார். சுமார் ஒரு வருடம் “ஷாம்” நாட்டின் காளீ – நீதிவானாக இருந்தார். பின்னர் கெய்ரோ வந்து “பத்வா” வழங்குதல், கற்றுக் கொடுத்தல், நூல்கள் எழுதுதல் முதலான பணிகளில் கவனம் செலுத்தினார். இவருக்கு மேலே அறபு மொழியில் குறிப்பிட்ட நூல்கள் உள்ளன. இவர் எழுதிய நூல்கள் யாவும் “ஷாபிஈ மத்ஹப்” சட்டக் கலையோடு சம்பந்தப்பட்டவையாகும்.
இவர் பற்றி இவ்வாறு எழுதிய வஹ்ஹாபீகள் இவரை ஸூபீகளுக்கு எதிரானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். இது பொய்யாகும். ஏனெனில் இவ்வாறு சேர்த்தவர்கள் ஸூபீகள் பற்றியும், ஸூபிஸம் பற்றியும், இப்னு அறபீ பற்றியும் அவர் சொன்ன ஒரு செய்தியைக் கூட ஆதாரமாக எழுதவில்லை. இதன் மூலம் வஹ்ஹாபீகள் இவ்விடயத்தில் இருட்டடிப்புச் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
இமாம் ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூலில் எழுதிய தகவல்களை இங்கு எழுதுகிறேன்.
وأمّا ما أشاعَه بعضُ المُنكرين عن الشيخ عِزِّ الدين بن عبد السلام وعن شيخنا الشيخِ سِراجِ الدين البُلۡقِيۡنِيۡ أنَّهُما اَمَرَا بإحراقِ كُتُبِ الشيخ محي الدين فكَذِبٌ وزُوۡرٌ، ولو أنّها اُحرِقتۡ لم يَبۡقَ منها الآن بمِصْرَ والشّام نسخةٌ، ولا كان أحدٌ نَسَخَهَا بعد كلام هذين الشيخين وحَاشَاهُمَا من ذلك ولو أنّ ذلك وقع لم يَخۡفَ. لأنّه من الأمور العِظام، الّتي تَسِيرُ بها الرُّكۡبَانُ فی الآفاقِ ولتعرض لها أصحابُ التواريخ،
اليواقيت والجواهر للشعراني، ج أوّل، ص09
தமிழில் சுருக்கம்:
இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ்ஸலாம் அவர்களும், அஷ்ஷெய்கு ஸிறாஜுத்தீன் அல் புல்கீனீ அவர்களும் இப்னு அறபீ அவர்களின் நூல்களை எரிக்க வேண்டும் என்று சொன்னார்கள் என்று எதிரிகள் சொல்லிய அச் செய்தியை பரப்பியிருப்பது பொய்யும், புரட்டுமாகும். அவ்விருவரும் அவ்வாறு சொல்லி இப்னு அறபீ அவர்களின் நூல்கள் எரிக்கப்பட்டிருக்குமாயின் மிஸ்ர், ஷாம் – சிரியா போன்ற நாடுகளில் இப்னு அறபீ அவர்களின் ஒரு நூல் கூட இருந்திருக்காது. எல்லாமே எரிக்கப்ட்டிருக்கும். குறித்த இமாம்கள் இருவரும் அவ்வாறு சொல்லியிருந்தால் அவர்கள் அவ்வாறு சொல்லிய பின் இப்னு அறபீ அவர்களின் நூல்களில் ஒன்றையும் எவரும் பிரதி பண்ணியிருக்கமாட்டார்கள். ஒருபோதும் அவ்விருவரும் அவ்வாறு சொல்லியிருக்கவேமாட்டார்கள். (وحاشاهما من ذلك) அவ்வாறு அவ்விருவரும் சொல்லியிருந்தால் அந்தச் செய்தி உலகெல்லாம் பரவியிருக்கும். வரலாற்றாசிரியர்களும் அச் செய்தியை எழுதியிருப்பார்கள். அவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை.
அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 09, ஆசிரியர்: இமாம் ஷஃறானீ.
قال الشيخ سراج الدين المخزُومي: كان شيخنا شيخ الإسلام سراج الدين البُلۡقيِنِی، وكذلك الشيخ تقي الدين السُّبكي يُنۡكِران علی الشيخ ابن عربي فی بِدَايةِ أمرهما، ثم رَجَعا عن ذلك حِينَ تَحقَّقَا كلامَه وتأويلَ مراده، ونَدِما علی تَفۡرِيۡطِهِما فی حقّه فی البداية، وسَلَّمَا له الحال فيما أشكل عليهما عند النِّهاية،
சுருக்கமான தமிழாக்கம்:
அஷ்ஷெய்கு ஸிறாஜுத்தீன் அல் மக்சூமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் அல்புல்கீனீ அவர்களும், அஷ்ஷெய்கு தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கீ அவர்களும் தமது ஆரம்ப காலத்தில் அஷ்ஷெய்கு இப்னு அறபீ அவர்களை மறுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவ்விருவரும் அவர்களின் பேச்சுக்குரிய உள்ளர்த்தத்தை விளங்கிய பின் தமது மறுப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். ஆரம்ப காலத்தில் தம்மால் ஏற்பட்ட கவனயீனத்திற்காக கவலைப்பட்டார்கள். வருந்தினார்கள். அவர்களின் இறுதிக்கட்டத்தில் தமக்கு விளங்காதவற்றை ஷெய்குல் அக்பர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள்)
அல்யவாகீத், பக்கம் 09, பாகம் 01, ஆசிரியர்: இமாம் ஷஃறானீ.�
ومن جُملة ما قاله الشيخ سراجُ الدين البُلقيني فيه حِينَ سُئل عنه ( إيّاكُم والإنكَارَ على شيئٍ من كلامِ الشيخ محي الدين، فإنّه رحمه ﷲ لمّا خَاضَ فی بحار المعرفةۃ وتحقيق الحقائق عَبَّرَ فی اَواخِرِ عمرِه فی الفصوص والفتوحات والتَّنَزُّلاتِ المُوصِلة وفی غيرها بما لا يَخۡفَی علی من هو فی درجته من اَهلِ الإشاراتِ. ثم إنّه جاء من بعده قومٌ عُمۡيٌ عن طريقته فَغَلَّطُوه فی ذلك، بل كفَّرُوه بتلك العبارات. ولم يكن عندهم معرفةٌ با صطلاحه. ولا سَئَلُوا من يَسۡلُك بهم إلی إيضاحه،وذلك أنّ كلام الشيخ رضي ﷲ عنه تَحۡتَهُ رُموزٌ وروابِطُ وإشاراتٌ وضَوابِطُ، وحذۡفُ مُضَافَاتٍ. هي فی علمه وعِلم أمثالِه معلومةٌ، وعند غيرهم من الجُهَّال مجهولةٌ، ولو أنّهم نظروا إلی كلماته بدلائِلها وتطبِيۡقَاتِها وعَرَفُوا نَتَائِجَهَا ومُقَدَّماتِها لَنَالُواا لثَّمَرَاتِ المُرادةَ، ولم يُبَائِنْ اِعتقادُهم اعتقَادَه)، (اليواقيت، ج أوّل، ص 9، للشّعراني)
தமிழில் சுருக்கம்:
அஷ்ஷெய்கு ஸிறாஜுத்தீன் புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள் கூறிய விளக்கம்.
அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் எந்தவொரு பேச்சாயினும் அதை மறுக்க வேண்டாம் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.
ஏனெனில் இப்னு அறபீ றயழில்லாஹு அன்ஹு அவர்கள் இறைஞானக் கடல்களிலும், எதார்த்த தத்துவங்களை உறுதிப்படுத்துவதிலும் முங்கி மூழ்கிப் போன போது தங்களின் இறுதிக் கட்டத்தில் தங்களின் “புஸூஸுல் ஹிகம், அல்புதூஹாதுல் மக்கிய்யா, அத்தனஸ்ஸுலாதுல் மூஸிலா” மற்றும் தங்களின் ஏனைய நூல்களிலும் தங்களைப் போல் இறைஞானத்தை ஜாடை மூலம் விளங்குவோர் மட்டும் விளங்கிக் கொள்ளும் பாணியில் வசனம் அமைத்துக் கூறினார்கள்.
பின்னர் ஒரு காலம் வந்தது. அக்காலத்தில் அவர்களின் ஞான வழி தெரியாத குருட்டுக் கூட்டமொன்று வந்து அவர்களைப் பிழை கண்டார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் எழுதிய வசனங்களின் வெளித் தோற்றத்தை வைத்து அவர்களைக் “காபிர்” என்றும் சொன்னார்கள். இவ்வாறு சொன்ன குருடர்களுக்கு அவர்களின் “இஸ்திலாஹாத்” ஞானக் கலைச் சொற்கள் தெரிந்திருக்கவுமில்லை, தெரிந்தவர்களிடம் அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவுமில்லை.
இதற்கான காரணம் என்னவெனில் இப்னு அறபீ நாயகம் அவர்கள் தங்களின் நூல்களில் பயன்படுத்தியுள்ள வசனங்களின் தாற்பரியம் அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் சில இடங்களில் “இஷாறா” ஜாடையாகவும், சில இடங்களில் சில சொற்களை விட்டும், மறைத்தும் பேசியுள்ளார்கள். அத்தகைய அவர்களின் பேச்சு அவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு – அவர்களின் வசன நடை புரியாதவர்களுக்கு விளங்காது. ஆயினும் அத்தகைய அறிவிலிகள் அவர்களின் வசனங்களில் முழுக்கவனம் செலுத்தி ஆய்வு செய்வார்களாயின் தமது இலட்சியத்தை அடைந்து கொள்வார்கள். அவ்வாறு அடைந்து கொண்டார்களாயின் இப்னு அறபீ நாயகம் அவர்களின் கொள்கையில் எந்த ஒரு தவறையும் காணமாட்டார்கள்.
அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 09, ஆசிரியர்: இமாம் ஷஃறானீ.
வஹ்ஹாபீகளிற் சிலர் தமது அறியாமையினாலோ, அல்லது மன முரண்டினாலோ என்னவோ தமது கொள்கையை – வஹ்ஹாபிஸத்தைச் சரியென்று நிறுவுவதற்காக பொய் சொல்வதையும் நாங்கள் அவதானிக்கிறோம். சரியான கொள்கையுள்ள ஒருவன் தனது கொள்கையை பொய் சொல்லி நிறுவ வேண்டிய தேவை அவனுக்கில்லை. உருட்டுப் புரட்டு செய்பவன்தான் பொய் சொல்வான். தவறான கொள்கையில் இருப்பவன்தான் பொய் சொல்லியாவது தனது கொள்கையை நிறுவுவதற்கு குறுக்கு வழிகளை கையாள்வான்.
“அகீததுஸ் ஸூபிய்யா வஹ்ததுல் வுஜூத் ஹகீகா” எனும் நூலை எழுதிய கலாநிதி அஹ்மத் இப்னு அப்தில் அஸீஸ் என்பவர் தனது மேலே குறிப்பிட்ட நூல் 629ம் பக்கத்தில், “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்கள் காபிர்கள் என்று கூறிய பத்துப் பேர்களில் ஒருவராக எனது இத்தலைப்பிற்குரிய “ஸிறாஜுத்தீன் அல் புல்கீனீ” அவர்களை எட்டாவதாளாகவும், இப்னு தைமிய்யாவை நாலாவதாளாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ் இருவரில் இப்னு தைமிய்யா இப்னு அறபீ நாயகம் அவர்களை காபிர், முஷ்ரிக், சிந்தீக் என்றெல்லாம் சொல்வார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆயினும் இமாம் ஸிறாஜுத்தீன் புல்கீனீ அவர்கள் அவ்வாறு சொல்வார்கள் என்று நான் நம்பவில்லை. எழுதியவர் ஒன்றோ பொய் சொல்ல வேண்டும். அல்லது அவர் விபரம் தெரியாமல் எழுதியிருக்க வேண்டும். அவர் தெரியாமல் எழுதியிருந்தால் அல்லாஹ் அவரை மன்னித்து விடுவான். இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள் “அல்யவாகீத்” என்ற நூலில் எழுதியதே சரியானதாகும். இதுவே நான் அறிந்த சரியான முடிவு.
வஹ்ஹாபீகள் தமது கொள்கையை நிலைநாட்டுவதற்காக எதையும் செய்வார்கள் போல் தோணுகிறது.
தொடரும்…