காத்தான்குடி 05 பத்ரிய்யாஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹக்கீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அவர்களின் 28வது வருட கந்தூரி தினத்தில் வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம். 20.01.2019
முத்துப்பேட்டையின் முத்தே!
வைத்தியக் கலாநிதியே!
ஷெய்குத்தவா ஹகீமே!
ஷெய்கு தாவூதே!
எங்கள் பிணிகளை தீர்த்து வைத்து
வையகத்தில் நலமுடன் வாழ வைக்க
பதுரிய்யா பூங்காவனம் வருகவே!
சுகமான வாழ்வு தருகவே!
ஜாம்பவானோடையில் சமாதி கொண்டு
பல கோடி அற்புதம் காட்டும் ஹக்கீமே!
தீராத நோய்களை தீர்த்துவைக்கும் கலாநிதியே!
ஷெய்கு தாவூதே வருகவே வருகவே….!
வைத்தியர்களால் கைவிடப்பட்ட
நோய்களை
கறாமத்தின் மூலம் குணமாக்கியவரே!
கனவிலே காட்சி தந்து சத்திர சிகிச்சை செய்தவரே!
சத்தியமாய் சொல்கிறேன்
நீங்கள் வைத்திய மேதைதான்!
இருள் சூழ்ந்த என் மகனின் வாழ்வில்
ஒளி ஏற்றியவரே! கண்மணியை காத்தவரே!
ஹக்கீமே ஷெய்கு தாவூதே!
காரணங்கள் பலகாட்டி
காரிருள் போக்கியவரே!
உளநோயால் வாடியவரை
உன்னத மாக்கியவரே!
காலமெல்லாம் காத்தருள வேண்டுகிறேன்!
கலாநிதியே!
ஷெய்கு தாவூதே! வருகவே! வருகவே!
கலாநிதியை காட்டித் தந்தவரே!
காத்த நகரின் காவலனே!
காமில் வலியின் மைந்தனே!
அத்வைதத்தின் ஆணிவேரே! அச்சாணியே!
வஹ்ததுல் வுஜுதின் வதனமே!
அறிவுக்கண்ணை திறந்தவரே!
ஆரிபுபில்லாவே! அப்துர் றஊப் மிஸ்பாஹியே!
காதிமுல் கௌமியே! என் குருவே!
நீங்கள் பாரில் நலமுடன் நீண்ட
ஆயுளுடன் வாழ
இறையருளை வேண்டுகிறேன்!
வல்ல இறைவா அருள்புரிவாய்!
- ஆமீன் –
வரிகள்
அல்ஹாஜ் TL. கலீலுர் ரஹ்மான்
(TLK Food City)
NO: 51 A.J.A. மாவத்தை
காத்தான்குடி – 06
தொ.பேசி – 0776013866