Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உன் கை விரல்கள் உன் கை தானானவையா?அல்லது அதற்கு வேறானவையா?

உன் கை விரல்கள் உன் கை தானானவையா?அல்லது அதற்கு வேறானவையா?


ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்

சகோதரா! உன் கை விரல்கள் உன் கை தானானவையா? அல்லது அதற்கு வேறானவையா?

இவ்வாறு கேள்வி கேட்ட பிறகுதான் உன் சிந்தனைக் கதவு திறந்ததா? அல்லது அது ஏற்கனவே திறந்துதான் உள்ளதா? சிந்தி. நன்றாகச் சிந்தி. சத்தியம் உன் கற்பனைக் கண்முன் நிற்கும்.

விரல்களில் ஒன்று மற்ற விரலுக்கு வேறானதென்பது உண்மைதான். ஆயினும் விரல்களில் ஒன்றும் கைக்கு வேறானதல்ல.

இது என்ன மந்திரமா சொல்கிறாய் என்று என்னைக் கேட்கணும் போல் தோணுதல்லவா? கேட்டு விடாதே! நானே சொல்லி விடுகிறேன்.

இது மந்திரமும் இல்லை. தந்திரமும் இல்லை. தள்ளாடும் உனது ஈமானை தரிபடுத்தும் மாமருந்து. நீ இந்த மருந்தை எப்பவோ அருந்தியிருக்க வேண்டியவன். தவறிவிட்டாய். போனால் போகட்டும் போடா. கவலைப்படாதே. இப்போதாவது அருந்தி உன்னைப் பீடித்துள்ள வேறென்ற வேற்றுமை நோயை சுகமாக்கு.

வேற்றுமை நோய் மிகப் பயங்கரமானது. கென்ஸரை விடக் கெட்டது. கென்ஸர் நோய் உன்னை சந்தூக்கில்தான் ஏற்றும். புதை குழிக்கே அனுப்பும். ஆனால் வேற்றுமை நோயோ உன்னை நரக வாசலுக்கு இழுத்துச் செல்லும்.

நரகத்தின் “கேட் கீப்பர்” மாலிக் உன்னைக் கண்டதும் என்னடா தம்பி இந்தப் பக்கம்? என்று வினவுவார். நெருப்புச் சங்கிலியுடன் வழியில் நின்ற இரண்டு பேர் என்னை இங்கு இழுத்து வந்து விட்டார்கள் என்று சொல்வாய். அப்படியா? உனக்குரிய இடம்தான் இது. உள்ளே போ. மூளை உருகும். குடல் வெளியேறும். உன் முன்பின் துவாரங்களால் நெருப்புக் கம்பி செலுத்தப்படும் என்று சொல்வார். நீ பயந்த நிலையில் அசையாமல் சிலையாகி நிற்பாய். உன் இதயம் துடிக்கும். படபடக்கும். அந்த மாலிக் நெருப்புச் சவுக்கால் உன்னை அடிப்பார்.
இறுதியில் பயங்கர உருவமுள்ள நெருப்பு மனிதர்கள் இருவர் வந்து நெருப்புச் சங்கிலியால் உன்னைக் கட்டி நெருப்புக் குழிக்கு இழுத்துச் செல்வார்கள். அங்கேயே நீ நெருப்பில் கருகிப் போவாய். மீண்டும் புதிய உடல் உனக்குத் தரப்படும். இவ்வாறே காலமெல்லாம் நரகில் கிடப்பாய்.

நரகின் அதிபதி நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் செய்கிறேன் என்று சத்தமிடுவாய்.

அடே மனிதா! உன் கையிலுள்ள விரல் உன் கைக்கு வேறில்லை என்று சொன்னதுபோல் ஹக்கான மெய்ப் பொருளுக்கு கல்கான பொய் பொருள் வேறானதல்ல என்று நீ நம்பாமல் விட்டதேன்? என்று அரட்டுவார்கள். உன்னால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் நீ தவிப்பாய்.

உனக்கு ஏனையா இப்படியொரு நிலை வர வேண்டும்? நீ இப்படியொரு சோதனைக்குள்ளாக வேண்டும்?

எல்லாம் ஒன்றுதான், அவன் தவிர வேறொன்றுமில்லை என்று சொல்லியிருந்தால் தப்பியிருக்கலாமே என்று அவர் சொல்லி நீடூழி நரகில் வாழ்க என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்.

உன்விதி என்னாகுமோ!
உன் விதி தலைவலிதான்.


RELATED ARTICLES

Most Popular

Recent Comments